கோடைக்காலம் கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்து,
ஆடைக்காலம் ஆரம்பிக்கத்துவங்கி விட்டது.பல லேயரில் ஆடை உடுத்த வேண்டுமென்பதால் அப்படிச்
சொன்னேன்.
இலைகள் கொட்டத்துவங்கிவிட்டது. அது முழுவதும்
மொட்டையாகு முன்னால், என் வீட்டுத்தோட்டத்தைப் பற்றி.
கோடைக்கால ஆரம்பித்தில் , பின்புறமுள்ள கிச்சன்
கார்டனில் வழக்கம்போல் புதினாதான் புதர்போல வந்தது. எத்தனை தடவை சட்னிக்கு பறித்தாலும்,
புதிது புதிதாக துளிர்த்து வந்தது. இன்னும் கூட ஏராளமாக இருக்கிறது. எங்க வீட்டுக்கு
வந்தா, எது கிடைக்குமோ கிடைக்காதோ, புதினா கண்டிப்பாய்க்கிடைக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக தானாக வந்த ஸ்ட்ராபெர்ரியை
இந்த வருடம் காணோம். குளிர் காலத்தில் குச்சியாக நின்ற அத்திமரமும் பெர்சிமன் மரமும்
துளிர்காலத்தில் மளமளவென்று இலைபிடித்து நின்றது.
பெர்சிமன் மரத்தில் ஒரு காய்கூட காய்க்கவில்லை.
ஆனால் அத்திமரம் பழங்களை அள்ளித்தந்தது. அதன் இனிப்புச்சுவைக்கு எறும்புகளும், அணில்களும், பெயர்
தெரியாத பறவைகளும் ஏராளமாக வந்தன. அவை சாப்பிட்ட
மிச்சமீதியிலும் ஏராளமான பழங்கள் எங்களுக்கும் கிடைத்தன.
மற்றவை எல்லாம் நாத்து வாங்கி நட்டவை. தக்காளி
ஒரு பத்துச்செடியில் மொத்தமாக விளைந்தது.
கோடைகாலம் முழுவதும் வெளியே வாங்கவில்லை.
குறிப்பாய் மனைவி செய்யும் பச்சைத்தக்காளி கூட்டின் சுவை தனிச்சுவை. அதுவும் அன்றே
பறித்து அன்றே செய்ய வேண்டும்.
ஊதா நிற நம்மூர்க்கத்தரிக்காய்கள் நன்றாக வந்திருந்தன.
பெரிதாக இருந்தாலும், விதையேயில்லாமல் எண்ணெய் பிரட்டலில் நெய் மணத்தது.
வெண்டைக்காய்ச் செடிகளை என் மனைவி நம்பிக்கையில்லாமல்
வாங்கினாலும், பெரிது பெரிதாய் ஆனால் நுனி ஒடிந்து போகும் பிஞ்சாக காய்த்தன. காரக்குழம்பில்
அவை கமகமத்தன.
பூச்சிகள் அதிகமாய் வந்ததால், என் அப்ஜக்சனையும்
மீறி, பீச் மற்றும் ஆப்பிள் மரங்களை என் மனைவி வெட்டிவிட்டாள்.
பாகற்காய்கள் இந்தத்தடவை அதிகம் வராவிட்டாலும்,
சுரைக்காய்கள் அதிகம் விளைந்து சாம்பாருக்கு சுவையூட்டின. எம் மாமனார் இங்கிருப்பதால்
தோட்டத்தை காயும் பழமுமாக பாதுகாத்தார்.
வீட்டின் முன்பகுதியில் தோட்டக்காரர் ஜானால்
பராமரிக்கப்பட்ட சிறிய புல்வெளியும், பூந்தோட்டமும் அழகாக இருந்தது. மல்லிகைச் செடிகள்
மணம் பரப்ப, ரோஜாக்கள் பல நிறங்களில் பூத்துக்குலுங்கின. காவலர் போல் நிமிர்ந்து நிற்கும்
இரண்டு எவர்கீரின் மரங்களும் மேலும் வளர்ந்து கம்பீரமாய் நின்றன.
முன்னால் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து லேசாக அசைந்து
கொண்டே இவைகளை ரசிப்பதில் தான் எத்தனை இன்பம். இந்த அழகு நிறங்களையும், சுவைமிகு காய்கறி
பழங்களை மீண்டும் பார்க்க, அடுத்த வசந்தகாலம் வரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டுமென
நினைத்தபோது ஒரு பெருமூச்சு எழுந்தது.
ஆகா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteகண்ணுக்கு நிறைவான தோட்டம்! மாமனாருக்கு பாராட்டுகள்:-)
ReplyDeleteபுதினா நம் வீட்டிலும் ஒரு (சின்னக்) காடுதான். கன்ஸர்வேட்டரியில் உள்ள செடிகளுக்கு இன்றாவது சாப்பாடு போடணும்.
நியூசிலாந்திலும் அதே கதைதானா
Delete.
நன்றி துளசி கோபால்.
Great Mr.Alfi....க்ரேட் தலைவரே....நல்ல அருமையான காய்கள் ...இப்பவே வந்து சாப்பிட தோணுதே ......ஆமாம் உங்க சன் டிவி பட்டி மன்றம் என்ன ஆச்சு ?
ReplyDeleteநன்றி Xavier,எங்கள் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம்.
Deleteவரும் அக்டோபர் 20, 2013 அன்று நியூ ஜெர்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் அடியேன் பேசுகிறேன் .பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நடக்கும் இந்த "கல்யாணமாலை" பட்டிமன்றத்தில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அணித்தலைவர்களாக பங்கு கொள்கிறரர்கள்.இந்த நிகழ்ச்சி பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் . வாங்க பழகலாம் . விவரங்களுக்கு சொடுக்கவும் www.njtamilsangam.net .
என்ன அண்ணே... கோடை காலமோ இல்ல ஆடை காலமோ.. அவசரத்துக்கு ஒரு முருங்கை மரம் வைக்கனும்னு தெரியலியா? இலையுதிர் காலம் சாரி... தலையுதிர் காலத்தில் ...நல்ல கட்டுரை அண்ணே...
ReplyDeleteமுருங்கை மரமா?அதெல்லாம் நம்ம வசந்த காலத்திலேயே
Deleteமுடிஞ்சு போச்சு , இது அசந்த காலம் தம்பி
அதோடு இது என்ன ? தலையுதிர் காலமா? முடியுதிர் காலம் என்றல்லவா நினைத்தேன்
ம்ம்ம்ம்...ஒரு பெருமூச்சு தான் விட்டு கொள்ள முடியும். என்சாய்......
ReplyDeleteநன்றி அமுதா கிருஷ்ணா.
Deleteபசுமையான பதிவு. அழகான செடி கொடிகளுடன் காய் கனிகளுடன் அழகான தோட்டம். அருமை. வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி வேல்.
Delete