Thursday, August 31, 2017

ஜெயலலிதாவின் சோக முடிவு !!!!!!!!!!!

Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
படித்ததில் பிடித்தது
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
மு.நியாஸ் அகமது - விகடன் பிரசுரம்.

ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமை மறைந்தபின் அ.தி.மு.க பல அணிகளாக உடைந்து பிரிந்து, சரிந்து காணப்படுகிறது. இப்படி இருப்பதற்கும் அவரே காரணம்.
எம்ஜியார் என்ற ஒற்றை ஆளுமை, கருணாநிதி என்ற பெரும் சக்தியை எதிர்த்து வெளியே வந்து அதிமுக கட்சியை கட்டமைத்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது எம்ஜியாரின் ரசிகர்கள் என்ற பெரும் தொண்டர் பலத்தால்தான். நெடுஞ்செழியன், ஆர் எம் வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இருந்தாலும் கட்சியின் வாரிசு என்று ஒருவரை சுட்டிக் காட்டாமலேயே எம்ஜியார் மறைந்தார். அதே தவறைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். எம்ஜியாருக்குப்பின் கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல ஜெயலலிதா இருந்தார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் முதலில் செய்தது எம்.ஜியார் காலத்து இரண்டாம் கட்டத் தலைவர்களை ஒழித்துக் கட்டியதுதான். அதே சமயத்தில் அடுத்த தலைவராக ஜெயலலிதா கைகாட்டும்  அளவுக்கு அதிமுகவில் யாரும் இல்லை என்பதும் உண்மை. இரண்டாம் கட்டம் மட்டுமில்லாமல் மூன்றாம் நான்காம் நிலைத்தலைவர்களும் இல்லை.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with his brother with their mother Sandhya
பெரியார், அண்ணாவின் திராவிட சமத்துவ கொள்கைகள் எம்ஜியார் இருக்கும்போது பெருமளவிற்கு பின்பற்றப்பட்டது கூட ஜெயலலிதா காலத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கொள்கைப்பிடிப்பு எதுவுமில்லாத சுயநலமிக்க ஒரு பெருங் கூட்டமாகவே அதிமுகவின் கூடாரம் காணப்பட்டது. தன் தனிப்பட்ட ஆளுமையின் மூலம் எம்ஜியாரின் தொண்டர்களையும்,  ஒரு பெண் என்பதால் தாய்மார்களையும் கவர்ந்த ஜெயலலிதா ஒரு தனிப்பெரும் சர்வாதிகாரியாக இருந்தார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருந்த பாசத்திற்கும் நேசத்திற்கும் ஜெயலலிதா மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டை தன்னிகரற்ற நாடாக ஆகியிருக்க முடியும். எதுவும் செய்யாமல் பெரும்பாலும் வீட்டில் முடங்கி, சசிகலாவின் கூடாரத்திற்கு நாட்டையும் கட்சியினையும் தாரை வார்த்துக் கொடுத்து மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டார்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya in her young age
இருந்தாலும் அவர் இறந்தது கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தமிழ்நாடே கலங்கிப் போய் இலட்சக் கணக்கான மக்கள் தலை நகரில் குவிந்து தங்கள் இறுதி மரியாதையினைச் செலுத்தினர். அதன் பின்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்தத் தொடர் விகடனில் வெளிவந்த போது படிக்க ஆரம்பித்தேன். தொடர் முடிவதற்குள் அவரே மடிந்து போனது ஒரு அசம்பாவிதம். அவர் இறப்பைச் சுற்றி உள்ள மர்மம் இன்னும்விடுபடாத சூழ்நிலையிலும், அவருடைய கட்சியினர் பல துண்டுகளாய்ப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் ஜெயலலிதாவின் ஆரம்பத்தையும், வளர்ச்சியினையும், முடிவையும் தெரிவிக்கும் ஆவணமாக இருக்கிறது. தமிழக அரசியலில் நீண்ட காலம் கொடியுயர்த்தி இந்த ஆளுமை ஆரம்பத்தில் இருந்த நிலைமைக்கு முற்றிலும் மாறாக எப்படி எல்லாம் மாறிப்போனார்  என்பதை படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
Image result for மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
Jaya with MGR
1.   ஜெயாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து இடம்  பெயர்ந்து மைசூருக்கும், அவரின் தந்தை ஜெயராமன் இறந்த போது பெங்களூருக்கும் அதன் பின் சென்னைக்கும் வந்து குடியேறியது. இவர்களின் தாய்மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
2.   ஜெயாவின் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் ஆலோசகராய் இருந்தவர்.
3.   ஜெயாவின் அம்மா சந்தியா, அவருடைய அப்பா ஜெயராமுக்கு இரண்டாம் மனைவி.
4.   ஜெயா சர்ச் பார்க்கில் தன் வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். அதோடு நடனப் பயிற்சியும் பெற்றார்.
5.   அம்மா சந்தியா இரவும் பகலும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் அம்மாவின் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் அதிகமாக ஏங்கினார்.
6.   அம்மா நடிகை என்பதால் பள்ளியில் பல கிண்டல்களுக்கும் பழிச்சொற்களுக்கும் ஆளாகினார். எனவே எப்பொழுதும் தனிமையையே நாடினார். நண்பர்கள் யாருமில்லை. கிடைத்த ஒரே தோழியிடம் துரோகம்தான் கிடைத்தது என்பதால் கசப்புணர்ச்சியுடனே வளர்ந்தார்.  ( தோழிஎன்றாலே  இவருக்கு துரோகம்தான் போலும் பாவம்)
7.   ஜெயாவின் நடன அரங்கேற்றத்திற்கும் தலைமை தங்கவந்த சிவாஜி கணேசன் பெரிய நடிகையாவாள் என்று ஆருடம் கூறியிருக்கிறார்.
8.   ஒருமுறை படப்பிடிப்பில் தாயோடு போயிருக்கும் போது எம்ஜியார் பார்த்து சிலாகித்தார்.
9.   ஜெயாவின் ஆசை ஒரு மருத்துவர் அல்லது டாக்டர் ஆக வேண்டும் என்பது. நடிகையாக இருக்கும் போது அளித்த ஒரு பேட்டியில் நடிகையாக ஆகியிருக்கவிட்டால் அரசியலுக்கு வந்திருப்பேன் என்கிறார், அதுபோலவே ஆனது.
10.                Y.G. பார்த்தசாரதி இயக்கிய ஒரு ஆங்கில நாடகத்தில் பிரெஞ்சு நாட்டுப் பெண்ணாக நடித்ததுதான் ஜெயாவின் முதல் நடிப்பு அனுபவம் இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.அப்போதிருந்தே அவர்களுக்குள் நெருக்கம் ஆரம்பித்தது.
11.                ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி எடுத்த ஒரு ஆங்கில ஆவணப்படத்தில் நடித்ததுதான் முதல் திரை அனுபவம்.
12.                "இந்த உலகத்தின் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும் நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்" என்பது ஜெயா ஒரு பேட்டியில் சொன்னது.
13.                கர்ணன் வெற்றிவிழாவில் ஜெயாவைப் பார்த்த BR பந்துலு "சின்னப கோம்பே" என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார். மிகுந்த தயக்கத்திற்குப்பின் இப்படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு முன்னால் “நன்ன கர்த்தவ்யா” வெளிவந்தது.
14.                டைரக்டர் ஸ்ரீதர் வெண்ணிற ஆடையில் கொடுத்த வாய்ப்பின் மூலம் ஜெ திரையுலகில் ஒரு இடம் பிடித்தார். பிறகு ஸ்ரீதருக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது.
15.                பள்ளிப்படிப்பு முடிந்து ஸ்டெல்லா மாரீஸில் சேர்ந்த போது ஆசிரியை "பொம்மை மாதிரி உடை உடுத்தினால் போதுமா?" என்று கேட்டதால் நடிப்பையும் படிப்பையும் ஒன்று சேர செய்யமுடியாதென்று எண்ணி படிப்பைக் கை கழுவினார்.
16.                23 வயதில் சந்தியா இறந்தபின் எம்ஜியாரின் கண்காணிப்பும் பாதுகாப்பும் கிடைத்தது.
17.                எம்ஜியாரின் தீவிர ரசிகையாக இருந்த ஜெயா, அவருக்கே நாயகியானதோடு அவருடைய கட்சியிலும் அடுத்த தலைமையைப் பிடித்தது ஆச்சரியம்தான். ஆனால் அவருடன் அவர் ஒத்துப்போக முடியவில்லை. அவருக்கு எதிராகக் திரைமறைவில் களமிறங்கினார்.
18.                நடிகையாக இருக்கும்போது ஊடகங்களோடு மிகுந்த நட்பில் இருந்தவர் பதவிக்கு வந்ததும் அவர்களைப் பகைத்து 2000 கேஸ்களைப் போட்டார்.
19.                மிகவும் தாராள மனப்பான்மை உள்ள அவர் பிற்காலத்தில் வெற்று  மரியாதை, காலில் விழுவதை ரசிப்பது என பிற்போக்காக நடக்க ஆரம்பித்தார்.
20.                அவருடைய மொழி ஆளுமை, தமிழ் தவிர, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என வியக்க வைக்கும் ஒன்று.
21.                இந்திரா காந்தி அவருக்கு மிகவும் பிடித்த தலைவர்.
22.                இறுதியில் நட்புக்காக மானம் மரியாதை இழந்து சிறை சென்று அழிந்து போனது பெருந்துயரம்.

