Thursday, November 12, 2015

கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!

பள்ளியில் வரும் காதல் :
1.    முதல்ல காதல்னா என்னான்னு தெரியுமா? சும்மா நானும் காதலிக்கிறேன்னு பண்ணக்கூடாது.
2.    இந்த வயசுல வர்றது காதலே இல்லை, சும்மா ஒரு இனக் கவர்ச்சி (Infatuation) அது சீக்கிரம் போயிரும்.
3.    உங்களால படிக்க முடியாது, வேற எதலயும் கவனம் செலுத்த முடியாது, உங்க வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல எல்லாத்தையும் இழந்து, திசை திரும்பிப் போயிரும்.
4.    நீ அவள்ட்ட  பேசக்கூட முடியாது, இதுல எங்க போய் காதலிக்கிறது.
5.    +2 முடிஞ்சவுடன், நீ எங்க போவியோ, அவ எங்க போவாளோ, இதெல்லாம் நடக்க முடியாது.
6.    இந்தக் காதல் பெரும்பாலும் கல்யாணத்துல முடியாது, ஏன்னா அதுக்கு இன்னும் எவ்வளவோ காலம் இருக்கு. அதுக்கு நடுவுல என்ன வேணாலும் நடக்கும்.

7.    நீயே பெற்றோர் காசில சாப்பிட்டுட்டு இருக்க, ஒருவேளை உன்னை நம்பி ஒருத்தி வந்தா, நீ அவளைப் பாதுகாக்க முடியுமா? சாப்பாடு கொடுக்க முடியுமா?
8.    எந்தப் பெண்ணும் உனக்காக நீண்ட நாள் வெயிட் பண்ண முடியாது புரிஞ்சிக்க.

கல்லூரிக்காதல்:
1.    இந்தச் சமயத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும்னு நீ நினைக்கலாம். ஆனா முதிர்ச்சி இல்லைனு பின்னால தெரியும்போது அதிர்ச்சியா இருக்கும்.  
2.    ஒரே வயசுல இருக்கறவங்களை காதலிச்சா பெருங்கஷ்டம். ஏன்னா ஆண்களுக்கு 28-30 வயசுலதான் கல்யாணம் பண்ண முடியும். ஆனா பொண்ணுங்களுக்கு 25-26 வயசுக்குள்ள பெரும்பாலும் ஆயிரும்.
3.    நீ படிச்சு முடிச்சு, நல்ல ஒரு வேலைக்குப்போனாத்தான் பொண்ணே கிடைக்கும். ஆனா அந்தப் பொண்ணுக்கு அப்படியில்லை உடனே மாப்பிள்ளை கிடைச்சுரும்.
4.    காதல் தோல்வினா அது ஆண்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிக்க. பெண்கள் ஈஸியா மறந்துட்டு வேறொருவனை கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டி பெத்துருவாள்க.
5.    அதோட பொண்ணுங்க ரொம்ப நெருங்கிப்  பழகுவாங்க, ஆனா காதலிக்கிறேன்னு சொல்லமாட்டங்க, ஏன்னா ஒரு நாள், வேற நல்ல ஆள் கிடைச்சா, நான் ஒரு நட்பாத்தேன் பழகினேன்னு சொல்லி தப்பிச்சிரலாம்ல.
6.    பொண்ணுங்கல்லாம் ரொம்ப உஷாரு, நல்ல மாப்பிள்ளை வந்தா டக்குனு OK சொல்லிருவாங்க. அப்புறம் உம்பாடு திண்டாட்டம் தான்.
7.    முக்கியமா அவதான் பேரழகின்னு நெனைப்பே, அப்புறம் அப்படியெல்லாம் இல்லைன்னுகொஞ்ச நாள்ள தெரிஞ்சிறும், அதனால கொஞ்சம் அவசரப்படாதே.
8.    அதோட பொண்ணுங்களோட நல்லகுணம் மட்டும்தான் உனக்கு அப்போ தெரியும், அப்புறம் பெரிய டார்ச்சராயிரும்.
9.    அப்படியே தப்பித்தவறி கல்யாணம் நடந்தாலும் பெரும்பாலும் தோல்வியில் முடியும் அதுக்கு காரணங்களை கீழே தர்றேன்.
a)    உன் குடும்பத்தை அண்டவிடமாட்டா. உன்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணி, அடிமையா நடத்துவா.
b)    அவளோட எல்லா விஷயங்களும் விவகாரங்களும் அப்புறம்தான் உனக்கு தெரியவரும்.
c)    ஐயையோ அவ அழகே இல்லைனு தெரிஞ்சிரும், ஏன்னா கொஞ்சம் கொஞ்சமாக அகத்தின் அழகு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிரும்.
d)    அதைவிட அழகான, அம்சமான, அறிவான பொண்ணுகளை பின்னால பார்க்கும்போது, அவசரப்பட்டுட்டோமோன்னு தோணும்.
இதையெல்லாம் யோசிச்சுப்பாத்து கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்கன்னு சொல்றேன். அதோட காதல்னு சொல்றது சும்மா ஒரு மாயைதான். எல்லாமே உடல்ல சுரக்கிற எஸ்ட்ரோஜன் செய்யற வேலை, காமத்தின் வெளிப்பாடுதான். அது சீக்கிரமே உங்களுக்குப் புரிஞ்சிரும்.
மகேந்திரன் : யார்ரா இவன், பரதேசி, என்னடாது லூசு மாதிரி உளர்ற, எந்தக்காலத்தில இருக்க, நீ அமெரிக்கா போனதும் இங்கெல்லாம் எப்பவோ மாறிப்போச்சு. காதலாவது கத்திரிக்காவாவது, இப்பெல்லாம் தேவைப்பட்டா ஸ்டிரைட்டா...
பரதேசி : நல்ல வேளைப்பா, நான் இப்படி எதுலயும் மாட்டாம ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி ரெண்டு ராசாத்திகளைப் பெத்து ஒரு ராசா மாதிரியே வாழறேன்.

