Monday, February 16, 2015

கெஜ்ரிவாலிடம் மோடி வித்தை - ஒரு கற்பனை உரையாடல்.

               Arvind Kejriwal and Narendra Modi. Agencies.

மோடி: ஹலோ கெஜ்ரிவாலா?.
கெஜ்ரிவால்: (இருமிக் கொண்டே) யெஸ், திஸ் இஸ் கெஜ்ரிவால், யார் பேசறது?.
மோடி: நான் PM பேசறேன்.

கெஜ்ரிவால்: போஸ்ட் மாஸ்டரா, அது ஸ்டேட் கவர்ன்மென்ட்ல வராதே.
மோடி: நான் மோடி பேசுறேன்
கெஜ்ரிவால்: என்ன பேடியா? (கிரண் பேடியா இருக்குமோ? என்ன இது குரலும் ஆம்பளை மாதிரி ஆயிருச்சு)
மோடி: (சத்தமாக) இல்லை, நான் மோடி பேசுறேன். ரெண்டு காதையும் மப்ளர் போட்டு கட்டிட்டா எப்படிக் கேட்கும் ?
கெஜ்ரிவால்: எந்த மோடி? சீக்கிரம் சொல்லுங்க (மூக்கை உறிஞ்சுகிறார்)
மோடி: யோவ் கெஜ்ரிவால், நான் நரேந்திர மோடி, பிரைம் மினிஸ்டர் பேசுகிறேன்.
கெஜ்ரிவால்: ஓ நீங்களா சொல்லுங்க, எங்க அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உங்க கோரிக்கையை ஒரு மனுவா எழுதி அனுப்புங்க.
மோடி: (எரிச்சலுடன்) யோவ் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துச் சொல்லத்தான் கூப்பிட்டேன்.
கெஜ்ரிவால்: நன்றி நன்றி. சரி அப்புறம் உங்களை சந்திக்கிறேன். வச்சிரவா (தொண்டையைச் செருமுகிறார்)

மோடி: இரு, இருப்பா வச்சிராத. உன்ட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.
கெஜ்ரிவால்: சொல்லுங்க சாப், நிறைய வேலையிருக்கு.
மோடி: எப்படிய்யா, இது எப்படி நடந்தது ?
கெஜ்ரிவால்: இது என்னுடைய வெற்றியல்ல, ஜனநாயகத்தின் வெற்றி.
மோடி: உங்க வெற்றியைப் பாராட்டி பரிசுகள் அனுப்பியிருக்கிறேன் கிடைச்சுதா?
கெஜ்ரிவால்: என்ன பரிசு?
மோடி: ரெண்டு ஸ்வெட்டர், ரெண்டு மப்ளர், ரெண்டு மங்க்கி கேப்
கெஜ்ரிவால்: அது நீங்கதானா ரொம்ப நன்றி

