Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

Tuesday, February 14, 2017

பேரரசி சசிகலா வாழ்க !!!!!!!!!!!!!!!!

Image result for Queen Sasikla

பெரும்பான்மையான எம் எல் ஏக்கள், எம்பிக்கள், கையில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியிருந்தும் நினைத்தது போல் உடனடியாக சசிகலா முதலமைச்சர் பதவியை அடைய முடியவில்லை.
ஜெயலலிதா இறந்து போனதைத் தொடர்ந்து துக்கம் அடங்குவதற்குள், வர்தாப்புயல் மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் வந்து தாமதப்படுத்தியது. ஒரு புறம் தீபா குடைச்சலைக் கொடுக்க இப்போது பன்னீர் என்ற ருசி கண்ட பூனை புயலாக எழுந்துள்ளது. அது தவிர சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பும் வந்து இருந்த கொஞ்ச  நஞ்சம் நம்பிக்கையையும்  தகர்த்துவிட்டது
 இப்போது  சசிகலா என்னதான் செய்யமுடியும் ?.

பரதேசியின் பகிரங்க ஆலோசனைகள் :

1.   உடனடியாக ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை துல்லியமாகக் கணக்கிட்டு அதனை எம்.எல்.ஏ. எம்பிக்களிடம் தெரிவித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாக உறுதி அளிக்கலாம். இதன் மூலம் அவர்கள் திட்டுக்கு அடங்காவிட்டாலும் துட்டுக்கு அடங்கிப்போக வழியுண்டு. உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம்.
2.   தீபாவிடம் பேசி அவர் ஏன் தனியாக ஃபிளாட்டில் தங்க வேண்டும் போயஸ் கார்டனுக்கு  வந்துவிடலாம் என்று சொல்லி அழைத்து வந்துவிட்டால் போதும். பிறகு தானாக மற்றவை( ?) நடந்துவிடும்.
3.   பன்னீர் செல்வத்திற்கு ரகசியமாக மிடாஸ் ஆலையை எழுதி வைத்துவிட்டு, கண்ணீர் செல்வம், வெந்நீர் செல்வம் ஆனதின் பின் இப்போது மிடாஸ் ஆலையின் அதிபராக தண்ணீர் செல்வமாக ஆகிவிட்டார் என்று சொல்லி அவரை ஓய்த்துவிடலாம்.
4.   எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் பத்தாண்டுக்கு பாண்டு எழுதி வாங்கி கட்சி மாற்றத்திற்கு தடை செய்யலாம்.
5.   முடிந்தால் மு.க.அழகிரிக்கு ஒரு ஆயிரத்தைக் கொடுத்து ( அட கோடிதான் பாஸ்)  அதிமுக முதலமைச்சர் ஆக நிறுத்தி கருணாநிதியின் ஆதரவைப் பெறலாம். அவர் படியவில்லையென்றால் மு.க.ஸ்டாலினை அதிமுக முதலமைச்சர் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகி முடிந்து விடும்.
6.   நடராஜன் அவர்கள் பொங்கல் விழாவில் ஏற்கனவே தான் மாடு பிடித்த கதையைச் சொல்லியதால், தஞ்சாவூரில் சிறப்பு ஜல்லிக்கட்டு ஒன்றை ஏற்பாடு செய்து  ஒத்த மாடோ இல்லை ஒரு தொத்த மாடையோ அடக்குவதற்கு ஏற்பாடு செய்து, மாவீரன் நடராஜனை முதலமைச்சராக ஆக்கலாம்.
7.   பேசாமல் திமுகவுடன் அதிமுகவை இணைத்துவிட்டால், தீபா பன்னீர் இருவரையும் ஒரே சமயத்தில் கவிழ்த்து விடலாம். 
8.   கொடநாடு, சிறுதாவூர், பையனுர் ஆகிய இடங்களை ஆக்ரமித்து அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து, ஆளுநர் இருப்பிடமான ராஜ்பவனை ஆக்ரமித்து, சொந்தமாக்கி ஆளுநரின் பேரிலேயே எழுதிக் கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி முதலமைச்சர் ஆக அனுமதி வாங்கலாம்.
9.   தேர்தல் சமயத்தில் இருந்த டிரக்கில் பணத்தை நிரப்பி டெல்லிக்குச் சென்று சூப்ரீம் கோர்ட்டை அதன் நீதிபதிகள் உள்பட  விலை பேசலாம்.  
Image result for Sasikala with crown
Add caption
10.                இதெல்லாம் ஒத்து வரவில்லையென்றால்,அருமையான யோசனை ஒன்று. கட்சியைக் கலைத்து விட்டு தமிழ்நாட்டை தனியாகப்பிரித்து ,தமிழகத்தின் பேரரசியாக முடிசூட்டிக் கொள்ளலாம். தனிநாடாகி விட்டால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாமல் போய் விடுமே. என்ன புனித ஜார்ஜ் கோட்டையின் டம்மி பீரங்கிகளைக் களைந்துவிட்டு நிஜ பீரங்கிகளை நிறுவிவிட்டால் போதும். கமிஷனர் ஜார்ஜை படைத்தளபதியாக நியமித்தால் விசுவாசமாக இருப்பார்.
11.                மூன்றாவது வரை மட்டுமே படித்திருக்கிறார் என்பதனை மாற்றி ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்தை வாங்கிவிட்டால் முடிந்தது பிரச்சனை டாக்டர் சசிகலா என்று மாற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் மறுபடியும் ஆரம்பப் பள்ளியிலிருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்காது.
12.                ஒற்றர் படைத்தலைவராக சுப்ரமணிய சுவாமியை  நியமித்து விடலாம். தா. பாண்டியனை அரண்மனை பேச்சாளர் ஆக்கலாம்.
Image result for sasikala with jayalalitha

