Monday, January 20, 2014

காரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் !!!!!!!!!!


            மதுரையைவிட சென்னையில் அதிக நாட்கள் வாழ்ந்திருந்தாலும், மதுரை செல்வது என்பது, தாய் வீட்டுக்குப் போவது போல அவ்வளவு சுகமானது. சென்னையில் குடும்பம் இருந்தாலும், மதுரைக்குப்போகாமல் திரும்பமாட்டேன். மதுரைக்குப் போகும்போதெல்லாம் நண்பர் பிரபாகர் வீட்டில் தங்குவது வழக்கம். இந்தத் தடவையும் மதுரை விமானநிலையத்தில் பிரபாகரின் கருத்துப் பெருத்த மாருதி SX-4  என்னை அப்படியே உள்வாங்கிக்கொண்டு நகர்ந்தது. ஆஹா ஊர் சுற்றுவதற்கு இந்த வண்டியே கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது, என் நினைவலைகள் பிரபாகரை எட்டியதோ என்னவோ, அவரின் ஓசையலைகளாய்த் திரும்பியது.
Naan, Minisam  and Prabahar

“ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு. பிரபாகர் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வருடம் சீனியர். இப்போது அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் மேலும் “விஸ்காம்” (visual commander) டிபார்ட்மென்ட்டின் HOD.
அதே நாளில் மதியம் சி.எஸ்.ஐ. செவிலியர் கல்லூரியில் “அமெரிக்காவில் செவிலியர்” என்ற சொற்பொழிவை முடித்த கையோடு, அக்கல்லூரியின் பேராசிரியர் எட்வின் ராஜ்குமாரிடம் (மதுரை சமூகப்பணிக் கல்லூரியில் என் சீனியர்) “ அண்ணே இந்த காரைக்குடிப்பகுதியை பார்க்கனும்னு ஆசை”, என்றேன். “ஆல்ஃபி கவலைய விடு, காரைக்குடி என் அக்கா ஊருதான், நானே கூப்பிட்டுட்டுப் போறேன்,” என்றார்.
        காரும் ரெடி, கைடும் ரெடி, இப்போது டிரைவருக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே பிரபா வீடுவந்து சேர்ந்தபோது, பிரபா கேட்டார், “நாளைக்குத்தானே நீ காரைக்குடி போறேன்னு சொன்ன,”
“ஆமாம் ஏன் கார் ஃப்ரியா இல்லையா”? என்றேன் பயந்து கொண்டே.
        “இல்லப்பா டிரைவருக்கு சொல்லிட்டேன். காலையில ஏழுமணிக்கு வந்தாப் போதும்ல,” என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். கொஞ்சம் கண் அசந்தால் வாயில் பாலை ஊற்றும் நண்பர்கள் மத்தியில்   இப்படி ஒருவர்.
        “அசத்திட்டீங்க பிரபா, ரொம்ப தேங்க்ஸ்,” என்றேன்.
 காலையில் நான் ரெடியாகி வெளியே வருவதற்கு முன்னால் மனைவியுடன் வாக்கிங் முடித்து வந்த பிரபா, பக்கத்து காலி கிரவுன்டை காண்பித்தார். அங்கே ஒரு இளம் டிரைவர் காரை தண்ணீரிட்டு பளபளவென்று கழுவிக் கொண்டிருந்தான்.
        விடைபெற்று காரில் அமர்ந்து வழியில் பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த எட்வினை ஏற்றிக்கொண்டு, கார் திருப்பத்தூர் ரோட்டில் விரைந்தது.
        “ஏ சரவணா நீதானா”, என்று டிரைவர் தம்பியைப்பார்த்து சொல்லிவிட்டு, என்னை நோக்கி திரும்பி, “ஆல்ஃபி நமக்குத் தெரிஞ்ச பையன்தான் பசுமலையில் இருக்கான்”, என்றார். ஆஹா சூப்பர் ,ரொம்ப நல்லதாப்போச்சு என்று இன்னும் உற்சாகமானேன்.
 “என்னன்னே இன்னிக்கு ப்ளான், எங்கெல்லாம் போறோம்”, என்றேன்.
        “லேட்டா திரும்பினால் போதும்ல, எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பாத்துரலாம்னு,” சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
(“டேய் மாப்ள என்னடா ஒன் ஃபிரண்ட்ஸ் எல்லாமே பேராசிரியர்கள்தானா, பாப்பையான்ற, இப்ப பிரபாகர், எட்வின்ற, காலேஜில அட்மிஷன் வேணும்னா உன்ட்டவந்திரலாம் போல இருக்கே” .
        “மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல. நண்பர் போலப் பழகுகிற பேராசிரியர். மற்ற இருவரும்...”
        “பேராசிரியர் போலப் பழகுகிற நண்பர்களா?
“இல்லடா அவசரப்படாதே இவர்கள் இருவரும் பேராசிரிய நண்பர்கள்.தொடர்ந்து கற்க விரும்பும் ஒரு மாணவனுக்கு பேராசிரியர்கள் தானே நண்பர்களாய் இருக்க முடியும்”.
        “அப்படிப்போடு அருவாள”.
        “என் நண்பர்கள்ல உருப்படாம போனது நீ ஒருத்தன்தாண்டா”.
“வாடி வில்லா தேவதானப்பட்டிக்கு, உன்னை சந்தைப்பேட்டையில சந்திக்கிறேன்”. )
        எட்வின் சரவணனை ரைட்டில திரும்பச்சொல்ல, கார் சாலையைவிட்டு சோலையில் திரும்பியது. இரண்டு பக்கமும் மரங்களடர்ந்த பாதையில் திரும்பி வேட்டங்குடியில் நின்றது.
        “இது தான் “வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்” வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி முட்டையிட்டு  குஞ்சு பொரித்து, பலுகிப் பெருகும் இடம்”,  என்றார் எட்வின்.
ஆஹா, என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான். இதைத்தான் முரண்பாடு (Irony) என்கிறார்கள் போலும்.