முற்றும்

Monday, August 28, 2017

பிக்பாஸுக்குள் ஓவியா திரும்ப வரவேண்டுமா?

பிக்பாஸ் பதிவு -3
Image result for oviya in bigg boss tamil
இதற்கு முந்திய பத்திவைப்  படிக்க இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2017/08/blog-post_17.html

ஓவியா ஒரு சில படங்களில் நடித்த நடிகை. சில ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் பெரிய நடிகைகள் வரிசையில் இல்லாதவர். அதோடு வாய்ப்புகள் இல்லாத அல்லது முடிந்துபோன நிலையில் இருந்த ஓவியா பிக்பாஸுக்குள் நுழைகிறார். தன்னுடைய வெளிப்படைத்தன்மையாலும், பிறரால் ஒதுக்கப்பட்ட நிலையாலும் மக்களால் ஆதரிக்கப்படுகிறார். ஆதரவு என்றாலும் கொஞ்ச நெஞ்சமில்லை பிரம்மாண்டமான ஆதரவு. கோடிக்கணக்கான மக்கள் ஓவியா பேரை ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். “ஓவியா ஆர்மி”, “ஓவியா பேரவை”, என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். கட்சி ஆரம்பித்தால் முதலமைச்சர் ஆகிவிடும் அளவுக்கு தமிழ்மக்கள் ஓவியாவை விரும்பினார்கள். இதெல்லாம் ரொம்பவே ஓவர். இவருக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்தால் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் ஓவியாவை கொ.ப.செ யாகப் போடலாம்.
Image result for oviya in bigg boss tamil

