Thursday, March 24, 2016

இசைஞானி இளையராஜா ஒரு எழுத்தாளரா ?

படித்ததில் பிடித்தது.
யாருக்கு யார் எழுதுவது - இசைஞானி  இளையராஜா.
கவிதா வெளியீடு.

 யாருக்கு யார் எழுதுவது?
இளையராஜா, இசையமைப்பதில் முழுக்கவனம் செலுத்தினாலும், பாடல்களைப் பாடுவதிலும், பாடல்களை எழுதுவதிலும் திறமை வாய்ந்தவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும். பல பாடல்களின் முதல் அடிகளை அவர்தான் எழுதினார்  என்பதும் கேள்வி. ஆனால் அவர் எழுத்தாளராக பரிணமித்து பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பது பலபேருக்குத் தெரியாத உண்மை. அப்படி எழுதிய ஒரு ஐந்து புத்தகங்களின் தொகுப்புதான் “யாருக்கு யார் எழுதுவது?”, என்ற இந்தப் புத்தகம். அந்த ஐந்து புத்தகங்கள், "பால் நிலாப் பாதை", "சங்கீதக் கனவுகள்", "வழித்துணை", "இளையராஜாவின் சிந்தனைகள்", "வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது" ஆகியவை ஆகும்.
அவற்றில் நான் படித்து ரசித்தவற்றை இதன் ஐந்து தலைப்புகளில் புல்லட்டில் தருகிறேன்.
ilayaraja

பால் நிலாப் பாதை:
1.    இந்தப்புத்தகத்தில் இளையராஜாவின் பால்யகாலம், சென்னைக்கு வந்தது, படிப்படியாக முன்னேறியது ஆகியவற்றை விவரிக்கிறார்.
2.    தான் பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில், ஒரு மூங்கிலில் ஓட்டை துளைப்போட்டு தானே செய்த புல்லாங்குழலில் வாசித்துப் பழகி இசைத்தது ஆச்சரியத்தை அளித்தது.
3.    "எனக்கு நண்பர்களே இல்லை, நானே எனக்கு நண்பன்," என்று சொல்லுவது கொஞ்சம் உறுத்தியது.
4.    ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் நடுவில் அல்லாடி, தன் அண்ணன் பாவலர் வரதராஜன் மூலம் கம்யூனிச நாத்திகத்திற்கு ஈர்க்கப்பட்டதை சொல்லுகிறார்.
5.    காரித்தோடு ஏலக்காய்த் தோட்டத்தில் தன் சகோதரன் பாஸ்கரோடு ஒரு வாரம் வேலை பார்த்ததில் கிடைத்த வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்கிறார்.
6.    அதில் தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பு, காதல், மோதல், சாதல் பட்டினி ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறார்.
7.    யுவனுக்கு ஏற்பட்ட வயிற்று வலியைப்பற்றி எழுதுகிறார்.
8.    MSV-யை விட்டதால் ஸ்ரீதரோடு கொண்ட பிணக்கம், எம்ஜியாரோடு போட்ட சண்டை ஆகியவற்றைக் கூறுகிறார்.
9.    லண்டனின் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவின் தலைவர், ஜான் ஸ்காட்டுடன்  கொண்ட அறிமுகத்தைச் சொல்கிறார்.
10. தன்ராஜ் மாஸ்டரிடம் மாணவராகச் சேர்ந்து படித்த அனுபவங்களையும் அதன் மூலம் டிரினிடி காலேஜில் படித்துத் தேறியதையும் பகிர்கிறார்.
11. இசையமைப்பாளர் GK வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்து கன்னட / தெலுங்கு திரையுலகில் பல படங்கள் இசையமைத்ததை சிலாகிக்கிறார்.
12. “நத்திங் பட் வின்ட்”, வெளியிடும் காலத்தில் நவ்ஷத் அலி வந்து பாராட்டியதைச் சொல்லி பெருமைப்படுகிறார்.
13. ஹேராம் படத்திற்கு புடா பஸ்ட் (Budapest) சென்று இசையமைத்த அனுபவங்களைச் சொல்லி மகிழ்கிறார்.
14. ஹெர்னியா ஆப்பரேஷன் பண்ணி பேசமுடியாமல் இருந்த போது விசிலில் இசையமைத்த "காதலின் தீபமொன்று" என்ற பாடலின் கதையைச் சொல்லுகிறார்.
15. கடுமையான வயிற்று வலியுடன் கஷ்டப்பட்ட போது இசையமைத்த "காட்டு வழி போற  பெண்ணே " பாடலைப் பாடியதைப் பற்றிக் கூறுகிறார்.
16. சிவாஜியுடன் இருந்த ஆத்மார்த்தமான பக்தி, உறவைப்பற்றி சொல்லுகிறார்.

