ஃபெட்னா தமிழர் திருவிழா -
பதிவு 1
![]() |
| Fetna -2016 |
ஜூலை 4ஆம் தேதி
அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும்
வரும் இந்த விடுமுறை நாட்களில் FETNA (Federation of Tamil Sangams of North America)
என்று அழைக்கப்படும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் 29 ஆம் ஆண்டுவிழா,
இந்த வருடம் நியூஜெர்சியில் உள்ள டிரெண்ட்டன்
நகரில் கோலாகலமாக நடந்தேறியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ்ச்சங்கம் இதனைப் பொறுப்
பேற்று நடத்தும். இந்த வருடம் இதனை நடத்தியது நியூஜெர்சி தமிழ்ச்சங்கம். அதில் நடந்த
சில சுவையான நிகழ்வுகளை சில பதிவுகளின் மூலம் பதிய விழைகிறேன்.
![]() |
ஏறத்தாழ
2000 பேர் நாடு முழுவதிலிருந்து திரளாக வந்து பங்குபெற்றனர். இந்தியாவிலிருந்தும் சிறப்பு
அழைப்பாளர்கள் வந்து கலந்துகொண்டனர். அதில் ஒருவர் நடிகர் அரவிந்தசாமி. மேடையில் தோன்றி
தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் மிகவும் சுவைபட பதில்களைத் தந்து
அசத்தினார்.
அரவிந்த் சாமி
நடிகர் மட்டுமல்ல திறமை வாய்ந்த ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தில் தற்சமயம்
4000 பேர் பணிபுரிகிறார்கள். ஒரு நடிகர் என்ற முறையில் மட்டும் அல்லாது ஒரு வெற்றிகரமான
தொழிலதிபர் என்ற முறையிலும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில்
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புதிய சீசனான, “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"யை நடத்தும்
அரவிந்த் சாமியின் திறமையைப் பார்த்து ஏற்கனவே வியப்பில் ஆழ்ந்திருந்த என்னை அவருடைய
மற்ற பிறகோணங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
![]() |
| Add caption |
சிங்கப்பூரில்
நடந்த SIMA அவார்டு நிகழ்ச்சியில் தான் விருது வாங்குவதையும் விடுத்து, ஏற்கனவே ஒத்துக்
கொண்டதால் இங்கே ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்தார்.
1. Ramakrishnan
Chandrasekaran , Exe.Vice Chairman, Cognizant
2. N
Chandra, CEO, TCS
3. Eash
Sundaram, CIO Jet Blue Airways
4. Jhansi
kandasamy, VP, GE
போன்ற ஜாம்பவான்கள்
கலந்துகொண்ட, தமிழ் தொழில் முனைவோர் அமர்வில் உரையாற்றினார். பதின் பருவப் பிள்ளைகளின்
அமர்வில் ஒரு சிறப்புரை ஆற்றினார்.
அது தவிர பொது
மேடையில் வந்தபோது ஒரு சிறிய நேர்காணலில் பங்கு கொண்டார். Fetna நிகழ்வுக்கு தயாரான ஆரம்ப சமயத்திலிருந்து, NJ தமிழ்ச்சங்கத்தின்
தலைவி உஷா கிருஷ்ணகுமாருக்கு, நியூஜெர்சியிலிருந்து ஒரு பெண், அரவிந்த்சாமியைக் கண்டிப்பாய்
கூப்பிடுங்கள் என்று facebook மூலம் வேண்டுகோள் விட்டபடி இருந்தாராம். அரவிந்த்சாமி
மேடைக்கு வரும்போது இதனைச் சொல்லி, அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தால் மேடைக்கு வரும்படி
அழைப்பு விடுத்தார் உஷா. அந்தப் பெண் முந்திய தினமே அரவிந்த் சாமியைப் பார்த்துப் பேசி
புகைப்படமும் எடுத்துவிட்டாராம். கல்லூரியில் படிக்கும்போது அரவிந்த்சாமி என்றால் பைத்தியமாம்.
கல்லூரியைக் கட் அடித்து பல தடவை அவருடைய சினிமாவுக்குப் போயிருக்கிறாராம். அவரும்
பலத்த கைதட்டலுக்கிடையே மேடையில் வந்து,
"நேற்று என்னைப் பார்த்தவுடன் என்ன நினைத்தீர்கள் ?", என்ற ஒரு அபத்தமான
கேள்வியைக் கேட்க, அரவிந்தசாமி கொஞ்சமும் சளைக்காமல் "இதற்காகத்தான் நியூஜெர்சி
வந்தேனோ" என்று தோன்றியது என்று சொல்ல சபை ஆர்ப்பரித்தது.
செல்வச் சிறப்பில்
ஒரு இளவரசன் போல இவரை இவரின் தந்தை வளர்க்கவில்லை. இப்படி வளர்பவர்கள்தான் பிற்காலத்தில்
தந்தையினையும் மிஞ்சி உயர்வார்கள். பெற்றோர்கள், என்னையும் சேர்த்து, செய்யும் பெருந்தவறு,
எனக்குக் கிடைக்காத, நான் அனுபவிக்காத எல்லாவற்றையும், என் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்
என்று நினைத்து கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அதீத செல்லம் கொடுத்து பிள்ளைகளைக்கெடுத்துவிடுகிறோம்.
இப்படி வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தம் சொந்த முயற்சியில் வாழத்தெரியாமல் வாழ்க்கையில்
தோல்வி அடைகிறார்கள். அரச குடும்பத்திலிருந்து சாதாரண குடும்பம் வரை இதற்குப் பல உதாரணங்களைச்
சொல்லலாம்.
ஆனால் இதற்கு
மாறாக, வீட்டில் பல வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும், அரவிந்தசாமி பள்ளிக்கும் கல்லூரிக்கும்
சென்றது அரசுப் பேரூந்தில் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கல்லூரியில்
படிக்கும்போது கூட அவருடைய தினசரி பாக்கெட் மணி வெறும் பத்து ரூபாய் மட்டும்தான். அதனை
வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை. அதிகம் கேடடாலும் தந்தை மறுத்துவிட்டதால்
எப்படி செலவை சமாளிப்பது என்று யோசித்ததில் பிறந்த ஐடியா தான் 'மாடெலிங்'. ஆரம்ப கால
கட்டத்தில், யாரிந்த அழகான வாலிபன் என்று டிவி விளம்பரங்களில் நீங்கள் பார்த்து வியந்திருக்கலாம்.
அந்த விளம்பரத்தைப்
பார்த்த மணிரத்தினம் தளபதியில் வாய்ப்புக் கொடுத்தார். தளபதியில் அந்தத் துடுக்கான
IAS ஆஃபீசரை யாரும் மறக்க முடியாது. அதன்பின் ரோஜா, பம்பாய் என்று உச்சத்தைத் தொட்டது
வெறும் 20 வயதுக்குள். திடீரென்று எங்கே அரவிந்த் சாமி என்று எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்,
அப்பாவின் கட்டளைக்கிணங்க நார்த் கேரலினா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு வருகிறார்.
அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தந்தையின் நிறுவனம் இவர்தலைமேல் விழுந்தது.
அதனை நல்லபடியாக
நடத்தி, வளர்த்து, உயர்த்தி ஒரு நல்ல தொழிலதிபராக
வளர்ந்தார். சினிமாவை முழுவதுமாய்க் கைவிட்டார். இதற்கிடையில் ஒரு விபத்தில் முதுகில்
டிஸ்க் நழுவ, வாத நோய் தாக்கி, இனிமேல் நடக்க முடியாது போய்விடுமோ என்ற அளவுக்கு படுத்த
படுக்கை. ஆனால் அறுவை சிகிசை செய்யாமல் ஆயுர்வேத சிகிசை மட்டுமே செய்து இடைவிடாது கடுமையான
உடற்பயிற்சியின் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து நன்றாக உடம்பு தேறியதும் ஒரு அதிசயம்தான்.
| Add caption |
இதற்கிடையில்
உடல் பெருத்து 128 கிலோ வரை போனது. ஒரு பத்திரிக்கையில்
எப்படி இருந்த அரவிந்த்சாமி இப்படி ஆயிப்போனாரே என்று இரண்டு படங்களைப் போட்டு கிண்டல்
பண்ண, அதற்குக் கொஞ்சம் கூட கோபமோ எதிர்விளைவோ ஆற்றாது, அந்தப் படத்தை தன் ட்ரெட் மில்
முன்னால் மாட்டிக் கொண்டு ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். திரும்பவும் 80-85 கிலோவுக்கு
கொண்டு வந்ததோடு அரை மாரத்தானை 2 தடவை முழுமையாக ஓடி முடித்திருக்கிறார், அந்த முன்படத்தை
மாற்றிப்போடும் அளவுக்கு. இதில் எல்லாவற்றையும்விட எனக்கு அவரிடம் பிடித்த அம்சம்,
பணத்தையோ புகழையோ தலைக்கேற்றாத குணம். சத்தம் செய்யாமல் பலருக்கு செய்யும் உதவி. “நீங்களும்
வெல்லலாம் ஒரு கோடி”யில் தான் நினைத்த உறுதிப்பணத்தை ஒரு சிறு தவறால் நழுவவிட்ட உசிலம்பட்டியைச்
சேர்ந்த ஏழை ஆசிரியருக்கு தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க முன்வந்த தயாளம். அரவிந்த்சாமி
ஒரு அதிசயம் தான்.
நமக்குத் தெரியாத
சில உண்மைகள்
1. அர்விந்த்
சாமியின் தந்தை VD சாமி பெரிய தொழிலதிபர்.
2. தாயார்
வசந்தா தேவி பிரபலமான பரதநாட்டிய கலைஞர்.
3. VD
சாமி
தான்
சங்கர நேத்ராலயாவின் நிறுவனர்.
4. இவர்கள்
இருவருக்கும் அரவிந்தசாமி வளர்ப்புப்பிள்ளைதான் .
5. தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார்தான் அரவிந்தசாமியின்
தந்தை.
Companies owned by Arvindsamy
:
1.
Igate Patni
2.
Talent Maximus
3.
Pro Lease India
பின்குறிப்பு
:
“நீங்களும்
வெல்லலாம் ஒருகோடி” மற்றும் நேரிடைப் பேச்சிலும் தமிழ் உச்சரிப்பில் 'ல,'ழ' சிறப்பாக
இருக்கிறது. ஆனால் 'ள' தான் கொஞ்சம் 'ல' வாக ஒலிக்கிறது. கவனித்துப் பார்த்தேன், நன்றாக
தமிழ்பேசும் சில தமிழாசிரியர்களுக்குக்கூட இந்தப்பிரச்சனை இருக்கிறது. பயிற்சியினாலும்
முயற்சியினாலும் இதனைச் சரி செய்ய
முடியும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தானே. நல்லவேளை இவர், நண்பர்
ஜேம்ஸ் வசந்தனிடம் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை.
ஃபெட்னா பதிவுகள் தொடரும்










