Showing posts with label கொழும்பு. Show all posts
Showing posts with label கொழும்பு. Show all posts

Monday, December 18, 2017

இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை !!!!!!!


இலங்கையில் பரதேசி -31

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_12.html

Fried Ice cream shop in Colombo

            இருக்கும் சுகரை நினைத்து என் ஃபிகர் உதறினாலும், அதனால் டிஸ்ஃபிகர் ஆனால் அதனைப் பின்னால் கான்ஃபிகர் பண்ணிக்கொள்ளலாம் என்றெண்ணிக் கொண்டு "சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்றேன்.
கொழும்பின் மறுபுறம் போனோம் இங்கு அதிகமாக தமிழ் முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் காரை நிறுத்தினான் பொறித்த ஐஸ்கிரீம் என்றால் சூடாக இருக்குமே என்று நினைத்த எனக்கு அதெப்படி ஐஸ்கிரீம் சூடாக இருக்க முடியும் என்று வியப்பாக இருந்தது.

உள்ளே போய், “அம்ரி முழுதாக என்னால் சாப்பிடமுடியாது. அப்படியே சாப்பிட்டால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் எனவே "நீ பாதி நான் பாதி கண்ணே” என்று பாடினேன். அம்ரி கலவராகி என்ன சார் என்றான். “இல்லப்பா பாட்டு அதிரடியா வந்துருச்சு”, என்று ஜகா வாங்க, அம்ரி ஆர்டர் செய்தான்.
அதன் ஓனரும் தமிழ் முஸ்லீம்தான் பல தலைமுறைகளாக அங்கிருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஆவி பறக்க (?) ஐஸ்கிரீம் வந்தது. வெளியே சிறிதே சூடாக ஆனால் உள்ளே கூலாக மிகவும் வித்தியாசமாகவும் கிரிஸ்ப்பாக மொறுமொறுவென்று இருந்தது. சுவையாகவே இருந்தது. கொழும்பு சென்றால் நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள்.
“சார் டின்னருக்கு எங்கே போகலாம்?”
"இல்லப்பா ஐஸ்கிரீமே போதும். ரூமில் கொஞ்சம் பழங்கள் இருகின்றன".
ரூமில் போய் இறங்கும் போது இரவு மணி 10. அன்று பார்த்த அனைத்தையும் அலசிக் கொண்டே அப்படியே உறங்கிப் போனேன்.
அடுத்த நாள்தான் சுற்றிப்பார்க்கும் கடைசி நாள் என்பதால் காலையிலேயே ரெடியாகி உட்கார அம்ரி வந்தான். நல்ல பையன் கிடைத்தான் எனக்கு.
“அம்ரி கடைசி நாள் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும்”
 “சரி சார் வாங்க போகலாம்?”
“முதலில் எங்கே?
மியூசியத்துக்குப் போகனும்னு சொல்லிங்கல்ல, முதலில் அங்கே போவோம்.”
“வெரிகுட், அதன் பெயர் என்ன?”
"நேஷனல் மியூசியம் ஆஃப் கொழும்பு" .
பேசிக் கொண்டே மியூசியமும் வந்து சேர்ந்தது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு ஐரோப்பிய அரண்மனை போல் தோற்றம் தந்தது. அதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே போகலாம் என்று நினைக்கிறேன்.
Image result for national museum of colombo
National Museum 
புல்லட் பாயிண்ட்களில் சுருக்கமாகத் தந்து விடுகிறேன். என்ன மக்கா?
1.   கொழும்பில் உள்ள இரண்டு மியூசியங்களில் இது மிகவும் பெரிது. கொழும்பில் மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகப்பெரிய மியூசியமும் இதுதான்.
2.   இலங்கையில் மத்திய அரசின் தேசிய மியூசியங்களின் துறையால் (Department of National Museum of Central Government) இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
3.   சர். வில்லியம் ஹென்ரி கிரிகரி என்பவர் இலங்கையின் பிரிட்டிஷ் கவர்னராக இருந்தபோது, ஜனவரி 2ஆம் தேதி 1877-ஆம் வருடத்தில் இது நிறுவப்பட்டது.
4.   இத்தாலிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் ஆர்க்கிடெக்ட் J.G.ஸ்மிதர் என்பவர்.
Related image

