Monday, November 23, 2015

மோடியுடன் அத்வானி (அட கற்பனை உரையாடல் தாங்க)


அத்வானி: அரே ராம், எங்கடா போன?
ராம்: (அரைமணிநேரம் கழித்து) ம் சொல்லுங்க.
அத்வானி: கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு ?.
ராம்: மனதிற்குள் (ஆமா சம்பளம் கொடுத்து மூணு மாசமாச்சு இதில கூப்பிட்டவுடனே வரணுமாம்) சரி சரி சொல்லுங்க.
அத்வானி: சரிசரி கோவிச்சுக்காத, செக்ரட்டரியைக் கூப்பிடு.
ராம்: எந்த செக்ரட்டரிய?
அத்வானி: அட என்னோட செக்ரட்டரியைக் கூப்பிடுப்பா
ராம்: (கிழவருக்கு ரொம்ப ஞாபக மறதியாப்போச்சு) ஐயா அவர் போய் ரொம்ப நாளாச்சு, மறந்திட்டீங்களா ?. சம்பளம் இல்லாம வேலை செய்ய என்னைப் போல அவன் கேனயனா?
அத்வானி: எப்படி இருந்தேன், எத்தனை பேர் காத்திட்டு இருப்பாங்க. எத்தனை IAS அதிகாரிங்க, போலீஸ், தொண்டர்படை, குண்டர் படை, எல்லாம் போயிட்டாங்களே. அட்லீஸ்ட் மோடிக்கு அப்புறமாவது நான் பிரதமர் ஆகலாம்னு நெனைச்சிருந்தேன் அதுல இந்த அமித்ஷா மண்ணைப் போடறானே.

