Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு தமிழ் வார்த்தையா?

Image result for jallikattu

ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சியான போராட்டம் தமிழகம், ஏன் உலகம் முழுவதும்  பரவி வரும் சூழ்நிலையில், அதனைப்பற்றி அநேக தகவல்கள் வாட்ஸ் அப்பில் உலவி குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், இதனைப்பற்றி தெரிந்தவர்களைத்தவிர தெரியாதவர்களே அதிகம் என்பதாலும், இதனைக்குறித்து  தெளிவு பெற யாரை அனுகலாம் என்று யோசித்த போது உடனடியாக நினைவுக்கு வந்தவர் நண்பர், முனைவர். பிரபாகர் அவர்கள். இவர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் நீண்டகாலம் பேராசிரியராக இருப்பதோடு மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை தொடர்ந்து ஊட்டி வருபவர். சம்பிரதாய நலம் விசாரிப்புக்குப்பின் இதோ என்னுடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள்.
Image may contain: 1 person
Professor Dr.R Prabahar
1.  ஜல்லிக்கட்டு என்பது உண்மையிலேயே தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுதானா?
ஆமாம் அதில் எந்த  சந்தேகமுமில்லை.
2.  எவ்வளவு காலம் இது தமிழகத்தில் இருக்கிறது? அதற்கு ஆதாரம் என்ன?
தமிழகத்தில் நிலவுடமை சமூகம் வளர்ந்த காலத்திலிருந்தே காளையுடன் மனிதன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீட்டு மிருகமாக்கி(Domesticate)  தன்னுடைய விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தான். அன்றிலிருந்து இன்று வரை காளை, உழவனின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்போதிருந்து இந்த காளை விளையாட்டு வந்திருக்கலாம். வீரயுக காலத்திலிருந்து உருவாகியிருக்கலாம். 2000 வருடம் அல்லது அதற்கும் மேலாகவும் இருக்கலாம். ஆதாரம் என்று எடுத்துக் கொண்டால் கலித்தொகை போன்ற சங்ககாலப் பாடல்களில் இதனைக் காணலாம். பல கல்வெட்டுகளில் இதனைப்பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தில் காளைச் சின்னம் காணப்படுகிறது. அசோக சக்கரத்தில் கூட காளையின் உருவம் இருக்கிறது. இன்னொரு விஷயம், பண்பாடு அல்லது பாரம்பரியம் என்பது ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 100 வருடங்களில் கூட பண்பாட்டு மாற்றங்கள் நடைபெற்று  புதிய பண்பாடு தோன்றலாம். அதில் தவறில்லை. ஏனென்றால் தமிழ்ச்சமூகம் மாற்றங்களை வரவேற்று தொடர்ந்து மாறிவருகிற சமூகம்தான். குறிப்பாக உடை, உணவு, ஏன் தமிழ் மொழியில் கூட  எழுத்து மற்றும் பேச்சு வடிவங் கூட 100  வருடங்களில் பெரிய மாறுதலையடைந்திருக்கிறது.
3.  ஜல்லிக்கட்டு என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் போலத் தெரியவில்லையே?
சல்லிக்கட்டு என்பதுதான் ஜல்லிக்கட்டு என்று மறுவியுள்ளதாக சொல்கிறார்கள். 'ஜ' என்பது தமிழ் வார்த்தை அல்ல. 'சல்லி' என்றால் காசு அதாவது பணம் என்று பொருள். காளையின் கொம்பில் பணமுடிப்பைக் கட்டி இதில் வெற்றி பெறுபவருக்கு அந்தக் காசுகளை கொடுத்து வரும் விளையாட்டுத்தான் ‘சல்லிக்கட்டு’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம். 'சல்லிக்காசு கூட இல்லை' என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறதே.
Related image

