Showing posts with label FETNA. Show all posts
Showing posts with label FETNA. Show all posts

Thursday, June 28, 2018

பகத்சிங்கை கொன்ற காந்தி ?

Image result for the legend of bhagat singh

தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் 
பார்த்ததில் பிடித்தது 
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத் சிங் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தவர். அவருடைய புரட்சி வரலாறு ரத்தத்தில் சூடேற்றி தேசிய உணர்வூட்டும் ஒன்று. அவரின் வரலாற்றைப் படித்திருந்தாலும் தி.லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற  இந்தத் திரைப்படம் அதனை அப்படியே நேரில் பார்ப்பது போல கண்முன்  கொண்டுவந்தது. நெட்ஃபிலிக்சில் காணக்கிடைக்கிறது. நல்ல வசதியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பகத்திங். அவர் தந்தையின் கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெரிய பால் பண்ணையும் இருந்தது.
          சின்னவயதில் அவர் கண்முன்னே வெள்ளைக் காரர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்கள் அவர் மனதை மிகவும் பாதித்தது. அதன்பின் ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலை அவர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி புரட்சி விதையை விதைத்தது.

          சிறு வயதிலிருந்தே மகாத்மா காந்தியால் கவரப்பட்டிருந்த பகத்சிங்  அவர் அறிவித்த "ஒத்துழையாமை இயக்கத்தில்"  பெரிதும் ஈர்க்கப்பட்டு தீவிரமாக பங்கு கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த அந்தப்புரட்சி மகாத்மா காந்தியால் பாதியில் கைவிடப்பட்டதால் பகத்சிங்  மிகவும் நொந்துபோனதோடு அதுவே அவர் காந்தியை விட்டு விலகிச் செல்வதற்கும் வழிவகுத்தது.  
          மனதில் எழுந்த புரட்சித்தீயால் "ஹிந்துஸ்தான் குடியரசு இயக்க”த்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக செயல் பட ஆரம்பித்தார்.  
          அந்த சமயத்தில் பஞ்சாபின் சிங்கம் “லாலா லஜபதிராவ்” பிரிட்டிஷ் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பகத்சிங்கை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. எனவே பகத்சிங் தன் நண்பர்களான சிவராம், ராஜகுரு, சுக்தேவ் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
          பின்னர் போலீசாரிடம் பிடிபட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கிருந்தபடியே புரட்சியை வளர்த்தார். ஆங்கிலேயர் இந்தியருக்கு எதிரான ஒரு சட்டத்தை பார்லிமென்ட் பில்டிங்கில் நிறைவேற்ற முயன்ற போது இந்தியரின் எதிர்ப்பைக் காட்ட, தன் நண்பன் பட்டுகேஸ்வர் தத் என்பவரின் மூலம் குண்டுகளை வீசினார்.     ஆனால் மக்களுக்கும் கூடியிருந்த அதிகாரிகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் காலியாக இருந்த பெஞ்சுகளை நோக்கியே குண்டுகள் எறியப்பட்டது. அவரும் கைதுசெய்யப்பட்டார்.  இந்த நிகழ்வு பகத்சிங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. குறிப்பாக இளைஞர்கள்  தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பகத்சிங்கை மிகவும் கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் காந்தியின் புகழுக்கு இணையாகப் பேசுமளவுக்கு பகத்சிங்கின் பிரபலம் உயர்ந்தது.
          லாகூர் ஜெயிலில் இருந்தபோதும் சுதந்திர போராட்ட வீரர்களை ஜெயிலில் ஒழுங்காக நடத்த வேண்டும் என்று அவர் தன் நண்பர்களோடு 63 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார்.      சாண்டர்ஸ் கேசில் பகத், சிவராம் & சுக்தேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
          இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் காந்தி நினைத்திருந்தால் இவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து விடுதலை செய்திருக்கலாம். முழு இந்தியாவும் இதனை எதிர்பார்த்தது. ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கோரினார் காந்தி. இதற்கு இந்தியா முழுவதும் எதிர் ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சிறையை உடைத்து உள்ளே புகுந்துவிடுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டதால் விதித்த நாளுக்கு முன்னதாகவே மார்ச் 23 1931ல் அதிகாலை நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Image result for bhagat singh

          நாடே சோகத்தில் மூழ்கியது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்று பாடிய பாரதியின் பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
          2002ல் வெளிவந்த இந்தப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை.
என்று தேசிய திரைப்பட விருது, பிலிம் ஃபேர் விருது, ஜீ சினி விருது போன்ற பல விருதுகளை வென்றது.          பகத்சிங்காக இளவயது அஜய் தேவ்கன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அருமையாக இசையமைத்தவர் நம் இசைப்புயல் A.R.ரகுமான் அவர்கள். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். அதோடு இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் தமிழரான K.V.ஆனந்த் அவர்கள். இப்போது பிரபல இயக்குனராகவும் மிளிர்கிறார்.
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்


முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில் 
பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 


Image result for fetna convention
Add caption

Thursday, September 21, 2017

அற்புத எழுத்தாளர் அசோகமித்திரன்!