என்னடா கதை விடற, அப்ப அந்த அஞ்சாவது படிக்கும்போது காதலிச்ச கதிஜா, எட்டாவது படிக்கும்போது காதலிச்ச பொன்னுத்தாயி, பத்தாவது படிக்கும்போது ராதிகா, +2-வில  சரோஜா, காலேஜ் படிக்கும்போது காதலிச்ச ரேகா, இதெல்லாம் காதல் இல்லையா.
டே மகேந்திரா, என்னோட உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும்  20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு.
ஐயையோ இதென்னடா புதுக்கதை, யார்ரா அவ, என்ட்ட கூட சொல்லலியே. சீனிகம் கதைமாறி இருக்கு.
அடச்சீ நீ வேற, அவள் வேற யாருமில்லை .என்னோட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்கிற என்னோட பாரியாள்தான்டா.


முற்றும்

22 comments:

 1. போட்டோவுல எல்லோரும் சிரித்து கொண்டு இருக்க நீங்கள் மட்டும் சிரிக்கலாமா வேண்டாமா என்பது போல நிக்கிறீங்க அது ஏன்? வூட்ட அம்மா கிட்ட பெர்மிஷன் வாங்கலைய்யா?

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பவும் சிரிக்கத்தான் ட்ரை பண்றேன் ஆனா ஆனா>>>>>>>>

   Delete
 2. ஏய்யா உமக்கே இது நல்லா இருக்கா? இந்த பதிவை இப்ப எழுதி வெளியிட்டு இருக்கின்றீர்.. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணும் போது என்னய்யா செய்துகிட்டு இருந்தீர்....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. காதலிச்ச எல்லோரும் உங்களை மாரி பூரிக்கட்டை அடி வாங்கிரதில்லையே தமிழா .

   Delete
  2. அடப்பாவி மனுஷா மதுரைத் தமிழா ! இது உமக்கே ஓவரா இல்லையா? !!!ஹஹஹஹ்ஹ நாங்கல்லாம் உங்க காதல ரொம்பப் பெருமையா பேசிக்கிட்டிருக்கும் போது இப்படியா போட்டு உடைக்கறது....ஹஹஹ்ஹ ..ரசித்தோம்..இதையும்...

   Delete
 3. அண்ணே... "பரதேசியின் காதலிகள்" என்ற தலைப்பில் ஒரு படமே எடுக்கலாம் போல இருக்கே...