13.                அகழியை வெட்டி ஆழப்படுத்தி கூவத்தைவிட்டுவிட்டால் ஒரு பயகிட்ட வருவானா?
14.                அந்தப்புரத்தை விரிவுபடுத்திவிட்டால் நடராஜன் ஏன் கனடா பக்கம் போகப்போகிறார்?
15.                இளவரசி ஏற்கனவே இருப்பதால் வேறுயாருக்கும் தனியாக இளவரசிப்பட்டம் சூட்டத் தேவையில்லை.
16.                சுதாகரனை இன்னும் கொஞ்சம் பின்னால் முடிவளர்க்கச் செய்து பட்டத்து இளவரசனாக்கிவிடலாம்.
17.                வெளிநாட்டு பொறுப்புகளை நமது பிரதமரிடமே கூடுதலாகக் கவனிக்கச் சொன்னால் அவர் உவகையுறுவார்.
18.                ஒத்துவரும் எம்.எல்.ஏக்களை அந்தந்த பகுதியின் சிற்றரசர்களாக்கி விடலாம். தன் குடும்ப வாரிசுகளான திவாகரன், தினகரன் , பாஸ்கரன், வெங்கடேஷ் ஆகியோரை, பல்லவ, சோழ, பாண்டிய, சேர மண்டலங்களின் மன்னர்களாக நியமித்துவிடலாம்.
19.                சிரிப்பதற்கு தடை: தமிழ்நாடு சசிநாடு என்று மாற்றப்பட்டு உடனடியாக யாரும் யாரையும் பார்த்து சிரிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. யார்ட்ட? மீறி சிரித்தால் அவர்கள் தலைகள் கொய்யப்பட்டு கோட்டை வாசலில்  தொங்கவிடப்படும்.
20.                விரைவில் முல்லைப் பெரியார் மற்றும் காவிரி நீர்ப்பிரச்சனைக்கு கேரளா மற்றும் கர்நாடகா மீது படையெடுக்கப்படும், இலங்கையில் நடராஜன் தலைமையில் தமிழீழம் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.



Thursday, January 12, 2017

முதுகெலும்பில்லாத தமிழ் சமூகம் !!!!!