ஓவியாவிடம் பார்த்த நல்ல விஷயங்கள்:
1.   யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன் நிலை பிறழாது இயல்பாக இருப்பது.
2.   காலையில் எழுந்தது முதல் ஆட்டம் பாட்டம் என அதிரடியாக இயங்குவது.
3.   ஒதுக்கப்பட்டவர்களுக்குக்குரல் கொடுத்து அவர்களை அரவணைத்துச் செல்வது.
4.   ஆண்களோ பெண்களோ தைரியமாக அவர்களை எதிர்கொள்வது.
5.   யாரையும் சட்டை செய்யாமல் தன்போக்குக்கு இருப்பது. 
ஓவியாவிடம் பார்த்த மோசமான விஷயங்கள் :
1.   சேர்ந்து வாழ முயலாமல் எல்லோரையும் எல்லாவற்றையும் எதிர்ப்பது.
2.   எந்த வித சட்ட திட்டங்களுக்கு அடங்காமல் தன் போக்கில் செயல்படுவது.
3.   கொஞ்சம் கூட அறிந்து தெரிந்து கொள்ளும் முன் யாரோ ஒரு ஆரவ்விடம் காதலில் விழுந்தது.
4.   ஆரவ் விரும்புகிறாரா இல்லையா என்று தெரியாமல், உரசுவது, மோதுவது மேலே விழுவது, படுக்கைக்குள் நுழைவது.
5.   கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் எல்லோர் முன்னும் ஆரவ்வை அணைப்பது, கொஞ்சுவது.
6.   இரவும்  பகலும் பிக்பாஸ் உட்பட எல்லோரையும் எதிர்த்தது.
7.   கார்ப்பெட்டில் வைத்து இழுத்து ஜூலியைக் கீழே தள்ளியது.
8.   எல்லோரும்  தூங்கிக் கொண்டிருக்கும்போது கிளாஸ் டம்ளர்களை போட்டு உடைத்தது.
9.   பிறரை பயமுறுத்த நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்வது போல் நடித்தது.
10.                காயத்ரி சொன்னதை விட  அதிக மோசமான 'F' வார்த்தைகளை பயன்படுத்தியது.
11.                 டாஸ்க் எதுவும் செய்யாமல் அடம்பிடிப்பது.
Image result for oviya in bigg boss tamil

             என சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சமயத்தில் இது நடிப்பா, உண்மையா இல்லை டாஸ்க்கா என்று தெரியாமல் எல்லோரையும் குழப்பி அடித்துவிட்டார். ஒரு சமயம் மனநிலை பிறழந்துவிட்டதோ என்று நினைக்கவும் தோன்றியது நடுநிலையாக இருந்து பார்த்தால் அவர் செய்த தவறுகள் ஏராளம். வெளியே வந்து கமலும்  ஏன் அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சொல்லியும் கேட்காமல் ஆரவ்வை காதலிக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொன்னது எரிச்சலைத்தான் தந்தது. இப்படி தீவிர ஒரு தலைக்காதலில் எந்த ஈர்ப்பினால் ஈடுபட்டார் என்று நினைத்தால் சிரிப்பாகத்தான்  இருக்கிறது. வந்த முதல் வாரத்தில் தாடி வச்சிருந்தால் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி விளையாட்டாய் ஆரம்பித்தது அப்புறம் அவரைப் பைத்தியம் ஆகும் அளவிற்கு போனது கிரேஸி. இதற்கும் ஆரவ் எனக்குத் தெரிந்து முதலிலிருந்தே உஷாராகத்தான் இருந்தார். தனக்கு திருமண நிச்சயம் நடந்ததையும் குறிப்பிட்டிருந்தார். இருந்தும் உன்னைத்தான் காதலிக்கிறேன் நீயில்லாமல் நான் வாழ முடியாது என்று சொல்பவரை எப்படி நீங்கள் சப்போர்ட் செய்யமுடியும். காதலுக்கு துணைபோய் பின்னர் சாதலுக்கு துணை போவது போல் ஆகிவிடுமே.
அதனால் நான் நினைக்கிறேன் ஓவியா திரும்ப பிக்பாஸுக்குள் வரக்கூடாது. அதுவும் ஆரவ் இன்னும் அங்கே இருக்கும்  சூழலில் ஓவியா வந்தால் அது பெரிய குழப்பத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு இப்போது போட்டிக்கு பிந்துவும் சுஜாவும்  இருக்கிறார்கள். ஒரே களேபரமாக சக்களத்திச் சண்டை ரேஞ்ச்சுக்குப் போய் பிரச்சனையில் போய் முடியும் என்பதால் ஓவியா திரும்ப வரக்கூடாது மக்களே ஓவியாவை மறந்து உங்கள் சுயநிலைக்கு வாருங்கள்.
தமிழ் மக்களின் இந்த மனநிலையை என்னவென்று சொல்வது? எனக்கு அவர்களைக் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.
1.   மூன்று தலைமுறையாக திரையில் பார்ப்பதை நிஜம் என்று நம்புகிறீர்களே? உங்களுக்கே இந்த அபத்தம் புரியவில்லையா?
2.   60 வருட முன்னால் படித்தவர் அவ்வளவு இல்லாத காலம் தொட்டு, படிப்பவர் சதவீதம் வெகுவாக அதிகரித்தும் இதே நிலைமை நீடிப்பது ஏன்?
3.   வெறும் சினிமாக்கவர்ச்சி, முகக்கவர்ச்சி. பால் கவர்ச்சிக்கு ஆட்பட்டு நாட்டையே கையில் கொடுத்து விட ரெடியாயிருக்கிறீர்களே? இது நியாயமா?
4.   அது என்ன எப்பப்பார்த்தாலும் அடுத்த மாநிலத்தில் இருந்து வந்தவர்களையே கொண்டாடுகிறீர்களே? உள்ளூர்க்காரர்களை ஒதுக்கி விட்டுவிடுகிறீர்களே?
5.   நாட்டின் சட்டமன்ற நாடாளுமன்ற ஓட்டுக்களின் சதவீதத்திற்கு  மேல் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு ஓட்டளித்து விடுகிறீர்களே?
6.   எம்ஜியார், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், T.ராஜேந்தர், கார்த்திக் ஆகியவர்களைப் பார்த்தும் கூட  திருந்தாமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என்று பின்னால் செல்கிறீர்களே, உங்களுக்குக் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இருக்காதா?
7.   கிட்டத்தட்ட 50 வருடமாய் வருவேன் வரமாட்டேன் என்று தன் ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டு சுயநலமாக மட்டும் யோசிக்கும் ரஜினிகாந்தா வந்து உங்களையும் நாட்டையும் காப்பாற்றப் போகிறார்?
8.   எத்தனையோ வருடமாக காத்திருந்து காத்திருந்து நொந்து போயிருக்கும் மு.க.ஸ்டாலினை விட உதயநிதிக்கு அதிகம் கை தட்டுகிறீர்களே? (முரசொலி பவளவிழா)
9.   ஒரு சினிமாவையோ, ரியாலிட்டி ஷோவையோ ஏன்  வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்? தமிழ்ச் சமூகம் சினிமாக்கவர்ச்சியிலிருந்து மாற இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ?
10.                அடப்போங்கய்யா ( நன்றி ரைசா) , இதுக்கு மேலும் ட்ரிக்கர் (நன்றி சக்தி)பண்ணாம   கொஞ்சம் ஷட்   அப்   பண்ணுங்க( நன்றி ஓவியா ). அப்பறம் வாயில எதாவது நல்ல  வார்த்தை வந்துரும் ( நன்றி காயத்ரி ).
பிக் பாஸ் தொடர் இத்தோடு முடிவு பெற்றது ஆளை விடுங்கப்பா. 