4.  ஏறுதழுவுதல் போன்ற பல பெயர்கள் இருக்கின்றனவே? அவை வேறு வேறா?
சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஏறுதழுவுதல் ஆகிய பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் சிறுசிறு  வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது நடக்கும் விளையாட்டை ஏறு தழுவுதல் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
5.  காளைச் சண்டை என்பது வேறா?
காளைச் சண்டை என்பது இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனாலும் இதனை ஸ்பெயின், மெக்சிகோவில் நடக்கும் சண்டையோடு ஒப்பிட முடியாது. அங்கு காளையைக் கொன்றால்தான் வெற்றியடைந்தவர் என்று அர்த்தம்.
6.  பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு வருவதன் காரணம் என்ன?
பொங்கல் என்பது அறுவடைத்திருநாள். விவசாயி தன் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு ஒரு நாளையும் அதற்குச் சமானமாய் மாட்டுக்கு ஒரு நாளையும் ஒதுக்கி கொண்டாடுகிறான். அந்த நாளில்தான் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் ஆகியவை நடைபெறுகின்றன.
7.  ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றனவா?
மாடுகளை பிள்ளைகள் போலவும், குடும்பச் சொத்து போலவும் மதிக்கும் விவசாயிகள் அவற்றை துன்புறுத்துவார்களா? அல்லது அதற்கு அனுமதிப்பார்களா? நிச்சயம் இல்லை.
8.  பீட்டா மற்றும் புளுகிராஸ் அமைப்புகள் தவறானவையா?
அப்படி முற்றிலுமாகச் சொல்லமுடியாது. விலங்கு வதைச் சட்டம் சரிதான். ஆனால் ஜல்லிக்கட்டை அதன் கீழ் கொண்டு வரத் தேவையில்லை. நம்முடைய பாரம்பரியம் பண்பாடு, வழக்குமுறை தெரியாத அவர்களின்  பார்வை தவறானது என்று அரசு அவர்களிடம் ஆணித்தரமாக சொல்லவில்லை. வேண்டாம் என்று முற்றிலும் ஒழிக்காமல் அதற்கான சட்டதிட்டங்கள் வரைமுறைகளைப்பற்றி ஆராய்ந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
9.  நம்முடைய நாட்டினங்களை அழிக்கும் முயற்சிதான் இது என்று சொல்கிறார்களே?
அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லமுடியாது. நாட்டினங்கள்  அழிந்து போகக் கூடாது என்றால் அரசும், விவசாய சங்கங்களும் தான் நடவடிக்கை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். அவைகளை வளர்க்க எந்தத்தடையும் இல்லையே . இவை வருமானம், பொருளாதாரம் மற்றும் உலக மயமாக்கலின் பக்க விளைவுகள். விவசாயத்தில் உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டதால் காளைகள் பயன்படுத்தப்படுவதில்லை. நம்முடைய பசு மாடுகளைக் காட்டிலும் மற்ற இன மாடுகள் பாலை அதிகமாக கறக்கின்றது. எனவே எது லாபகரமோ அதைத்தானே மக்கள் செய்வார்கள். காளைகள் தேவையில்லையென்றால் யார் அதனை வளர்ப்பார்கள். ஜல்லிக்கட்டு நடக்காததால் மட்டுமே நாட்டினங்கள் அழிந்துபோகும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
10.            கிரன்பேடி சொல்வதைப்போல் சதி போன்ற தீய பாரம்பரிய பழக்கங்களை விட்டுவிட்டோம். அதுபோல இதையும் விடவேண்டும் என்று சொல்வது சரியான வாதமா?
சதி வழக்கம், குழந்தை மணம், பெண்குழந்தை அழிப்பு போன்ற சமூகத்தீய வழக்கங்களோடு ஜல்லிக்கட்டை பொருத்திப் பார்க்க முடியாது. இது கண்டிப்பாக சமூகத் தீவினைப் பழக்கம் இல்லை.
11.            பொங்கல் என்பது தமிழகத்தின் பொதுவான விழாவா?
ஆம் தீபாவளி போன்ற மற்ற பண்டிகைகள் போலன்றி பொங்கல் என்பது சாதிசமய வேறுபாடுகளைத்தாண்டி தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டிய பண்டிகை. கிராமங்களில் அப்படித்தான் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. நகரில் கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களும் இணைந்து பெருவிழாவாக இதனைக்  கொண்டாட வேண்டும்.
12.            பாரம்பரிய விளையாட்டு என்பதனால் மட்டுமே இந்த ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டுமா?
இது ஆபத்தான விளையாட்டு இல்லை. இதனால் மரணங்கள் நிகழ்வது இல்லை அல்லது மிகமிக அரிதாக ஏற்படலாம். காயங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படிப் பார்த்தால் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது.
13.            நம் அழிந்து போகும் அல்லது அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் வேறெதும் இருக்கின்றனவா?
நாம் சின்ன வயதில் விளையாண்ட பலவகை விளையாட்டுக்கள் இன்று நடைமுறையில் இல்லை. கிட்டிப்புள் விளையாண்டவர்கள் எல்லாம் இப்போது கிரிக்கெட் விளையாடச்  சென்று விட்டார்கள். மற்றும் குஸ்தி, மல்யுத்தம் ஆகியவை முற்றிலும் அழிந்துபோய் இப்போது நகரில் மட்டும் குத்துச் சண்டை  என்ற வெளிநாட்டு பாக்சிங் வந்துவிட்டது. ரெஸ்லிங் என்பது முற்றிலும் வேறு ஒன்று. சிலம்பம் கூட எங்கோ ஓரிரு இடங்களில் தான் இருக்கிறது.
14.            வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு ம்  அழிந்து போகும் என்கிறீர்களா?
அப்படிச் சொல்ல முடியாது நவீன விஞ்ஞான யுகத்திலும் சில பழக்க வழக்கங்கள் மாறுவதில்லை. அதுபோல ஜல்லிக்கட்டும் நீண்ட நாட்கள் இருக்குமென்றுதான் தோன்றுகிறது. 
15.            பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆகியோர் தமிழ் நாட்டைப்பற்றி என்னதான் நினைக்கிறார்கள்?.
என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. சமஸ்கிருதம் மற்றும் இந்தி இங்கே வரமுடியவில்லை. வட இந்தியர் நம்மை காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் பழமையான, பண்பாடு மிக்க மூத்த மொழியைக் கொண்ட  சமூகம் நாம். திராவிட இயக்கத்தின் மதஞ்சாரா கொள்கையின் எச்சம் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் படிப்பறிவிலும் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும், நம்முடைய உரிமைகளுக்காக ஒன்றுபட்டு தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைதான் இன்னும் இருக்கிறது.
Image result for Jallikattu protest in Tamilnadu
Protest in Tamilnadu