Image result for pongal in Tamilnadu

தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? முதலில் ஜல்லிக்கட்டுக்குத் தடை. இப்போது பொங்கல் தினம் தேசிய விடுமுறை நாளிலிருந்து நீக்கப்படுகிறது.
முதுகெலும்பாத சமூகமாக தமிழ் சமூகம் மாறிவருகிறது. நெஞ்சை நிமிர்த்தி விழுப்புண்களை வாங்கி, தப்பித்தவறி முதுகில் புண்பட்டால் உயிரை விட்டு மானத்தோடு வாழ்ந்த சமூகம் இது. யார் வந்தாலும் வாருங்கள், தலைகுனிந்து இடுப்பை வளைத்துக் கும்பிடுவோம், தாள் பணிவோம், காசுக்கு ஆள் சேர்ப்போம் , தகுதியாவது ஒன்றாவது, பணமும் பதவியும் மட்டுமே எங்களுக்கு முக்கியம். பொதுமக்களோ, நாட்டு முன்னேற்றமோ ம்ஹும் அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எலும்பைப் போட்டால் நாய் வாலாட்டாமல் போய்விடுமா?.நம்ம மக்கள் தானே காசைக் கொடுத்தால் ஓட்டுப் போடுவார்கள்.
Image result for pongal in Tamilnadu
Add caption
 இதோ ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கலைத் தொடர்ந்து வரும் புதிய உத்தரவுகள். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்.
1.   பொங்கல் விழா தடை செய்யப்படுகிறது. பொங்கல் மற்றும் கரும்பு சாப்பிடுவதற்கும் தடை.
2.   இட்லி, தோசை, அரிசி உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமை உணவுகள் மட்டுமே உட்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
3.   சாம்பார் ரசம், மோர் ஆகியவை ஒதுக்கப்பட்டு, தடுக்கா நவரத்தன் குருமா, சன்னா   மசாலா ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.
4.   வேட்டி கட்டுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. இனிமேல் தார் பாட்சா, குர்தா ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும்.
5.   சேலை கட்டுவது மொத்தமாக நிறுத்தப்பட்டு சுரிதார் தேசிய உடையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
6.   தமிழ்மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியையும் பேசத்தடை இல்லை.
7.   ஆட்சி மொழியாக சமஸ்கிருதமும், பேச்சு மொழியாக இந்தியும் இனி நடைமுறைப்படுத்தப்படும்.
8.   தமிழகத்தின் காய்கறிகளான கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவை ஒழிக்கப்பட்டு ,உருளை, முட்டைக்கோஸ், பீட்ரூட் மட்டுமே உண்ண  பணிக்கப்படுகிறது.
9.   நெல் பயிரிட தடை செய்யப்படுகிறது. வேணுமென்றால் பாசுமதி மட்டுமே பயிரிடலாம். மற்றபடி கோதுமைக்குத் தடையில்லை.
10.                தமிழ்த் தொலைக்காட்சிகள் முற்றிலுமாக தூர்தர்ஷனாக மாற்றப்படுகிறது.
11.                தமிழ் விளையாட்டுக்களான கிட்டிப்புள், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சு, கிச்சு கிச்சுத்தாம்பாளம் ஆகியவை ஒழிக்கப்படுகின்றன. 
12.                தமிழ் தெய்வங்களான, முருகன், மதுரை வீரன், முனியாண்டி, பாண்டி முனி, காளி, முத்தாலம்மன், இசக்கி, கண்ணகி ஆகியவை  தடை செய்யப்படுகின்றன.
13.                முருகனின் அறுபடை வீடுகள் , தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகத்தின்  மூலம் தேசிய   உடமை ஆக்கப்படுகின்றன.
14.                தமிழ்நாடு என்ற ஒன்று இனிமேல் இல்லை. மராட்டியர் ஆண்ட திருச்சி, தஞ்சாவூர் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்படுகிறது. திருநெல்வேலியும் கன்னியாகுமரியும்,கோயம்புத்தூரும் கேரளத்துடனும் சேருகிறது. காஞ்சிபுரமும், சென்னையும் ஆந்திரத்துடன் இணைகிறது. வேலூர், தர்மபுரி, ஓசூர் கர்நாடகத்துடன் வருகிறது. ராமநாதபுரமும் ராமேஸ்வரமும் கச்சத்தீவு போல இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது.
Image result for Jallikattu


கற்பனையில் எழுத்துவதற்கே கை நடுங்குகிறது. இதுவே உண்மையானால். 
இந்த லட்சணத்துல பொங்கல் வாழ்த்து எப்படி சொல்றது ?
 இருந்தாலும் தடை  செய்யும்வரை சொல்லித்தானே ஆகவேண்டும் .
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Image result for pongal in tamilnadu
பின் உரையாடல் :
Image result for ministers bending to sasikala

"ஆமா  சேகரு தலைப்புல முதுகெலும்பு   இல்லாத சமூகம்னு போட்டிருக்கியே , அதுக்கு என்னடா அர்த்தம் ?"
"அதுவாடா மகேந்திரா , அதான் நல்லா  குனிஞ்சு   வளைஞ்சு கும்பிடுறாய்ங்களே அதைத்தான்   சொன்னேன்".



Tuesday, January 3, 2017

அம்மாவும், சின்னம்மாவும், வீட்டம்மாவும் !!!!!!!!!!!!