        வேட்டங்குடி என்ற பெயரும் ஆச்சரியப்படுத்தியது. சென்னையின் அருகிலுள்ள வேடந்தாங்கல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு பெயரிலும் உள்ள “வேடன்” என்ற பெயர் வேடர்கள் வரும் சொர்க்கபுரியாக இவை இருந்திருக்க வேண்டும் என்று நினைவுறுத்துகிறது. வெளிநாட்டு வெள்ளைக் கொக்குகள் ருசியாகத்தான் இருந்திருக்கும்.
        ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். சுற்றி சுற்றிப்பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை. பறவைகளைப் பார்க்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் ஏறி உற்று உற்றுப்பார்த்தேன். ம்ஹீம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே போயின எல்லாப் பறவைகளும் என்ற யோசனையுடன் இறங்கி வந்து “அண்ணே என்னன்னே கொக்கு ஒன்னத்தையும் காணோம்,” என்று கேட்டேன்.
        “அட மக்கு, கொக்கு இந்த சீசனில் வரும் ஆனா வராது,” என்றார். அப்புறம் ஏய்யா என்னை இங்க கூட்டி வந்த என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். நான் கொக்கை நினைச்சு கொக்கு மாக்கா சாரி கோக்கு மாக்கா எதையாவது கேட்டு அவர் நொம்பலப்பட்டு, பாதியில விட்டுட்டுப்போயிட்டா என் கதி என்னாகும்னு நினைச்சு கம்முன்னு இருந்திட்டேன். 
தூரத்தில் தெரிந்த உள்ளூர் கொக்கு .
     தூரத்துல கொக்கு மாதிரி ஒண்ணு தெரிந்தது. படத்தைப் பார்த்து நீங்களே சொல்லுங்க. எங்காவது கொக்கு தெரியுதான்னு.
        “உனக்கு பறவை தானே பார்க்கணும். அங்கே பார்,” என்றார் எட்வின்.
Add caption
        எங்கே என்று ஆவலோடு பார்த்தபோது, ஒரு கோழி தன் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது. அதுவும் அழகாகவே இருந்தது. க்ளிக்கிவிட்டு, “அண்ணே போவோம் பசிக்குது” என்றேன்.
        “இந்தா திருப்பத்தூரில சாப்பிட்டுரலாம்,” என்றார்
        “ரொம்ப தேங்ஸ்னே, எனக்காக லீவு போட்டுட்டு வந்திருக்கீங்க,” என்றேன்.
        “லீவா, ஆன் டூட்டிப்பா”
        “என்ன ஆன்டூட்டிப்யா?.
“ஆமா நீ எங்க காலேஜீக்கு வந்திருக்கிற கெஸ்ட் லெக்சரர், உன்னை கவனிக்க வேண்டாமா”
        “அட அப்படி ஒண்ணு இருக்கா, அப்ப நானும் பேராசிரியர் தான்”.