II சங்கீதக் கனவுகள்

European musicians have teamed up with Ilayaraja
Add caption
1.    இந்தப்புத்தகத்தில் 1983ல் இளையராஜா போன உலகச்சுற்றுலா பற்றி எழுதுகிறார்.
2.    பிரான்சில் மிகப்பெரிய கம்போசரான  பால் மரியாவைச் சந்திக்கிறார்.
3.    வியன்னாவில்  பீதோவன்,  மொஸார்ட்  ஆஸ்திரியாவில் ஷீபர்ட்  ஸ்ராவ்ஸ்  ஆகிய நினைவிடங்களுக்குச் செல்லும் போது  அவருக்கு ஏற்பட்ட அதிர்வுகள் உணர்வுகளைச் சொல்கிறார்
4.    வெளிநாடுகளில் தங்களுடைய இசைமேதைகளை எப்படியெல்லாம்  போற்றி  அவர்களின் நினைவிடங்களை  எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள். ஆனால்  நம் நாட்டில் தியாகையர், சேக்கிழார் நினைவிடங்கள்  எப்படி சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்று  சொல்லி வருத்தப்படுகிறார்
5.    கிழக்கு  ஜெர்மனியில் ஃபிராங்பர்ட், பெர்லின் ஆகிய இடங்களில் பாக் வாழ்ந்த இடங்களுக்குச் செல்கிறார்
6.    லண்டன் ரிக்கார்டிங் தியேட்டரைச்  சுற்றிப்பார்க்கிறார்.
7.    நியூயார்க் , வாஷிங்டன்  DC,  அட்லான்டா  சான்பிரான்சிஸ்கோ  ஆகிய இடங்களுக்குச்  செல்கிறார்.  
8.    அதற்குள் நம் நாட்டு நினைவுகள் வந்து விட டூரை பாதியில் முடித்து தாய்நாடு  திரும்புகிறார்.

III வழித்துணை & IV வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது.
 இப்பகுதியில்  இளையராஜா எழுதிய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன ஒன்றிரண்டு தவிற அது கவிதைபோல் தோன்றவுமில்லை தொணிக்கவுமில்லை.
V.இளையராஜாவின் சிந்தனைகள்  
1.    இளையராஜாவின் தத்துவ சிந்தனைகள் ஏராளமாக இதில் இடம்  பெற்றிருக்கின்றன.
2.    நினைத்தவற்றையும் தோன்றியவைகளையும் எழுதியுள்ளார்.
3.    அவர் ரமண மகரிஷியின்  பக்தர் என்று  எல்லோருக்கும்  தெரியும்
4.    மைசூருக்குச் செல்லும் வழியில் நோய் வாய்ப்பட்டு கோவிலுக்குச் செல்ல நினைத்ததும், அது  சுகமானதால் மூகாம்பிகை பக்தனாகவும் மாறியதோடு தன் உடைகளையும் எளிய உடைகளாக மாற்றிக் கொள்கிறார்.
5.    பல இடங்களில் ஆன்மீகத்தத்துவங்கள் என்பதையும் மீறி விரக்தியும், வெறுமையும் ஏனோ வெளிப்படுகின்றன.
6.    இன்னும் சில இடங்களில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருகின்றன.
7.    பல ஆன்மீகப் புத்தகங்களைப் படித்திருப்பது, திருக்குறளை மிகவும் விரும்பிப் படித்தது வெளிப்படுகிறது.
ஆனால் கோபதாபங்களையும், பெருமைகளையும் இன்னும் இளையராஜா விடவில்லையே. அப்படி விட்டிருந்தால் இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சியில் கங்கை அமரன், பாரதிராஜா  வைரமுத்து ஆகியோர் வந்திருப்பார்களே.
எப்படி இருந்தாலும் இந்தத்தலைமுறையின் ஒப்பற்ற திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா என்பதில் யாருக்காவது சந்தேகம் வருமா என்ன? இளையராஜாவின் இசையை எப்போதும் நான் கொண்டாடுவோம். அவரைத்தூரத்தில்  வைத்தே ரசிப்போம் -இளையராஜா ரசிகர்கள் அவரது மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

