Thursday, March 2, 2017

டூயட் பாடல்களை கடுமையாகச்சாடும் இயக்குனர் மகேந்திரன் !!!!


படித்ததில் பிடித்தது
சினிமாவும் நானும், இயக்குனர் மகேந்திரன் பகுதி 2

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/01/blog-post_26.html

Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்
மாணவப் பருவத்தின் போதே எம்ஜியாரை மேடையில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவை எதிர்மறையாக விமர்ச்சித்தவர்தான் மகேந்திரன். அதுமட்டுமல்ல தான் வேலை பார்த்த 'இனமுழக்கம்', ‘துக்ளக்’, ஆகிய பத்திரிகைகளில் சினிமா விமர்சகராக அமர்ந்து தமிழ்ப் படங்களில் வரும் இன்று வரை தவிர்க்க முடியாத முரண்பாடுகளை தாக்கி விமர்சித்தார்.

இந்தப் புத்தகத்தில் அவைகளைப்பற்றி விவரிக்கிறார். தமிழ்ப் படங்களில் வரும் டூயட் பாடல்களைக் கடுமையாக சாடுகிறார். “நிஜத்தன்மைக்கு சிறிதும் ஒவ்வாது, கதா நாயகனும் நாயகியும் ஓடிப்பிடித்து டூயட் பாடுவது,வெட்ட வெளிகளிலும் வெளிநாடுகளிலும், காடு வனங்களிலும் சுற்றித்திரிந்து  நடனமாடி பாடுவது என்பது அபத்தமாகவே இருக்கிறது. யதார்த்த வாழ்வில் இல்லாத எதையும் திரையில் காண்பிப்பது ரசிகனை  கனவுலகில் வைத்திருப்பது போன்றது. அதுவும் சமூகக்கதைகளில் அப்படி வருவதுகொஞ்சம் கூட சரியில்லை”, என்கிறார். இயக்குனர் மகேந்திரன் அதே சுழலுக்குள் சிக்கி மாட்டிக் கொண்டது  ஒரு நகை முரண்தான்.

அதோடு சினிமாக்கள் நாடகத்தின் நீட்சிதான் என்றாலும் அதே நாடகத்தனம் சினிமாக்களில் காணப்படுவதைச் சொல்லி ஆதங்கப்படுகிறார். செயற்கையான அதீத வசனங்களும் நாடகத்தனத்தை அதிகப்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறார்.

தமிழில், இசையும் பாடல்களும் சினிமாவின் மூலமே வருகிறது என்ற நிலை மாறி, சினிமாவையும் தவிர்த்து வெளிவந்தாலும் அவற்றின் தரத்தைப் பொறுத்து அவை வெற்றி பெறும் என்கிறார்.

50,60 பாடல்களைக் கொண்ட பழைய தமிழ் சினிமாக்களையும், அவற்றில் நாயகன் நாயகி பேசும் வினோத வசனங்களையும் கேலி செய்வதோடு, 1948ல் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்து வந்த சந்திரலேகா போன்ற படங்களைப் பாராட்டுகிறார். இந்தப் படம் தமிழில் சினிமா உதித்து 17-ஆவது ஆண்டில் வந்திருக்கிறது.
Image result for michael jackson

தனிப்பாடல்கள் நிறைய வரவேண்டும் அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். தனிப்பாடல்கள் மூலம் பிரபலமடைந்த சோமு, பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், ML வசந்தகுமாரி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். அதோடு M.S. விஸ்வநாதன், T.M.செளந்திரராஜன் ஆகியோர் வெளியிட்ட தனிப்பாடல்களும் பிரபலமடைந்ததை சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக தனிப்பாடல்கள் அதுவும் குறைந்த  பாடல்களையே பாடினாலும் உலகப்புகழ் அடைந்த மைக்கேல் ஜாக்சனைப்பற்றி குறிப்பிட்டு விளக்குகிறார்.   அதோடு தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் தேவைக்கு மட்டுமே பாடல்களை பயன்படுத்தியிருப்பதைச்சொல்லி அதை எல்ல இயக்குனர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

 பாடல்களைத்திணிக்காமல் திரையில், ஏற்றவேளையில் தேவைக்கு ஏற்ப  பயன்படுத்தும் இயக்குனர்களான ஸ்ரீதர், பாரதிராஜா, வீணை பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரைக் குறிப்பிட்டு மற்ற இயக்குனர்களும் இதனைப்பின்பற்ற வேண்டும் என்கிறார்.
Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்

இசையைப்பற்றி பேசும்போது தன் பல படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவைபற்றிக் கூறி நெகிழ்கிறார்.

