Thursday, August 17, 2017

பிக்பாஸ் காயத்ரி கொஞ்சும் குழந்தையா? இல்லை கொட்டும் குளவியா ?

பிக்பாஸ் பதிவு -2
இதற்கு முந்திய பத்திவைப்  படிக்க இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2017/08/blog-post_14.html

Image result for gayathri raghuram in Big boss

பிக்பாஸ் காயத்ரியைப்பற்றி அதில் பங்கு கொண்ட, இப்போதுமிருக்கிற பலரும் அவர் குழந்தை மாதிரி என்று சொல்கிறார்கள். கடந்த வாரம் வெளியேறிய சக்தி அடிக்கடி, “காயத்ரியை சிறுவயது முதலே அதாவது பத்து வயதிலிருந்தே தெரியும்”, என்று சொன்னதால் காயத்ரியைப் பற்றி அதிகமாகத் தெரிந்தவர் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த 50 நாட்களில் சக்திக்கு பலமுறை வாய்ப்புக் கிடைத்தும் தன சிறுவயதுத் தோழியின் குறைகளைப்பற்றிச் சொல்லி ஒரு நல்ல நண்பனாகப் பேசி சரியாக்க முடியவில்லை. ஓவியாவைக் கடுப்பேத்த ஒரு இரவில் ஜூலியுடனும் நமிதாவுடனும் சேர்ந்து பாடல்களைச் சத்தமாகப்பாடியது  பக்கத்து ரூமில் இருந்த ஆண்களையும் பாதித்தது. அந்த நிகழ்ச்சியில் கடுப்பான சக்தி அந்தச் சமயத்தில் கூட அதனைக் கடுமையாக கண்டிக்கவில்லை. காயத்ரி கோபப்படும் போதெல்லாம் அவரைத் தேற்றினாரே தவிர அதனை மாற்றிக் கொள்ள ஆலோசனைகள் சொல்லவேயில்லை. மாறாக அதற்குத் துணைபோகுபவராய் மாறிப்போனதே அவரின் வெளியேற்றத்திற்குக் காரணமானது.
Image result for gayathri raghuram in Big boss

காயத்ரி போக வேண்டிய இடத்தில் சக்தி போனது அவரின் துரதிர்ஷ்டம். ஆனால் கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரிதான் என்று பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரின் தந்தைகளும் மிகப்பிரபல மானவர்கள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். இருவரையும் அவரவரின் தந்தைகள்தான் பிரமோட் செய்தனர். இருவரும் பெரிதாக சினிமாவில் சோபிக்கவில்லை. இருவருமே மேட்டிமைத்தனம் நிறைந்தவர்கள்.
Image result for sakthi vasu in big boss