5.   1872ல் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு 1876ல் கட்டிமுடிக்கப்பட்டது.
6.   இதன் கட்டிடப்பணியை மேற்கொண்டவர் அரசி மரிக்கார் வாப்ச்சி மரிக்கார் என்பவர். இவர்கள் குடும்பம் 9ஆம் நூற்ராண்டில் இடம் பெயர்ந்த ஷேக்  ஃபரீத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தான் கொழும்பிலுள்ள மிகவும் முக்கியமான   கட்டிடங்களான ஜெனரல் போஸ்ட் ஆபிஸ், கொழும்பு கஸ்டம்ஸ், பழைய டவுன் ஹால், காலே ஃபேஸ் ஹோட்டல், விக்டோரியா ஆர்க்கேட், கிளாக் டவர், போன்ற இன்னும் இருக்கும் பல கட்டிடங்களைக் கட்டியவர்.
Related image
Crown of Kandy king
7.   இது தேசிய மியூசியம் ஆனபிறகுதான் இதன் கிளை மியூசியங்களாக யாழ்ப்பாணம், கண்டி,ரத்னபுரி ஆகிய இடங்களில் (1942ல்) ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு ஒன்பது புதிய கிளைகளும் திறக்கப்பட்டதோடு ஒரு மொபைல் மியூசியமும் உருவாக்கப்பட்டது.
Kandy Kings throne
8.   1885ல் உருவாக்கப்பட்ட ஒரு அரிய நூலகமும் இங்கு இருக்கிறது. 1 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் பல தலைப்புகளில் இங்கு இருக்கின்றன.
9.   இங்கு பல ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை சிங்கள, பாலி, சமஸ்கிருதம், பர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அமைந்தவை. இவை புத்தமதம், சிங்கள இலக்கியம், வரலாறு, மருத்துவம், ஜோதிடம், கால்நடை மருத்துவம், வரைவுக்கலை, கட்டிடக்கலை போன்றவையும் அடங்கும்.
உள்ளே இருந்தவற்றுடன் என்னைப் பெரிதும் கவர்ந்தவை கண்டி அரசர்களின் சிம்மாசனம் மற்றும் கண்டி அரச குடும்பங்கள் பயன்படுத்திய தங்க, வைர, முத்து ரத்தின ஆபரணங்கள்.
இவைகளைக் கவர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் லண்டன் கொண்டு சென்று அங்கே அரச வமிசத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இலங்கை அரசு இதனைக் கேட்டுப் பெற்று இந்த மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.
பாருங்கள் சுண்டைக்காய் நாடான இலங்கை, இங்கிலாந்துடன் பேசி இவற்றை வாங்கியுள்ளது. நாமும் தான் இருக்கிறோம். நம்முடைய விலைமதிப்பற்ற கோஹிநூர்  வைரம் இன்னும் பிரிட்டிஷ் வசம் இருப்பது வெட்கக்கேடு. இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை. அது தவிர மாலத்திவிலிருந்து கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புத்தர் சிலை மற்றும் ஒரு பட்டத்து யானையின் எலும்புக் கூடும் அப்படியே இருந்தது. கொழும்பு செல்லும் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் இது.
-தொடரும்.
 பின் குறிப்பு : அடுத்த வாரம் "இலங்கையில் பரதேசி முடியும்"..அதன்பின் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள

பரதேசி

Tuesday, December 12, 2017

கடற்கன்னியும் வண்ண மீன்களும் !!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -30


இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post.html

கீழே வந்தது என்னவென்று பார்ப்பதற்கு முன் இந்த பவளப்பாறைகள், பாசிகளைப்பற்றி சிறிது பார்க்கலாம். இலங்கையின் பெரும்பாலான கடற்கரைகளில் இந்த அதிசயப் பவளப்பாறைகள் பாசிகள் இருக்கின்றன. காலே கடற்கரை அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. கிட்டத்தட்ட 180 வகைகள் இருக்கின்றனவாம்.நான் எங்கு சென்றாலும் அதன் சிறப்பு கூடுகிறது(?). இந்த ஆழ்கடலில் வீழ் உடலாக உள்ளே சென்றால் அவற்றை அருகில் பார்க்கலாம்.
“சார் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள், மெலிதான உடல் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு நீச்சல்  செய்வது மிகவும் ஈஸி. நீச்சல் உங்களுக்குப் புத்துணர்ச்சி  ஆரோக்கியத்தைக் கூட்டும். அதுதவிர உங்கள் மூளை அதிவிரைவில் சிந்திக்கவும் தூண்டும்”.
“அம்ரி நீச்சலைக் குறித்த உன் விரிவுரை நன்றாக  இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது எனக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. அதோடு தண்ணீரில் எனக்கு முண்டம் சாரி தண்டம் சாரி சாரி கண்டம் இருக்கிறது. பார்த்தாயா கண்டம் இருக்கிறது என்று சொல்வதற்கே எவ்வளவு தடுமாறுகிறது பார்”.
“என்ன கண்டம் சார்?”
“அதாவது எனக்கு சனி உச்சியில் இருக்கும்போது உக்கிரதிசை வழியில் செல்லும்போது, சுக்கில பட்சத்தில்  ராகுவும் கேதுவும் உறவாடும்போது நீரில் கண்டம் என்று குருஜி சொல்லியிருக்கிறார்”.   அம்ரிக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதலால் கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
“யார் சார் அந்த குருஜி?”.
"அவரா அவர் பெயர் ஸ்ரீலஸ்ரீ மகா உபாத்யாய குருபீட குருப்பிரம்ம, குரு  விஷ்ணு குருதேவோ குருஆச்சாரிய".
“சரி பரவாயில்லை சார் விடுங்க. ஏதோ  இளையராஜா பாட்டில வர மாறி இருக்கு .
“ஏன் மீன் சாப்பிடமாட்டீங்கறீங்கன்னு கேட்டியே இதுதான் காரணம். கடல் பண்டம் எதுவும் சாப்பிடக் கூடாது. கடல் பண்டத்திலும் உடல் கண்டம் எனக்கு இருக்கிறது. (ஆஹா மீன் சாப்பிடாததற்கு ஒரு மீன் (mean) காரணம் கண்டுபிடித்தாகிவிட்டது)
“சரிசார் விடுங்க, விடுங்க”.
ஆழ்கடலில் ஸ்நார்க்லிங் செய்பவர்களுக்கு  பலவித வண்ணங்களில் இருக்கும் கோரல்களைப் பார்ப்பதும், ஆய்வதும் மிகுந்த ஆச்சர்யங்களை அளிக்க வல்லது. அதோடு பலவித ரகமான வண்ணமய மீன்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து வண்ணத்துக்கு வண்ணம் சேர்க்கிறது.