பாடல்கள் மட்டுமின்றி சினிமாக்களில் பின்னணி இசையால் கதைக்கும் கதா பாத்திரங்களுக்கும் உயிரூட்டுவதில் இளையராஜாவை மிஞ்சியவர்கள் யாருமில்லை என்று சிலாகிக்கிறார். அவர் படங்கள் வெற்றி பெற்றதற்கு ஒரு பெரிய காரணம் இளையராஜா என்று பாராட்டுகிறார். தன் படங்களின் ஜீவன் இளையராஜா என்கிறார்.

தான் இயக்கிய படங்களில் முடிந்தளவுக்கு பாடல்களை யதார்த்தமாக பயன்படுத்த முயற்சித்ததை விவரிக்கிறார். அதீத திறமை கொண்ட AR.ரகுமான் உலகப்புகழ் பெற்றதையும் குறிப்பிடுகிறார்.

காமெடி டிராக் :

Image result for charlie chaplin


இன்னொரு முக்கிய விஷயமாக தமிழ் சினிமாக்களில் உள்ள நகைச்சுவையைக் குறித்து கவலை தெரிவிக்கிறார். கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை இல்லாது கதையில் திணித்து, கதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத தனித்த காமடி டிராக்குகள் படத்தைக் கெடுக்கின்றன என்கிறார். ஆனாலும் கதையோடு இணைந்து வரும் நகைச்சுவையாலும், சிறந்த நகைச்சுவை நடிகர்களாலும்தான்  தமிழ் சினிமா இவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்றும் பாராட்டுகிறார். நகைச்சுவையால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று உலக அளவில் சாதித்துக் காட்டியவர் சார்லி சாப்ளின் என்கிறார். இரட்டை அர்த்த வசனங்களைச் சாடி, ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. தமிழ் ரசிகர்கள் மிகுந்த ரசனை கொண்டவர்கள் என்பதோடு அவர்களுடைய ரசனையை பண்படுத்துவதில் இயக்குனர்களின் பங்கும் இருக்கிறது என்று சொல்லுகிறார்.

யதார்த்த நடிப்பு:
தமிழ்ச் சினிமாக்களில் யதார்த்தமான நடிப்பு குறைந்து போனதைக் குறித்துக் கவலைப் படுகிறார்.
அதீத வசனங்கள், மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு மற்றும் செயற்கையான வெளிப்படுத்துதல், இயல்பான தன்மைக்கு எதிரானவை என்கிறார். யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துப்புகழ் பெற்ற நடிகர்களாக, எஸ்.வி.ரங்காராவ், ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா மற்றும் ராஜ்கிரண் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
ரசிகர்களை எப்பொழுதும் குறைசொல்லாமல் இது மாதிரி எதிர்மறை விஷயங்களைத் தவிர்த்த தமிழ்ப்படங்கள் வருமென்றால், உலகத்தரமுள்ள படங்கள் தமிழிலும் வரும் என்று உறுதியாக நம்புகிறார்.
உலகத்தரமான இயக்குனர்களும் நடிகர்களும் தொழிற்நுட்பக்கலைஞர்களும், தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால் உலகத்தரமான படங்களை ஏனோ அவர்கள் தருவதில்லை. உலகத்தரமான படங்களை ரசிக்கும் ரசிகர்களும் தமிழகத்தில் ஏராளமானவர் உண்டு என்பதை நினைவில் கொண்டு தயாரித்தால் நிச்சயம் நம் தமிழ்ப்படங்கள் உலகளவில் பேசப்படும்.

தொடரும் >>>>>>

9 comments:

 1. பல இயக்குனர்களின் பங்கு தற்போது பணம் மட்டுமே குறிக்கோள்...

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் சீக்கிரம் காணாமல் போய்விடுகிறார்கள் திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 2. நன்றி வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
 3. நல்ல புத்தகம். பல அரிய தகவல்கள். From the horse's mouth என ஆங்கிலத்தில் சொல்வதுபோல்.

  ReplyDelete
  Replies
  1. Unfortunately its no longer a running horse Baskar.

   Delete
 4. நானும் திரு சுஜாதா அவர்களின் ஒரு கதையை வைத்துக்கொண்டு 3 ஆண்டுகள் யாதார்த்த சிநிமாவுக்கு முயன்று இது ஒத்து வராது என்று ஒதுங்கிக் கொண்டேன்,

  ReplyDelete
  Replies
  1. முதலில் குறும்படம் எடுங்கள் அதன்பின் பெரிய திரைக்கு வந்து விடுவீர்கள், சினிமா மாற்று முயற்சிக்கு இதுவே உகந்த நேரம் சிவகுமார் .

   Delete
 5. இயக்குனர்கள் எல்லாம் கல்லாப்பெட்டியை நிறைக்க வேண்டும் என்று நோக்கம் கொண்டால் என்ன செய்வது?

  ReplyDelete