Thursday, January 12, 2017

முதுகெலும்பில்லாத தமிழ் சமூகம் !!!!!

Image result for pongal in Tamilnadu

தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? முதலில் ஜல்லிக்கட்டுக்குத் தடை. இப்போது பொங்கல் தினம் தேசிய விடுமுறை நாளிலிருந்து நீக்கப்படுகிறது.
முதுகெலும்பாத சமூகமாக தமிழ் சமூகம் மாறிவருகிறது. நெஞ்சை நிமிர்த்தி விழுப்புண்களை வாங்கி, தப்பித்தவறி முதுகில் புண்பட்டால் உயிரை விட்டு மானத்தோடு வாழ்ந்த சமூகம் இது. யார் வந்தாலும் வாருங்கள், தலைகுனிந்து இடுப்பை வளைத்துக் கும்பிடுவோம், தாள் பணிவோம், காசுக்கு ஆள் சேர்ப்போம் , தகுதியாவது ஒன்றாவது, பணமும் பதவியும் மட்டுமே எங்களுக்கு முக்கியம். பொதுமக்களோ, நாட்டு முன்னேற்றமோ ம்ஹும் அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எலும்பைப் போட்டால் நாய் வாலாட்டாமல் போய்விடுமா?.நம்ம மக்கள் தானே காசைக் கொடுத்தால் ஓட்டுப் போடுவார்கள்.
Image result for pongal in Tamilnadu
Add caption
 இதோ ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கலைத் தொடர்ந்து வரும் புதிய உத்தரவுகள். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்.
1.   பொங்கல் விழா தடை செய்யப்படுகிறது. பொங்கல் மற்றும் கரும்பு சாப்பிடுவதற்கும் தடை.
2.   இட்லி, தோசை, அரிசி உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமை உணவுகள் மட்டுமே உட்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
3.   சாம்பார் ரசம், மோர் ஆகியவை ஒதுக்கப்பட்டு, தடுக்கா நவரத்தன் குருமா, சன்னா   மசாலா ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.
4.   வேட்டி கட்டுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. இனிமேல் தார் பாட்சா, குர்தா ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும்.
5.   சேலை கட்டுவது மொத்தமாக நிறுத்தப்பட்டு சுரிதார் தேசிய உடையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
6.   தமிழ்மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியையும் பேசத்தடை இல்லை.
7.   ஆட்சி மொழியாக சமஸ்கிருதமும், பேச்சு மொழியாக இந்தியும் இனி நடைமுறைப்படுத்தப்படும்.
8.   தமிழகத்தின் காய்கறிகளான கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவை ஒழிக்கப்பட்டு ,உருளை, முட்டைக்கோஸ், பீட்ரூட் மட்டுமே உண்ண  பணிக்கப்படுகிறது.
9.   நெல் பயிரிட தடை செய்யப்படுகிறது. வேணுமென்றால் பாசுமதி மட்டுமே பயிரிடலாம். மற்றபடி கோதுமைக்குத் தடையில்லை.
10.                தமிழ்த் தொலைக்காட்சிகள் முற்றிலுமாக தூர்தர்ஷனாக மாற்றப்படுகிறது.
11.                தமிழ் விளையாட்டுக்களான கிட்டிப்புள், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சு, கிச்சு கிச்சுத்தாம்பாளம் ஆகியவை ஒழிக்கப்படுகின்றன. 
12.                தமிழ் தெய்வங்களான, முருகன், மதுரை வீரன், முனியாண்டி, பாண்டி முனி, காளி, முத்தாலம்மன், இசக்கி, கண்ணகி ஆகியவை  தடை செய்யப்படுகின்றன.
13.                முருகனின் அறுபடை வீடுகள் , தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகத்தின்  மூலம் தேசிய   உடமை ஆக்கப்படுகின்றன.
14.                தமிழ்நாடு என்ற ஒன்று இனிமேல் இல்லை. மராட்டியர் ஆண்ட திருச்சி, தஞ்சாவூர் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்படுகிறது. திருநெல்வேலியும் கன்னியாகுமரியும்,கோயம்புத்தூரும் கேரளத்துடனும் சேருகிறது. காஞ்சிபுரமும், சென்னையும் ஆந்திரத்துடன் இணைகிறது. வேலூர், தர்மபுரி, ஓசூர் கர்நாடகத்துடன் வருகிறது. ராமநாதபுரமும் ராமேஸ்வரமும் கச்சத்தீவு போல இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது.
Image result for Jallikattu