  முதல் காட்சியில் .."நீங்களும் - பொன்னுத்தாயி" ரெண்டு பெரும் வெப்ப மரத்தை சுத்தி ஒரு பாட்டு. பாட்டு முடிந்ததும் நீங்க உணர்ச்சி வசப்பட்டு பொன்னுதாய கதிஜான்னு தப்பா அழைக்க.. உங்க முகத்தில் பளார்ன்னு ஒரு அறை ( ரொம்ப நாள் ஆசை )...
  அதோடு அடுத்த காட்சி.. சரோசாவோட நீங்க...

  பிடிச்சி இருந்தா சொல்லுங்க.. முழு கதைய வச்சி ஒரு பதிவே போடறேன்.
  அது சரி.. ரெண்டு ராசாத்தி பெத்தவங்க எல்லாரும் மில்லினர்னு இங்கே ஒரு பேச்சே அடிபடுதே .. அது உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல ஐடியாவா இருக்கே , நானே ஹீரோவா நடிக்கரதில எனக்கொன்னும் ஆட்சேபனை இல்லை .
   நீங்க சொல்றது என்னோவோ உண்மைதான் ரெண்டு ராசாத்திகளை பெத்தவங்க , உங்களையும் சேத்து மில்லியனரா இருக்காங்க .ஆனா என்னவோ தெரியலை
   நான் மட்டும் எப்போதும் விதிவிலக்கா இருக்கேன் .

   Delete
  2. விசு நம்ம ஆல்பிரட் சார் உங்களை மாதிரி சதாரண மில்லியனர் இல்ல அவர் மல்டி மில்லியனர் என்பதைதான் " நான் மட்டும் எப்போதும் விதிவிலக்கா இருக்கேன்" என்று சொல்லுகிறார்....

   Delete
  3. மல்டி மில்லியனரா எம்ப்டி சல்லியனரான்னு என்னோடு பேங்க்ல
   கேட்டா சொல்வாங்க

   Delete
  4. விதிவிலக்குன்னு சொன்னத சதி வழக்கா மாத்திடுவீங்க போல இருக்கே

   Delete
  5. அஹ்ஹஹஹ செம விசு அண்ட் தமிழா....ரசித்தோம்

   Delete
 4. // உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு... //

  எங்கேயோ போயிட்டீங்க சாமி...

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேற எங்கேயும் போகமுடியலை அதான் இங்கேயே ஹி ஹி ஹி ஹி

   Delete
 5. இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன். எல்லாம் சுவாரஸ்யமான பதிவுகள். இனிதான் பழைய பதிவுகளைப் படிக்கத்துவங்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிப்ரியன் .

   Delete
 6. இப்படித்தான் சொல்லியாகனும். இல்லேன்னா பட்டினிதான்

  ReplyDelete
  Replies
  1. நாங்க எப்படி சொன்னாலும் நீங்க எப்படித்தான் கண்டுபிடிக்கிரீங்களோ ராஜி .

   Delete
 7. Replies
  1. எங்க........ சொன்னாக் கேட்டாதான வெங்கட் நாகராஜ்.

   Delete
 8. ம்ம்ம்எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதுக்கெல்லாம் விதிவிலக்குகளும் இருக்காங்களே..

  / //உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு... //// சூப்பர் பஞ்ச்! விசு எடுக்கும் படத்துக்கு ...

  பதிவையும் ரசித்தோம்...பின்னூட்டங்களை அதைவிட ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. ப்ரொடியூசர் விசு ஓகே சொல்லிட்டாருன்னா மத்த பன்ச்களையும் எடுத்து விடுவேன் .

   Delete
 9. விசு எழுதும் மூலம் அறிய வந்தேன்....வியக்கேன்....
  இணைத்த இணையம் வாழ்க....

  ஒரு விசயம் கேள்விப்பட்டேங்க....
  நண்பர் சொன்னார்..

  செல்போனும் ,மனைவியும் ஒன்னு.
  எப்படிங்க?
  கொஞ்சம் காத்திருந்திருந்தா
  நல்ல மாடல் வாங்கிருக்கலாம்.

  ReplyDelete