மோடி: யோவ் கெஜ்ரி, ஒபாமாட்ட சொல்லி உனக்கு அமெரிக்காவுல ஸ்பெஷல் ட்ரிட்மென்ட்  கொடுக்கச் சொல்றேன், என்ட்ட வந்துடு.
கெஜ்ரிவால்: எதுக்கு தும்மலுக்கும் இருமலுக்குமா? அது என்னோட ட்ரேட் மார்க் ஆயிப்போச்சு. அது இல்லாட்டி மக்கள் என்னை கெஜ்ரிவால்னு ஒத்துக்க மாட்டாங்க.
மோடி: சரி அதைவிடு, உனக்கு மத்திய அரசாங்கத்தில் நல்ல பதவி தருகிறேன். உங்க கட்சியை BJP-யில் இணைத்துவிடு.
கெஜ்ரிவால்: என்ன பதவி?
மோடி: மனித வள மேம்பாட்டு இணை அமைச்சர்?
கெஜ்ரிவால்: அதுக்கு படிச்சவங்களை போட மாட்டீங்களே, அது  வெறும்  கிளாமர்  போஸ்ட்  ஆச்சே நோ.
மோடி: காமர்ஸ் மந்திரி?
கெஜ்ரிவால்: அதுக்குத்தான் புரூஸ்லி சாரி, ஜெட்லி இருக்காரே?
மோடி: உள்துறை மந்திரி?
கெஜ்ரிவால்: அது பா.ஜ.க, சங் பரிவார் உள்துறையை கவனிக்கவே சரியா  இருக்கும்.
மோடி: வெளிவிவகார மந்திரி?
கெஜ்ரிவால்: அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே ?
மோடி: கவர்னர்?
கெஜ்ரிவால்: நோ, எனக்கென்ன அவ்வளவு வயசா ஆயிருச்சு ?
மோடி: அப்ப ஜனாதிபதி?
கெஜ்ரிவால்: மெளன விரதம் இருந்து எனக்குப் பழக்கமில்லை.( மீண்டும் இருமுகிறார்.)
மோடி: (ஆமாமா நீ இருந்தாலும் உன் தொண்டை இருக்காது). அப்ப என்னதான் பதவி வேணும் ?
கெஜ்ரிவால்: பிரதம மந்திரி பதவி வேணும், தர முடியுமா?
மோடி: (ஜெர்க் ஆகிறார் என்ன இது அடிமடியிலேயே கைவைக்கிறான்.)
கெஜ்ரி: உங்க பார்ட்டி எம் எல் ஏ மூன்று பேரும் என் கட்சியில சேர கெஞ்சுறாங்க. அப்படிப் பார்த்தா டெல்லியிலே  நூறு சதவீதம் என் கட்சிதான்.
மோடி: வேணா என் காவிப்படையை நீ தாங்க மாட்ட.
கெஜ்ரிவால்: காவிப்படையோ, ஆவிப்படையோ ஏன் மூவிப்படையோ கூட என்னை ஒண்ணும் செய்ய முடியாது. நான் அமித்ஷாவுக்கே அல்வா கொடுத்தவன்.
மோடி: சரி சரி ஒபாமா அடுத்த லைனில் வாராரு. நீ எனக்கு 5 நிமிஷத்தில் திரும்ப போன் பண்ணு, நான் உனக்கு பிரதமர் பதவியைத் தாறேன். - டோல் ஃப்ரீ நம்பர் 1-800-266-2020.
 மோடி போன் பக்கத்தில் உட்கார கெஜ்ரி அந்த நம்பரை டயல் செய்ய, மிஸ்டு காலாக போகிறது.
Embedded image permalink

மோடி: ஹலோ யாரு அமித்ஷாவா, உடனே பிரஸ் மீட்டைக் கூப்பிட்டு, கெஜ்ரி மிஸ்டு கால் கொடுத்து BJP-யில் சேர்ந்ததாக சொல்லிருங்க. யார்ட்ட!!!!!!!!

முற்றும்

Thursday, February 12, 2015

கெட்ட வார்த்தையும் கேட்ட வார்த்தையும் !!!!!!!!!!


      ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சுக்குப் போவதற்கு என்னுடைய வேனை சூடுபண்ணிவிட்டு, டிரைவ் வேயிலிருந்து வெளியே எடுக்க முயன்றேன். மறுபுறம் 2 சிறுமிகளும் 2 சிறுவர்களும் சிறிய சைக்கிள்களில் நின்றிருந்ததை நான் கவனிக்காமல் வெளியே எடுத்துவிட்டேன். அவர்களுடைய சைக்கிள்கள் பாத்வேயில் தடைபண்ணப்பட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வண்டி வழியில் இறங்கும் போது, என்  வேன் கண்ணாடியை  இறக்கிவிட்டு, "சாரி" என்றேன். அதற்கு F.யு என்று சொன்னது ஒரு சிறுமி. அவள் வயது 5  வயது முதல் 7 வயதுக்குள் இருக்கும். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஆனால் அவளுக்கு அந்த வார்த்தையை சொல்வதற்கு எந்தத் தயக்கமுமில்லை.
         அமெரிக்காவில் அதுவும் நியூயார்க்கில் கெட்ட வார்த்தைகள் சரளமாக வெளிவரும். நம்மூரிலாவது கோபம் வந்தால்தான் பேசுவார்கள்.இங்கே சாதாரணமாகவே அப்படித்தான் பேசுவார்கள். ஏனென்றால் இங்கே திரைப்படங்கள், தெருக்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் சரளமாக F வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வீட்டிலும் கணவன் மனைவி அப்படியே பேசுவதால் பிள்ளைகளும் அதைத்தான்  பேசுகின்றனர்.
        அன்று முழுதும் சர்ச்சில் இருக்கும்போது கூட அந்த வார்த்தையும் முகமும் அடிக்கடி வந்து போனது. சே நம்மூரில் பெண்கள் அதுவும் சிறுபெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என நினைத்தேன். என் வளர்ந்தபெண் பிள்ளைகள் இந்த மாதிரி வார்த்தைகளை ஒருவேளை வெளியில் பேசுவார்களா என்ற பயம் எழுந்தது.
  “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”, என்றார் பாரதியார்.நாட்டையும், நதிகளையும் மொழிகளையும் தாயாக மதிப்பது நம் இந்திய குறிப்பாக தமிழக பாரம்பரியம். ஆனால்  பெண்களை இரண்டாம் தர குடிகளாகத்தான் நாம் வீட்டில் மதிப்பதாக, பெண்விடுதலை (Women's Lib) காரர்கள் சொல்லுவார்கள்.
“மனதில் உறுதி வேண்டும்
 வாக்கினிலே இனிமை வேண்டும்
 நினைவு நல்லது வேண்டும்.
பெண்விடுதலை வேண்டும்
பெரிய  கடவுள் காக்க வேண்டும்”
என்றெல்லாம் பாடியுள்ளோம் .ஆனால்  நம்மூரில் ஒருபக்கம் ஈவ் டீசிங் இருந்தாலும் மறுபக்கம் ஆடம்  டீசிங் இருப்பதை மறுக்க முடியாது .
      ஒரு சில நாட்கள் கழித்து டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஏதோ ஒரு காரணத்திற்கு “ஷிட்” (shit) என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டேன். என் இரு மகள்களும் என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்.
 "என்னாச்சு?" என்றேன்.
"டாடி, என்ன இப்படிப் பேசுகிறீர்கள்", என்றாள் பெரியவள்.
“ஏன் எப்படிப்பேசிவிட்டேன்”.
"டாடி உங்களுக்குத் தெரியாது ?" என்றாள் சின்னவள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.  
“இந்த வார்த்தை உங்கள் வாயில் வருமென்று நாங்கள் நினைக்கவில்லை”, என்றாள் பெரியவள்.
விஷயம் என்னவென்றால் , shit என்று நாம் சர்வசாதாரணமாக இந்தியாவில் பயன்படுத்தும் வார்த்தையை நான் சரளமாக சொன்னபோது, அந்த வார்த்தை கெட்ட வார்த்தை அதனை பயன் படுத்தக்கூடாது என்று என் இரு மகள்களும் என்னை பிடிபிடி என்று பிடித்துவிட்டனர்.
எனக்கு அவமானமாய் இருந்தாலும், ஒரு புறம் பெருமையாக இருந்தது. பரவாயில்லை இந்த வார்த்தையே கெட்ட வார்த்தை என்றால் மற்ற F & B வார்த்தைகளை மறந்தும்கூட என் பிள்ளைகள் சொல்லமாட்டார்கள் என்று.

      சில நாட்கள் கழித்து விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெண்கள் ஒருபுறமும் பெற்றோர் மறுபுறமும் உட்கார்ந்திருந்தனர். கோபிநாத் எடுத்த தலைப்பு ,”பெண்கள் தாங்கள் உடை உடுத்துவதை மற்றவர் விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள் என்று?. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, ஒரு பெண், “F. off என்று சொல்லுவேன்”, என்று சொன்னாள். பெற்றோருக்கு முன்னால், அந்த வார்த்தையை சொல்வதற்கு அவளுக்கு அச்சமோ கூச்சமோ கொஞ்சம் கூட இல்லை.