கற்பனையில் எழுத்துவதற்கே கை நடுங்குகிறது. இதுவே உண்மையானால். 
இந்த லட்சணத்துல பொங்கல் வாழ்த்து எப்படி சொல்றது ?
 இருந்தாலும் தடை  செய்யும்வரை சொல்லித்தானே ஆகவேண்டும் .
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Image result for pongal in tamilnadu
பின் உரையாடல் :
Image result for ministers bending to sasikala

"ஆமா  சேகரு தலைப்புல முதுகெலும்பு   இல்லாத சமூகம்னு போட்டிருக்கியே , அதுக்கு என்னடா அர்த்தம் ?"
"அதுவாடா மகேந்திரா , அதான் நல்லா  குனிஞ்சு   வளைஞ்சு கும்பிடுறாய்ங்களே அதைத்தான்   சொன்னேன்".



Tuesday, January 10, 2017

மு.க. ஸ்டாலின் முன்னால் உள்ள சவால்கள் !!!!!!!!

Image result for Mu ka stalin

1966ல் இளைஞர் அமைப்பாளராக தி.மு.கவில்   இணைந்து, 23 வயதில் மிசாவில் சிறை சென்று, சட்ட மன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயராக மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின் உள்துறை மந்திரியாக வளர்ந்து, துணை முதல்வராக உயர்ந்து, 2015ல் சட்டமன்றத் தேர்தலைத் தனியாகச் சந்தித்து அதிக இடங்களை வென்று, தற்சமயம் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இப்போது திமுகவின் செயல் தலைவர்.
அவர் திமுகவின் செயல்படும் தலைவராகி பல ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பொறுப்பு தாமதமாக வந்தாலும், கருணாநிதியின் காலத்திலேயே இது வந்தது மிகவும் நல்லது. இதைத்தான் நானும் என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். ( http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_31.html) என்ன, கருணாநிதியும் பொதுக்குழுவுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Image result for stalin meets Karunanidhi after the General body