ராம்: வயசானா, வாயை வெச்சுட்டு சும்மா இருக்கணும். பீகார்ல யார் ஜெயிச்சா, என்ன, தோத்தா என்ன பேசாம இருந்தா பிரச்சனை இல்லல்ல, மோடிஜிட்ட சொல்லி பென்ஷனாலும் வாங்கலாம். இல்லை அட்லீஸ்ட்  கவர்னர் பதவினாலும் வாங்கலாம்.
அத்வானி: சரிசரி மோடிக்கு போன் போடு.
ராம்: யாருக்கு?
அத்வானி: அதாண்டா நரேந்திர மோடிக்கு போனைப் போடு.
ராம்: ஐயா உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சா, மோடிட்ட உங்களால பேசமுடியுமா?
அத்வானி: என்ன இருந்தாலும் என்னோட சிஷ்யப்பிள்ளைதானே கூப்பிடு கூப்பிடு.
ராம்: அதெல்லாம் சிஷ்யன் குருவை மிஞ்சி எவ்வளவோ நாளாயிருச்சு. அதோட நம்மகிட்ட இப்ப ஃபோன் இல்ல.
அத்வானி: என்னது ஃபோன் இல்லையா? ஏன் என்னாச்சு.
ராம்: யாருக்குப் பேசினாலும் ஒட்டுக் கேக்கிறாங்கன்னு நீங்கதான போட்டு உடைச்சீங்க.
அத்வானி: ஆமா ராம், ஆமா என் செல்போனை எங்க?
ராம்: அதத்தான் நீங்க  யூஸ் பண்ண முடியலயே, கை நடுக்கத்தில யாருக்குப் போட்டாலும் ராங் நம்பரா போகுதுன்னு சொன்னீங்கல்ல.
அத்வானி: அதில்லைப்பா, நான் யாருக்குப் போட்டாலும் அவங்களே எடுத்து ராங் நம்பர்னு சொல்லிட்டு வச்சிர்ராங்க. 
ராம்: அதான் தெரியுதில்ல, வாஜ்பாய் மாதிரி கம்முனு இருக்க வேண்டியதுதானே. அப்ப என்ன செய்றது?
அத்வானி: ராம் பையா (Bhaiya) உன் செல்போன்ல கூப்பிடுப்பா?
ராம்: என் செல்போன்ல, மோடியை, ம் விளங்கிரும்.
அத்வானி: இல்லப்பா இந்த ஒருவாட்டி உதவி செய்ப்பா.
ராம்: சரிசரி மோடிஜிட்ட பேசி என் சம்பளத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்ங்க. இல்லைனா எதிர்க்கட்சில சேர்ந்து  எல்லா ரகசியத்தையும் சொல்லிடுவேன்.
அத்வானி: எதிர்க்கட்சினா காங்கிரசா?
ராம்: இல்லை அமித்ஷா கட்சி.
அத்வானி: ஐயையோ நெலமையைப் பாரு உங்கட்சியிலேயே எதிர்க்கட்சி ஆயிப்போச்சே நான்கூட காங்கிரஸ்க்குப் போயிடுவியோன்னு நெனச்சேன்.
ராம்: ஏன் நான் காங்கிரசுக்குப் போகணுமா?
அத்வானி: இல்லை இதைவிட அங்க கொஞ்சம் பெட்டரா இருக்கு. அடுத்த பிரதமர் பதவி கொடுத்தா, போலாம்ல.
ராம்: மனதுக்குள் (கிழவருக்கு இந்த பிரதமர் ஆசை இன்னும் போகலை)
(ஒரு நாள் முழுதும் டிரை பண்ணி, பத்து நாடுகளுக்குப் போன் செய்து, பத்து செக்ரட்டரிகளைக் கடந்து, மோடியின் PA -வை லண்டனில் பிடித்தார்கள்).
மோடியின் PA : யாரு அத்வானி பேசணுமா? எந்த அத்வானி?
ராம்: (அடப்பாவிகளா, அத்வானியையே மறந்துட்டீங்களா? அத்வானி இல்லேன்னா BJP யே இல்லைடா. அது சரி காந்தியவே மறந்தவங்கதான நீங்க) ஆமய்யா, லால் கிருஷ்ணசந்த் அத்வானிதான் மோடிட்ட பேசனும்.
மோடியின் PA: மோடி பிஸியா இருக்கார். இப்ப அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ண முடியாது.
(மோடி, ராணி எலிசபெத்தை பார்ப்பதற்காக எப்படி நடக்க வேண்டும், எப்படி குனிய வேண்டும், எப்படி வணக்கம் போட வேண்டும் என்ற டிரஸ் ரிகர்சலில் இருந்தார்.
ராம்: அத்வானி அவர் குருன்னு சொல்லுங்க. 
மோடியின் PA: ஐயா, அத்வானி லைனில்  இருக்காரு.
மோடி: எந்த அத்வானி?
ராம்: (காதில் விழ) இது நான் எதிர்பார்த்தது தான்.
மோடியின் PA: ரொம்ப அவரசமாம், தலைபோற விஷயம்னு சொல்றாரு.
மோடி: எதுவா இருந்தாலும் அமித்ஷாட்ட பேசச் சொல்லு.
மோடியின் PA: இல்ல அதுதான் பிரச்சனைன்னு சொல்றாங்க. மிகமிக மிக அவசரம்.
மோடி: தொப்பையைத் தடவிக் கொண்டே, பல நாட்டு  விருந்தைச் சாப்பிட்டு தொப்பை பெருகிப் போச்சு. இந்த யோகாவை செய்ய குனியவே முடியல. சரிசரி லைனைக் கொடு.
லைனில் அத்வானி வர.