நான் இந்தப்பக்கம் வந்தபிறகு ஒரு வேளை பெண் விடுதலை கூடிப்போச்சோ?.

Tuesday, February 10, 2015

ஒபாமாவுடன் மோடி வித்தை : (ஒரு கற்பனை உரையாடல்)

                      

                                             காட்சி 1: டெல்லி விமானநிலையம் -
அமெரிக்க அதிபரின் பிரைவேட் ஜெட் வரப்போகும் சமயம். மோடியின் கார் பவனி உள்ளே நுழைகிறது. முப்படைத் தளபதிகள் ஏற்கனவே வரிசையில் நிற்க, மோடி அவரச அவசரமாக வந்து முன்னால் வரப்பார்க்கிறார். அமெரிக்கன் செக்யூரிட்டி ஆட்கள் தடுக்க அங்கே ஒரே தள்ளுமுள்ளு.  ஒபாமா மந்தகாச புன்னகையுடன் இறங்கி வருகிறார்.
மோடி: ஆவோ ஆவோ பராக்

ஒபாமா: சற்றே அதிர்கிறார். அவரை மனைவி தவிர இதுவரை யாரும் முதற்பெயர் சொல்லி அழைத்ததில்லை. மிஸ்டர் பிரசிடென்ட் அல்லது நெருங்கியவர்கள் மிஸ்டர் ஒபாமா என்றுதான் அழைப்பார்கள். (மைன்ட் வாய்ஸ் -சரி விடு அப்புறம் வைத்துக்கொள்கிறேன்)
உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
-மிச்செல் அப்போது  வர இருவரும் கைகுலுக்குகிறார்கள். மிச்செல் அங்குமிங்கும் தேடுகிறார்.
மோடி:  என்ன தேடுகிறீர்கள்?
மிச்செல்: எங்கே உங்கள் மனைவியைக் காணோம்?
ஒபாமா:  மிச்செல்  சும்மா இரு (அசடு வழிகிறார்)
மோடி: நானும் என் மனைவியும் சேர்ந்து வாழவில்லை.
மிச்செல்: ஓ ஐயாம் சாரி, எத்தனை வருடங்கள்?
மோடி: நாற்பது வருடங்கள்.
மிச்செல்: ஓ, அப்ப கல்யாணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது?
மோடி: நாற்பது வருடங்கள்.
மிச்செல்: அப்ப வாழவேயில்லையா ?டிவோர்ஸ் ஆகிவிட்டதா?
மோடி: இன்னும் இல்லை.
ஓபாமா: (அவசரமாக)-மிச்செல் கொஞ்சம் சும்மா இரு.
(மைன்ட் வாய்ஸ் :இந்த விஷயத்தையே நாற்பது வருடத்திற்குப் பின்னாலதான் சொன்னார்.)
காரில் கருப்புக்கண்ணாடி  மறைக்க மோடி ஒரு குத்து  மதிப்பாக கை அசைக்கிறார் - அமெரிக்க கான்வாய் விரைகிறது.

காட்சி 2 ஜனாதிபதி மாளிகை:

ஒபாமா அதே உடையில் வர, மோடி வேறு உடையில் வருகிறார்.
ஒபாமா: புன்னகையுடன், ஓ டிரஸ் மாத்தியாச்சா?
மோடி: ஹிஹி.
ஒபாமா: காருக்குள்ளேயே எப்படித்தான் உடை மாற்றுகிறீர்களோ?
பிரனாப் முகர்ஜி இறங்கிவந்து வரவேற்கிறார்.
பிரணாப்: வளரும் இந்தியாவிற்கு மீண்டும் வருக.
ஒபாமா: மிகவும் குனிந்து கைகுலுக்க அணிவகுப்பு மரியாதை நடக்கிறது.