நீங்கள் சொல்வது சரிதான் பிரபா .ஆனால் இந்த முறை நிச்சயம் மாணவர் போராட்டம் வெற்றி பெறும் .உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி பிரபா .

18 comments:

 1. Replies
  1. உங்கள் ஒருவருக்காகவே பதிவுகள் எழுதலாம் என்று தோன்றுகிறது DD.

   Delete
  2. You have more admirers dear Alfi. But 6. this passage contradicts with the one below:பொங்கல் என்பது அறுவடைத்திருநாள். விவசாயி தன் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு ஒரு நாளையும் அதற்குச் சமானமாய் மாட்டுக்கு ஒரு நாளையும் ஒதுக்கி கொண்டாடுகிறான். அந்த நாளில்தான் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் ஆகியவை நடைபெறுகின்றன. 11. It is thanking Sun and the kallai (Madu) for the prosperity!bountiful aruvadai!Best as always

   Delete
 2. ***12. பாரம்பரிய விளையாட்டு என்பதனால் மட்டுமே இந்த ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டுமா?

  இது ஆபத்தான விளையாட்டு இல்லை. ***

  ஆமாம் ஆபத்தான வீர விளையாட்டுதான்னு சொல்லியிருக்கலாம். எதுக்கு முனைவா இப்படி பொய் சொல்லணும்?

  ஆமா, அந்தப் படத்திலே மாட்டு திமிலைப் பிடிச்சுத் தொங்குறது முனைவர் பிரபா தாணுங்களா? :)))

  இதுல காமெடி என்னனா.. இவனுக சல்லிக்கட்டு நடத்தலையினு மாடு ஏங்கி ஏங்கி அழுகிறதா எல்லாம் ஒரு "போஸ்ட்" ஒட்டிக்கிட்டு இருக்காணுகப்பா! ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஜல்லிக்கட்டை விடுங்கள் .உலகெங்கும், தமிழனுக்கு இந்தப
   போராட்டம் ஒற்றுமை உணர்வையும் , போராட்ட எழுச்சியையும் கொடுத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை .இதனை ஒரு நல்ல ஆரம்பமாகவே பார்க்கிறேன் வருண்

   Delete
  2. மன்னியுங்கள் ஆல்ஃபி, இன்று ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் இதே தமிழர்களின் போக்கு வேறு மாதிரி இருந்து இருக்கும்னு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லணுமா என்ன? எழுச்சிக்கு பதிலா பெரும் வீழ்ச்சிதான் கிடைத்து இருக்கும். நரியில்லாத ஊரில் நரி அம்பலம் பண்ணிய கதைதான் இது.

   ஒரு 144 போட்டு நாலு பேரு துப்பாக்கியோட வந்து நின்று இருந்தால் அவன் அவன் ஓடி ஒளிந்து இருப்பான். அம்மா இல்லாத இன்றைய அரசியல் சூழல்தான் இந்த போராட்டம் மற்றும் "வெற்றி"க்கு காரணம். ஆளுங்கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி, நடிகர்களும் சரி, இதை ஆதரித்தே ஆக வேண்டும் என்கிற ஒரூ சூழல்.

   தமிழர்கள் போராடி சாதிச்சுட்டாங்கனு நீங்களும் மார்தட்டிக் கோங்க. என்ன வருடத்துக்கு 10 பேர் பலியாவார்கள். எவன் செத்தான்னா இல்லைனா எவ தாலியறுத்தால்ல் எவனுக்கென்ன? ஜல்லிக்கட்டு நடந்தால் சரிதான்.

   இனிமேல் வருடா வருடம் மெரீனாவிலும் சல்லிக்கட்டு நடத்தினால் நல்லாயிருக்கும். நடத்தணும்!