கோரல்கள் விதவிதமான அளவுகளில், வண்ணங்களில் வடிவங்களில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில இடங்களில் அவ்வளவு ஆளமில்லை. தொட்டுவிடும் தூரத்தில் நிறைய இருந்தன.  ஆனால் கண்ணாடி தடுத்தது. அப்படியே கை எட்டினாலும் எடுக்க முடியாது. இதெல்லாம் இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட இடங்கள். ஆண்டவனின் அதிசய படைப்புகள் தான் எத்தனை எத்தனை, அனைத்தையும் பார்த்து மகிழ ஒரு ஜென்மம் போதாது .
அப்போதுதான் கீழே அந்தப்பெரிய  மீன் தெரிந்தது . அது மீன் என்று உற்றுப்பார்த்தால் இல்லை இல்லை ஓ அது மெர்மைட் என்று சொல்லப்படும் கடற்கன்னி போலத்தெரிந்தது. அம்ரியும் குனிந்து சுவாரஸ்யமாகப் பார்த்து கையாட்ட அது கண்டுக்காமல் போனது.
“என்ன அம்ரி கடற்கன்னியா ?”      
"கன்னியா என்று தெரியவில்லை, சார் சும்மா விளையாடாதீங்க அது ஏதோ வெள்ளைக்காரப் பெண் ஸ்நார்க்லிங் செய்து கொண்டு இருக்கிறது".


Image result for snorkeling in galle

“எனக்கும் தெரியும் நீதான் உத்து உத்துப்பாத்தியே, அதனால் கேட்டேன்”.
அந்தப் பெண்ணை போட்டோ எடுத்துக் காண்பித்தால் கடற்கன்னி சொன்னால் யாரும் நம்பிவிடுவார்கள். 2 பீஸ் உடை இரு கால்களிலும் மீன் வாலைப் போன்ற ஒரு அமைப்பை மாட்டியிருந்தாள். கண்களில் ஒரு காகில்ஸ் முகமூடி. முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர். அவள் நீந்துவது மீன் கூட போட்டிபோடுவது போல் தெரிந்தது. இவ்வளவும் நடப்பது ஆழ்கடலில் நாங்கள் படகில் மேலே, அதற்குள் கடற்கண்ணன் வந்துவிட  முத்தமிட்டுக்கொண்டே இருவரும் நீந்திக்  கடந்தனர்.ஒரு சிங்கிள் கூட இல்லை இங்கே மிங்கிள் ஆக. எல்லோரும் ஜோடிதான் ஹீம் கடலின் ஆழத்திலும் சரி, கடற்கரையிலும் சரி, வான ஊர்தியிலும் சரி, நகர்ப்புறத்தில் சரி. தனியாக இருந்தது நான் மட்டும்தான் நல்லவேளை அம்ரியாவது இருக்கிறானே துணைக்கு.


படகு நகர்ந்து அடுத்த புறம் செல்ல அடியில் ஆயிரக்கணக்கில் ஒரு வண்ணமய மீன் கூட்டம் கடந்து சென்றது. சிறிது நேரம் சென்று இன்னொரு வண்ண மீன் கூட்டம் சென்றது,கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
Related image
Glass bottom 
இதென்ன இங்கு மீன் வளர்க்கிறார்களா? என்று  கேட்டால், படகுக்காரர் சொன்னார் எல்லாம் இங்கே இயற்கையாக வளர்வது என்று. என் மனைவி இப்போது மட்டும் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். எங்கள் வீட்டில் வண்ணமீன்கள் தொட்டி வைத்து சில மீன்களை வளர்த்து வருகிறாள். ஒவ்வொன்றும்  நல்ல விலை. அதே சமயத்தில் மீன் உணவு என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். அதெப்படி ஒரே சமயத்தில் ஒருபுறம் மீனைச் சாப்பிட்டுக் கொண்டு மறுபுறம் மீனையும் வளர்க்கவும் முடியும் என்பது எனக்கு எப்பவுமே ஆச்சரியம்தான். அதோடு எனக்கு மீன் என்றால் ஆகாது. அவளுக்கு மீன் என்றால் உயிர். இந்தக் கடவுள் எப்படியெல்லாம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பாருங்கள்.
Image result for Glass boat in Galle

படகுக்காரர் எங்கெல்லாம் கோரல் இருக்கிறதோ  அங்கு சிலநிமிடம் நிறுத்துவார். அதே மாதிரி மீன் கூட்டம் வந்தாலும் நிறுத்துவார். இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை  எனக்கு கிடைத்ததில்லை. வண்ணமீன்களில் விதவித டிசைன்களைப் பார்க்கும்போது சொர்க்கத்தில் கடவுள் இதற்கென தனி டிபார்ட்மென்ட் வைத்து சில ஆர்ட்டிஸ்ட்டுகளை வேலைக்கு வைத்து வரைந்து, பெயிண்ட் செய்து, அனுப்புவார் போலத் தெரிந்தது.
 காலே பயணம் இனிமையாகக்கழிய, நானும் அம்ரியும் கிளம்பி கொழும்பு வந்து சேர்ந்தோம். அப்போது அம்ரி கேட்டான், “உங்களுக்கு பிரைட் ஐஸ்கிரீம் வேணுமா? வேணும் என்றேன். அதென்ன பொறித்த ஐஸ்கிரீம் என்று வியப்பாக இருந்தது.

தொடரும்>>>>>>>>

Tuesday, July 11, 2017

கண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சம் !!!!!!!!!!!!!!!!!