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை

அசோகமித்திரன்
            தமிழ் கூறும் நல்லுலகம் கொடுத்த சிறந்த படைப்பாளர்களுள் அசோகமித்திரன் குறிப்பிடத்தகுந்தவர். இவரது இயற்பெயர் ஜெகதீஷ் தியாகராஜன். 1931-ல் செகந்திராபாத்தில் பிறந்த அவர் தன் 20 வயது வரையில் அங்குதான் இருந்தார். 1952ல் தந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று திகைத்த போது, தந்தையின் நண்பரான பிரபல இயக்குனரும் பத்திரிகையாளருமான S.S.வாசன் அவர்களிடமிருந்து  சென்னையில் இருந்த அவருடைய ஜெமினி ஸ்டூடியோவில் வேலை செய்ய அழைப்பு வந்தது. இதுவே படைப்புலகில் அவருக்கு நிகழ்ந்த திருப்புமுனை. அங்கு இருந்த 10 வருடங்களில் அவருடைய எழுத்துத் திறமை பீறிட்டுக்கிளம்பியது. 
Image result for MY years with boss

    படவுலகின் அனுபவங்களை “இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா”, என்ற பத்திரிகையில் பத்திகளாக எழுத ஆரம்பித்து பின்னர் அது புத்தகமாக வெளிவந்தது. அதன் பெயர் "மை இயர்ஸ் வித் பாஸ்"( My years with Boss). S.S.வாசனைத்தான் அப்படிக் குறிப்பிட்டார் என்று சொல்லத்தேவையில்லை. அதன்பின்னர் அவருடைய படைப்புகள் மளமளவென்று வெளிவந்தன. இருநூறுக்கு மேற்பட்ட  சிறுகதைகளையும் பன்னிரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார். சிறந்த கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதுவதிலும் வல்லவரான இவர் "கணையாழி" என்ற சிறப்பான இலக்கிய இதழின் ஆசிரியராக பலகாலம் பணியாற்றினார். தன் சொந்த அனுபவத்துடன் கற்பனை கலந்து நகைச்சுவையுடன் எழுதுவது அவரது தனிக்கலை. அதோடு எளிய நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதும் அவரது சிறப்பம்சம். விரைவிலேயே அவருடைய படைப்புகள், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன. 
Add caption
     என்னை மிகவும் கவர்ந்த அவர் எழுதிய "18-ஆவது அட்சக்கோடு" ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனைப்பற்றிய என்னுடைய பதிவைப் படிக்க  இங்கே சொடுக்கவும் (http://paradesiatnewyork.blogspot.com/2017/04/blog-post_11.html) தன்னுடைய படைப்புகளுக்காக பல விருதுகளைப்  பெற்ற இவர்,  "அப்பாவின் சிநேகிதர்" என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான 'சாகித்ய அக்காடெமி' விருது வென்றார். கடந்த மார்ச் 2017ல் தனது 85-ஆவது வயதில் அவர் இந்த உலகைவிட்டு மறைந்து போனாலும் தமிழ் உள்ளவரை அவரின் நினைவும் புகழும் நிலைத்திருக்கும் என்பது உறுதி.

தி.ஆல்ஃ பிரட் தியாகராஜன், நியூயார்க்.  

(www.paradesiatnewyork.blogspot.com)

Thursday, September 7, 2017

எழுச்சிப்பாடகர் K.A குணசேகரன் !!!


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை 
Image result for KA Gunasekaran
K.A   குணசேகரன்
      சுறு சுறுப்பாய் மேடை ஏறிய மனிதரைப்பார்த்ததும், அட K.A. குணசேகரன் இங்கே எங்கே வருகிறார் ? என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது  அவர்தான் சிறப்பு விருந்தினர் அதோடு மணமகனின் நெருங்கிய உறவினர் என்று. இது நடந்தது 90 களில் மதுரையில் . மணமகன் எட்வின் ராஜ்குமார், மதுரை சமூகப்பணி கல்லூரியில் படித்த போது என்  சீனியர். K.A. குணசேகரன் அதன்  பின்னர் புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் நிகழ்கலைத் துறையின் தலைவரானார். தனித்துவமிக்க நாட்டுப் புறப்பாடகரான இவர் “தன்னானே” 'என்ற இசைக்குழுவை நடத்திவந்தார். பறை, பம்பை , தவில், நாதஸ்வரம், உடுக்கை உள்ளிட்டப் பாரம்பரிய இசைக்கருவிகளை இவரின் குழுவினர் வாசித்தால் மேடையே அதிரும், அதனை மேற்கொண்டு இவருடைய கணீர்க்குரல் எல்லோரையும் கட்டிப்போட்டுவிடும். “மனுசங்கடா... நாங்க... மனுசங்கடா”, என்ற இவர் பாடும் பாடலைக் கேட்டு அதிர்ந்து உறைந்து போனவர்களில் நானும்  ஒருவன். 
Related image


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ (தமிழ் இலக்கியம்) படித்த இவர் நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை உயர்த்தும் வண்ணமாக எழுதியும் பாடியும் உலகமெங்கும் இயங்கியவர் இவர். இவர் எழுதிய நூல்கள்  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதுகலைப் பாடத்திட்டத்திலும், புதுச்சேரி பல்கலைக் கழக தமிழ்த் துறையின் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.