காட்சி 3 பூங்கா:

மோடி காத்திருக்க, ஒபாமா லேட்டாக வருகிறார்.
மோடி: எங்கே போனீங்க?
ஒபாமா: மகாத்மா காந்தி சமாதிக்குப் போனேன். எனக்கு அவர்தான மானசீக குரு.
மோடி: ஓ அவரா, அவரை மறந்து ரொம்ப நாளாச்சு.
ஒபாமா: (மைன்ட் வாய்ஸ் :ஆனா கோட்சேவை மட்டும் ஞாபகம் வச்சிருக்கீங்க.)
(அப்போது தான் கவனித்து) ஆ மறுபடியும் உடை மாத்தியாச்சா?.
ஒபாமா: ( உடையை உற்றுப் பார்த்துவிட்டு) - உங்க பேர் மோடி மோடின்னு எழுதியிருக்கே?
மோடி: அதுவா? உங்கள் அமெரிக்கன் செக்யூரிட்டிக்கு என்னை அடையாளம் தெரியறதுக்காக என் பேர் எழுதின கோட், ஏர்போர்ட்டில தள்ளி விட்டுட்டாங்க.
ஒபாமா: (என்ன ஒரு அல்பத்தனம் என்று நினைத்துக் கொண்டு). ஓ அப்படியா? அப்ப பேர் இன்னும் கொஞ்சம் பெரிசா இருக்கனும். எங்கூர்ல நாங்களெல்லாம் மத்தவங்களைத்தான் எழுத விடுவோம். நாங்களே எழுதமாட்டோம்.
மோடி: இதோட விலை இருபது லட்சம், ஆனா (கோபத்துடன்) எல்லாரும் பத்து லட்சம்னு குறைச்சு சொல்றாங்க.

ஒபாமா: வெளில சொல்றது சரிதான்.
மோடி: என்ன சொல்றாங்க ?.
ஒபாமா: 'இந்தியா பணக்காரர்கள் வாழும் ஏழை நாடு' என்று.
-அப்போது ஆர்டர்லி  தேனீர் கொண்டுவருகிறான். தேனீர், பால், சர்க்கரை எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. ஒபாமா எடுக்கப்போக, மோடி அவரைத் தடுத்து, தானே டீ போடுகிறார்.
ஒபாமா: (இலேசாக உறிஞ்சி விட்டு)-சூப்பர்-இப்படி ஒரு டீயை நான் வாழ்நாள்ல சாப்பிட்டதேயில்லை.
மோடி: நான் முதல்ல டீக்கடைதான் வச்சிருந்தேன். கப்பில சாப்பிடறதவிட சாசரில் ஊத்தி அப்படியே உறிஞ்சி அடிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.
(ஒபாமா அப்படியே டிரை பண்ண மூக்கில் புரையேறி, கோட்டில் சில துளிகள் சிந்திவிடுகிறது).
-(மோடி மைண்ட் வாய்ஸ்: என்ன இந்த ஆளுக்கு டீக்கூட  சாப்பிடத்தெரியல)
ஒபாமா: (மைண்ட் வாய்ஸ் - இதென்ன நாய் குடிக்கிற மாதிரி குடிக்கிறார்.)
மோடி: சரி அணுசக்தி ஒப்பந்தம் எப்ப போடலாம்?
ஒபாமா: அதுல சிக்கல் இருக்குன்னு மன்மோகன் சொல்லி நிறுத்திவச்சிட்டாரே.
மோடி: அதெல்லாம் பரவாயில்லை.
ஒபாமா: உங்க கட்சிஅப்ப அதைத்தீவிரமா எதிர்த்துச்சே. இப்ப எதிர்க்க மாட்டாங்களா?
மோடி: என்ன விவரம் தெரியாதவரா இருக்கீங்க - நான் கட்சியை கைப்பத்தி ரொம்ப நாளாச்சு. அதுனால ஒரு பிரச்சனையில்லை.  
ஒபாமா: ம்ம் இந்திய அரசியல்ல இது சகஜமப்பா. அது சரி யூனியன் கார்பைடு மாதிரி விபத்து நடந்து பிரச்சனையாகி விட்டால், நஷ்டஈடு கொடுக்க நாங்க தயாரில்லை.
மோடி: அதைப்பத்தி கவலைப்படாதீங்க. அதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கிறேன். இங்க உள்ள இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளில் சில பாலிசி எடுத்துக்கங்க. நஷ்ட ஈடை அவங்களே கொடுத்துடப்போறாங்க. பாதிய இந்திய அரசாங்கம் கொடுத்துர ஏற்பாடு செய்றேன்.
ஒபாமா: அப்ப முடிவு எடுத்துரலாமா?
மோடி: ஆமா வந்ததுக்கு ரெண்டு மூணு கையெழுத்துக்கூட போடாட்டி எப்படி?
அணு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஒபாமா: (மைண்ட் வாய்ஸ் - என்ன இது இப்படி வலிய வந்து வலையில் விழுறாங்க.)