மோடி: குருப்பிரம்மா, குருவிஷ்ணு குருதேவோ நமஹ பிரணம் அத்வானி ஜி.
அத்வானி: (ஆஹா என்ன நடிப்பு?) மோடி, நேரா  விஷயத்துக்கு வர்றேன். நான் சொன்னேன்ல அமித்ஷாவை நம்பாதேன்னு.
மோடி: யாரு அமித்ஷாவா, நோநோ, அவன் நான் வளத்தவன், என்னால முன்னுக்கு வந்தவன், என்னோட தளபதி. எனக்கு எதிரா ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடமாட்டான்.
அத்வானி: உன்னையும் நான் அப்படித்தான நெனைச்சு ஏமாந்தேன்.
மோடி: சரிசரி பழசை விடுங்க, என்ன  நடந்தது ?.
அத்வானி: என்ன நடந்ததா? உனக்குத்தான் நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியலயே, உள்ளூர்ல இருந்தாத்தான. பேருக்குத்தான் பிரதம மந்திரி ஆனா செய்யறது வெளிவிவகார மந்திரி, இங்க உள் விவகாரம் பெரிசாப் போச்சு.
மோடி: ரொம்ப பேசினீங்கன்னா அமித்ஷாட்ட சொல்லி கட்சியை விட்டு எடுத்துடுவேன்.
அத்வானி: (இப்ப மட்டும் என்னா வாழுது?) முதல்ல அமித்ஷாட்ட இருந்து உன்னைக் காப்பாத்திக்க.
மோடி: அப்படி என்னதான் நடந்தது?
அத்வானி: அறுபது வயசுக்கு மேல அரசியல்வியாதிகள் எல்லாம் ரிட்டயர் ஆகணுமாம்.
மோடி: ஹாஹா 60 வயசுக்கு மேல தான, அது உங்களுக்கு, முரளி மனோகர் ஜோஸி, யஸ்வந்த் சின்கா ஆகியோருக்கு.
அத்வானி: அமித்ஷா வயசு என்ன?  
மோடி: 54, அவனுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கு.
அத்வானி: அப்ப உன் வயசு?
மோடி: 64
அத்வானி: இப்ப புரியுதா அவன் ஒனக்குத்தான் உலை வைக்கிறான்.

மோடி: அட ஆமா, ஐயையோ, PA உடனே இந்தியாவுக்குக் கிளம்புப்பா.
முற்றும் 

7 comments:

 1. என்ன அமெரிக்காவில் இருக்கிறவங்க எல்லாம் கற்பனை உரையாடல் என எழுதிகிட்டு இருக்காங்க...நான் இப்பதான் ஸ்டாலின் கலைஞர் கலந்துரையாடல்ன்னு ஒரு பதிவு போட்டுவிட்டு வந்து பார்த்தா நீங்க இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க.... விசுதான் பாக்கி சிக்கிரம் அவரும் ஸ்வ்ர்ணரானியும் அவரும் என்றும் ஒரு கலந்துரையாடல் பதிவு பண்ணிணாலும் பண்ணுவார்

  ReplyDelete
  Replies
  1. தமிழா.. எந்த ஒரு காரியத்தையும் சொல்லும் போது சரியா சொல்லணும்.ஏல் பல்கலை கழகத்தில் ஒரே வாரத்தில் டிகிரி வாங்கி வந்த ஸ்மிர்தி இரானிய "ஸ்வ்ர்ணரானியும்"என்று தாம் தவறாக கூறியதை பதிவுலகர் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

   Delete
  2. அந்த பெயரை கரெக்ட்டா ஞாபகம் வைச்சிருக்கிறது நீங்க மட்டும்தான். சரி சரி படிக்காத பையல் தப்பு செஞ்சிட்டா மன்னிச்சிடனும் அதற்கெல்லாம் ஊரை கூட்டி கண்டிக்க கூடாது

   Delete
 2. ஆமாம் உங்களை எல்லோரும் மோடியின் பினாமி என்று சொல்லுறாங்க ஆனா நீங்க இப்படி ஒரு பதிவு எழுதி பகிர்ந்து இருக்கீங்க ...ஆமாம் உங்களுக்கும் அமித்ஷாவிற்கும் இப்ப என்ன பிரச்சனை?

  ReplyDelete
  Replies
  1. என்னாது நான் மோடியின் பினாமியா ? அது சரி இது மோடிக்கு தெரியுமா ?
   எனக்கே தெரியாதபோது அவருக்கு தெரிய சான்சே இல்லைன்னு நினைக்கிறேன் .

   Delete
 3. விசு அவர்களின் மூலம் தங்கள் தளத்திற்கு வந்தேன்.....பிரமித்தேன்...அழகான உரை....உண்மையில் அப்படியும் நடந்திருக்கலாமென்றே தோன்றுகிறது...தங்களில் கட்டற்ற கற்பனை வளத்திற்கு .....சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செல்வா .

  ReplyDelete