கடந்த 2017  ஜனவரி மாதம் எதிர்பாராதவண்ணமாக நம்மை விட்டு இவர் மறைந்தாலும் , இவர் தம்முடைய பாடல்கள் மற்றும் படைப்புகள் மூலமாக என்றும் வாழ்வார்.



  

Monday, July 31, 2017

பாடல்கள் நூறு கோடி எதுவும் புதிதில்லை ! பகுதி 1


FETNA  2017 இதழில் வெளிவந்த எனது கட்டுரை 


பாட்டாலே புத்தி சொன்னார் !
பாட்டாலே பக்தி சொன்னார் !
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்தப்
பாட்டுகள் பலவிதம்தான் ! - இளையராஜா.
Image result for ilayaraja singing

         

                 தமிழரோட வாழ்வில சங்க கால முதலிலிருந்து இதைப்படிக்கும் உங்க காலம் வரை இசைங்கிறது நிரவிபரவியிருக்கு. மத்த சமூகங்களோடு ஒப்பிடுறபோது தமிழ்ச் சமூகம் இதுல ரொம்பவே மூழ்கியிருக்குதுன்னு சொல்லலாம்.
          புலவர்களை சேகரிச்சு ஆதரிச்சு பக்கத்தில் வைத்துக் கொள்ளறது நம்ம ராஜாக்களுக்கு ரொம்பப் பெருமை. அந்த சங்க கால காப்பியங்கள், இதிகாசங்கள், பத்துப்பாட்டு போல பாட்டுகள் மட்டும் கிடைக்கலன்னா, நம்ம வரலாறு அப்படியே மண்ணோடு புதைஞ்சு போயிருக்கும். பாணர்கள் விரலியர்ன்னு ஒரு தனி சமூகமே இதனால பிழைச்சுதுன்னா அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. அந்தக் காலத்துல பேச்சு நடையில மத்தவங்க பேசினாலும் புலவர்கள் தங்களுக்குள்ள கவிதை நடையிலதான் பேசிக் கொள்வாங்களாம். அந்த மாதிரி, அரசன், தன் மேல நிறைய பாட்டிருக்கா?, பாட்டுடைத்தலைவனா நாம இருக்கமான்னு பரிதவிச்ச காலம் அது. அத விடுங்க கோயில்கள் கூட "பாடல் பெற்ற தலம்"னு சொன்னாதான  பக்தர் கூட்டம் கூட அங்கு போகுது.
               ஆனா இப்ப எல்லாத்துக்கும் திரையிசைதாங்க . பிறப்புக்கும் பாட்டு இறப்புக்கும் பாட்டு, காதலுக்கும் பாட்டு சாதலுக்கும் பாட்டு, தொட்டிலுக்கும் பாட்டு கட்டிலுக்கும் பாட்டு, நாத்துக்கும் பாட்டு கூத்துக்கும் பாட்டு, பக்திக்கும் பாட்டு முக்திக்கும்  பாட்டு, வெற்றிக்கும் பாட்டு, தோல்விக்கும் பாட்டுன்னு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் புதுமுகந்தான் திரையிசை. அரசியல் கட்சிகள் மீட்டிங் போட்டாலும் சரி, திருமண காதுகுத்து நிகழ்வானாலும், திருவிழாக்கள், உற்சவங்கள் என்று எல்லா விழாவுக்கும் திரையிசை இல்லாமல் நடக்கிறதில்லையே. பாட்டு போட்டாத்தான எந்த விழாவும்  களை கட்டுது. 
Image result for a.r.rahman images