Image result for jayalalitha


ஹலோ பரதேசி”
சொல்றா புல்தடுக்கி
என்னடா நானே ரொம்ப நாளுக்கு முன்னமே மறந்துபோன பட்டப் பேரைச் சொல்ற?”
ஆமா, நீ மட்டும் பரதேசின்னு சொல்லலாமா?”
"அட நான் எங்கடா சொன்னேன், நீதானே உன்னை பரதேசின்னு சொல்லிக்கிட்டு அலையுற".
உண்மைதான் சரி என்ன விஷயம், சொல்லுறா மகேந்திரா?”
ஒன்னுமில்லை, புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத்தான் வந்தேன்.
நன்றி ,உனக்கும் உரித்தாகுக,.
ஆமா நாட்டு நடப்பெல்லாம் பாக்கிறியா?”.
எதைச் சொல்ற, அதான் இங்க தமிழ் சேனல்கள் எல்லாம் வருதே? பாத்துக்கிட்டுதான் இருக்கிறேன்.
இல்லடா ஜெயா டிவி பாத்தியா?”
ஆமா பாத்தேன், சின்னம்மா புண்ணியத்தில நாடு மிகவும் அமைதியாகவும், சுபிட்சமாகவும் பொன் விளையும் பூமியாகவும் இருக்குதாம்.
சன் டிவி கூட வருதா அங்க?”.
ஆமா பாத்தேன்நாடு வரட்சியில் வாடுது, கொலை கொள்ளை பெருகிப் போச்சு, சட்ட ஒழுங்கு சுத்தமா இல்ல, விவசாயிகள் தினமும் தற்கொலை செய்றாங்க.
ஆமாடா, அப்ப நாட்டு நடப்புன்னு நீ எதை நம்புற?”
மகேந்திரா நான் எதையும் நம்புறதில்லை.நாட்டு நடப்பை விடு, நம்ம வீட்டு நடப்பும் சரியில்லை.
என்னடா சொல்ற மனைவி கூட தகறாரா?”.
ஐயையோ அதெல்லாம் நான் எப்பவும் பண்றதேயில்லை.”
சமீபத்தில் நீ போட்ட போட்டாவப் பார்த்தேன். ரெண்டு பேரிடமும் நல்ல மாற்றம் இருக்குடா.”
ஆமடா சமீபத்தில் கூட கல்யாண போட்டோவை நான் எடுத்துக் பார்த்தேன் வித்தியாசம் ரொம்பத்தான் இருக்கு.
மாற்றம் தானடா வாழ்க்கை. மாற்றம்தானடா என்னைக்கும் மாறாதது.
என்னடா மகேந்திரா, புது வருஷ தத்துவமா?”
அப்படியெல்லாம் இல்ல, நீ சொல்லுடா என்னடா வீட்டு நடப்பு?”
அடுத்தவன் கதைன்னா ரொம்ப ஆவலாயிருவேயே.
ஏலேய் உங் கூட ரொம்ப நொம்பலம்டா, நீ தானடா பேச்சு எடுத்த.
சரிசரி சொல்றேன், என் மனைவிதாண்டா
என்னடா சொல்ற தங்கச்சி என்ன சொல்லுது ?”.
தங்கச்சி அக்கா ஆகி அக்கா பக்காவாயிட்டா?”
நல்லவேளை அக்கா அம்மா ஆகலைடா.  
“யார் சொன்னா அவளும் மாறிட்டே இருக்காடா.
என்னடா மாற்றம்?”
கல்யாணம் ஆகும் போது குழந்தை போல இருந்தா. அப்புறம் படிப்படியா முன்னேறி டீனேஜ் பெண்ணாகி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினா.
ம் அப்புறம்.
அப்புறம் ஒரேயடியா முன்னேறி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆயிட்டா.
ஜெயலலிதா மாரியா?”
ஆமடா
 “ஆமாம் யாருடைய கொள்கைகளைப் பரப்பிச்சு ?
தன் சொந்தக் கொள்கைகள் தான்
அது என்ன கொள்கைகள்.
அதுவா புருஷன், வீட்டில் சரிபாதி வேலை செய்யனும், சமையல் செய்யனும், பத்துப்பாத்திரம் தேய்க்கனும் அப்படின்னா நிறைய கொள்கைகள். அப்புறம் பொதுச் செயலாளர் ஆயி, முதலமைச்சர் ஆயிட்டா.
ஐயையோ அப்புறம்?”
அப்புறம் அதிகாரம் ஒரே இடத்தில குவிய ஆரம்பிச்சிருச்சு. அவளோடு உறவினர் பெருகிப் போய்ட்டாங்க.
எங்க நியூயார்க்கிலயா?
அட ஆமாண்டா ,அப்ப தோழின்னு யாரும்?”
img15

