Thursday, April 2, 2015

வாட்ஸ் அப்பில் ரசித்தவை !!!!!!!!!!!!!!!

What's Up Animated Photo

அப்பா: நேத்து ராத்திரி பரிட்சைக்கு படிச்சேன்னு சொன்ன? ஆனா உன் ரூமில லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் கவனிக்கலப்பா.
*************************************************************************************
அன்பே உங்கிட்ட பிடித்ததே இந்த ஐந்து தான்.
1) சிரிப்பு, 2) அழகு, 3) நல்ல டைப், 4) கொழந்த மனசு, 5) இதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசு .
*************************************************************************************
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே, அவ்வளவு பாசமா மனைவி மேல?.
பாசம் மனைவி மேல இல்லடா, பூக்காரி மேல.
*************************************************************************************
மனைவி: ஏங்க நம்ம பக்கத்து வீட்டுக்காரர், ஆபிசுக்குப் போகும் போது எப்பவும் அவர் மனைவிக்கு முத்தம் கொடுத்துட்டுத்தான் போராரு, நீங்க  ஏன் அப்படிப் பண்றதில்ல?
கணவன்: அது எப்படி முடியும்? அவங்க கூட அவ்வளவு பழக்கம் இல்ல எனக்கு.
****************************************************************************************************
முயல் ஓடுகிறது, தாவுகிறது, குதிக்கிறது, சுறுசுறுப்பாக இருக்கிறது 15 வருடங்கள் வாழ்கிறது.
ஆமை ஓடுவது இல்லை, குதிப்பது இல்லை, ஏன் எதுவுமே செய்வது இல்லை, 150 வருடங்கள் வாழ்கின்றன.
நீதி: பி வெட்டி, யுவர் லைஃப் இஸ் கெட்டி. ****************************************************************************************************
ஆங்கிலேயன்: உங்க தாய்நாட்டை 200 வருடமா ஆண்டு கெடுத்தோம்.
இந்தியன்: உங்க தாய் மொழியை தினமும் நாங்க கெடுக்கிறோம் எப்பூடி?
****************************************************************************************************
ஆஸ்பத்திரி வாசலில்  ஒரு சிறுவனிடம்:
சர்தார்ஜி: ஏன் அழுதுட்டு இருக்க?
சிறுவன்: பிளட் டெஸ்ட்டுக்காக என் விரலை வெட்டிட்டாங்க.
சர்தார்ஜி: பாப்ரே, நான் யூரின் டெஸ்ட்டுக்கில்ல வந்துருக்கேன்.
*************************************************************************************************
கணவன் நல்லா இருக்கனும்னு திருவாதிரை விரதமும் தாலி நிலைத்து இருக்கனும்னு சுமங்கலி பூஜையும் பண்ற பெண்களே, நீங்க மட்டும் மெளன விரதம் இருந்து பாருங்களேன். உங்க கணவரைவிட சந்தோஷமான மனிதன் இந்த உலகத்தில யாரும் இருக்கமுடியாது.
***************************************************************************************************
 பண்ணிட்டு மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.
தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்கிறவன் புருஷன்.
**************************************************************************************************
மனைவி: டார்லிங் நம்ம இந்த வீக்கெண்டை நல்லா எஞ்சாய் பண்ணலாம்.
கணவன்: குட் ஐடியா, அப்ப சரி, நான் உன்னை திங்கள்கிழமை பார்க்கிறேன். 

****************************************************************************************************
ஒரு கணவன், தன் காதலியின் பெயரை "லோ பேட்டரி" என்று தன் செல்போனில் Save செய்து வைத்திருந்தான்.
அவன் வீட்டில் இருக்கும்போது,காதலி கூப்பிடும்போதெல்லாம் அந்த போனை எடுத்த மனைவி சார்ஜில் போட்டாள்.
 யாரோ ஒருவர் அவனை, புதுக்கண்டுபிடிப்பு மற்றும் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்தார்.
****************************************************************************************************
சஷி தரூர் தன் External Affairs பதவியை சுனந்தாவால் இழந்தார்.
இப்போது சஷி தரூர் தன் External Affair -ஆல் சுனந்தாவையே இழந்துவிட்டார்.
*************************************************************************************************

8 comments:

 1. அனைத்தும் கலகல... மௌன விரதம் இருந்தால் நோபல் பரிசு உண்டு...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்.

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி இலக்கியம் .

   Delete
 4. Low Battery Story Super !..... - சுடசுட.காம்

  ReplyDelete