          கூத்தோட மறு உருவம் நாடகம், நாடகத்தோடு புது உருவம்தான் சினிமான்னா அதுக்கு நீங்க யாரும் மறுப்பு சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிறேன். கூத்துல உச்சஸ்தாயில பாடின பாட்டு நாடகத்துக்கு வந்து அப்புறம் அதுவே சினிமால மெல்லிசையா மாறிப்போச்சு. நீங்களே சொல்லுங்க, பாரதியார் பாட்டு சினிமால வரலேன்னா நிறையப்பேருக்கு அதுபற்றி தெரியுமா ?. தேசபக்திக்கும் பாச சக்திக்கும் கூட நமக்கு திரைப்படப் பாடல்களை விட்டா வேறு வழியில்லதான. ஏன் A.R.ரகுமான் “வந்தே மாதரம்” பாடலை பாடின உடனேதான  நம்மில பல பேரு அதப் பாட ஆரம்பிச்சோம். இளையராஜா போட்டவுடனே தான  "மரிமரி நின்னே முரலிட" போல பல கர்நாடக சங்கீதப் பாட்டுகள்  நமக்கு தெரிய வந்துச்சு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதனால என்ன சொல்ல வரேன்னா திரைப்பாடல்கள் நம்ம வாழ்க்கையில பின்னிப் பிணைஞ்சு , ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறிப்போச்சு .
Image result for K.V.Mahadevan singing
K.V.Mahadevan
          ஒவ்வொரு இசையமைப்பாளர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வித இசைகளை உருவாக்கி "டிரென்ட் செட்டர்களாக" இருந்திருக்கிறாங்க . கே.வி. மகாதேவன் கர்நாடக இசைகளிலும், புராணப் படங்களிலும், பக்தி இசையிலும் கோலோச்சி முடிக்க, அடுத்து எம்.எஸ் விஸ்வநாதன் மெல்லிசையில் முத்திரை பதித்தார். அவர் ஒரு முப்பது வருஷம் பேரரசராக  ஆண்டு வந்தபோது அவர் கீழே சங்கர்  கணேஷ், வேதா, வி.குமார் போன்ற சிற்றரசர்களும் இருந்தாங்க. அவருடைய மகாப்பெரிய சாதனையை முறியடிச்சது போல் எங்கோ ஒரு குக் கிராமத்திலிருந்து இளையராஜா என்னும் நாட்டுப்புற இசை “மச்சானைப்பார்த்தீங்களா”ன்னு புறப்பட்டு அடுத்த முப்பது வருஷத்தை  ஆக்கிரமித்தது. 70களின் முடிவிலும் 80கள் மற்றும் 90களில் இளையராஜா இசைக்காகவே  ஓடிய படங்கள் ஏராளம். ஆயிரம் படங்களுக்கு இசை அமைச்சது ஒரு அசுர சாதனைதான். அதுக்குப்பிறகு  முற்றிலும் புதிய வடிவத்தில திரைப்பட இசையை வேறு தளத்திற்கு புயலாக எடுத்துச் சென்றது ஏ.ஆர். ரகுமான் என்ற இசைப்புயல். தமிழ் தாண்டி, இந்தியிலும் கொடிநாட்டி ஏன் உலகமெங்கும் பரவி ‘ஆஸ்கார்’ பரிசு வாங்கிய சாதனை என்பது மிகவும் அரிய சாதனைதான்.
Image result for m.s.viswanathan

          இதுல என்னை மாதிரி ஆட்களுக்கு இளையராஜாவின் இசை ஏன் அதிகமாக பிடிக்குதுன்னா நாங்க யூத்தா இருக்கும் போது(  அடடே  அவசரப்பட்டுட்டேனே, நான் இப்பவும் யூத்துதான் )  எங்களுடைய எல்லா உணர்ச்சிகளுக்கும் தூண்டுகோலாக ஆதரவாக இருந்தது அவரோட இசைதான்.
Image result for sg kittappa


          எஸ்ஜி கிட்டப்பா, பி.யு. சின்னப்பா, கே.பி. சுந்தரம்மாள், தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் இவங்களோடு குரல் வளம் எப்பவுமே உச்சஸ்தாயி சாரீரம் தான். இது மாதிரி இசை கூத்து, நாடகத்திலிருந்து வந்துச்சு. ஏன்னா அந்தக் காலத்துல மைக்ரோபோன் இல்லாதனால நல்லா கத்திப் பாடினாத்தான் மக்களுக்கு கேட்கும். அதனாலதான் அந்தக்கால கூத்து மற்றும் நாடக நடிகர்களுக்கு சரீரம் நல்லா இருந்தா மட்டும் பத்தாது, சாரீரமும் நல்லா இருக்கனும்னு எதிர்பார்த்தாங்க. அப்படி நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான் மேலே சொன்ன எல்லாரும். ஏன் எம்ஜியார் சிவாஜின்னு ஒரு பெரிய கூட்டமே நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவங்கதான்னு உங்களுக்குத் தான் தெரியுமே.
Related image
K.B.Sundarambal
          ஆனா அந்தக் காலத்துப் படங்கள்ள வசனம் குறைவாயும்  பாட்டுக்கள் அதிகமாயும் இருக்கும். முக்கால்வாசி, புராணப்படங்கள் அப்புறம் ராஜா ராணிக் கதைகள்தான் இருக்கும். சில படங்களில் 30 பாட்டிலிருந்து 60 பாட்டு வரைக்கும் கூட இருக்கும். முதல்ல படங்கள் வந்த காலகட்டங்கள்ல, நடிகர்களே பாடி நடிக்கணும் அப்புறம் கொஞ்ச நாள்ள சரீரம் நல்லாயிருந்தா போதும் சாரீரம் நல்லா இல்லாட்டி பின்னணியிலே பாடிக்கலாம்னு வந்துச்சு. இது திரைப்பட இசை வரலாற்றில் புதிய சகாப்தத்தை கொண்டு வந்துச்சு. யோசிச்சுப் பாருங்க  பாடறவங்கதான்   நடிக்க முடியும்னா இப்ப இருக்கிற பல பேர் கதி எப்படி இருக்கும்னு.
          பாடறத விடுங்க இப்ப கதாநாயகிகள்  எல்லாம் பேசறது கூட இல்லீங்களே, அதுக்கே பின்னனிக்குரல் வந்திருச்சே. இப்ப சொந்தத் திறமைகள் இல்லாம மத்தவங்க திறமையிலதான அவங்க வளர்றாங்க.
Image result for tm soundararajan
TMS

          அதனால பின்னனிப் பாடகர்கன்னு புதுசா ஒரு சமுதாயம் வளர ஆரம்பிச்சுச்சு. அந்தக் காலத்துல அதிகப்பேர் இல்லாதனால டி.எம். செளந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற வெகு சிலரும், பி.சுசிலா, ஜானகி, எல்ஆர். ஈஸ்வரி, சித்ரா ஆகியோரும் பல ஆயிரக்கணக்கான பாடல்களை லெஜன்ட் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாடினாங்க. இப்ப பாடகர்கள் நூத்துக்கணக்கில இருக்கிறதால இனிமேல் தலைக்கு 10-20 பாடல்கள் பாடுவதே பெரிய விஷயம். அதனால இனிமேல் லெஜெண்டுகள்லாம் வரவே மாட்டாங்க.  


