கலைஞர் மு.கருணாநிதி:
என்னால் நடக்க
முடியாது. இப்போதெல்லாம் என்னால் அதிகநேரம் பேசமுடியவில்லை. அதிக நேரம் என்னுடைய வேனில்
உட்காரமுடிவதில்லை. உடல் நலம் அவ்வளவு சரியில்லை.
ஆனால் உங்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என உறுதி கூறுகிறேன். எனக்கு 93 வயதாகிறது, 103 ஆனாலும்
உங்களுக்காக உழைப்பேன் யாரப்பா அங்கே பரப்புரை இடங்களை கொஞ்சம் குறைங்கப்பா,
என்னால முடியல. எங்களாலும் தாங்க முடியல.
புரட்சித்தலைவி ஜெயலலிதா:
Add caption |
“சசி,
அடுத்த இடம் எங்க?”
“மதுரை அக்கா”
“சரிசரி பூமிபூஜை போட்டாச்சா?”
“போட்டாச்சு அக்கா”
“இந்தத்தடவை களப்பலி
ஆகாம இருக்கணும். ஆமா ஹெலிகாப்டர் ரெடியா?”
“ரெடி
அக்கா”.
“சசி, ஹெலிகாப்டர்
நம்ம மொட்டைமாடிக்கு வருமா?”
“ ஏற்கனவே
கேட்டாச்சு, வராதாம்”
“ இல்ல
நடக்க முடியல”
“ ஒரு
வீல்சேர் ரெடி பண்ணலாம்னு அதுக்குத்தான் சொன்னேன்”
“ நோ நோ,
அந்தாளும் வீல்சேர்ல வந்து நானும் வந்தா நல்லாருக்காது, ஆமா சொன்னேனே
வேனில சீட்டை கொஞ்சம் பெரிசாகச் சொல்லி”,
“ இதுக்கு
மேலே சீட்டை பெருசாக்க முடியாதாம்”.
“சரிசரி வேனை நேராக
மேடைக்கு விடச் சொல்லு. மேடையில் லிப்ஃட் ரெடியா?”
ரொம்ப மூச்சு வாங்குது, யாரையும் என் கிட்ட வரவிடாதே,
இன்ஃபெக்ஷன் ஆயிறப்போவுது.
“மேடையில எவ்வளவு
AC இருக்கு ?”,
“ 20 டன் இருக்கு அக்கா”
“ பத்தலை
30 டன்னா ஆக்கிரு”. “நான் பேசும் போதே மக்கள் கிளம்பிராங்களே
ஏன் அப்படி விடுறீங்க? வந்து உட்கார்ந்தவுடனே சுற்றிலும் உயரமா இரும்பு வேலி போட்டிருங்க”.
பேச்சு ரெடியா?
“அதெல்லாம்
ரெடி அக்கா”.
“எழுத்தை இன்னும் கொஞ்சம்
பெரிசா எழுத முடியுமா? சரியாத் தெரியல”
“ இதுக்கு
மேல பெரிசாக்கினா, ஒரு பக்கத்துக்கு 2வரி
கூட எழுத முடியாது அக்கா”,
பேசத்துவங்குகிறார்.
மக்களுக்காக நான் மக்களால் நான்
புரட்சிக் கலைஞர் விஜய்காந்த்:
Add caption |
“டேய் தள்ளிப் போங்கடா”,
“கீழே விழுந்துறக்
கூடாதுன்னதான் நெருக்கமா வர்றோம்.
“என்னடா ஆச்சு எனக்கு
ஏறினாலும் தடுமாறுது, இறங்குனாலும் தடுமாறுது,
நடந்தாலும் தடுமாறுது,
பேசினாலும் தடுமாறுது,ஒரு பக்கம் கோவம் கோவமா வருது, இன்னொரு பக்கம் அழுகை அழுகையா வருது”.
“ஹேங் ஓவரா இருக்கும்
கேப்டன்”
“இல்லடா அதெல்லாம்
விட்டாச்சே”
“அப்ப பழக்கதோஷமா இருக்கும்”.
“இதுக்குத்தான சொன்னேன்
, இதெல்லாம் விடக்கூடாதுன்னு”
பேசத்துவங்குகிறார்.
“நான் கிங்காதான் இருப்பேன்னு
சொன்னேன்.
அவிங்க சரின்னு சொல்லிட்டாய்ங்க மக்களே மறக்காம ஓட்டுபோடுங்க.
எவண்டா குறுக்கே குறுக்கே பேசறது, வந்தேன்னா தூக்கிபோட்டு
மிதிச்சிறுவேன்”.
சீமான் என்ற சைமன்:
“நான் பெரியாரின்
வழியில் வந்தவன், ஆனா எனக்கு
பெரியாரைப் பிடிக்காது, ஏன்னா அவர் தமிழன் இல்லை.
மதிப்பிற்குரிய அண்ணன்
வைக்கோவைப் பிடிக்கும் ஆனா பிடிக்காது.
சினிமாக்காரர்கள் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள்.
(அப்ப நீங்க?)
எனக்கு ஹிட்லரைப் பிடிக்கும்.
தமிழ்நாட்டை தமிழன்
ஆளவேண்டும்.
என் முப்பாட்டன்
முருகன்,
பாட்டன் சோழன், தாத்தன் பாண்டியன். தமிழன்
தமிழனாக வாழ வேண்டும். ஆனா நான் ஜீன்ஸ்தான் போடுவேன்.
இளநீரை தேசிய பானமாக்க
வேண்டும்.
திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க
வேண்டும்.
அடிரா கையைத் தூக்கி சல்யூட்,
(பாதி வேட்பாளர்களுக்கு கையில் சுளுக்கு)
அன்புமணி:
“எங்கப்பா மரம்வெட்டி, என்
தளபதி காடுவெட்டி,
என் தொண்டர்கள் ஆள்வெட்டி
டாக்டருக்கு ஒரு வாய்ப்புக்
கொடுங்க.( எதுக்கு போஸ்ட்மார்டம்
பண்ணவா ?)
வன்னியர் தவிர மத்தவர்
எங்களுக்கு அந்நியர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். ஆனால் எங்கள்
கட்சி சாதிக் கட்சி இல்லை,
இதுல யாருக்கு உங்கள் ஒட்டு.
நம்ம நெலமையைப்
பாருங்க மக்களே.