இலங்கையில் பரதேசி -17

Dutch General Gerrard Hulft presents the captured Portuguese flags and gifts to the King.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_27.html

விமலதர்ம சூரியாவின் ஆட்சி தொடங்கி அடுத்து வந்த இருநூறு வருடங்கள் போர்த்துக்கீசியருக்கும் கண்டிக்கும் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டே இருந்தது. இதில் சிலசமயம் டச்சுக்காரர்கள் சில சமயம் டேனிஷ்காரர்கள், கண்டிக்கு உதவி  செய்தார்கள். நடுவில் போர்த்துக்கீசியர் சில காலம் கண்டியை பிடித்தும் வைத்திருந்தார்கள். விமலதர்மாவிற்குப் பின் அவருடைய உறவினர் சேனரத்தனா, அவர் மகன் இரண்டாம் ராஜசின்ஹா, அவன் மகன் இரண்டாம் விமலதர்ம சூரியா, அவன் மகன் வீரநரேந்திர சின்ஹா ஆகியோர் தொடர்ந்து ஆண்டனர்.  அதுவரைக்கும் எந்த வாரிசு பிரச்சனையும் எழவில்லை. ஆனால் வீரநரேந்திர சின்ஹா 1739ல் இறந்த போது வாரிசுப்பிரச்சனை ஆரம்பித்தது. இவனுக்கு 'யுனம்புவே பண்டாரா' என்ற மகன் இருந்தான். ஆனால் இவனை வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால் இவன் சிங்களத்துணைவிக்குப் பிறந்தவன். அதோடு அந்தச் சிங்களப்பெண் அரச வம்சத்தைச் சேராத ஒரு குறைந்த சாதி பெண் கண்டி ராஜ்ஜியத்தில் தந்தை மற்றும் தாய் இருவரும் ஷத்திரிய குலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரியத்தை காலங்காலமாக பின்பற்றி வந்தனர். இந்தப் பிரச்சனையை சமாளிக்க அங்கிருந்த புத்தபிக்கு வெளிவிட்டா சரங்கரா, நரேந்திரனின் மூத்த மனைவியருள் ஒருவரின் சகோதரனை மன்னனாக்கினார். அந்த மனைவி தமிழும் தெலுங்கும் பேசும் மதுரை நாயக்க மன்னரின் குடும்பம் என்பதால் அப்போதிருந்து ஒரு புதிய வம்சம் கண்டியை ஆரம்பித்தது. அதன் முதல் மன்னன் ஸ்ரீ விஜயராஜ சின்ஹா என்பவன்.

இப்படித்தான் மதுரை நாயக்க வம்சம் கண்டியை ஆள ஆரம்பித்தது. இப்பொழுதும் இந்த நாயக்க வம்சப் பெயர்கள் சில சிங்களப் பெயர்களில் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். பண்டார நாயகே என்பது அதில் ஒன்று. விஜயராஜ சின்ஹாவும் அவனுக்குப்பின் வந்தவர்களும் முக்கிய பதவிகளில் நாயக்கர்களை நியமித்ததால் ஆங்காங்கே எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் எழுந்தன. ஆனால் இவர்கள் புத்த மதத்தையும் கண்டி கலாச்சாரத்தையும் தொடர்ந்து பின்பற்றியதால் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை.

டச்சுக் காரர்களுடன் ஒரு பக்கம் சண்டை நடந்து கொண்டே இருந்தது. அதன்பின் டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பு முடிந்து பிரிட்டிஸாரின் ஆதிக்கம் ஆரம்பமானது. திரிகோண மலையில் ஆரம்பித்து பாட்டிகலோவா, யாழ்ப்பாணம் என்று பிடித்துக் கொண்டே போனார்கள். கண்டியோடு முதலில் ஒரு ஒப்பந்தம் இருந்தது. “மிகஸ்டென்னே திசாவோ” என்ற கண்டியின் தூதர் சென்னை வரை வந்து இந்த ஒப்பந்தம் போட்டதால் கண்டிக்கு ஆபத்து இல்லாமல் இருந்தது. இது கீர்த்தி ஸ்ரீ ராஜசின்ஹாவின் ஆட்சியில் நடந்தது. ஆனால் அவனுக்குப்பின் வந்த அவன் தம்பி ஸ்ரீ ராஜாதி ராஜசின்ஹா இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து தன்னிச்சையாக ஆள முயன்றான். அதனால் பிரிட்டிஷார் கொஞ்சம் கொஞ்சமாக கண்டியின் பகுதிகளை பிடிக்க முயன்றார்கள். 1798ல் பிரடெரிக் நார்த் என்பவர் பிரிட்டிஸின் கவர்னராக இலங்கையில் நியமிக்கப்பட போது  இது வேகமெடுத்தது. இதற்கிடையில் ராஜாதி ராஜசின்ஹா 1798ல் வாரிசு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். வாரிசு இல்லாட்டிதான் நாந்தேன் வாரிசுன்னு வந்துருவானே வெள்ளைக்காரன்.  

Royal Court of King Sri Wickrama Rajasinghe, 19th Century Royal court scene. 5'x 7ft. Currently on display at the Departure lounge- Bandaranayake International Airport, Katunayake.
The court of King Vikramasingha 
முதல் மந்திரியா இருந்த பிலிமா தளவாய் பிரிட்டிஷ் உதவியோடு அதிகாரத்தை கைப்பற்றி இறந்து போன மன்னனின் உறவினனான 18 வயதான கொன்னசாமி என்பவனை ஸ்ரீ விக்ரம ராஜசின்ஹா என்ற பெயரில் அரியணை ஏற்றினான். அதற்கு எதிர்ப்புச் செய்த முத்துச்சாமியை குடும்பத்தோடு சிறையில் அடைத்தான். ஆனால் எதிபார்த்ததிற்கு மாறாக விக்ரம ராஜசின்ஹா தளவாய் பேச்சையோ பிரிட்டிஷ் பேச்சையோ கேட்காமல் சுதந்திரமாய் ஆள ஆரம்பித்தான். அந்த தளவாய்,”அடடா தப்புப் பண்ணிட்டோமே”, நாமே அரியணையைக் கைப்பற்றியிருக்கலாமே என்று நினைத்து திரும்பவும் பிரிட்டிஷாரின் உதவியை அணுகினான். இந்த மாதிரி காட்டிக் கொடுக்கும் கயவாளிகள் இருக்கும் வரை சுதந்திரமா இருக்க முடியுமா? சண்டை ஆரம்பித்தது. விக்கிரம ராஜசின்ஹா சுமார் 2 ஆண்டுகள் வரை பிரிட்டிஸிக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தான். இதனைத்தான் முதலாவது கண்டிப் போர் என்று சொல்லுகிறார்கள். 