>>> அடுத்த பகுதியில் முடியும்

Thursday, October 6, 2016

கர்நாடகக்கச்சேரியும் கனவைத்தொலைத்த பேராசியரும் !!!!!!!!!!!!!

  ஃபெட்னா தமிழர்  திருவிழா 2016 பகுதி 12

T.M.Krishna's Magsaysay Award: A Rebuttal to Jeyamohan and the Hindutva Brigade
TM Krishna
முதல் நாள் இரவின் இறுதி நிகழ்ச்சியாக TM கிருஷ்ணா அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. அரங்கு நிறையவில்லை என்றாலும் என்னைப்போன்ற பல இசை ரசிகர்கள் அங்கே மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தோம். எங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அருமையான இசைக்கச்சேரியை நடத்தினார். செம்மங்குடி சீனிவாசங்கய்யரின் சீடர் என்றால் சும்மாவா.
அதுமட்டுமல்ல TM கிருஷ்ணா ஒரு வித்தியாசமான புரட்சிவாதி. முற்றிலும் வேறான சிந்தனை கொண்டவர். உலக முழுதும் 2000 கச்சேரிகள் பண்ணியிருந்தாலும் தலை தோளில் இருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அவர் பாடிய பாடல்களில் "மாயா மணிவண்ணா",” சுட்டும் விழிச்சுடர்தான்", ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. விழா முடிந்து ஓரிரு நாட்களில் அவருக்கு மகசேசே விருதும் கிடைத்தது .(நான்தான் அந்த விருதை வாங்கிக்கொடுத்தேன் என்று சிலர் நினைப்பது  உண்மையில்லை ஹி ஹி  )
வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுள் பேராசிரியர் மு.ராமசாமியும் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் எனக்கு மிகவும் நெருங்கிய கனவைத் தொலைத்தவர்களுள் ஒருவர். என்ன ஒன்றும் புரியவில்லையா? நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது சில நண்பர்களோடு இணைந்து ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். என்னைத்தவிர, அதில் பேராசிரியர் பிரபாகர், இயக்குனர் முத்துராமலிங்கன், கவிஞர் மகுடி தவிர தீர்க்க வாசகன் என்பவர்கள் எழுதியிருந்தனர். தீர்க்கவாசகன் என்ற புனைபெயரில் எழுதியவர்தான் பேராசிரியர் மு.ராமசாமி. எனக்கும் வேறு ஒரு புனைபெயர் இருந்தது அது 'பாணன்' என்பது. சில விறலியர் மீது பற்றுக் கொண்டதால் அப்போது பாணன் என்று என்னை அழைத்துக் கொண்டேன். விரலிகளின் குறளி வித்தையில் பாணன் வீணன் ஆகிவிடக் கூடாதென்று அந்தப் பெயரை விட்டுத்தள்ளிவிட்டு வெளிநாடு வந்ததால் 'பரதேசி' ஆயிப்போனேன். அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர்"கனவைத் தொலைத்தவர்கள்" என்பது. இப்போது புரிகிறதா நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்பது? அதில் கவிதைகள் புனைந்த எல்லோரும் தங்கள் தொலைத்த கனவுகளை மீட்டெடுத்து விட்டனர் என்னைத்தவிர என்று நினைக்கிறேன்.   
With Ramasamy

பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் பார்க்கிறேன், சில வருடங்களுக்கு முன்னால்  முகநூலில் சந்தித்தோம். முகநூலில் தொடர்ந்து எழுதிவரும் ராமசாமி ஒரு இரண்டு வருடங்கள் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தார். ஐரோப்பிய மாணவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை தன் சொற்பொழிவில் விளக்கியது ஆச்சரியமாக இருந்தது. ராமசாமி அவர்கள் கலந்து கொண்ட தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கடைசி நாள் நடந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் ராமசாமி. பாஸ்டனில் உங்கள் பையன் இருப்பதால் நீங்கள் அடிக்கடி வருவீர்கள் என்பதால் நாம் மீண்டும் நியூயார்க்கில் சந்திக்கலாம். ராமசாமி பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் .அவரைப்பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும் . http://ramasamywritings.blogspot.com/
Sangangalin sangamam 

இரண்டாவது நாள் மாலையில் "சங்கங்களின் சங்கமம்" என்ற நிகழ்ச்சி நடந்தது. இப்படியொரு கொண்டாட்டத்தை இதுவரையில் நான் அமெரிக்காவில் பார்த்ததில்லை. அரங்கத்தின் வெளியே வந்திருந்த அனைத்துத் தமிழ்ச் சங்கங்களும் தங்கள் தங்கள் பேனர்களை பிடித்துக் கொண்டு ஒவ்வொரு குழுவாக ஊர்வலமாக வந்தனர். அரங்கின் முன்னால் இருந்த மேடையில் ஏறி சுற்றி வந்து இறங்கி கீழே உள்ளே சதுக்கத்தில் பிரிவுகளாக நின்றனர்.