அதன் உச்சபட்சமாக இருவருமே தாங்கள் தவறே செய்யவில்லை என்று நினைப்பதுதான் பெரிய முட்டாள்த்தனம்.
கணேஷ் கூட காயத்ரியைக் குழந்தை என்று ஒருமுறை சொன்னது அவரது  குழந்தைத் தனத்தைத்தான் காட்டியது. சிநேகனும் சொல்லியிருக்கிறார். தவறான குழுவில் இருக்கிறோம் என்று தெரிந்த சிநேகன் அதிலிருந்து வெளியே வந்தது மிகவும் சரியானது தான் என்றாலும், அடுத்த வாரம் காயத்ரி வெளியேற்றப் பட்டபின் அடுத்த டார்கெட் அவராகத்தான் இருக்க முடியும்.
இதில் ரைசா சுதாரித்து வெளியே வந்தது மிகுந்த புத்திசாலித்தனம். அதோடு ஓவியாவின் வெளியேற்றத்திற்குப்பின் அவர் மிகவும் மனம் வருந்தி அழுது மாறியது அனைவரையும் தொட்டது. இந்த கேமின் முழு சூட்சுமத்தையும் அவர் முழுவதுமாக இப்போதுதான் புரிந்து கொண்டார் என்பது தெரிகிறது. அவரின் விளக்கங்கள் புரிதல்கள் ஆகியன இப்போதிருக்கும் பிக்பாஸ் நபர்களில் ரைசாதான் மிகுந்த புத்திசாலி என்பதும் பார்ப்பவர்களுக்குப் புரிகிறது. இப்போது அவரும் ஓரங்கட்டப்பட்டு மன உளைச்சலில் தவித்து கிட்டத்தட்ட ஓவியா போலவே ஆகிவிட்டார்
வையாபுரி கூட  காயத்ரியை அதிகமாக விமர்ச்சித்ததில்லை. கடந்த வாரம் கூட குழந்தை என்றே அவரும் சொன்னார். அவர் சொன்னதை கணக்கிலேயே ஏற்றுக் கொள்ளமுடியாது.
சக்தி வெளியேறும் போது காயத்ரி அழுதது கூட தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டோமே என்ற சுய நலத்தால்தான் ஒழிய வேறென்றுமில்லை. அதோடு வெளியே போய் என்னைப்பற்றி நல்லவிதமாகச் சொல்லு என்று சொன்னது சிரிப்பைத்தான் வரவழைத்தது.
வையாபுரியைக் காட்டிலும் அவர் மனைவி புத்திசாலி என்று விளங்குகிறது. குடும்பத்தின் அருமையைப்பற்றி வெளியே வந்தவுடன் தெரிந்து கொண்ட அவர் குடுப்பத்திற்குத் திரும்ப  துடியாயத்துடிக்கிறார். புது வாழ்க்கை வாழ சங்கல்ப்பம் எடுக்கிறார். மனைவியிடம் மட்டுமல்ல  தன் பிள்ளைகளிடமும் மன்னிப்புக் கேட்கிறார். உணர்ச்சி வசப்படும் எந்த மனைவியும் அவர் உடனே வீடு திரும்ப வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால் அவர் மனைவி மிகவும் பிராக்ட்டிக்கலாக யோசித்து அவர் அங்கேயே தொடரட்டும் என்று சொன்னதற்கு மூன்று காரணங்கள் இருக்குமென நினைக்கிறேன். ஒன்று இன்னும் கொஞ்சம் நாள் இருந்து நன்றாகப்பட்டு திருந்திவரட்டும் என்பது. இரண்டாவது வெளியே பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் வாராவாரம் வரும் வருமானம். மூன்றாவதாக மிகவும் சாத்வீகமாக இருப்பதால் இறுதி வரை சமாளித்து ஒரு வேளை வென்றுவிடுவாரோ என்ற நப்பாசை. இவைகள் தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருநாள் கூட்டிப் பெருக்கும் போதோ அல்லது துணி துவைத்து   அயன் பண்ணும் போதோ, அவர் சொன்னது ஞாபகம் வருகிறது.  இதெல்லாம் பார்த்து என் மனைவி வருத்தப்படுவாள் என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே வருத்தப்படுகிறாளோ  இல்லை சிரிக்கிறாளே யார் கண்டா என்று.
Image result for sakthi vasu in big boss
Add caption
காயத்ரி வெளியேறினால் சுவாரஸ்யம் குறைந்துவிடுமோ என்று எண்ணி தான் நடுவில் ஈஸியான கேள்விகளைக் கேட்டு அவரை பிக்பாஸ் சேவ் பண்ணிவிட்டாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதுபோலவே “டிரிக்கர் சக்தி” வெளியேறினதும் காயத்ரி தன் குணநலன் களைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
சக்தி போனதால் அந்த டென்ஷன் எங்கள் மேல்தான் வரும் என்று ரைஸா சொன்னதை காயத்ரியால் தாங்கவே முடியவில்லை.
காயத்ரியின் கீழ்க்கண்ட பிரபலமான வார்த்தைகளைக் கொஞ்சம் பார்ப்போம். (கெட்ட வார்த்தைகளை விடுத்து)
·        ஓவியா ஒரு விஷம் (திட்டமிட்ட ஷூட்டிங்கில் கூட இப்படி ஒரு ஆங்கிள் கிடைக்காது.)
·        இந்த சேரி பிகேவியரைத் தாங்க முடியவில்லை.
·        எச்சைகளோடு இருக்க வேண்டியிருக்கிறது.
·        வெளியே போய்ப்பார்த்துக் கொள்ளலாம்.
·        கையைக்காலை உடைச்சுருவேன்.
·        மூஞ்சியும் முகரக் கட்டையையும் பாரு.
·        மூஞ்சியைப் பேத்துருவேன்.
·        நான் யாருன்னு கட்ட வேண்டியதிருக்கும். 
·        லோ கிளாஸ் ஆட்களோடு எப்படி இருக்கிறது.
·        என் இருபது வருஷ எக்ஸ்பீரியன்ஸுக்கு ஒரு மரியாதை வேணாம் ?
இதையெல்லாம் கேட்டபின்பும் காயத்ரி குழந்தை என்று எண்ணுகிறீர்களா? அப்படி எண்ணினால் நீங்கள்தான் குழந்தை.
அதோடு அதற்கு அவர் சொல்லும் சமாதானங்கள்தான் தாங்கமுடியவில்லை.
·        நான் என்ன கெட்ட வார்த்தையை அப்படியேவா சொன்னேன். இங்கிலீஸ்லதான ஹேர் என்று சொன்னேன்.
·        நான் கோபப்பட்டு கெட்ட வார்த்தைல திட்டாட்டி எனக்கு யாரும் அடங்க மாட்டாங்க.
·        40 ஆண்களோடு ஒரே சமயத்தில் வேலை செய்யும்போது கெட்ட வார்த்தைகள் பேசித்தான் அவர்களை சமாளிக்க முடியும்.
·        நான் சொன்னதுல ஒண்ணுகூட தப்பேயில்லை.
அடிக்கடி நான் போய்விடுவேன் போய்விடுவேன் என்று சொல்லும்போதும் ஏன் போக வேண்டியதுதானே என்று சொல்லத் தோணுகிறது. இந்த வாரம் அவர் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னொசென்சுக்கும் இக்னரன்ட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காயத்ரி 2-ஆவது வகை. இன்னும் அவர் நல்லவர் என்றே நினைப்பதை  இக்னரன்ட்    என்றுதானே சொல்லமுடியும். ஆனாலும் அவர் கண்ணீர் விட்டு அழும்போது கொஞ்சம் இரக்கம் பிறக்கத்தான் செய்கிறது.
தொடரும்

2 comments:

  1. விசு ஆல்பிரட் ஒரு பெரிய தொகையை விஜய் டீவியில் இருந்து வாங்கிட்டுதான் இப்படி பிக் பாஸ் பற்றிய பதிவுகளை போடுகிறார் என்று நினைக்கிறேன் நமக்கு ஒரு தொகை வாங்கி கொடுத்தால் நாமவும் இப்ப்டி பதிவு போட்டு பிழைக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ உங்களுக்கு தெரிஞ்சு போச்சா , எப்படித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ மதுரைக்காரய்ங்க !!!!!

      Delete