ஒரு சமயம் மலேயா தளபதி சங்குன்குலோவின் தலைமையில் கண்டியைப் பிடித்து நான் முன்ன சொன்னேனே அந்த முத்துச்சாமி என்ற வெத்துச் சாமி கையில் ஆட்சியை ஒப்படைத்தனர். அவர்கள் கண்டியில் நுழையும்போது ஒரு ஈ எறும்பு கூட அங்கே இருக்கவில்லை. ஆனால் கொரில்லா புத்தம் ஆரம்பித்தது. கொஞ்ச நாளில் மீண்டும் விக்கிரம ராஜசின்ஹனா கண்டியை மீட்டுக் கொண்டான். அதன்பின் வெகுண்டெழுந்த பிரிட்டிஷ் கவர்னர், கண்டியின் சிறுசிறு பகுதிகளின் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பெரும் படையுடன் நுழைந்து கண்டியைப் பிடித்து 1815ல் விக்ரம ராஜசின்ஹாவை இந்தியாவுக்கு நாடு கடத்தினான். அவன் அங்கேயே சிறைப்படுத்தப் பட்டு 1832ல் இறந்து போனான். அவனுடைய ஒரே மகனும் 1843ல் இறந்துபோக மதுரை நாயக்கர்களின் கண்டி ஆட்சி முடிந்து போனது. இதுல ராஜாவைச் சிறைப்பிடித்தது. அவனுடைய சொந்த நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த படையாகும்னு சொன்னா அது பெரிய வெட்கக் கேடான விஷயம். அதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளைத் துவங்கியது. இலங்கை முற்றிலுமாக பிரிட்டிஷ் காலனியாக மாறிப்போனது.
Image result for sri vikrama rajasinha
Vikrama Rajasinga Naidu, the Last Nayak King of Kandy with his wife

இலங்கேஸ்வரன் என்னும் பூபதி என்றும் அழைக்கப்பட்ட கண்டி அரசர்களின் கதை இப்படி முடிந்து போனது. நாயக்க மன்னர்களின் ஆட்சியில் மன்னரின் பாதுகாப்புப்படை முழுவதும் தமிழ் வீரர்களாய் இருந்தார்கள். நாயக்க மன்னனும் தமிழ் பேசுபவனாக இருந்தான். தனிப்பட்ட அதிகாரம் இருந்தாலும் மன்னன் புத்த பிக்குகளுக்கு கட்டுப்பட்டவன் ஆவான்.  அவர்களின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் அதுதவிர நாட்டின் பல பகுதிகளில் இருந்த குழுக்களின் தலைவர்களும் ஆட்சியின் முக்கிய அங்கமாக இருந்தனர்.

புத்த பிக்குகளை உதாசீனம் செய்ததால்தான் விக்ரம ராஜசின்ஹாவை அவர்கள் பிரிட்டிஷ் துணையுடன் ஒழித்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள்.  உள்ளூர்க்காரனைப் பகைத்து வெள்ளைக் காரனுக்கு வழிவிட்டதால் அவன் முழு இலங்கையையும் பிடித்து ஆண்டது வரலாறு. அதன்பின் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்தான் இலங்கைகும் கிடைத்தது.
வாருங்கள் மக்களே கண்டிக்குள் நுழைவோம்.


-தொடரும்.

Tuesday, March 21, 2017

விகார மகாதேவி ஆகிப்போன விக்டோரியா மகாராணி !!!!!!!!!!!!

இலங்கையில் பரதேசி - பகுதி -6

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_7.html

Image result for queen victoria height
Queen Victoria 
"அம்ரி என்னப்பா கெஸ்ட் ஹவுஸ்னு போட்டிருந்த வொர்ஸ்ட் ஹவுசிலிருந்து இப்ப கோஸ்ட் ஹவுசுக்கு கூட்டிட்டு வந்துட்ட" என்றேன். "சார் கொஞ்சம் பொறுமையா இரிங்க", என்று சொல்லிவிட்டு அந்த வீட்டையும் கடந்து இடது புறம் திரும்பினால் ஆஹா  நந்தவனம் எதிரில் தெரிந்தது. அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில்  அமைந்திருந்தது  ஒரு அழகிய தங்கும் விடுதி. போல்கோடா  பார்க் என்பது அதன் பெயர். நடுவில் இருந்த சிறிய குடில்தான் வரவேற்பரை. அம்ரி போய் அங்கே போய் பேசிவிட்டு என்னை அழைத்துச் சென்றான். அட்வான்ஸ் பணத்தை கட்டிவிட்டு வெளியே இடதுபுற மூலையில் ஒரு அறை கொடுத்தனர். நல்ல அகலமான இரண்டு பெட் உள்ள அறை, பாத்ரூம் என சகல வசதிகளோடு இருந்தது.


"சார் நீங்க ரெடியாகி இருங்க, நான் வீட்டுக்குப் போய் விட்டு வந்துவிடுகிறேன். இங்கே பக்கத்தில்தான் என் வீடு", என்றான். பரவாயில்லை  அவனும் வந்து போவதற்கு வசதிதான் என்று எண்ணிவிட்டு உள்ளே போனேன். அரை மணி நேரத்தில் குளித்து ரெடியாகிரூம் சர்வீசை அழைத்து சாண்ட்விச் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு வெளியே வந்தேன். இட்லி தோசை அங்கு கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் மன வருத்தம்தான். நிர்மலமான நீல வானம் பளிச்சிட அது ஒரு அருமையான நாள். ரூமின் பின்புறம் அழகிய நீச்சல் குளம் இருந்தது. முன்புறம் அழகிய பூந்தோட்டம். அதன் அருகில் பெரிய திறந்தவெளி அரங்கம், மாலை நடக்கவிருக்கும் திருமண வரவேற்பு விழாவுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.