முகப்பின் முன் இருந்த DJ  ஒவ்வொரு சங்கம் வரும்போதும் கட்டியம் கூறி அவர்களுக்கு ஏற்ற அல்லது சார்ந்த பாடல்களை ஒலி பரப்பினார். தாரை தப்பட்டைகள் ஒலிக்க உற்சாகமாக ஆட்டபாட்டத்துடன் அரங்கேறியது சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சி. நான் சார்ந்த நியூயார்க் தமிழ்ச் சங்கமும் பெருமையுடன் வந்த போது, அதன் கருத்துப்பாடலான "நிலைபெறும் தமிழ் அங்கமே, எங்கள் நியூயார்க்கின் தமிழ்ச் சங்கமே" என்ற பாடல் இசைக்கப்பட்டது. இது அந்தக் காலத்திலேயே கண்ணதாசன் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். அந்தப்பாட்டுக்கும் மீறி பறைகளின் சத்தம் ஒலிக்க நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜயகுமார் உட்பட பலரும் முற்றத்தில் தன்னை மறந்த நிலையில் ஆட்டம் போட்டனர். ஒவ்வொரு குழு வரும் போதும், 2016 ஃபெட்னா விழாவை நடத்திய நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின்  தலைவி உஷா மற்றும் கவிதா ராமசாமி வரவேற்றனர். சில பல சமயங்களில் கவிதா ராமசாமியும் சேர்ந்து ஆடி மகிழ்ந்தார்.


போலீஸ் பாதுகாவலுடன் (ஒரே ஒரு போலீஸ் என்றாலும்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்கியதோடு அந்த ஏரியா முழுவதையும் வண்ண மயமாக்கியது.
அது முடிந்தபின் இரவு உணவு முடிந்து எல்லோரும் உள்ளே போய் முண்டியடித்து உட்கார்ந்தனர். அங்கு ஃபெட்னா விழாவுக்கு உதவிய, உழைத்த பல பேருக்கு மரியாதை செய்யப்பட்டது. இதற்காகவா நம் மக்கள் அடித்துப் பிடித்து வந்தனர் என்று   ஆச்சரியப்பட்டபோது அதற்கில்லை அதன்பின் நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்காகத்தான் என்பது பின்னர் விளங்கியது.
இவர்கள் எல்லாரும் இங்கேதான் இருந்தார்களா என்று நினைக்குமளவுக்கு அரங்கு கீழே, மேலே என்று முதல்முறையாக முற்றிலும் நிறைந்திருந்தது.
Image result for Vijay Prakash in NJ
Vijay Prakash
பிரபல பின்னனிப் பாடகர் விஜய்பிரகாஷ், ஜெசிக்கா, ஹரிப்பிரியா  பழைய சீசனைச் சார்ந்த நியூஜெர்சியில் வாழும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெசிக்கா வந்து "அமுதே தமிழே அழகிய மொழியே" என்று உருகிப் பாடிய தமிழிசைப் பாடலோடு கச்சேரி களைகட்டியது.  ஹரிபிரியாவும் இணைந்து பாடினார். இருவர் குரலும் நன்கு பண் பட்டிருந்தது. அடுத்து விஜய் பிரகாஷ் வந்து" என் இதயம்" என்ற பாடலைப் பாடி எல்லோருடைய இதயங்களையும் கவர்ந்து கொண்டார். விஜய் பிரகாஷ் அவர் பாடிய "ஓம் சிவோகம்", "இன்னும்  கொஞ்ச நேரம்", எந்திரன் படத்தின் "காதல் அணுக்கள்" போன்ற பல பாடல்கள் தவிர "என் இனிய பொன் நிலாவே போன்ற சில பழைய பாடல்களையும்  பாடினார். "பாட்டுப் பாடவா", பாடலை அரங்கில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸை இருபிரிவாக பிரித்து பாட வைத்தது வந்திருந்த அனைவரையும் உற்சாகப் படுத்தியது. ஜெசிக்கா பாடிய "பால் போலவே", "கவிதைகேளுங்கள்" ஆகியவை சிறப்பாக இருந்தன. குறிப்பாக இசைக்குழுவும் சவுண்ட் சிஷ்டமும் மிகவும் தரத்துடன் இருந்ததால் ஃபெட்னாவின் முத்தாய்ப்பான பொழுதுபோக்காக இந்நிகழ்ச்சி அமைந்தது.


மொத்தத்தில் விழா அமைப்பு, அரங்கு, தங்குமிடங்கள், தரமான நிகழ்ச்சிகள், சாப்பாடு என  மொத்தத்தில் மிகப்பிரம்மாண்டமான ஃபெட்னாவின், 29வது திருவிழாவை நாஞ்சில் பீட்டர் அவர்களும், நியூஜெர்சி தமிழ்ச் சங்கமும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும், பாராட்டுகளும்.
அடுத்து வருடம் ஃபெட்னாவின் 30வது தமிழர் திருவிழா நடக்கும் மினசோட்டாவில்   சந்திக்கலாம் . நன்றி வணக்கம்.

