Thursday, December 26, 2013

சூடுமில்ல சொரணையுமில்ல !!!!!!!!!!!!!சீ சீ, உனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்ல? மானங்கெட்டு அலையுற, நானும்தேன் இருக்கேன்னு டெய்லி வந்துர்ற, சூடுமில்ல   சொரனையுமில்ல.
கொஞ்சம்னாலும் ரோஷமிருந்தா, நீயெல்லாம் நாண்டுக்கிட்டு சாகனும், நீயெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?
முறைக்காத, ஒனக்குத்தான் ஒரு தில்லும் இல்லியே, எருமை மாட்டுல மழை பேஞ்ச மாறி, ஒன்னும் ஒறைக்கமாட்டேங்குது.
ஆமா நீயெல்லாம் எதுக்கு வெளியே வர்ற, என்னையும் பாரு என் அழகையும் பாருன்னு, பேசாம மறைஞ்சே இருக்க வேண்டியதுதானே.
இந்தியாவுல போய்ப்பாரு ஒன் அண்ணன் எவ்வளவு உணர்ச்சிகரமா இருக்கான்னு.
ஒன்ட்ட பேசி ஒரு பயனும் இல்ல, ஒனக்குத்தான் கொஞ்சம் கூட உணர்ச்சியில்லயே. எவ்வளவு ஏசுறேன், கொஞ்சம்னாச்சும் காதுல விழுதா பாரு. ஏதாவது மிச்சமீதி அறிவு இருந்தா இப்படி இருப்பியா?
"ஏலே சேகரு என்னலே இவ்வளவு கோபம்?" "
“இல்ல மகேந்திரா நானும் எவ்வளவு நேரத்துக்கு பொறுத்துப் பொறுத்து பாக்கிரது"
"சரி விட்றா பாவம். யார்றா அது அவ்வளவு மானங்கெட்ட ஜந்து?"
"மகேந்திரா, நீ சும்மாரு, உனக்கு ஒன்னும் தெரியாது ஊரில இருக்கிற உனக்கு இதப்பத்தி தெரியாது"
"சர்றா விடு ஏற்கனவே சர்க்கரை கூட இப்ப BP-யும் வந்துறப்போறது."
"டேய் ஒம்பாட்டுக்கு போ, ஆமாம் கடுப்பைக்கிளப்பாத"
"அப்படி யார்றா அது எனக்குக்கூட தெரியாம, என்னதான் நடந்துச்சு".
“எனக்கு வேகாளம் வருது, ஆத்தாத்துப் போச்சு”.
“ஏய் சரி இப்ப சொல்லப்போறியா இல்லயா”?
“இல்லடா இந்த சூரியந்தேன்”.
“என்ன சூரியனா? எந்த சூரியன், சூரியன்ற பேர்ல உனக்கு யாரும் ஃபிரெண்ட் இல்லயே”?
“டே, நீ வேற, வானத்துல வர்ற சூரியனச் சொல்றேன்”.
"எந்த சூரியன், இந்த காலையில உதிச்சு மாலையில  மறையுமே அந்த சூரியனா?".
“அந்த சூரியனே தான்”.
“ஏன்டா சூரியனுக்கு என்ன இப்ப? மானாவாரியாத் திட்டறே”.
“இல்லடா நானும் பாத்துக்கிட்டிருக்கேன், காலையிலே நேரத்துக்கு வந்துறுது. ஆனா ஒரு பிரயோஜனமில்லை”.
“சரி, மேல சொல்லு, ஒன்னும் புரியல”.

“தெனம் வந்து என்ன செய்ய, வட்டமாக கிரணங்களைப் போட்டு வந்தும், குளிர் போகமாட்டேங்குது. இந்தியாவுல இருக்கிற சூரியன்லாம் எவ்வளவு உக்கிரமா இருக்கு. பயகளை வெளியே விடாம அடிச்சு அடிச்சு துரத்துது, பாவம். அதும் உச்சி நேரத்துல வெளியே போனா மயக்கமே வந்துறும்ல. ஆறா வேர்த்துக் கொட்டிரும்ல அஞ்சு நிமிஷத்துல. ஆனா இங்கே ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது. சும்மா பேருக்கு சூரியன் வருது. ஒரு சூடு ஒரு உறைப்பு எதுவுமில்ல. சும்மா மந்து மந்துன்னு வந்துட்டு போயிருது. இதுல சாயந்திரம் வெக்கம் தாங்காம, சீக்கிரம் வேற மறைஞ்சு போயிருது. நாங்க ஏகப்பட்ட டிரஸ்களை போட்டுக்கிட்டு, ஸ்வெட்டர், அதுக்கு மேல கம்பளி கோட்டு, கையில உறை, காதுக்கு மூடி தலையில குல்லா, அப்படின்னு கோமாளி மாறி திரிய வேண்டியிருக்கு. நானும் எவ்வளவோ திட்டிப்பார்த்துட்டேன். ரோஷமே வரமாட்டேங்குது”.
“அட கிறுக்குப்பயலே, நீ சொல்றதக் கேட்டு எனக்கு ஒரு சொலவடை  ஞாபகத்துக்கு வருது”.
“சரி சொல்லிதொலை”.
“சூரியனைப்பார்த்து நாய் குலைக்குது”.

“எலே மகேந்திரா  அங்க வந்தேன், நீ அவ்வளவுதான்”.

ஒரு அறிவிப்பு 
நண்பர்களே "இன்டியா டாக்ஸ்"  டிவி நிகழ்ச்சியில்  அடியேன் பங்கு கொள்கிறேன்.நேரம் இருந்தால் பார்த்து மகிழவும்.

  

7 comments:

 1. சூரியன் ரொம்பவே படுத்தறார் போல! :)

  இங்கேயும் குளிர் தான் - உங்க ஊர் அளவுக்கு இல்லைன்னாலும்! :)))))

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,வந்து பாருங்கள் வெங்கட் .

   Delete
 2. சூழலைச் சொல்லிச் சென்றவிதம் அருமை
  மிகவும் ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி
   உங்கள் பாராட்டுகளுக்கும்
   வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 3. இங்கே எங்களை வெயில் படுத்துது ,அங்கே பனி பாடாப் படுத்துது போலிருக்கே !
  த ம 3

  ReplyDelete
 4. தா......ங்......க........மு.......டி........ய......ல

  நன்றி Bagawanjee

  ReplyDelete
 5. மீண்டும் படித்து இரசித்தேன்
  இங்கு மாலைச் சூரியன் கொளுத்துகிறது

  ReplyDelete