Thursday, August 24, 2017

பரதேசியின் கபாலி ஸ்டைல் !!!!!!!!!!!!!

Image result for kabali rajini

அன்னைக்கு ஒரு நாள் காலையிலிருந்து நாடி அரிச்சிட்டே இருந்தது. டிரிம் பண்ணி சுத்தமா வைக்காட்டி தாடி அரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இது என்னாது நாடி அரிக்குதுன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. பாத்ரூம் போய் சோப்பு போட்டு கரகரன்னு தேய்ச்சி நல்லா குளிர்ந்த தண்ணிய முகத்தில அடிச்சு கழுவினேன். திரும்பவும் அரிக்க ஆரம்பிச்சிருச்சு. இது என்னடா சோதனைன்னு மறுபடியும் பாத்ரூம் போய் எல்லா லைட்டையும் போட்டு நாடியை உத்து உத்துப் பார்த்தேன். ம்ஹீம் அதே அசடு வழியும் மூஞ்சியைத்தவிர வேறு  ஒண்ணும் தெரியல.
என் சின்ன மகள் அபிஷா பக்கத்துல வந்து உட்கார்ந்து அவங்கம்மாகிட்ட ஏதோ கேட்டா. நான் வரட்டு வரட்டுன்னு எம்பாட்டுக்கு சொறிஞ்சிட்டு இருந்தேன். சொரிய சொரிய அதுல ஒரு சுகம் தெரிஞ்சிது. ஆகா நல்லாத்தானே இருக்குன்னு நெனைச்சிட்டு தொடர்ந்து  சொரிஞ்சிட்டிருந்தேன். ஒரு சமயம் மகள்  எரிச்சல் ஆகி, “என்ன டாடி என்ன பண்றிங்க”ண்ணு? முறைச்சா. என்ன இது கடவுளே? என் தாடியை  இல்லை இல்லை நாடியை நான் சொரிஞ்சா, டாடின்னு கூப்பிட்டு என் மக மிரட்டுகிறாளே? போடின்னு வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிறலாமான்னு ஒரே ஆயாசமாக இருந்தது. ஆனாலும் சொரியறத  நிறுத்தாம நான் அவள்ட்ட "என்னவோ தெரியல காலைல இருந்து நாடில அரிக்குதுன்னு". சொன்னேன்.  
அவ உடனே ஐபோன்னுல இருந்த லைட்டை அடிச்சுப் பார்த்தா. ஐபோன்ல டார்ச்சு லைட்டு இருக்குன்னு சத்தியமா அன்னிக்குத்தாங்க தெரிஞ்சிக்கிட்டேன். 
என் மக என்னை டாடின்னு கூப்பிடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்குது. அப்பா அம்மான்னு கூப்பிட வச்சிருந்தா நல்லா  இருந்திருக்கும் . சின்ன வயலிருந்து டாடி மம்மின்னு கூப்பிட்டுப் பழகிட்டாங்க.. என்ன பன்றது நாட்டின் அருமையும், மொழியும் பெருமையும் எட்டாயிரம் மைல் கடந்து வந்தபின்னாலதான தெரியுது. "சொர்க்கமே என்றாலுமே அது நம்மூரு போல வருவா?” இந்த ஏக்கம் எனக்குத் தெரிஞ்சு இங்க இருக்கிற பல பேருக்கு இருக்கு. அந்த ஏக்கம் சில சமயங்கள்ள அதிகமாயிருச்சுன்னா வெளக்கென்னை குடிச்ச மந்தி மாறி முகம் ஆயிரும். “அப்ப ஏண்டா அங்க இருக்கிற, வந்திர வேண்டியதுதானே?”ன்னு நீங்க கேக்கிறது காதுல விழுகிது. அத ஏன் கேக்கறீங்க இது புலி வாலைப் பிடிச்ச கதை. வாலை விடுறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா நம்ம பிள்ளைக இங்க வளர்ந்துச்சுன்னா "அதெல்லாம் மறந்துறுங்க" டயலாக்தான்.
ஆனா அப்பப்ப அவங்களை அப்பா அம்மான்னு கூப்பிடச் சொல்வேன்.  'செளன்ட்ஸ் வியர்டு' என்று முணு முணுத்தாலும் சில சமயங்கள்ல கூப்பிடும் போது காதில் தேன் பாயுது. என் தம்பி குடும்பம் அத விட மோசம். அவன் பையங்க கூப்பிடுறது 'பப்பா மம்மா'. அதுக்கு டாடி மம்மியே தேவல. அந்தப் பசங்க அப்படிக் கூப்பிடும் போதெல்லாம் 'பப்பா மம்மா சச்சா' ன்னு ஒரு பாட்டு வேற ஞாபகம் வந்து தொலைக்குது .ஆமா என் தம்பி குடும்பம் இங்கதான் இருக்கிறாங்க. அதுமட்டுமல்ல என் மனைவியின் ரெண்டு தம்பிகளும்  குடும்பத்தோடு இங்கதான் கும்மியடிக்கிறாங்க. இப்படி என் கம்பெனி மூலமா வந்தவங்களையும் சேர்த்தா  மொத்தம எண்ணிக்கை  ஐநூறைத்தாண்டும்கிறதால  டிரம்ப் என்னைத் தேடுறாராம்.
சரி மறுபடியும் டிராக் மாறிட்டேன். என் மகள் லைட் அடிச்சுப் பாத்துட்டு, "ஒண்ணுமில்லே ரேஸர் இச் (Razor Itch or Razor Burns) வந்துருக்கு".
“அப்படின்னா”?
“ஷேவ் செய்ய ரேஸர் யூஸ் பண்ணும் போது இந்த மாதிரி வரும். ஆமா உங்க ரேஸர் பிளேடை எத்தனை நாள் யூஸ் பண்றீங்க?”
“ஐயையோ தெரியலயே. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ளயிருந்து”
“ என்ன சொல்றீங்க, எப்பத்தான் மாத்துவீங்க?”
“எப்ப ரொம்ப எரியுமோ, அப்பத்தான் மாத்துவேன்”.  
“நோநோ வாரம் ஒண்ணு மாத்தனும். மறக்காம மாத்தனும்"
 “ஒரு ரேஸர் குறைஞ்சது 5 டாலர் இருக்குமே. பட்ஜெட்ல கட் விழுமே”.  
“அப்ப முகத்துல கட் விழுந்தா பரவாயில்லையா?”
“நீங்களே பாருங்க”ன்னு லைட்டைப் போட்டு அவளோட கைக் கண்ணடியில காண்பிச்சா. அப்பத்தான் தெரிஞ்சது. நாடிக்கு கீழே கறுப்பு கறுப்பா திட்டுத்திட்டா இருந்தது.
“சரி இதுக்கு என்ன செய்யறது?”
“ஆலுவேரா போடனும், இருங்க”ன்னு சொல்லி ஆலுவேரா ஜெல்லைக் கொண்டு வந்து அவளே போட்டுவிட்டா.
அப்புறம் “ரேஸரை உடனே மாத்துங்க ஒரு 2 வாரம் ஷேவ் பண்ணாதீங்க”ன்னு சொன்னா. பரவாயில்லை நம்ம பசங்க நமக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு முன்னேறிட்டாங்கன்னு நெனச்சு பெருமையாக இருந்துச்சு. சொறிவதை தொடர, ஆஹா அருமையாகவும் இருந்துச்சு. 
Image result for ajith kumar
Ajith
அடுத்த நாள் ஷேவ் செய்யாம ஆஃபிஸ் போனேன். எல்லாரும் பாத்து "என்னா ஆல்ஃபி உடம்பு சரியில்லையான்னு" கேட்டாங்க. ஏன்னா எனக்கு நினைவு தெரிஞ்ச  நாள்ளலிருந்து நான் ஷேவிங் செய்யாம ஆஃபிஸ் போனதே இல்லை. வேற ஒண்ணுமில்ல வாழ்க்கையில சேவிங் (Saving) பண்ண முடியாட்டியும் (shaving)  ஷேவிங்காச்சும் பண்ணலாமேன்னுதான். கண்ணாடியில பாத்தா எனக்கே அடையாளம் தெரியல. ஒரே நாளில் கொஞ்சம் முள்ளு முள்ளா வந்துருச்சு. எனக்கே ஒரு ஆச்சரியம் என்னன்னா எல்லாமே வெள்ளையா  இல்லை. ஒரு மாதிரி ரெண்டும் கலந்துகட்டி  ஒரு சால்ட் பெப்பர் ஃபீலைக் கொடுத்துச்சு.
ஒரு அஞ்சு நாள் கழிச்சு ஆபிசில கேட்டாங்க, “என்ன  ஆல்ஃபி அஜீத் ஸ்டைலா”ன்னு . அன்று வெள்ளிக்கிழமை டிரஸ் டெளன் டே, ஜீன்ஸ், கேசுவல் ஷர்ட்டு, தாடின்னு எனக்கே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. கேட்க சந்தோஷமா இருந்தாலும் சீச்சீ ன்னு விட்டுட்டேன்.
அடுத்த நாள் சனிக்கிழமை என் நண்பன் என்னைப் ஃபேஸ் டைமில் பாத்துட்டு “என்னடா கபாலி ஸ்டைலா?”ன்னு கேட்டான் .பேசி முடிச்சிட்டு திரும்ப பாத்ரூம் போய் எல்லா லைட்டையும் போட்டுட்டு கொஞ்சம் உத்துப்பாத்தேன். ஒரு வேளை அப்படித்தான், இருக்கேனோன்னு, வெளியில கையை காலை உதறி ரஜினி ஸ்டைலில் நடந்து பாத்ரூம விட்டு வெளிய வந்தேன். வெளியே வரும்போது கையை கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன் போல கை பட்டுனு கதவில் பட்டு உயிரே போயிருச்சு. அப்படியே கொஞ்ச நேரம் சோபாவில் உட்கார என் மனைவி, “ஏன் ஒருமாதிரி இருக்க என்ன ஆச்சு”?ன்னு கேட்டா? என்னத்த சொல்றது என்னோட ரஜினி ஸ்டைல் கையைப்பதம் பாத்துருச்சுன்னு சொல்லமுடியுமா?
Image result for o panneerselvam
OPS
அடுத்த நாள் சர்ச்சுக்குப் போனேன். என் தம்பி என்னைப் பார்த்துட்டு பதறிப்போய் ஓடி வந்து “என்னன்னே உடம்புக்கு என்ன?”ன்னு கேட்டான். அதுக்குள்ள பாஸ்டர் ஜான்சன் வந்து "என்ன இது OPS ஸ்டைலான்னு கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. அட இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே. மனசு ஒரே  கலவரமாயிருச்சு. வீட்டுக்கு போனவுடனே முதல் வேளையா வலிக்குதோ அரிக்குதோ ஷேவிங் பண்ணனும்.
முற்றும்