Image result for tm krishna in fetna 2016
Add caption

தமிழர் விழா பதிவுகள் நிறைவடைந்தன.  

Thursday, September 29, 2016

அமெரிக்காவில் திருக்குறள்!!!!!!!!!!!!!!!

ஃபெட்னா தமிழர் திருவிழா பகுதி -11

Image result for thirukkural athvika
Advika with her Mom
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_22.html

இலக்கிய வினாடிவினாவுக்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி எதுவென்று கேட்டால் "குறள் தேனீ" என்பேன். அது என்ன 'குறள் தேனீ" என்றால், இரு குழுக்களாகப் பிரிந்த இளைய தமிழர்கள் திருக்குறள் சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளித்தனர். பிள்ளைகளின் முயற்சி மற்றும் பெற்றோர்களின் உழைப்பு இந்தப் போட்டியில் வெளிப்பட்டது. கேள்விகள் பல வடிவங்களில் வந்தாலும் பிள்ளைகள் திறமையாக திருக்குறள்களை கண்டுபிடித்தனர். ஒரு சிலரின் ஆங்கில உச்சரிப்பில் திருக்குறளைக் கேட்டது கொஞ்சம்  வித்தியாசமாக இருந்தாலும் இந்தளவுக்கு அவர்கள் திருக்குறளை படித்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

நான் சென்னையில் இருக்கும்போது, என் பிள்ளைகள் ஆங்கிலவழிக்கல்வி கற்றாலும் தமிழ்மொழியைக் கற்றே  ஆக வேண்டும் என்று சொல்லி பள்ளியில் தமிழ்ப் பாடம் எடுத்திருந்தேன். என் பெரிய மகள் அனிஷா அதுபோல தமிழ் கற்றுக் கொண்டாள். என்னுடைய அப்பாவும் வீட்டில் அவளுக்கு தமிழ் சொல்லித்தந்தார். தவிர வீட்டில் தமிழ் பேசும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன். எனவே அவளுக்கு நன்றாக தமிழில் எழுதவும் பேசவும் தெரியும்.

நாங்கள் நியூயார்க் வரும்போது பெரியவளுக்கு ஏழு வயது, சின்னவளுக்கு ஐந்து வயது. வீட்டில் தமிழில் பேசுவது இங்கு வந்ததும் தொடர்ந்தது. சிறிது காலம் சென்று, வெளியில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மகள்கள் வீட்டிலே நாங்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். “இல்லை நீங்கள் வீட்டிலே தமிழில் மட்டும் தான் பேச வேண்டும்”, என்று சொல்லி, பிள்ளையார் கோவிலில் நடக்கும் தமிழ் வகுப்பில் சேர்த்துவிட்டேன்.

பலமாதங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் மிகவும் முயன்று அவர்களை எழுப்பி அங்கே தமிழ்ப் பள்ளியில்விட்டு காத்திருந்து கூப்பிட்டுக் கொண்டு வரும்போது மதியம் ஆகிவிடும்.பிள்ளைகள் இருவரும் நன்கு எழுதப்படிக்க கற்றுக் கொண்டனர். இப்பொழுது அவர்கள் வயது 22 மற்றும் 20. தமிழ் பேசுவார்கள். பெரியவள் ஓரளவுக்குப் படிப்பாள், சின்னவள் எழுத்துக் கூட்டி மட்டுமே  படிப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக  மறக்கிறார்கள்.

எனவே அமெரிக்காவில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோ, தமிழ்மொழியில் ஆர்வம் ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான காரியம். அது நன்கு தெரிந்திருந்ததால் குறள் தேனீயில் கலந்து கொண்ட பிள்ளைகளின் உழைப்பை என்னால் உணர முடிந்தது.

குறிப்பாக அதில் ஒரு சிறிய பெண், எப்படி மடக்கி மடக்கி கேட்டாலும் அதற்கான திருக்குறளை கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னாள். அதற்கப்புறம் நாஞ்சில் பீட்டர் அவர்கள் அந்தப் பெண்ணை மேடையில் அழைத்து பாராட்டுப் பத்திரம் கொடுத்தார். அவள் பெயர் அத்விகா. தனது ஏழு வயதில் 1330 குறளையும் பொருளுடன் ஒப்பித்துப் புகழ் பெற்றிருக்கிறாள். அதிலும் ஒரு வார்த்தையைச் சொல்வதோடு அதன் அதிகாரம் மற்றும் அதன் வரிசை எண்ணையும் யோசிக்காமல் சொல்லும் அவள் ஒரு அதிசயப்பிறவிதான்.

Image result for thirukkural athvika
Advika Reciting Thirukkural 
இந்தப் பதிவை எழுதும் போது நாஞ்சில் பீட்டர் அவர்களிடம் விவரம் கேட்டு அந்தக் குடும்பத்தை தொடர்பு கொண்டு மேலும் சில தகவல்களைக் கேட்டுப் பெற்றேன்.
அவளின் அம்மாவான  திருமதி பிரசன்னா அனைத்து குறள்களையும் பொருளையும் இடைவெளி இன்றி 3 மணி 52 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்.