ஆனாலும் அன்பழகன் மற்றும் துரைமுருகன் புடைசூழ ஸ்டாலின் கருணாநிதியிடம் ஆசி வாங்கும் புகைப்படம் ஒன்று   போதும், இது கருணாநிதியின் சம்மதத்துடன் நடந்த ஒன்று தான் என்று நிரூபிக்க. அதோடு பேராசிரியர் அன்பழகன் அவர்களும் மிகப்பெரிய தலைவர்தான். திமுகவின் பொதுச் செயலாளரான அவர் தலைமையில் பொதுக்குழு நடந்ததும் ஒன்றும் குறைவானதில்லை.
பொறுப்பு ஏற்ற முதல் நாளே முதலமைச்சரை(?) நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தது, மிகவும் நல்ல காரியம்
செயல்தலைவர் என்பது தலைவருக்கு இணையான பதவி என்பதோடு இது பதவியல்ல பெரும் பொறுப்பு என்று முகஸ்டாலின் சொல்லியிருக்கிறார். சொல்வதோடு அதை உணர்ந்து செயல்பட்டால் திராவிட இயக்கம் பாதுகாக்கப்பட்டு அதனை  அடுத்த தலைமுறைக்கு  எடுத்துச்செல்ல  முடியும்.
மு.க.ஸ்டாலின் முன் உள்ள சவால்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.   ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து கடந்த கால எதிர்க்கட்சி  என்றில்லாமல் எதிரிக்கட்சி நிலை போன்ற கசப்பான நினைவுகளை களைய வேண்டும்.
2.   எல்லாத் தலைவர்களுடனும் பொது நிகழ்வுகளிலும், தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு காழ்ப்புணர்ச்சி அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்.
3.   “மக்கள் பணியே மகேசன் பணி”  என்று  செயல்பட்டு எந்த முடிவினை எடுத்தாலும் அது மக்களுக்கு உதவுமா இல்லையா  என்று பார்த்து எடுக்க வேண்டும்.
4.   உடனடியாக குடும்ப உறுப்பினர்களை முதலில் தனித்தனியாகவும் பிறகு மொத்தமாகவும் சந்தித்து குடும்ப ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும். இதுதான் ஸ்டாலினின்  தலையாய தலைவலி.
5.   அண்ணன்தானே என்பதால் எந்த விதத்தயக்கமும் இன்றி முக.அழகிரியை மதுரைக்கே சென்று சந்தித்து மனக்கசப்புகளையும் மனவேறுபாடுகளையும் களைய வேண்டும். தேவைப் பட்டால் முக.அழகிரியின் மகனுக்கு ஏதாவது பொறுப்புக் கொடுக்கலாம்.
6.   கனிமொழியையும் ராசாத்தி அம்மாவையும் சந்தித்து, எந்தப் பயமும் வேண்டாம் என்று உற்சாகப் படுத்தி தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தலாம். அவர் மேல் உள்ள குற்றச் சாட்டு நீங்கும்வரை அரசுப் பணிகள் கொடுப்பதை தவிர்ப்பது நலம்.
7.   முடிந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சிப்பதவி வழங்காமல் மற்ற பொறுப்புகளைக் கொடுக்கலாம்.
8.   கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டுவந்தாலும் ஒரு நல்ல ஜனநாயக அமைப்பாக செயல்பட உறுதியெடுக்க வேண்டும்.
9.   ஊழலில் ஈடுபட்டு வெளியே தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் பழம்பெருச்சாளிகளை ஓரம் கட்டி பதவி நீக்கி, கட்சிப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
10.                எல்லோரும் குறிப்பாக கட்சித் தொண்டர்கள் இலகுவில் அணுக முடியும் தலைவராக விளங்க வேண்டும்.
11.                தலைவர்களின் தலைவர் என்பதைவிட தொண்டர்களின் தலைவர் என்பது தான் எப்போதுமே உயர்வைத்தரும்.
12.                அடுத்தக் கட்ட தலைவர்களை உருவாக்க முயன்று திமுகவில் திறமையான பலரை தயார்ப்படுத்த வேண்டும்.
13.                அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் தலைமையில் திராவிடப் பல்கலைக்கழகம் அமைத்து, திமுகவின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக விரும்புவர்கள், கட்சிப் பொறுப்புகளுக்கு வருபவர்கள் என எல்லோரும் அதில் பயின்று சான்றிதழ் பெறுவது அவசியம் என்ற நிலையினைக் கொண்டு வரவேண்டும்.
14.                திமுகவின்  சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும் கணிணிப் பயிற்சி அளித்து அடுத்த கட்ட தலைமைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும்.
15.                தலைமைப் பொறுப்புகளுக்கு மேலிருந்து கீழ் என்றில்லாமல் கீழிருந்து மேல் என்று கொண்டுவரும் நிலையை உருவாக்க வேண்டும்.
16.                கட்சியின் உறுபினர்களிடம் மாத உறுப்பினர் தொகை வசூலிக்கப்பட்டு கட்சியின் கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கலாம்.
17.                கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் கட்சியின் நிதியிலிருந்து செலவழித்து சிறுசிறு பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். கிராமத்து மக்களும் இத்தகைய பணிகளுக்கு மனமுவந்து உதவுவார்கள். அந்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி கணக்கு வழக்குகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
18.                ஓட்டுக்கு காசு கொடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எப்போதும் மக்கள் பணி செய்வது திமுகதான் என்றால் மக்கள் மகிழ்ச்சியுடன் உதவுவார்கள்.


19.                எதிர்க்கட்சியாக இருப்பதால் எல்லாவற்றையும் எதிர்க்காமல் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்து, பாராட்ட வேண்டியதை பாராட்டி, வரவேற்க வேண்டியதை எதிர்த்து நல்ல அரசியல் செய்ய வேண்டும்.
20.                எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை முன்னெடுத்து நாடு நல்ல வளர்ச்சியடைய பாடுபட வேண்டும்.
Image result for karunanidhi family



எந்த ஒரு எதிர்க்கட்சியினையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்து,    இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் மு.க.ஸ்டாலின் தனிப் பெருந்தலைவராக உருவெடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கலாம்.  திராவிட இயக்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று சாதி சமய வேறுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்கலாம்.

Thursday, January 5, 2017

சாமுராய் வாளும், திருப்பாச்சேத்தி அரிவாளும் !!!!!!!!!

Related image
Samurai Soldier


சீனாவில் பரதேசி -29

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.