   

Monday, August 21, 2017

கண்டி புத்தர் கோவிலைத்தாக்கிய விடுதலைப்புலிகள் !!!!!!!!!!

இலங்கையில் பரதேசி -20
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/07/blog-post_24.html

Related image
JVP Leaders
1998ல் விடுதலைப்புலிகள் புனிதப் பற்கோவிலைத் தாக்கினார்கள் என்று சொன்னேன். ஆனால் அதற்கு முன்னமே 1989ல் JVP என்று சுருக்கமாக அழைக்கப்படும் "ஜனதா விமுக்தி பெரமுனா" என்ற அமைப்பு இதனைத் தாக்கியதாம். இந்த அமைப்பு யாரென்றால், இது ஒரு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒன்று. ML  என்றாலே சில நக்ஸல்பாரி இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர்கள் அல்லது தீவிரமாக இயங்குபவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இவர்களுடைய நோக்கம் சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்று இருந்தாலும், இவர்களுடைய வழிமுறைகள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. அதோடு வன்முறைப்பாதை என்பது எப்போதும் முடிவில் நல்ல பயனை ஈட்டாது.
1989-ஆம் ஆண்டு ஃபெப்ரவரி 8ஆம் தேதி இந்தத் தாக்குதல் நடந்தது. ஜெ.வி.பி யின் ஆயுதப்புரட்சிப்படை இதனை நடத்தியது.
Related image
IPKF Opertions
80களில் இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் தமிழ் ஈழம் வேண்டி ஆயுதப்புரட்சி ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு தவிர பல்வேறு தமிழர் அமைப்புகள் இதில் ஈடுபட்டு தாக்குதல்களை நடத்தி வந்தன. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன மற்றும் பொதுமக்களும் இதனால் பெரிதும் பாதிப்படைந்தனர். ஒரு கட்டத்தில் தமிழ் விடுதலைக் குழுக்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர்  அழித்துக்கொண்டதோடு தமிழர் தலைவர்களையும் கொன்று குவித்தனர்.   அச்சமயத்தில் 1987 ஆம் ஆண்டு இந்தியா இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது. இதனைக் கண்கானிக்கவும், ஆயுதப் பரவலைத் தடுக்கவும் இலங்கையிடம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய அமைதிப்படை (Indian Peacekeeping  Force) இலங்கைக்கு வந்தது. ஆனால் சில காரணங்களால் அத்து  மீறிய இந்திய ராணுவம் அமைதி ஏற்படுத்துவதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தது தனிக்கதை. ஒருபக்கம் இது நடந்து கொண்டிருக்கும்போது ஜனதா விமுக்தி  பெரமுனா மற்றும் மற்ற இலங்கை சிங்கள தேசிய அமைப்புகள், இந்திய ராணுவத்தலையீட்டை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயலாகப்  பார்த்தார்கள். வட தென் பகுதிகளுக்கு முழுவதுமாய் சுதந்திரம் கிடைத்ததுவிடுமோ என்ற  பயமும் அவர்களுக்கு இருந்தது.
Image result for sirimavo bandaranaike
சிரிமாவோ பண்டாரநாயகே
இதே ஜெ.வி.பி தான்  1971- ல் சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சியில் இருக்கும்  போது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் ஜெ.வி.பி 1987ல் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முயன்றது. இப்படி பதற்றம் நிலவிய சமயத்தில் ஜெ.வி.பி யின் புரட்சிப் படைப்பிரிவான “தேச பிரேமி ஜனதா வியாபரயா” என்ற  அமைப்பு அரசு அலுவலகங்கள் மற்றுமின்றி பொதுமக்களின் நிலைகளிலும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. பல பொது இடங்களைத் தாக்கியதோடு, யாரெல்லாம் அரசுக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்களும் தாக்கப்பட்டனர். 1989 பிப்ரவரி 8ஆம் தேதி புனிதப்பற்கோவில் தாக்கப்பட்டது. இதே குரூப்தான் 1987ல் பாலே கெலே ராணுவ முகாமையும், 1987ல் போகம் பரா சிறையையும், திகானோ பேங்கையும் தாக்கியது.  
பற்கோவிலைத்தாக்கி புனிதப்பல்லை கவர்ந்து செல்வதாகத் திட்டம்.1700 வருடங்களாக இருக்கும் அந்தப்பல்லை எடுத்துவிட்டால் பொதுமக்களுக்கு அரசுமேல் அதிருப்தி ஏற்படும். அரசால் மக்களை பாதுகாக்க முடியவில்லை என்ற  நினைப்பு தோன்றும், கிளர்ச்சிகளும் ஏற்படும் என்ற எண்ணத்தில் தான் அப்படிச் செய்தார்கள். ஏனென்றால் புனிதப்பல்தான் அதிகாரத்தின் அடையாளமாக இருந்ததை ஏற்கனவே நாம்  பார்த்திருக்கிறோம்.
          ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. தாங்கள்  இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று அறிக்கை விட்டாலும் அதனை யாரும் நம்பவில்லை.
இந்தப் புனிதப்பல் அதுவும் அஹிம்சையை போதித்த புத்தரின் பல்லுக்காக எத்தனைபேர் மடிந்திருக்கிறார்கள் இன்னும் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. சரி விடுதலைப்புலிகள் தாக்கிய கதைக்கு வருவோம் .
Image result for jaffna fort
Jaffna Fort
1983ல் வேகம் பெற்ற விடுதலைப்புலிகள் இயக்கம், 2009 வரை அசைக்க முடியாத    மாபெரும் சக்தியாக இருந்தது, கப்பற்படை, விமானப்படை உள்ளடக்கிய முப்படை கொண்ட சக்தியாக இருந்தது. மற்ற தமிழீழ விடுதலைப் படைகள் ஒன்று வீரியம் இழந்து போன அல்லது புலிகளால் அழிக்கப்பட்ட அல்லது வீரம்போய் சோரம் போக, விடுதலைப்புலிகள் அமைப்பு தனிப்பெரும் இயக்கமாக வளர்ந்தது. 1990களில் இந்த உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தது. வடக்குப்பகுதிகளில் தனி அரசாங்கம் நடத்தும் அளவுக்கு வளர்ந்தனர் விடுதலைபுலிகள். ஆனால் அந்த நிலைக்கு பேரிடியாக இலங்கை ராணுவம் 1995ல் பல ஆண்டுகளாக புலிகள் கைவசம் இருந்த யாழ்ப்பாண வளைகுடாப் பகுதியைப் பிடித்துக் கொண்டது. ஆனால் 1996ல் புலிகள் மீண்டும் பெருந்தாக்குதலை நிகழ்த்தி முல்லைத் தீவுப் பகுதியை பிடித்துக் கொண்டனர். இலங்கை ராணுவத்திற்கு  பெருத்த ஆட்சேதம் ஏற்பட்டது. அதன்பின் 1999ல் இலங்கை ராணுவம் "ஆப்பரேஷன் ஜெயசிக்குரி" என்ற பெயரில் தொடர் தாக்குதல் நடத்தி இழந்த பல பகுதிகளை மீண்டும் வென்றெடுத்தனர். அந்த சமயத்தில்தான் விடுதலைப்புலிகள் பல தற்கொலைத் தாக்குதலை நடத்தியது.
Image result for ltte prabhakaran