அதன்பின் ஒரு அழகிய ஏரி இருந்தது. இயற்கை அழகு சூழ்ந்த அந்த இடத்தை தேர்வு செய்த அம்ரிக்கு நன்றி சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அம்ரி வந்து சேர்ந்தான். "இன்றைக்கு எங்கே போகலாம்?”, என்ற போது மணி 11 ஆகிவிட்டது. “கொழும்பு நகரின் சில பகுதிகளைப் பார்க்கலாம்", என்றான்.
Fountain at Hotel 

"முதலில் சிறிது தூரத்தில் இருக்கும் பார்லிமென்ட் பில்டிங்கைப் பார்க்கலாம்", என்று அழைத்துச் சென்றான்.
நகருக்கு வெளியே இருந்த கட்டிடத்திற்குச் செல்ல சிறிது நேரமானது. 'ஜெயவர்த்தனபுர கோட்டே' என்ற இடத்தில் இது அமைந்திருக்கிறது. இதுவே தலைநகரம் என்றாலும் கொழும்பினருகிலேயே இருப்பதால் இதனை யாரும் தனி நகராகப் பார்ப்பதில்லை.
Related image
Srilankan  Parliament
இந்த இடம் கொழும்பிலிருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தியாவன்னா ஓயா (Diyawanna Oya) என்ற ஏரியில் உள்ள தீவில் அமைந்துள்ளது. இங்குதான் மூன்றாவது விக்கிரமபாகு என்ற மன்னனின் மந்திரியான நிசாகா அளகேஸ்வராவின் அரண்மனை இருந்ததாம்.
பாதுகாப்பான இடம் என்பதால் இதனைத் தேர்ந்தெடுத்து இலங்கையைச் சேர்ந்த தேஷமான்ய ஜாஃப்ரி பாவா (Geoffry Bawa)  என்ற ஆர்கிடெட் வடிவமைக்க, ஜப்பானிய கம்பெனியான மிட்சுய் (Mitsui) குரூப்பால் கட்டி முடிக்கப்பட்டது. அவர்கள் திட்டமிட்டபடி 26 மாதத்திற்குள் கட்டினார்களாம். கட்டி முடிக்கப்பட்டபோது இதன் மொத்த மதிப்பீடு 25.4 மில்லியன் US டாலர்கள்.
Image result for night view of Srilankan parliament
Night view
1979ல் பிரதம மந்திரியாக இருந்த ரத்னசிங்கே பிரேமதாசா முடிவெடுத்து, ஏப்ரல் 1982ல் அதிபர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனேவால்  திறந்து வைக்கப்பட்டது.
பழமையும் புதுமையும் சேர்ந்து கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தூரத்திலிருந்து பார்த்தாலும் மிக அழகாக இருந்தது. ஏரிக்குள் இருக்கும் இந்தத்தீவின் உள்ளே 12 ஏக்கர் பரப்பளவில் இது கட்டப்பட்டு மதிய வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
என்ன, பிரேமதாசா, ஜெயவர்த்தனே என்ற பெயர்கள்தான் கோபத்தைக் கிளறின. அந்தச் சமயத்தில் நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் பொது ஜெயவர்த்தனேவிற்கு எதிராக ஊர்வலம் போனது ஞாபகத்தில் வந்தது.
சிங்களப் பெயர்களுக்கும் தமிழ்ப்பெயர்களுக்கும் வித்தியாசம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பது சுலபமாய் இருந்தது. முற்றுப்பெற்று ஒலித்தால் தமிழ்ப்பெயர், முற்றுபெறாமல் தொக்கி நின்று விளித்தால் அது சிங்களப் பெயர். உதாரணத்திற்கு ரத்ன சிங்கம் என்றால் அது தமிழ்ப் பெயர், ரத்ன சிங்கே என்றால் அது சிங்களப் பெயர் எப்பூடி?

"இரவில் விளக்குகளுடன் பார்க்கும்போது அதன் பிம்பம் நீரில் விழுந்து மிக அழகாக இருக்கும்”, என்றான் அம்ரி.
“அடுத்து எங்கே என்று கேட்டதற்கு "விகாரமகா  தேவி பார்க்" என்றான் அம்ரி.
அதுசரி "விக்டோரியா பார்க் எங்கு இருக்கிறது?” என்றேன். விக்டோரியா பார்க் தான் விகாரமகா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது". என்றான் அம்ரி.
 “பார்க்கெல்லாம் அப்புறம் பார்க்கலாம். ஏதாவது முக்கிய இடங்களுக்கு போகலாம்”
"சரிசார், ஆனால் இதனைச்சுற்றி சில முக்கிய இடங்கள் இருக்கின்றன. அதனையெல்லாம் பார்த்துவிடலாம்".
அம்ரி சொன்னபடி ஒரு விசாலமான பூங்காவிற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பூங்காவை அமைத்து அதனை கொழும்புவிற்குக் கொடுத்தவர் பெயர் சார்லஸ் ஹென்றி டிசோசா. இது  நடந்தது பிரிட்டிஷ் ஆட்சியின் போது. இரண்டாவது உலகப்போர் நடக்கும்போது ஆஸ்திரேலியாவின் 17ஆவது படைப்பிரிவு இங்கு வந்து முகாமிட்டிருந்ததாம். உலகப்போர் முடிவுக்கு வந்தபின் இது புனரமைக்கப்பட்டு 1951ல் தான் பொதுமக்களுக்கென திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் விக்டோரியா மகாராணியின் பேரில் அழைக்கப்பட்ட இது சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் மன்னன் துட்டகாமனுவின் மனைவியான ராணி விகார மகா தேவியின் பெயர் சூட்டப்பட்டது.
Related image
Viharamahadevi Park
அவளைப்போய் ஏன் இந்த மன்னன் திருமணம் செய்தான்?
 “ஏன் சார்?”
“பேரே விகாரமா இருக்கே?. ஒருவேளை மூஞ்சியும் அப்படி இருந்திருக்குமோ?”.      “தெரியாது சார் நான் பார்த்ததில்லை”.  என்று சொன்னானே  பார்க்கலாம். நான் அதன்பின் வாயை மூடிக்கொண்டேன்,