டிக்கட்டுகளில் 500 யுவான் போட்டிருந்தது. எவ்வளவு என்று சைகையில் கேட்க 1000 யுவான் என்று எழுதிக்காண்பித்தான். அட நம்மூரில் பிளாக்ல டிக்கட் விக்கி மாதிரியில்ல இங்க இருக்கு என்று நினைத்துக் கொண்டு வேண்டாம் என்றேன். 200 யுவான் டிக்கட்டைக்காட்டி 500 என்றான். ஏற்கனவே பலமுறை ஏமாந்திருக்கிறேன் என்பதால் தயக்கமாக இருந்தது. ஓபரா ஷோவைப் பார்க்க ஆசையாயும் இருந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தால் ஒருவேளை நம்மூர் போல பின்னால் வந்து குறைத்துக் கொடுப்பான் என்று நினைத்து நடையைக் கட்டினேன். பின்னால் உடனே திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடந்தேன். சிறிது நேரம் கழித்து  யாரும் வருவது போல் தெரியாததால் திரும்பிப் பார்த்தேன். அவன் கூட்டத்தில் தெரியவில்லை. அந்தப் பக்கம் இன்னொருவன் நின்றிருந்தான். அவன் வந்து டிக்கட்டுகளைக் காண்பித்தான். 500 யுவான் டிக்கட்டைக் காண்பித்தான். எவ்வளவு என்று கேட்க 2000 என்று சொன்னான். ஐயையோ இதற்கு அவனே தேவலையே என்று திரும்ப விரைவாக நடந்து அவனைத் தேடிப்பார்த்தேன். ம்ஹூம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இன்னொருவன் வந்தான். ஆனால் 500 யுவானை 2500 என்று சொன்னான். இது கட்டுப்படியாகாது என்று நினைத்து நடையைக் கட்டினேன். மணியைப் பார்த்தால் பத்து மணிதான் ஆகியிருந்தது. ஃபயர் வொர்க்ஸுக்கு  இன்னும் இரண்டுமணி நேரம் இருந்தது. குளிர் வேறு கூடிக் கொண்டே போனது.

காதடைப்பானை சிறிது சரிசெய்ய படக்கென்று உடைந்து போனது. என்ன கொடுமை இது என்று நினைத்துக் கொண்டு ம்ஹும்  இனிமேலும் வெளியே நின்று கொண்டிருந்தால் பரதேசி பரலோகம் செல்வதற்குத்தான் அதிக வாய்ப்பு என்றெண்ணி நம்முடைய வாசக நண்பர்களின் நன்மைக்காக பொடிநடையாய் விடுதிக்குத் திரும்பினேன்.

ஒரு மணல் சூனியக்காரியை வாங்கி மகிழ்ந்து உண்டேன். புரியவில்லையா புரோ' சான்டவிச்'சைத்தான் தமிழில் அப்படிச்சொன்னேன். அன்று நடந்த நடைக்கு தூக்கமும் கண்களைத் தழுவ ஆனந்த சயனம் அடைந்தேன்.

இரவு திடீரென்று விழித்துக் கொண்டேன். நல்ல கனவு, 500 யுவான் டிக்கட்டை ஒரு பெண் இலவசமாகக் கொடுக்க நன்றி சொல்லி உள்ளேபோய் அமர்ந்தால் பக்கத்தில் அந்தப்பெண். மேடையில் நடக்கும் ஓபராவைப் பார்ப்பதா பக்கத்திலிருக்கும் பார்பராவைப் பார்ப்பதா என்று திகைத்து ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவள் கைகளைக் கோர்த்துக் கொள்ள அவளின் அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாமுராய் வீரன் தன்  வாளை  உருவ, நான் வேர்த்து விறுவிறுத்து எழுந்து விட்டேன்.

திரும்ப தூங்குவதற்கு சிறிது நேரமானது. திரும்ப கனவு வந்தால் அந்த சாமுராய் வீரனை பாண்டிய திருப்பாச்சேத்தி அரிவாளால் ஒரு போடு போட்டிருப்பேன். என்னசெய்வது நம் வீரத்தைக் காண்பிக்க கனவில் கூட ஒரு  சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது.
New Year Eve In Beijing New-Years-Eve-in-Beijing-2975998
New Year in the Great Wall of China