1998ல் இலங்கை தன்னுடைய 50 ஆவது சுதந்திர பொன் விழாவைக் கொண்டாட ஆயத்தமானது. கிரேட் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அங்கிருந்தே ஒரு சிறப்பு விருந்தினர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து வேல்ஸ் இளவரசர் சார்லஸை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார். அது தவிர இன்னும்  பல வெளிநாட்டு பிரமுகர்களும் விழாவில் கலந்து கொள்ள சம்மதித்தனர்.
மத்திய மலைப்பகுதியில் இருக்கும் கண்டியில் இந்த விழா நடந்தால் நன்றாக இருக்கும் என அரசு நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச்  செய்தது. பிப்ரவரி 4ஆம் தேதி அந்த விழா நடப்பதாக இருந்தது.
இது இப்படி இருக்க, வருகின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கையில் அமைதி திரும்புகிறது என்று நினைக்கவும் நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று காண்பிக்க, ஜனவரி 28ல் நடக்கும்படி யாழ்ப்பாண நகருக்கு தேர்தலை அறிவித்தனர். அதற்கு முன்னால் 16 வருடங்கள் அங்கு தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் கிளிநொச்சி பகுதியில் கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில்தான் விடுதலைப்புலிகள் இந்த புனிதப் பற்கோவிலை அழிக்கும் பெரிய தாக்குதலைத் திட்டமிட்டனர்.

- தொடரும்.


Thursday, August 17, 2017

பிக்பாஸ் காயத்ரி கொஞ்சும் குழந்தையா? இல்லை கொட்டும் குளவியா ?

பிக்பாஸ் பதிவு -2
இதற்கு முந்திய பத்திவைப்  படிக்க இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2017/08/blog-post_14.html

Image result for gayathri raghuram in Big boss

பிக்பாஸ் காயத்ரியைப்பற்றி அதில் பங்கு கொண்ட, இப்போதுமிருக்கிற பலரும் அவர் குழந்தை மாதிரி என்று சொல்கிறார்கள். கடந்த வாரம் வெளியேறிய சக்தி அடிக்கடி, “காயத்ரியை சிறுவயது முதலே அதாவது பத்து வயதிலிருந்தே தெரியும்”, என்று சொன்னதால் காயத்ரியைப் பற்றி அதிகமாகத் தெரிந்தவர் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த 50 நாட்களில் சக்திக்கு பலமுறை வாய்ப்புக் கிடைத்தும் தன சிறுவயதுத் தோழியின் குறைகளைப்பற்றிச் சொல்லி ஒரு நல்ல நண்பனாகப் பேசி சரியாக்க முடியவில்லை. ஓவியாவைக் கடுப்பேத்த ஒரு இரவில் ஜூலியுடனும் நமிதாவுடனும் சேர்ந்து பாடல்களைச் சத்தமாகப்பாடியது  பக்கத்து ரூமில் இருந்த ஆண்களையும் பாதித்தது. அந்த நிகழ்ச்சியில் கடுப்பான சக்தி அந்தச் சமயத்தில் கூட அதனைக் கடுமையாக கண்டிக்கவில்லை. காயத்ரி கோபப்படும் போதெல்லாம் அவரைத் தேற்றினாரே தவிர அதனை மாற்றிக் கொள்ள ஆலோசனைகள் சொல்லவேயில்லை. மாறாக அதற்குத் துணைபோகுபவராய் மாறிப்போனதே அவரின் வெளியேற்றத்திற்குக் காரணமானது.
Image result for gayathri raghuram in Big boss

காயத்ரி போக வேண்டிய இடத்தில் சக்தி போனது அவரின் துரதிர்ஷ்டம். ஆனால் கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரிதான் என்று பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரின் தந்தைகளும் மிகப்பிரபல மானவர்கள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். இருவரையும் அவரவரின் தந்தைகள்தான் பிரமோட் செய்தனர். இருவரும் பெரிதாக சினிமாவில் சோபிக்கவில்லை. இருவருமே மேட்டிமைத்தனம் நிறைந்தவர்கள்.
Image result for sakthi vasu in big boss