Image result for viharamahadevi park
Add caption
கொழும்பு பகுதியில் இது தான் பழமையான பெரிய ஒரே பார்க். 1927 முதல் 1995 வரை இங்குதான் கிரிக்கெட் விளையாடுவார்களாம். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டீம்கள் இங்கு வந்து விளையாடி இருக்கின்றன.
Related image
Park 
 உள்ளே ஒரு மிகப்பெரிய புத்தர் சிலை, சிறிய மிருகக்காட்சி சாலை, ஒரு சிறுவர் பூங்கா தவிர நிறைய நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பூங்காவின் ஒருபுறம் நேஷனல் மியூசியமும், மறுபுறம் டவுன் ஹால் பில்டிங்கும் இருக்கின்றன. ஒருபுறம் நின்று பார்க்கும்போது வாஷிங்டன் DC -யின் மினியேச்சர் போலத் தெரிந்த டவுன் ஹாலை நோக்கிச் சென்றோம்.

- தொடரும்.

Tuesday, March 7, 2017

கெஸ்ட் ஹவுசும், வொர்ஸ்ட் ஹவுசும், கோஸ்ட் ஹவுசும் !!!!!!!


இலங்கையில் பரதேசி பகுதி -5

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/02/465.html
Chamanka Guest house
அந்த அம்மாவின் பதிலைக்கேட்ட எனக்கு, இரவு விமானப் பயணத்தின் 'ஜெட்லேக்' என்று சொல்லப்படும் மலைப்பு, இரவு முழுவதும் சரியாக துங்காதலால் ஏற்பட்ட களைப்பு இரண்டும் பலமடங்கு பெருகி தலை கிர்ரென்று சுற்றத்துவங்கியது. அதற்குள் உள்ளேயிருந்து வெளிப்பட்ட நடுத்தர வயது ஆண் ஒருவர். "என்ன வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்தார். அவரிடம், “தவறுதலாக வந்துவிட்டோம்.  ஒரு ஹோட்டலைத் தேடிக் கொண்டிருக்கிறோம்”, என்றோம். அட்ரஸை வாங்கிப் பார்த்த அவர் சிறிது கலவரத்துடன் "இதுதான் நீங்கள் தேடும் சமன்கா ஹெஸ்ட் ஹவுஸ்” , என்றார். அது ஒரு வீடு மாதிரி இருந்தது. அதன் பின்னர், “எக்ஸ்பீடியா மூலம் நான்கு நாட்களுக்கு புக் பண்ணியிருக்கிறேன்”, என்றேன். "அப்படி ஒன்னும் தகவல் இல்லையே", என்று சொன்னவுடன் மேலும் கலவரமானேன்.
No Board
புக்கிங் கன்ஃபர்மேஷனை எடுத்துக் காண்பித்தவுடன் ஆச்சரியப் பட்டார். "ரூம் இருக்கிறது, ஆனால் அதனை ரெடி பண்ண கொஞ்சம் நேரம் ஆகும்", என்றார். அம்ரி சொன்னான், “உள்ளே பார்த்துவிட்டு அதன்பிறகு முடிவு செய்யலாம்”, என்று. அவரிடம் அதனை நான் சொல்ல, அம்ரி குறுக்கிட்டு  சிங்களத்தில் அவருக்கு விளக்க அவர் ஓகே என்று சொல்லி கதவை விரியத்திறந்தார்.