        அவளின் தந்தை சச்சிதானந்தன் சொல்கிறார், “அத்விகாவிற்கு ஒவ்வொரு நிலையிலும் தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறோம். இங்கேயே பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியோடு உள்ள தொடர்பு அலாதியானது. இதனூடே தாய்மொழியுடனான உறவை உயிர்ப்புடன் வைப்பது பெரும் சவாலான கடமை எனலாம். அனைவரும் வீட்டுக்குள்ளே நுழையும்போது காலணியை கழட்டி விடுவது போல் ஆங்கிலத்தையும் உதறிவிட்டு உள்ளே வரவேண்டும் என்பது எங்கள் வீட்டிலே அனைவரும் எழுதப்படாத சட்டமாக கடைப்பிடிக்கிறோம் “, என்று .

Advika' with father, Mother and sister

         மினசோட்டா தமிழ்ச் சங்கம் நிகழ்த்தும் ஒவ்வொரு போட்டியிலும் தனது மூன்று வயது முதல் பங்குபெற்று வருகிறாள் அத்விகா. அவ்வையார் மற்றும் பாரதியாரின் ஆத்திசூடிகளை நான்கு வயதில்  ஒப்புவித்தாள். ஐந்து வயது தொடங்கி ஏழு வயது வரை மூன்று பகுதிகளாக அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலையும் பொருளுடன் சொல்லி முடித்தாள். மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின்   "செந்தமிழ்ச் செல்வி", "குறள் மொழியாள்", விரிகுடாக் கலைக்கூடத்தின் " குறள் அரசி " , 2016 பேரவை தமிழ் விழாவில் "குறள் தேனீ" என பல பட்டங்கள் பெற்றாள். நிலா, புறநானூறும் பெண் வீரமும், நேர்மை, ஏன் தமிழ் எனும் தலைப்புகளில் இவர் தந்த மழலை பேச்சுகள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் அமையவிருக்கும் தமிழிருக்கைக்கு நிதி திரட்டுவதில் தனது சேமிப்பிலிருந்து சிறுதொகை அளித்ததுடன், பேரவை விழாவில் கிடைத்த பரிசு பணம் ஐநூறு டாலரையும் தமிழ் இருக்கைக்கு அளித்தது குறிப்பிடத் தக்கது. இது மட்டும் இன்றி தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழிருக்கை பற்றி எடுத்து சொல்லி இந்த நிதி திரட்டலுக்கு உதவி வருகிறாள்.


          சச்சிதானந்தன் மேலும் சொல்கிறார், “திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்களை சின்னசின்ன கதைகள் மூலம் அத்விகாவிடம் கொண்டு செல்லும் பெருமை முழுதும் எனது மனைவி பிரசன்னா அவர்களையே சாரும். குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க படித்ததால் தானும் திருக்குறள் முழுவதையும் தொடர் பொழிவாய் சொல்ல முடிந்தது என்பார் அவர்”. இந்தப்பெருமைமிகு குடும்பம் மினசோட்டா  மாநிலத்தில் வசித்து வருகிறார்கள் .

          முதல் தலைமுறையில் புலம் பெயர்ந்தவர்கள் தமிழைத் தாங்கிப் பிடிப்பது பெரிய காரியமல்ல. ஏனென்றால் பெரும் பாலானவர்களுக்கு நம் மொழியின் அருமை வெளிநாடு வந்தபின்தான் தெரிய வருகிறது. இதில் இரண்டாவது தலைமுறைக்கு தமிழைக்  கொண்டு போவதுதான் மிகமிகமிக சிரமமான காரியம். அதனைச் செய்யும் தமிழ் உள்ளங்களுக்கு என் வாழ்த்துதல்களும் பாராட்டுகளும். இதில் பலபேர் வெளியிலும் சரி வீட்டிலும் சரி ஆங்கிலம் பேசிக் கொண்டு, தமிழை மறந்து தாய் நாட்டையும் மறந்து முற்றிலுமாக மாறிவிடுகின்றனர். இவர்களுக்கு  நம் நாட்டு நடப்பு கூட சுத்தமாக தெரியாது. "என்ன சிவாஜி  செத்துட்டாரா " கதைதான்.  

நம்நிலை இப்படியிருக்க இலங்கைத் தமிழர்களை பாராட்டியே ஆக வேண்டும்.இன உணர்வும் மொழி உணர்வும் மிகுதியாக உள்ளவர்கள் இவர்கள். இவர்களுள் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறை என்று வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் தமிழ் பேசவும் தமிழ் படிக்கவும் கற்றுக் கொண்டு சரளமாக தமிழ் பேசுகிறார்கள். இவர்களின் விழாக்களில் நம் விழாக்கள் போலன்றி இளைஞர்கள் ஏராளமாக கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான திருமணங்களும் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது.

ஃபெட்னாவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஏனென்றால் நாடிழந்து அல்லது நாடு துறந்து வெளிநாட்டில்  வாழும் நாம் மொழியையும் துறந்தால். நாம் யார் நம் இனம் என்ன என்பது அழிந்துபோய்  நாம் முகமிழந்து உருவிழந்து போய்விடுவோம்.


(தமிழர்  திருவிழா பதிவுகள் தொடரும்.)