அதன் உச்சபட்சமாக இருவருமே தாங்கள் தவறே செய்யவில்லை என்று நினைப்பதுதான் பெரிய முட்டாள்த்தனம்.
கணேஷ் கூட காயத்ரியைக் குழந்தை என்று ஒருமுறை சொன்னது அவரது  குழந்தைத் தனத்தைத்தான் காட்டியது. சிநேகனும் சொல்லியிருக்கிறார். தவறான குழுவில் இருக்கிறோம் என்று தெரிந்த சிநேகன் அதிலிருந்து வெளியே வந்தது மிகவும் சரியானது தான் என்றாலும், அடுத்த வாரம் காயத்ரி வெளியேற்றப் பட்டபின் அடுத்த டார்கெட் அவராகத்தான் இருக்க முடியும்.
இதில் ரைசா சுதாரித்து வெளியே வந்தது மிகுந்த புத்திசாலித்தனம். அதோடு ஓவியாவின் வெளியேற்றத்திற்குப்பின் அவர் மிகவும் மனம் வருந்தி அழுது மாறியது அனைவரையும் தொட்டது. இந்த கேமின் முழு சூட்சுமத்தையும் அவர் முழுவதுமாக இப்போதுதான் புரிந்து கொண்டார் என்பது தெரிகிறது. அவரின் விளக்கங்கள் புரிதல்கள் ஆகியன இப்போதிருக்கும் பிக்பாஸ் நபர்களில் ரைசாதான் மிகுந்த புத்திசாலி என்பதும் பார்ப்பவர்களுக்குப் புரிகிறது. இப்போது அவரும் ஓரங்கட்டப்பட்டு மன உளைச்சலில் தவித்து கிட்டத்தட்ட ஓவியா போலவே ஆகிவிட்டார்
வையாபுரி கூட  காயத்ரியை அதிகமாக விமர்ச்சித்ததில்லை. கடந்த வாரம் கூட குழந்தை என்றே அவரும் சொன்னார். அவர் சொன்னதை கணக்கிலேயே ஏற்றுக் கொள்ளமுடியாது.
சக்தி வெளியேறும் போது காயத்ரி அழுதது கூட தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டோமே என்ற சுய நலத்தால்தான் ஒழிய வேறென்றுமில்லை. அதோடு வெளியே போய் என்னைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லு என்று சொன்னது சிரிப்பைத்தான் வரவழைத்தது.
வையாபுரியைக் காட்டிலும் அவர் மனைவி புத்திசாலி என்று விளங்குகிறது. குடும்பத்தின் அருமையைப்பற்றி வெளியே வந்தவுடன் தெரிந்து கொண்ட அவர் குடுப்பத்திற்குத் திரும்ப  துடியாயத்துடிக்கிறார். புது வாழ்க்கை வாழ சங்கல்ப்பம் எடுக்கிறார். மனைவியிடம் மட்டுமல்ல  தன் பிள்ளைகளிடமும் மன்னிப்புக் கேட்கிறார். உணர்ச்சி வசப்படும் எந்த மனைவியும் அவர் உடனே வீடு திரும்ப வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால் அவர் மனைவி மிகவும் பிராக்ட்டிக்கலாக யோசித்து அவர் அங்கேயே தொடரட்டும் என்று சொன்னதற்கு மூன்று காரணங்கள் இருக்குமென நினைக்கிறேன். ஒன்று இன்னும் கொஞ்சம் நாள் இருந்து நன்றாகப்பட்டு திருந்திவரட்டும் என்பது. இரண்டாவது வெளியே பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் வாராவாரம் வரும் வருமானம். மூன்றாவதாக மிகவும் சாத்வீகமாக இருப்பதால் இறுதி வரை சமாளித்து ஒரு வேளை வென்றுவிடுவாரோ என்ற நப்பாசை. இவைகள் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருநாள் கூட்டிப் பெருக்கும் போதோ அல்லது துணி துவைத்து   அயன் பண்ணும் போதோ, அவர் சொன்னது ஞாபகம் வருகிறது.  இதெல்லாம் பார்த்து என் மனைவி வருத்தப்படுவாள் என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே வருத்தப்படுகிறாளோ  இல்லை சிரிக்கிறாளே யார் கண்டா என்று.
Image result for sakthi vasu in big boss
Add caption
காயத்ரி வெளியேறினால் சுவாரஸ்யம் குறைந்துவிடுமோ என்று எண்ணி தான் நடுவில் ஈஸியான கேள்விகளைக் கேட்டு அவரை பிக்பாஸ் சேவ் பண்ணிவிட்டாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதுபோலவே “டிரிக்கர் சக்தி” வெளியேறினதும் காயத்ரி தன் குணநலன் களைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
சக்தி போனதால் அந்த டென்ஷன் எங்கள் மேல்தான் வரும் என்று ரைஸா சொன்னதை காயத்ரியால் தாங்கவே முடியவில்லை.
காயத்ரியின் கீழ்க்கண்ட பிரபலமான வார்த்தைகளைக் கொஞ்சம் பார்ப்போம். (கெட்ட வார்த்தைகளை விடுத்து)
·        ஓவியா ஒரு விஷம் (திட்டமிட்ட ஷூட்டிங்கில் கூட இப்படி ஒரு ஆங்கிள் கிடைக்காது.)
·        இந்த சேரி பிகேவியரைத் தாங்க முடியவில்லை.
·        எச்சைகளோடு இருக்க வேண்டியிருக்கிறது.
·        வெளியே போய்ப்பார்த்துக் கொள்ளலாம்.
·        கையைக்காலை உடைச்சுருவேன்.
·        மூஞ்சியும் முகரக் கட்டையையும் பாரு.
·        மூஞ்சியைப் பேத்துருவேன்.
·        நான் யாருன்னு கட்ட வேண்டியதிருக்கும். 
·        லோ கிளாஸ் ஆட்களோடு எப்படி இருக்கிறது.
·        என் இருபது வருஷ எக்ஸ்பீரியன்ஸுக்கு ஒரு மரியாதை வேணாம் ?
இதையெல்லாம் கேட்டபின்பும் காயத்ரி குழந்தை என்று எண்ணுகிறீர்களா? அப்படி எண்ணினால் நீங்கள்தான் குழந்தை.
அதோடு அதற்கு அவர் சொல்லும் சமாதானங்கள்தான் தாங்கமுடியவில்லை.
·        நான் என்ன கெட்ட வார்த்தையை அப்படியேவா சொன்னேன். இங்கிலீஸ்லதான ஹேர் என்று சொன்னேன்.
·        நான் கோபப்பட்டு கெட்ட வார்த்தைல திட்டாட்டி எனக்கு யாரும் அடங்க மாட்டாங்க.
·        40 ஆண்களோடு ஒரே சமயத்தில் வேலை செய்யும்போது கெட்ட வார்த்தைகள் பேசித்தான் அவர்களை சமாளிக்க முடியும்.
·        நான் சொன்னதுல ஒண்ணுகூட தப்பேயில்லை.
அடிக்கடி நான் போய்விடுவேன் போய்விடுவேன் என்று சொல்லும்போதும் ஏன் போக வேண்டியதுதானே என்று சொல்லத் தோணுகிறது. இந்த வாரம் அவர் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னொசென்சுக்கும் இக்னரன்ட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காயத்ரி 2-ஆவது வகை. இன்னும் அவர் நல்லவர் என்றே நினைப்பதை  இக்னரன்ட்    என்றுதானே சொல்லமுடியும். ஆனாலும் அவர் கண்ணீர் விட்டு அழும்போது கொஞ்சம் இரக்கம் பிறக்கத்தான் செய்கிறது.
தொடரும்