Monday, December 18, 2017

இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை !!!!!!!


இலங்கையில் பரதேசி -31

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_12.html

Fried Ice cream shop in Colombo

            இருக்கும் சுகரை நினைத்து என் ஃபிகர் உதறினாலும், அதனால் டிஸ்ஃபிகர் ஆனால் அதனைப் பின்னால் கான்ஃபிகர் பண்ணிக்கொள்ளலாம் என்றெண்ணிக் கொண்டு "சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்றேன்.
கொழும்பின் மறுபுறம் போனோம் இங்கு அதிகமாக தமிழ் முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்த ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு முன்னால் காரை நிறுத்தினான் பொறித்த ஐஸ்கிரீம் என்றால் சூடாக இருக்குமே என்று நினைத்த எனக்கு அதெப்படி ஐஸ்கிரீம் சூடாக இருக்க முடியும் என்று வியப்பாக இருந்தது.

உள்ளே போய், “அம்ரி முழுதாக என்னால் சாப்பிடமுடியாது. அப்படியே சாப்பிட்டால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் எனவே "நீ பாதி நான் பாதி கண்ணே” என்று பாடினேன். அம்ரி கலவராகி என்ன சார் என்றான். “இல்லப்பா பாட்டு அதிரடியா வந்துருச்சு”, என்று ஜகா வாங்க, அம்ரி ஆர்டர் செய்தான்.
அதன் ஓனரும் தமிழ் முஸ்லீம்தான் பல தலைமுறைகளாக அங்கிருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் ஆவி பறக்க (?) ஐஸ்கிரீம் வந்தது. வெளியே சிறிதே சூடாக ஆனால் உள்ளே கூலாக மிகவும் வித்தியாசமாகவும் கிரிஸ்ப்பாக மொறுமொறுவென்று இருந்தது. சுவையாகவே இருந்தது. கொழும்பு சென்றால் நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள்.
“சார் டின்னருக்கு எங்கே போகலாம்?”
"இல்லப்பா ஐஸ்கிரீமே போதும். ரூமில் கொஞ்சம் பழங்கள் இருகின்றன".
ரூமில் போய் இறங்கும் போது இரவு மணி 10. அன்று பார்த்த அனைத்தையும் அலசிக் கொண்டே அப்படியே உறங்கிப் போனேன்.
அடுத்த நாள்தான் சுற்றிப்பார்க்கும் கடைசி நாள் என்பதால் காலையிலேயே ரெடியாகி உட்கார அம்ரி வந்தான். நல்ல பையன் கிடைத்தான் எனக்கு.
“அம்ரி கடைசி நாள் என்பதால் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும்”
 “சரி சார் வாங்க போகலாம்?”
“முதலில் எங்கே?
மியூசியத்துக்குப் போகனும்னு சொல்லிங்கல்ல, முதலில் அங்கே போவோம்.”
“வெரிகுட், அதன் பெயர் என்ன?”
"நேஷனல் மியூசியம் ஆஃப் கொழும்பு" .
பேசிக் கொண்டே மியூசியமும் வந்து சேர்ந்தது. பார்ப்பதற்கு ஏதோ ஒரு ஐரோப்பிய அரண்மனை போல் தோற்றம் தந்தது. அதனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே போகலாம் என்று நினைக்கிறேன்.
Image result for national museum of colombo
National Museum 
புல்லட் பாயிண்ட்களில் சுருக்கமாகத் தந்து விடுகிறேன். என்ன மக்கா?
1.   கொழும்பில் உள்ள இரண்டு மியூசியங்களில் இது மிகவும் பெரிது. கொழும்பில் மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகப்பெரிய மியூசியமும் இதுதான்.
2.   இலங்கையில் மத்திய அரசின் தேசிய மியூசியங்களின் துறையால் (Department of National Museum of Central Government) இது நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
3.   சர். வில்லியம் ஹென்ரி கிரிகரி என்பவர் இலங்கையின் பிரிட்டிஷ் கவர்னராக இருந்தபோது, ஜனவரி 2ஆம் தேதி 1877-ஆம் வருடத்தில் இது நிறுவப்பட்டது.
4.   இத்தாலிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் ஆர்க்கிடெக்ட் J.G.ஸ்மிதர் என்பவர்.
Related image