தோழி கிடையாது, தோழன் மட்டும்தான்?”
ஐயையோ யாராது அந்த தோழன்?”
 வேறுயாரு நாந்தேன்.
நீ தோழனா? தோலனா?”
டேய் மகேந்திரா என்ன திமிரா?”
இல்லடா இப்பவும் உனக்கு என்பு தோல் போர்த்திய உடல் தானடா?”
ஆமாடா அது சரிதான்.
சரி அப்புறம்?”
“அசைக்க முடியாத சக்தியா உருவாயிட்டா, எதிர்பேச  யாருமில்ல,
என்னைத்தான் தலைதலைன்னு எல்லாரும் சொல்வாய்ங்க.
இப்ப என்னாச்சு?”.
Related image



தலை சிறுதலையாகி தறுதலையாகிப் போச்சு.
வெறுந்தலையாகிப் போச்சுன்னு சொல்லு.
டேய் என்னடா வார்த்தை தடுமாறுது.
சர்ரா விட்ரா  விட்ரா நீதான் அறிவாளியாச்சே, மேல சொல்லு.
சொத்துக் குவிப்பும் நடந்துச்சு.
அப்படியா உன் மனைவி பேர்லயா?
நீ வேற எல்லாம் பினாமிதான்.
பினாமியா அது யார்றா?
வேற யாரு  நாந்தேன்.
அடப்பாவிகளா அப்புறம்?
நெனைச்சதெல்லாம் நடத்திக் காட்டினா, எல்லாத்தையும் பேசியே சாதிச்சா.
அபாரம்டா
சில சமயம் அருகில் உறங்கும் போது திரும்பிப் பார்த்தால் கூட ஜெயலலிதா உருவம் போலவே தெரியும்.
ஐயையோ பிறகு.
இப்ப டிசம்பர் லிருந்து அடியோட மாறிட்டா?
ஒண்ணும் புரியலயே
“அவளுக்குள்ளிருந்த ஜெயலலிதா செத்துப்போன மாதிரி தெரிஞ்சுது.
இப்ப ஒண்ணுமே பேசறதேயில்லை. ஆனா பேசாமலேயே எல்லாத்தையும் சாதிக்கிறா. ஒரே மிரட்டலாய் இருக்கு. பிரமிப்பாய் இருக்கு. ஆனா ஒண்ணும் பேசறதேல்லை.
அப்புறம் என்னாச்சு.
நேத்து ராத்திரி தற்செயலா படுக்கையிலே திரும்பிப் பார்த்தேன். இப்ப அடையாளம் சுத்தமா மாறிப்போச்சு.
என்னடா சொல்ற?”,
ஆமாடா, இப்ப சசிகலா மாதிரியே தெரியறடா
ஐயையோ

Highlight Story

ஜெயலலிதாவைக் கூட சமாளிச்சரலாம்டா, எல்லாமே வெளிப்படை இந்த சசிகலாவை எப்படிரா சமாளிக்கிறது?”
அதாண்டா தூக்கமே வரமாட்டேங்குது.
லோ மகேந்திரா ஹலோ மகேந்திரா,
(என்ன இது அடி வாங்கும் சத்தம் கேட்கிறது ஐயையோ ஏற்கனவே என்ட்ட சொல்லியிருக்கிறான். அவன் மனைவி இரவு 12-க்கு மேல் பத்ரகாளி என்று பாவம். நான் தான் ரொம்பப் பேசிட்டேன் போல இருக்கு.)
ஒரு 15 நிமிடம் கழித்து.
ஹலோ சேகர் ஹலோ சேகர் (குசுகுறுக்கிறான்).
என்னடா அடி பலமா?”
ஆமாடா, லைட்டா
பிறகேண்டா திரும்பவும் கூப்பிடுற.
இல்லடா அவ டயர்டாகி  தூங்கிட்டா.
சேகரு உன் பாடு எவ்வளவோ பரவாயில்லடா.
லேசாக சிரித்துக் கொண்டே,
என்னடா உன் மனைவி அம்மாவா சின்னம்மாவா ?
Image result for ilavarasi
Ilavarasi
இரண்டுமில்ல இவ இளவரசிடா”

என்ன இளவரசியா?”
ஆமடா அடுத்த வாரிசுடா ,கொஞ்சம் பொறுத்துப்பார் தெரியும்.
பரதேசி திகைத்துப் போகிறான்.

Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017