தொடரும்>>>>>>>>>>>>>>>>>>16 comments:

 1. அடடா...! சந்தோசம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மையான நண்பர்களோடு சேரும் போது மகிழ்ச்சி பொங்கும்தானே. நன்றி
   திண்டுக்கல் தனபாலன.

   Delete
 2. முடிந்தால் புதுக்கோட்டை செல்லவும்.

  http://www.gnanalaya-tamil.com/2013_01_01_archive.html

  ReplyDelete
  Replies
  1. புதுக்கோட்டையும் சென்றிருந்தேன்.பின்னால் வருகிறது

   நன்றி ஜோதிஜி திருப்பூர்.

   Delete
 3. ///ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு.///

  என்ன வண்டியை அமெரிக்காவுக்கே தூக்கிட்டு வந்திட்டிங்களா?

  ReplyDelete
  Replies
  1. விட்டா தூக்கிட்டு வந்திருப்பேன். சூப்பர் வண்டி .

   Delete
 4. ///மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல//

  எங்க பேராசிரியர் உங்கள் நண்பணா இருக்க கூடாதா என்ன? ஒரு வேளை பேராசிரியர் என்றால் வயதான ஆள் என்று பலர் நினைப்பர்கள் அதனால் அவருக்கு நண்பர் என்றால் உங்க்ளையும் ஒல்டு என்று நினைத்துவிடுவார்கள் என்ரு நினைத்து ஜகா வாங்குகிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. கரெக்டாய் சொல்லிட்டீங்க.

   Delete
 5. ///என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான்.///

  சரி நீங்களும் ஒரு பறவைன்னு ஒத்துக்கிறோம் அதுக்காக பறவை போல கம்பியில் தொங்கிகொண்டதுதான் படத்திற்கு போஸ் தருவது

  ReplyDelete
  Replies
  1. காத்துல பறந்து போய்டா என்ன செய்றது ?

   Delete


 6. சொல்ல வருகிற விஷயங்களை அழகாக சொல்லுவதில் இருந்து நீங்க அமெரிக்கன் காலேஜ் பயபுள்ள என்று நன்றாக தெரிகிறது( நல்லா படிக்கிற புள்ள்ளைங்க சேரும் காலேஜ்) பாராட்டுக்கள்

  நான் பாருங்க உருப்பிடாத புள்ளைங்க படிக்கும் காலேஜ் ஆனா மதுரைகல்லூரியில் படித்தவன் அதனால்தான் அதிக அளவு நக்கலும் அடவாடித்தனும் என் எழுத்தில் இருக்கும் ஆனா அது நல்லா இருக்கானு எனக்கு தெரியாது.

  அமெரிக்கன் காலேஜில் படிக்கவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது அமெரிகன் காலேஜில் படித்த உணர்வு ஏற்படுகிறது.. அதனால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பிறகு நானும் அமெரிக்கன் காலேஜில் படித்தவன் அது பேராசிரியர் பரதேசியிடம் படித்தவன் என்று பீலா விடலாம் என்று இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்களை ஃ பாலோ பண்ணுகிற எண்ணிக்கையைப்பார்த்தாலே தெரியுமே, உங்கள் எழுத்துக்கு இருக்கும் ஈர்ப்பு.நானெல்லாம் கத்துக்குட்டி ஆனா நீங்க புலிக்குட்டி .

   Delete
  2. நீங்க இப்பதானே வந்து இருக்குறீங்க நீங்க போகிற ஸ்பீடுல எல்லோறையும் தூக்கி சாப்பிட்டுவிடுவீங்க. நான் 3 வருஷாமா தொடர்ந்து குப்பை கொட்டுவதால் பரிதாபபட்டு வந்து சேர்ந்தவங்க அவங்க..

   இந்த புலிக்குட்டி பல்லு புடுங்குன புலிக்குட்டி இது உறுமும் ஆனா கடிக்காது. பூரிக்கட்டைடையை கையால் எடுத்தாலே பயப்படும்

   Delete
  3. முதல்ல இந்த பூரிக்கட்டைகளை US-ல் தடை பண்ணனும்.
   நானும்தான் வந்து ஒரு வருஷமாச்சு. ஃபாலோ பண்றவங்க முப்பதைக்கூட எட்டலை. புலி புலிதான் பூனை பூனைதான் .

   Delete
 7. சிறப்பாய் தொடங்கியிருக்கும் பயணம்.....

  நல்ல நண்பர்கள் இருந்துவிட்டால் எப்போதும் கொண்டாட்டம் தான்.....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete