Monday, May 4, 2020

கொரானா வைரஸ் லாக் டவுன் சமாளிப்புகள்

பரதேசியின் கொரானா வைரஸ்  லாக் டவுன் சமாளிப்புகள்


காலை 8 மணி
ரூ: லேசா தலை வலிக்குது , கொஞ்சம் டீ  போட முடியுமா ?
ப: உனக்குத்தெரியாதா , எனக்கு பாலைப்பார்த்தாலே கொமட்டிட்டு வரும், இல்லைனா போட்டுத் தரமாட்டேனா ?
ரூ: (இந்த மனுசனால ஒரு பிரயோஜனமும் இல்லை)

காலை  11 மணி
ரூ: ஏங்க  சும்மாதான இருக்கீங்க , கொஞ்சம் காய்  வெட்டித்தறீங்களா ?
 ப :என்ன ரூத் , மறந்திட்டியா ?
ரூ: என்ன சொல்றீங்க ?
ப அப்பவே காய்கறியெல்லாம் மொத்தமா வாங்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டேன்னு  நீதானே சொன்ன ?
ரூ: (ஆமா இல்லைனாலும்.)

மதியம் 1 மணி
ப : என்ன ரூத் இன்னைக்கி  என்ன சமையல் ?
ரூ : கத்திரிக்காய் சாம்பாரும் ரசமும்
ப: (சாப்பிட்டுவிட்டு ), சாம்பார்ல கொஞ்சம் பெருங்காயம் தூக்கலா இருந்துச்சு , ரசத்தில் கொஞ்சம் கடுகு கருகிருச்சு ?
ரூ: குறை  சொல்லாட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே  ?
ப: மத்தபடி அப்பளம் , ஊறுகாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு , என்ன ப்ராண்ட் ?
ரூ : பால் ,தயிர் , வெண்ணை சாப்பிடாமலே உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு எப்படி வந்துச்சு ?
ப: எனக்கு கொழுப்பெல்லாம் இல்லை, கொஞ்சூண்டு சுகர் மட்டும்தான் .மதியம் 2 மணி
ரூ : என்னங்க , பாத்திரம் எவ்வளவு சேர்ந்து போச்சு பாருங்க ? வீட்டிலே இருக்கீங்க கொஞ்சம்  கழுவித்தரக்கூடாதா ?
ப : என்னது பாத்திரம் கழுவனுமா ? ஏன் மார்ச் முதல் வாரம்தான் டிஷ் வாஷர் போட்டமே ? அதுல போட்டிரு
மகேந்திரன் : பரதேசி நீ ஒரு தீர்க்கதரிசிடா
ரூ: ஆமா அத எப்படி போடுறதுன்னு தெரியலையே ?நீங்க கொஞ்சம் வந்து பாருங்க ?
ப: அனிஷா , இங்க வந்து அம்மாவுக்கு டிஷ் வாஷர் போடச் சொல்லிக்கொடு
ரூ: (உட்கார்ந்த இடத்தை விட்டு நகர  மாட்டியே)

2 முதல் 5 மணி வரை தூக்கம் (மனைவிக்குத்தான்)  அப்பாடா எனக்கு கொஞ்சம் ஃபிரீ டைம்

மாலை 5 மணி
ரூ : காலையிலிருந்து இப்படியே பொழுதை போக்கிட்டு இருக்கீங்களே ?கொஞ்சம் வாக்யூம் போடுறீங்களா ?
ப : லொக் லொக் லொக்
ரூ: என்னங்க என்னாச்சு ? (கொரனோ வந்துருச்சோ)
ப: இந்த டஸ்ட் அலர்ஜி திரும்ப வந்துரிச்சுனு நினைக்கிறே ன்
ரூ: (எப்பவும் எதையாவது சொல்லி சமாளிக்கிறானே ?)

மாலை 9 மணி

ரூத் :ஏங்க ஒரு வேளை என்னைப்பிடிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களோ ?
ப: 27 வருஷம் வாழ்ந்து ரெண்டு பிள்ளை பெத்து , பேரன் பேத்தி எடுக்கிற வயசில கேக்கிற கேள்வியா இது ?
ரூ : பின்ன ஏன் என்னப் பார்த்தா  விலகி விலகி போறீங்க?

ப : நான் நம்ம தலைவர்கள் சொல்றத கடைப் பிடிக்கிறேன்
ரூ : அது  என்னாது  ?
ப : சோசியல் டிஸ்டன்சிங்தான்
ரூத் : ( மைண்ட்  வாய்ஸ்) இவனுக்கெல்லாம் கல்யாணம் தேவையா ?
ப : ( மைண்ட்  வாய்ஸ்) ஸ் அப்பாடா ஒரு நாளைக்கடத்திட்டேன் , நாளைக்கு எப்படியோ கடவுளே ?12 comments:

 1. 27 வருஷம் கடத்திய உங்களுக்கு நாளையை பற்றி என்ன கவலை?

  ReplyDelete
  Replies
  1. 27 வருடமும் சனி ஞாயிறு பார்க்காம எல்லா நாளும் வேலை செய்தேனே , இப்ப சனி ஞாயிறு பார்க்காம எல்லா நாளும் வீட்டிலும் இருக்கேனே மதுரைத்தமிழா ?

   Delete
  2. //நாக்கில்லைக்கு எப்படியோ கடவுளே //

   அண்ணனே.. முதல் ரெண்டு நாள் இப்படி தான் இருக்கும். போக போக பழகிடும்.

   மதுர என்னையெல்லாம் பாருங்க.. குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வந்து வேலை செஞ்சினு இருக்கோம். நேத்து கூட மதுர வூட்டுல அம்மணி சாமிக்கும் போதே மதுர பக்கத்துல பாத்திரம் கழுவ பக்கத்துல தயாரா இருந்தாரு.

   நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணே , இதுவும் கடந்து போகும்.

   Delete
  3. எனக்கு பயம் வருவதே உங்க ரெண்டு பேர் நிலைமையையும் நினைச்சுத்தானே தம்பி .

   Delete
 2. இதுவும் கடந்து போகும் ,போக வேண்டும் ...நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் பதிவு பார்க்கிறேன் .....

  ReplyDelete
  Replies
  1. அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை கரிகாலன் , ஆமாம் கொஞ்ச நாட்கள் ஆகிவிட்டது .நண்பர்களின் இடைவிடா அன்பு என்னை மீண்டும் இங்கு இழுத்து வந்து விட்டது .

   Delete
 3. ஒரு நாளின் கதை! ஆனா தினமும் இதே கதைதான் இப்போது...!!

  ReplyDelete
  Replies
  1. இன்னும் எத்தனை நாளோ ஸ்ரீராம்

   Delete
 4. இது எல்லாம் சர்வ சாதா'ரணம்'

  ReplyDelete
  Replies
  1. அந்த "ரணம் "பத்தி இப்பதான் தெரியுது தனபாலன்.

   Delete
 5. அடடே தொடர்ச்சியாய் இரு Uதிவுகள்
  தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா?
  கவனமாக இருக்கவும்

  ReplyDelete
  Replies
  1. நலம்தான் அன்பு, நீங்களும் கவனமாக இருங்கள் .

   Delete