முற்றும்

13 comments:

  1. //ஆனால் கோபதாபங்களையும், பெருமைகளையும் இன்னும் இளையராஜா விடவில்லையே. அப்படி விட்டிருந்தால் இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சியில் கங்கை அமரன், பாரதிராஜா வைரமுத்து ஆகியோர் வந்திருப்பார்களே.// ஆமாம்.நல்ல ஆன்மீகவாதிகள் மறப்போம், மன்னிப்போம் என இருப்பார்கள்.

    ReplyDelete
  2. உண்மை. அவரது இசையை மட்டும் ரசிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இசையைமட்டும் ரசிப்போம் , நதி மூலம் ரிஷிமூலம் வேண்டாம்.

      Delete

  3. சரியான விமர்சனம். நூல்கள் மட்டுமல்ல, இளையராஜாவையும்தான் சரியாக கணித்திருக்கிறீர்கள்.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில்குமார் .

      Delete
  4. ----உண்மை. அவரது இசையை மட்டும் ரசிப்போம்.-----

    பின்ன வேறன்ன சொல்வது? இளையராஜா என்றால் மட்டும் இப்படியான சமாளிப்புகள் தேவைப்படுகின்றன. இசையை மட்டும் ரசிக்கும் அளவுக்கு அவர் செய்த சாதனை புதிதாக என்னவென்று தெரியவில்லை. எல்லாமே ஏற்கனவே செய்யப்பட்டதுதான். சில நல்ல பாடல்கள் கொடுத்தார் என்பதைத் தவிர இளையராஜாவிடம் வேறொன்றும் சிலாகிக்கும் அளவுக்கு இல்லை என்பது என் பார்வை. He doesn't desrve the crown he wears, I feel. It might sound so arrogant but I think I'm right.

    ReplyDelete
    Replies
    1. \\I think I'm right.\\ This is what everytone thinks, whether it is Ilaiyaraaja or Kaarigan or Alfie. The 'Right' matters how it affect others. As per that you are always wrong.

      Delete
    2. இளையராஜா இசையில் எனக்கு ரசிக்க நிறையவே இருக்கிறது நண்பர் காரிகன். உங்களுக்கு அப்படி இல்லை என்று தெரிகிறது. அதனாலென்ன? உங்கள் ரசனை உங்களுக்கு.

      Delete
  5. Mr. Anonymous,

    Children should play outside. Why don't you go out and play with your toys?

    ReplyDelete
    Replies
    1. Excellent reply Kaarigan.

      Kaarigan,
      Tamilnadu is full of this type of aged children. If Mr. Rajinikanth & Dr. Abdul Kalam (or ISRO scientist) organizes a gathering, everyone knows very well that to whom crowd will be more. This applies to music too. From this, we can easily conclude that, this type of children's decision is very much narrow-minded. After all, What can we expect more from the children?

      Delete
    2. இந்த அனானிமஸ் ஒரு பெண் என்பது எனக்குத்தெரியும், விட்டுத்தள்ளுங்கள்.

      Delete