5.   1872ல் கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டு 1876ல் கட்டிமுடிக்கப்பட்டது.
6.   இதன் கட்டிடப்பணியை மேற்கொண்டவர் அரசி மரிக்கார் வாப்ச்சி மரிக்கார் என்பவர். இவர்கள் குடும்பம் 9ஆம் நூற்ராண்டில் இடம் பெயர்ந்த ஷேக்  ஃபரீத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தான் கொழும்பிலுள்ள மிகவும் முக்கியமான   கட்டிடங்களான ஜெனரல் போஸ்ட் ஆபிஸ், கொழும்பு கஸ்டம்ஸ், பழைய டவுன் ஹால், காலே ஃபேஸ் ஹோட்டல், விக்டோரியா ஆர்க்கேட், கிளாக் டவர், போன்ற இன்னும் இருக்கும் பல கட்டிடங்களைக் கட்டியவர்.
Related image
Crown of Kandy king
7.   இது தேசிய மியூசியம் ஆனபிறகுதான் இதன் கிளை மியூசியங்களாக யாழ்ப்பாணம், கண்டி,ரத்னபுரி ஆகிய இடங்களில் (1942ல்) ஆரம்பிக்கப்பட்டன. அதன்பிறகு ஒன்பது புதிய கிளைகளும் திறக்கப்பட்டதோடு ஒரு மொபைல் மியூசியமும் உருவாக்கப்பட்டது.
Kandy Kings throne
8.   1885ல் உருவாக்கப்பட்ட ஒரு அரிய நூலகமும் இங்கு இருக்கிறது. 1 கோடியே 20 லட்சம் புத்தகங்கள் பல தலைப்புகளில் இங்கு இருக்கின்றன.
9.   இங்கு பல ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை சிங்கள, பாலி, சமஸ்கிருதம், பர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அமைந்தவை. இவை புத்தமதம், சிங்கள இலக்கியம், வரலாறு, மருத்துவம், ஜோதிடம், கால்நடை மருத்துவம், வரைவுக்கலை, கட்டிடக்கலை போன்றவையும் அடங்கும்.
உள்ளே இருந்தவற்றுடன் என்னைப் பெரிதும் கவர்ந்தவை கண்டி அரசர்களின் சிம்மாசனம் மற்றும் கண்டி அரச குடும்பங்கள் பயன்படுத்திய தங்க, வைர, முத்து ரத்தின ஆபரணங்கள்.
இவைகளைக் கவர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் லண்டன் கொண்டு சென்று அங்கே அரச வமிசத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இலங்கை அரசு இதனைக் கேட்டுப் பெற்று இந்த மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.
பாருங்கள் சுண்டைக்காய் நாடான இலங்கை, இங்கிலாந்துடன் பேசி இவற்றை வாங்கியுள்ளது. நாமும் தான் இருக்கிறோம். நம்முடைய விலைமதிப்பற்ற கோஹிநூர்  வைரம் இன்னும் பிரிட்டிஷ் வசம் இருப்பது வெட்கக்கேடு. இந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை. அது தவிர மாலத்திவிலிருந்து கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புத்தர் சிலை மற்றும் ஒரு பட்டத்து யானையின் எலும்புக் கூடும் அப்படியே இருந்தது. கொழும்பு செல்லும் மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய மியூசியம் இது.
-தொடரும்.
 பின் குறிப்பு : அடுத்த வாரம் "இலங்கையில் பரதேசி முடியும்"..அதன்பின் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி  நிற்கிறேன்.
அன்புள்ள

பரதேசி

7 comments:

 1. மியூசியம் பார்த்தல் மதுரை காந்தி மண்டபம் நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
  Replies
  1. @//பார்த்தல்//

   பார்த்தால்

   Delete
  2. ஆமாம் அது ராணி மங்கம்மாள் அரண்மனை .இது அதை விட மிகவும் பெரியது .

   Delete
 2. கண்டி அரச சிம்மாசனம் நல்லா இருக்கு. நம்ம சேர சோழ பாண்டிய அரசர்களின் சிம்மாசனம்தான் என்ன ஆச்சுன்னு தெரியலை.

  கோஹினூர் வைரம் - இது விலைக்கு (பண்டமாற்றாக) அல்லது தந்திரமாக வாங்கப்பட்டது. விலையுயர்ந்த பொருட்கள் அரசிக்குச் சொந்தம் என்ற வகையில் இதனை பிரிட்டிஷ் ராணிக்குக் கொடுத்தார்கள். அது திருடப்பட்ட வகையில் வராது.

  ReplyDelete
  Replies
  1. எப்படிச் சொன்னாலும் அது நமக்கு சொந்தமானது, அது நமக்குதிரும்ப வேண்டும் நெல்லைத்தமிழா

   Delete
 3. Interesting...

  We welcome your next Series too.

  ReplyDelete