ஏலேய் பரதேசி”
(என்ன ரொம்ப நாளைக்குப்புறம் மகேந்திரன் குரல் கேக்குது)
யார்ரா அவன் ஏக வசனத்தில் கூப்பிடுகிறது.
தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி நடிக்கிறதுல உன்னை மிஞ்ச ஆளில்லடா பரதேசி.
சரிசரி சொல்றா மகேந்திரா என்னாச்சு ரொம்ப நாளாச்சு.
நீ இந்த தரித்திரம் பிடிச்ச சரித்திரத்தை கட்டிக்கிட்டு  இருக்கிறதால தான் நான் இந்தப் பக்கமே வரதில்ல.
அடப்பாவி மதுரைத் தமிழன் மாதிரியே பேசறியே .சரிசரி இப்ப மட்டும்  எதுக்கு வந்த?”.
அதுவா எதோ கனவு காண்றதப் பத்தி சொன்னேல்ல, அதான் வந்தேன்.
சரி அதுக்கு என்ன?”
இல்ல அந்தக் கனவுக்கு நல்ல தலைப்பு ஒண்ணு தோணுச்சு. அதான் சொல்லிறலாம்னு வந்தேன்.
கனவுக்கு தலைப்பா சரிசரி சொல்லு சொல்லு (ஐயையோ என்ன சொல்லப் போறானோ புது வருஷமும் அதுவுமா).
இல்ல சாமுராய் வீரனோட சண்டை போட்ட மாதிரி கனவு வந்துச்சுல அதுக்குத்தான் ஒரு தலைப்பு தோணுது.
சரி சீக்கிரம்  சொல்லுறது. நான் இன்னும் ஒரு பக்கம் எழுதி முடிக்கணும்.
இப்படி தலைப்பு வச்சா என்ன? "யாம குச்சியும் ஓமகுச்சியும்" நல்லாத்தான் இருக்கு ஆமா அதில யாமகுச்சி யாரு?”
          அதாண்டா அந்த சாமுராய் வீரன் பார்பரா காதலன்.
அப்ப ஓமக்குச்சி?”
அத வேற கேட்கணுமா? அது நீ தான்.
அட நாதாரி இதுக்கா என்னை காலைல எழுப்பிவிட்ட. உன்னை ஊர்ல வந்து கவனிச்சுக்கிறேண்டா”.  
இந்த புல்தடுக்கிக்கு என்ன திமிர் பாருங்க. இனிமே அவன் போன் பண்ணா எடுக்கக் கூடாது.
பீஜிங்கில் புத்தாண்டு பிறந்தது. நான் எழுந்து ரெடியாகி வெளியே வர "ஹேப்பி நியூ இயர்"என்று சொல்லி எழுந்து கைகுலுக்கினான் லீ. ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்திவிட்டு இருவரும் சிற்றுண்டி முடித்து வெளியே வந்தோம்.


என்ன லீ இன்னைக்கு எங்கே போகிறோம்.
நீ சொன்னபடி புது வருடமும் அதுவுமா உன்னை சில ஆலயங்களுக்கு கூப்பிட்டுப் போகிறேன். முதலில் கிறிஸ்தவ ஆலயம் அப்புறம் புத்தர் ஆலயம் அதற்கப்புறம் டாவோ ஆலயம் என்று.
சப்வேயில் இறங்கி பயணித்து பீஜிங்கின் பழமையான ஒரு கத்தோலிக்க ஆலயம் சென்றோம்.
Image result for Cathedral of the Immaculate Conception, Beijing
Cathedral of the Immaculate Conception
சுவானவுமென் ஆலயம் என்று (xuanwumen church) என்று சீன மொழியில் அழைக்கப்படும்  இந்த அழகான ஆலயத்தின் ஆங்கிலப் பெயர் "கதீட்ரல் ஆஃப் தி இம்மாக்குலேட் கான்செப்ஷன் (Cathedral of the Immaculate Conception) என்பது. இது பொதுவாக "தென்புறம் இருப்பதால் 'செளத் சர்ச்' என்றும் அழைக்கப்படும்.

பீஜிங்கின் மிகப்பழமையான இந்த ரோமன் கத்தோலிக்க ஆலயம் முதலில் கி.பி.1605-ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கட்டிடம் 1904ல் கட்டி முடிக்கப்பட்டது. இது பரோக் ஸ்டைல் (Baroque style) கட்டிடக்கலையின் படி அமைந்துள்ளது.
Image result for Emperor Wanli
Emperor Wanli
"கி.பி.1605-ல் மிங் பரம்பரையைச் சேர்ந்த வான்ங்லி பேரரசர் தான் ஆட்சி செய்த 33 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்"என்றான் லீ.

பரவாயில்லை சீனப் பேரரசர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் கம்யூனிச ஆட்சியில் இதை எப்படி இன்னும்விட்டு வைத்திருக்கிறார்கள் என்று லீயைக் கேட்டேன்.

-தொடரும்.