Thursday, March 23, 2017

கறிக்குழம்பும் பிரெஞ்சு படமும் !!!!!!

பார்த்ததில் பிடித்தது - டிப்லமேட்

Diplomatie poster.jpg

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் மனைவி செய்த கறிக்குழம்பை உண்டு,லேசான மயக்கத்தில் நெளிந்த வண்ணம் நெட் பிலிக்சில் மேய்ந்த போது கிடைத்த பிரெஞ்சுப்படம் இது. தமிழ்ப் பாரம்பர்ய உணவை உண்டுவிட்டு ஆங்கிலம் தவிர வேறு மொழித் திரைப்படங்களைப் பார்த்துப்பாருங்களேன், சீக்கிரம் செரித்துவிடும். எப்படி என்று கேட்கிறீர்களா? பிறமொழிப் படங்களை பார்ப்பதற்கு கடின உழைப்பு தேவைப் படுகிறதல்லவா. படத்தைப் பார்க்க வேண்டும், முக பாவங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்,சப் டைட்டில்களையும் மாறுவதற்கு முன் அதிவிரைவாகப் படிக்க வேண்டும். ஓரிரு வார்த்தைகளையும் கற்றுக் கொண்டால் அது மிகவும் நல்லது,  பிற்காலத்தில் உதவும். இவ்வளவு கடின உழைப்பு தேவைப்படுவதால்தான், உங்கள் மதிய அசைவ உணவு கொஞ்சம் அதிகமாயிருந்தாலும் செமித்துவிடும் என்றேன். ஆனால் உண்டதற்கு மேல் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் நொறுக்குத்தீனிகளை கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிட்டு கலோரிகள் பெருகினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

இந்தப் படம் ஒரு பீரியட் படமென்பதால் அது என் ஆவலைத் தூண்டியது. 'டிப்ளமசி' என்பது 2014ல் வெளிவந்த பிரெஞ்சு ஜெர்மனி நாடுகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்றுப்   படம் . கதைச்சுருக்கத்தை கொஞ்சம் லைட்டாய் பார்க்கலாம் .

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில், ஜெர்மனி தன்னுடைய நிலைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் சூழ்நிலை.

பாரிஸ் நகரத்தில் தன்னிச்சையாக பொது மக்கள் எழுந்த போராட்டத்தில் ஜெர்மானிய வீரர்களை எதிர்த்து நின்றதால் தெருவெங்கிலும் கலவரம் சூழ்ந்து இருந்தது. ஜெர்மனிக்கு எதிரான கூட்டுப் படைகளும் எந்த நேரத்திலும் உள்ளே நுழையக்கூடும் என்ற நிலை.
Bundesarchiv Bild 183-2003-1112-500, Dietrich v. Choltitz-2.png
General Dietrich Van Cholitz 
அந்தச் சமயத்திலே பாரிஸ் நகரத்தில் இருந்த ஜெர்மானியப் படைகளுக்குத் தலைவராக ஜெனரல் டையட்ரிச் வான் சோளிட்ஸ் (General Dietrich Van Cholitz) என்பவர் இருந்தார். வெற்றியை இழந்து வருகிறோம்  என்று நினைத்த ஹிட்லர் தனது வெறித்தனத்தின் உச்சகட்டமாக பாரிஸ் நகரத்தை அழிக்கும்படி உத்தரவிடுகிறார். குறிப்பாக பாரிஸில் உள்ள முக்கிய இடங்களான 'ஐஃபில் டவர்', 'லூவர் மியூசியம்', 'நாட்ரி டேம் டி பாரிஸ்' “பிளேஸ் டி ல கார்கார்ட்” ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. இல்லாவிட்டால் அதிகாரிகளின் குடும்பம் தண்டிக்கப்படும். வேறு வழியில்லாத ஜெனரல் சோளிட்ஸ் ஒரு சிறு குழுவை லூட்டினைட் ஹெக்கர் தலைமையில் அனுப்புகிறார்.

Related image
RAOUL NORDLING

ஜெனரல் சோளிட்ஸ் தங்கியிருந்த ஹோட்டல் மியூரைஸ் (Hotel Meurice) இடமே அவரது அலுவலகமாகவும் செயல்பட்டது. அந்த ரூமுக்கு வேறொரு ரகசிய பாதையும் உண்டு. அதன் வழியாக உள்ளே நுழைகிறார் ,ஸ்வீடன் நாட்டின் தூதுவரான ரவுல்  நார்ட்லிங் (RAOUL NORDLING). அவர் ஜெனரல் சோளிட்ஸிடன் உரையாடி அவருடைய குடும்பத்தை தான் பாதுகாப்பதாகவும் பாரிஸ் நகரின் முக்கிய சின்னங்களை அழிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.
ஜெனரல் சோளிட்ஸ் ஒத்துக்கொண்டாரா? எப்படி அந்த அழிவு முயற்சி முறியடிக்கப் பட்டது என்பது தான் கதை. 

உலகப்போரின் மிக முக்கியமான நிகழ்வு இது.

Related image
Niels Arestrup
முக்கிய கதாபாத்திரங்களான ஜெனரல் வான் சோளிட்சாக  நீல்ஸ் எரெஸ்டிரப் (Niels Arestrup) -ம் ஸ்வீடன்  நாட்டில் டிப்ளமேட் ரவுல் நார்ட்லிங்காக ஆண்ட்ரே டூசொல்லியரும் (Andre Dussollier)-ம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

Image result for Andre Dussollier
Andre Dussollier
இந்தப் படத்தை 93 சதவீத விமர்சகர்கள் நன்றாகவே வரவேற்று சராசரியாக பத்துக்கு 7.5 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். மக்களே முக்கியமாக, முக்கிய கதா பாத்திரங்கள் இருவரும் நிறைய பேசுவார்கள். பேச்சில்லாமல் வெறுமனே செயலை (Action) எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் உதவாது.

இந்தப்படத்தை இயக்கியவர், “வால்கர் ஸ்லோண்டொர்ஃப்”  (Volker Schlondorf). இது சிரில் கெலி (Cyril Gely) எழுதிய நாடகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

இந்தப்படம் 64ஆவது பெர்லின் சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பெப்ரவரி 2014ல் திரையிடப்பட்டது. ஆகஸ்ட் 2014ல் டைலுரைட் (Telluride Film Festival) திரைப்பட விழாவிலும் பங்கு பெற்றது. நாற்பதாவது சிசர் விருது விழாவில் (Cesar Awards) அதன் விருதைப் பெற்றது.

உலக வரலாற்றில் குறிப்பாக இரண்டாம் உலகப்போர் மற்றும் நாஜிகளின் ஆதிக்கம் பற்றி அறிந்து கொள்ள விழையும் ரசிகர்கள் இதனைப் பார்த்து மகிழலாம்.

முற்றும்.

5 comments:

  1. ஆவலைத் தூண்டுகிறது சார். லிஸ்டில் வைத்துக்கொள்கிறேன்.

    முடிந்தால் Downfall (Hitler's last days) படம் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் , கண்டிப்பாய் பார்க்க முயல்கிறேன் .

      Delete
  2. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete
  3. Your review kindled my interest to watch the movie.Certainly i will watch.Thanks for
    introducing the movie to us.

    ReplyDelete