காட்சி-4 குடியரசு அணிவகுப்பு:

முதலில் மோடி, பின்னர் ஒபாமா அதன் பின்னர் பிரணாப் வர அணிவகுப்பு தொடங்குகிறது.
மோடி: எப்படி எங்க ராணுவ வலிமை?
ஒபாமா: எது அந்த சர்க்கஸ் வித்தையா?
மோடி: என்னாது சர்க்கஸ் வித்தையா?
ஒபாமா: ஆமா, பைக்கில் பத்துபேர் ஏறி சாகசம் செய்தார்களே அதைத்தானே சொல்றீங்க?

மோடி: இல்லீங்க, பீரங்கி, ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள்.
ஒபாமா: அதுவா எல்லாம் அரதப்பழசு. அதெல்லாம் போன நூற்றாண்டிலேயே நாங்க கண்டுபிடிச்சுட்டோம்.
மோடி: (ஜெர்க் ஆகிறார்)
ஒபாமா: பேசாம அதுக்கு ஒரு ஒப்பந்தம் போட்டு, நவீன ஆயுதங்கள் எல்லாம் எங்கள்ட்டயே வாங்கிக்கங்க.
மோடி: காட்டுங்க எங்க கையெழுத்து போடனும்? ஆமா பாகிஸ்தானுக்கு  அதே ஆயுதங்களைக் கொடுப்பீங்களா?
ஒபாமா: சிரித்துக் கொண்டே -அவுங்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டோம்.
மோடி: ஐயையோ?
ஒபாமா: எங்களுக்குப் பணம்தான் முக்கியம், கேட்டா ____________க்கும் கூட விற்போம்.
மோடி: அடப்பாவிகளா?
மோடி: அங்க பாருங்க, அதான் குஜராத் வண்டி.

ஒபாமா: யாரு அது முன்னால கட் அவுட்ல  -காந்தி சின்னவயது போட்டாவா?
மோடி: இல்லை அது சர்தார் வல்லபாய் படேல்.
ஒபாமா: ஆமா காந்தியும் குஜராத்தானே.
மோடி: ஆமா ஆமா. அப்படித்தான் நினைக்கிறேன்.
ஒபாமா: முழு வண்டியிலும் அவரோட ஒரு சிறுபடம் கூட இல்லையே.
மோடி: (மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தின்னு எல்லாக் காந்திகளையும் மறந்து ஒழிக்கிறதுதான் எங்க வேலை.) வந்தமா ரெண்டு கையெழுத்துப் போட்டமான்னு போயிக்கிட்டே இருக்கணும் என்ன?
ஒபாமா: (மைண்ட் வாய்ஸ் மோடி பயங்கர கேடியா இருக்காரே.)
காட்சி-5 : பிரதமர் வீடு
மோடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்க்கிறார். அதில் ஒபாமா இந்தியப் பள்ளி ஒன்றில் உரையாடுவது வருகிறது.
ஒபாமா: மதச்சார்பு இல்லாமலிருந்தால்தான் இந்தியா வளரும்.

மோடி: (கொஞ்ச நேரம் தனியா விட்டேன். வச்சுட்டான்யா ஆப்பு.) ஹலோ உள்துறையா? ஒபாமாவோட தாஜ்மகால் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு  ஊருக்கு அனுப்பிவிடுங்க. ரொம்ப டேமேஜ் பண்றாரு. 
முற்றும்