   அப்புறம் பதிவர் கூட்டம் போடும் போதும் கட்டாயம் சல்லிக்கட்டு நடத்தி எல்லாப் பதிவரும் கலந்துக்கணும் (ஆணென்ன பெண்ணென்ன?). பதிவர் கூட்டத்திலும் சல்லிக்கட்டு நடத்திட்டா தமிழர் கலாச்சாரம் பண்பாடெல்லாம் இன்னும் எட்டுத்திக்கும் பரவும். என்னது அது? "தமிழர்களின் எழுச்சி" வானையே தொட்டுவிடும்!

   Delete
  3. ** நரியில்லாத ஊரில் நரி அம்பலம் பண்ணிய கதைதான் இது.**

   "நாயில்லாத ஊரில் நரி அம்பலம் பண்ணிய கதைதான் இது"னு வரணும் அது

   Delete
  4. இதுல யாரை நாய், யாரை நரியின்னு சொல்றீங்கன்னு புரியலின்னாலும் உங்க கோபம் நல்லாவே புரியுது வருண்.

   Delete
 3. அருமையான விளக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சிவக்குமார்

   Delete

 4. பதில்கள் ரொம்பவும் மேம்போக்காக..மாற்றங்களுக்குட்பட்ட வரலாற்று பார்வையில் இன்று ஜல்லிக்கட்டு என்னவாக இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. மாறி வரும் உலகில் ஜல்லிக்கட்டு எத்தனை நாள் இருக்கணுமோ அதனை நாள் இருந்துட்டு போகட்டும் . நன்றி புதிய மாதவி

   Delete
 5. ***
  Two die after being hit by bulls in Pudukottai, on first day of legal jallikattu

  In a situation that is fast turning into a nightmare for the Tamil Nadu government, two people lost their lives in a jallikattu event at Pudukottai district in Tamil Nadu.

  The event was inaugurated by Health minister Vijay Bhaskar. The District collector, School Education minister Mafoi Pandiarajan and other government officials were also present in the village, according to a government press release on the event.

  Pudukottai district collector Ganesh confirmed to TNM that two people had lost their lives in the jallikattu organized by the government.

  According to local reporters, Mohan (32) was one of the organisers and he was severely injured after a bull charged at him.

  Raja (35) a participant also died after sustaining severe injuries.

  The two were taken to a government hospital, according to the police. The hurriedly organised jallikattu at Rapoosal village of Pudukottai did not abide by most safety regulations, according to reports.

  According to sources, more than 80 people were injured, and these included spectators.

  Visuals that were beamed on many TV channels showed many men inside the arena as the bulls were left loose. More than 150 bulls took part in the event***

  Are you guys happy now??

  உங்க தமிழர் எழுச்சி ரெண்டு பேரை புதைகுழிக்கு அனுப்பியிருக்கு! பெரிய சாதனைதான்!

  ReplyDelete
  Replies
  1. தமிழர் இருவர் இறந்து போனது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு . அவசரகதியில் ஜல்லிக்கட்டு நடத்தி உயிர்களை பழிவாங்கியதற்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்வதை விட்டு இந்த விளையாட்டை எப்படி பாதுகாப்பாக நடத்துவது குறித்து யோசிக்க வேண்டும் .

   Delete
 6. I just told you that IT IS FALSE to claim that IT IS NOT A DANGEROUS GAME!

  Is this worth it? All these protest for sacrificing uneducated people lives??

  Whoever supported, Kamal Haasan, Rajinikanth, Vijay, Surya, Alfy, Madurai Tamilan are RESPONSIBLE for the loss of these guys life!

  What are you guys saying NOW??

  ReplyDelete
 7. இன்னொரு முக்கியமான உண்மை என்னவெனில் தென் தமிழகத்தில் இது ஆதிக்க ஜாதி மக்கள் மட்டும் உரிமை கொண்டாடும் ஒரு விளையாட்டு. யாராவது தலித் இனத்தை சேர்ந்த இளைஞன் மாட்டை பிடித்து விட்டால், மாடு அல்லது அந்த இளைஞன் இவர்களில் ஒருவர் கொலை நிச்சயம்.

  பல இடங்களில் நடந்த போராட்டங்களில் பறையடித்து மக்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர்களை பார்த்தபொழுது எனக்கு பரிதாபமே வந்தது. இவர்களில் யாராவது அலங்காநல்லூரிலோ அல்லது பாலமேட்டிலோ போய் காளையை அடக்க நினைத்தால் என்ன விளைவுகள் நிகழும் என்று நினைத்தேன். பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

  இளைஞர்களின் இந்த எழுச்சியை இன்னும் ஆக்கபூர்வமான விடயங்களுக்கு (காவிரி நதி நீர் பிரச்சினை, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு) பயன்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கமும் அடைந்தேன். - சுரேஷ்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆதங்கம் புரிகிறது .ஆக்க பூர்வமான போராட்டங்களுக்கு இது முன்னோடி என்று நம்புவோம் .நன்றி சுரேஷ்

   Delete