நானும் அம்ரியும் காலணிகளை கழற்றிவிட்டு, உள்ளே  நுழைந்தோம். அது ஒரு சிறிய லிவ்விங் ரூம், டிவியில் ஏதோ சிங்கள சானல், பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சிறு பையன் அம்மணமாய் ஓடிவந்து சமையல் செய்து கொண்டிருந்த அம்மாவை எதற்கோ அழைத்தான். அம்மாவின் இடுப்பில் ஒரு பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. லிவ்விங் ரூம் தரை முழுதும் ஏராளமான பொருட்கள் இறைந்து கிடந்தன. பொம்மைகள், கைத்துண்டுகள், துணிமணிகள், உணவுப்பண்டங்கள், எலும்புகள்  ஆகியவை தரையில் காலை வைக்க இடமில்லாமல் கிடந்தன. அந்த ரூமின் ஓரமாய் இருந்த ஒரு வட்ட வடிவ டைனிங் டேபிளில் மூடி வைத்திருந்த மாமிச பண்டத்தை, மூடியைத் தள்ளிவிட்டுவிட்டு ஒரு பூனை கவ்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. எதற்கு ஷூவைக் கழற்றச் சொன்னார், தரை அழுக்காகிவிடுமென்றா இல்லை ஷூ அழுக்காகிவிடுமென்றா என்று யோசித்துக் கொண்டு நின்றேன். சரி கெஸ்ட் ஹவுஸ் எங்கப்பா என்று கேட்க வாய் திறக்கும்போது, “மேலே வாருங்கள்”, என  வெற்றுடம்புக்காரர் அழைக்க,. அப்படியே மேலேறிச் சென்றால் அங்கே இரண்டு பெட் ரூம்கள் இருந்தன. ஒன்றைக் கடந்து செல்லும்போது அது உள்ளே களேபரமாய்த் தெரிந்தது. அதனைத் தாண்டியதும் வந்த இன்னொரு பெட் ரூமைத்  துருப்பிடித்த சாவியை வைத்து கரகரவென்று  திறந்து விட்டுவிட்டு இதுதான் உங்கள் ரூம் என்றார். எவ்வளவு தூசியடைய முடியுமோ அவ்வளவு தூசி இருந்தது. 'உள்ளே போய்ப் பாருங்கள்' என்றபோது ,அந்தத் தற்கொலை முயற்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை என்பதால், “பரவாயில்லை இருக்கட்டும்”, என்றேன். “உள்ளேயே பாத்ரூம் இருக்கிறது”. (ஐயையோ கொழும்பில் மூச்சுத் திணறி இறக்க நான் விரும்பவில்லை)
"சுடுதண்ணீர் தேவையென்றால் எங்கள் பாத்ரூமிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" (இதில சுடுநீர் வேற வராதா ?).
“வேண்டுமென்றால் காலை உணவு உங்களுக்கு இங்கேயே தருவோம்”. (எது பூனை சாப்பிட்ட மிச்சமா? )
“ஒரு அரை மணிநேரம் கொடுத்தால் இதனை சுத்தம் செய்து விடுவேன்”, (இதையா அரை மாதம் கொடுத்தால் கூட சுத்தம் செய்ய கண்டிப்பாய் முடியாது).
“எத்தனை நாள் இருக்கப்போகிறீர்கள்?”.
நான் அம்ரியைப் பார்க்க அம்ரி திருதிருவென்று முழித்தது வேண்டாம் என்பது போல இருந்தது.
அதற்குள் அவர் மனைவி கீழேயிருந்து கத்த இவர் மேலேயிருந்து கத்திவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டு, “பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போக வேண்டும்”, என்றார்.
“சரி அம்ரியின் வீட்டுக்குப்போய் விட்டு இங்கு  வருகிறோம். எதற்கும் உங்கள் அலைபேசி எண்ணை கொடுங்கள்”, என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம். கேட்டை திறந்துவிட்ட கிழவியின்  முகம் கடுகடுவென்று இருந்தது. ஒரு வேளை அந்தம்மா படுக்கும் அறைதான் அதுவோ. குசினியில் இருந்த மனைவி எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இடுப்பில் இருந்த பெண் எழுந்து இப்போது கர்ணகடூரமாய் அழுது கொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் கையில் மகனின் யூனிபார்முடன் சுற்றிச்சுற்றி வர அந்தப் பையன் அம்மணத்துடன் அங்குமிங்கும் ஓடி அவருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தான். 

ஷூவைப்போட்டுக் கொண்டு வெளியே வந்தோம். அந்த சாக்ஸ் நனைந்து அழுக்காகி மறுபடியும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், இரண்டையும் கழற்றி விட்டெறிந்துவிட்டு வெறும் காலில் ஷூவை மாட்டிக் கொண்டு வெளியே வந்தோம்.

அம்ரி கேட்டான், “சார் இதுவா கெஸ்ட் ஹவுஸ்?”.
“இல்லை அம்ரி இது வொர்ஸ்ட் ஹவுஸ்”.
“என்ன சார் இது நியூயார்க்கிலிருந்து வருகிறீர்கள், ஒரு நல்ல இடம் புக் செய்ய வேண்டாமா? என்னிடமாவது சொல்லியிருக்கலாமே”.
எக்ஸ்பீடியாவுக்கு அங்கிருந்து போன் செய்தேன். சிக்னல் கிடைக்காது பலமுறை முயற்சி செய்து பேசியவுடன், ஒரு மாதம் முன்னால் புக் செய்ததால் இப்போது கேன்சல் செய்ய முடியாது என்கிறார்கள்.
என்ன செய்வது நான் எப்போது சிக்கனமாக இருக்க முயன்றாலும் செலவு இருமடங்காகி  விடுகிறது. என் ராசி அப்படி.
Image result for ghost house
Ghost house
அம்ரி சொன்னான், “கவலைப் படாதீங்க விட்டுத்தள்ளுங்க உங்களை நல்ல இடத்தில் சேர்க்கிறேன்”, என்று சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரத்தூரத்தில் ‘போல்கோடா’ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
மெயின் ரோட்டிலிருந்து ஒரு பெரிய பள்ளத்தில் வண்டியை விட்டான். அந்தப் பாதை கரடுமுரடாக வெறும் சல்லிக் கற்களால் போட்ட ரோடு போல இருந்தது கார் குலுங்க குலுங்க ஒரு பெரிய ஜல்லடையில் உட்கார்ந்து என்னை யாரோ ஜலிப்பது போல இருந்தது.

அஅஅம்ம்மிரி எஎஎங்ங்கேக்கே போபோகிகிறாறாய்? என்றேன். உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை குலுங்கிய குலுங்கலில், என் வயிறு நெஞ்சுக்கு வந்து எனக்கு உடனடியாக பாத்ரூம் போகனும் போல இருந்தது.

உடனே அம்ரி நிறுத்திய இடத்தில் எனக்கு இடதுபுறத்தில் ஒரு பாழடைந்த பேய் பங்களா ஒன்று இருந்தது. அம்ரி நோ...ன்னு கத்தினேன்.

-தொடரும்.