Thursday, December 4, 2014

சாம்பாரின் கதை !!!!!!!!!!!!!!!!

சில மாதங்களுக்கு முன்னால் ரோட் ஐலன்ட் (Rhodh Island) என்ற மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தோம். காலையில் நீண்ட சாலைப்பயணத்தை முடித்து நியூபோர்ட் என்ற ஊரில் அரண்மனைகள் போன்ற மாபெரும் மாளிகைகளில் சுற்றித்திரிந்து களைத்து வெளியே வந்த போது  பகபகவென்று பசியெடுத்தது. நல்ல ஒரு இந்திய உணவகத்தில் ஒரு "தாலி மீல்ஸ்" சாப்பிட்டால் நன்றாக  இருக்கும் என்ற கற்பனையுடன் மைத்துனனின் மனைவி திவ்யாவிடம் அவளுடைய செல்போனில் தேடச் சொன்னேன். சில நிமிடங்களில், "அண்ணா சாம்பார் ரெஸ்டாரண்ட் 10 மைல் தூரத்தில் இருக்கிறது", என்றாள். மணியைப் பார்த்தேன் 1 மணியாகியிருந்தது சரி 1.30க்குள் போய் விடலாம் என்று முடிவு செய்து,” அங்கேயே போகலாம்”, என்றேன்.
எங்கெல்லாம் இந்தியர்கள், அதுவும் தென் இந்தியர்கள் புகுந்துவிட்டார்கள் என பெருமையுடன் நினைத்துக் கொண்டே கிளம்பினோம். சாப்பிடப்போகும் சாம்பார் வேறு  நினைவுக்கு வந்து, எச்சிலை ஊற்றாக எழுப்பிக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருந்த அந்த ரெஸ்டாரண்ட்டை கண்டுபிடித்து செல்வதற்குள் மணி 2 ஆகிவிட்டது.
ஆஹா "பசித்துப்பின் புசி" என்று முன்னோர் சொன்ன வார்த்தை அப்போது ஞாபகம் வந்தது. “பசித்துப்பின்புசி” ஆனாலும் “ரசித்துப்பின் புசி” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அங்கு சென்றால், 'SAMBAR' என்று எழுதிய பலகையின் கீழே ஒரு சிறிய உணவகம் இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தால் அது ஒரு ஆப்பிரிக்க உணவகம்.  சாம்பர் ஒரு வகை ஆப்பிரிக்க மானின் பெயராம்.
  1. Sambar Deer
எல்லோரும் என்னை முறைத்துப் பார்க்க, நான் திவ்யாவை கை காண்பிக்க, என் மனைவி என்னை கடித்துக் குதறும் ஒரு பார்வை பார்த்தாள்.
அப்புறம் ஒரு வழியாக அதன் பக்கத்தில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் பிட்சா, பாஸ்த்தா என்று சாப்பிட்டு முடித்தோம்.
சைவ வகைகளில் சாம்பார் மிகமுக்கியமான ஒன்று. குழம்பு வகைகளில் தலையாயது. நம்மூரில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா என்ற நான்கு மாநிலங்களில் எந்த உணவகம் சென்றாலும் சாம்பார் இல்லாமல் இருக்காது. நம்முடைய தென்னிந்திய வீடுகளிலும் சாம்பார் நிச்சயமாக இருக்கும். 

  1. Gemini Ganesan
பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இன்னொரு பட்டம் உண்டு அதுதான் 'சாம்பார் கணேசன்". அவர் சைவ உணவு சாப்பிடு பவர் என்பதால் இந்தப்பெயர் வந்ததா என்று தெரியவில்லை. அவர் சைவ உணவு மட்டும்தான் சாப்பிட்டாரா என்றும் தெரியவில்லை. சைவ உணவு சாப்பிடுபவர்களை இப்போதெல்லாம் "தயிர் சாதம்" என்று தானே கிண்டலடிக்கிறார்கள். ஆனால்  'சாம்பார் கணேசன்' என்று ஏன் சொன்னார்கள் என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்.
கல்லூரியில் படிக்கும் போது கையில் காசில்லாத சமயத்தில் இட்லி சாம்பார் என்று ஆர்டர் செய்து, ரெண்டு இட்லியை நிறைய சாம்பாரில் இட்டு ஊறவைத்து, சிறிய துண்டுகளாக்கி கூழாக்கி சாப்பிட்டு (குடித்து) வயிறை நிரப்பிய அனுபவம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கலாம். ஒரு நாள், இரண்டு இட்லிக்கு நிறைய சாம்பார் வாங்கி அதனை மதியம் சாதத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஊற்றி சாப்பிட்டுப்பார்த்தால் வாயிலேயே வைக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது, அது இட்லிக்கும் தோசைக்கும் மட்டுமே நன்றாக இருக்கும், சாதத்திற்கு உணவகத்தில் வேறு சாம்பார் வைப்பார்கள் என்று.
ஆனால் இந்த சாம்பார் தமிழனின் பாரம்பரிய உணவா? எப்படி நான்கு மாநிலங்களில் பிரபலம் ஆனது என்று கேட்கும்போது, நிச்சயமாக இது பழங்கால பாரம்பரிய உணவல்ல. அப்படியென்றால் இதன் கதை என்ன? சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு  காலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் சாளுக்கியம் போன்ற பிற பகுதிகளையும் ஆண்ட சோழப்பேரரசு வீழ்ந்து பட்ட பின்னர், தஞ்சையில் நாயக்கர் ஆட்சி வந்தது. அதுவும் முடிந்தபின் சிவாஜியின் வாரிசுகளான மராட்டியர் ஆட்சியைப் பிடித்து சுதந்திரம் வாங்கும் வரை நிலைபெற்றனர். இன்றும் தஞ்சை அரண்மனையின் ஒருபகுதியில் அவர்களின் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். மராட்டிய அரசர் பெயரில் மன்னர் சரபோஜி கல்லூரியும் இப்போது இயங்குகிறது.
  1. King Serfoji
ஒரு மராட்டிய மன்னர் தஞ்சையில் அரசாண்ட சமயத்தில் அவருடைய அந்தப்புறத்தில் இருந்த சமையல் கூடத்தில் பணியாற்றிய  மொத்தக்குழுவில் இரு பிரிவுகளை உருவாக்கினார்.
ஒரு ஆறுமாதம் ஒரு குழு சமையல் வேலை செய்யும்போது, மற்றொரு குழு R&D  வேலை செய்து வெளியில் பல இடங்களுக்கு அலைந்து விதவிதமான பண்டங்களைக் கண்டுபிடித்து வந்து மன்னருக்கு செய்து காண்பிக்கும். அதில் மிகவும் பிடிக்கும் வகைகளை மன்னர் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்து அறிமுகம் செய்வார்.
இப்படி இந்த குழுக்கள் மாறிமாறி வெளியில் சென்று கண்டுபிடித்த பண்டங்கள் அநேகம். அவற்றில் முக்கியமான ஒன்றுதான் சாம்பார். மன்னருக்கு இது மிகவும் பிடித்துவிட அதற்கு தம் மகனான சாம்பாஜியின் பெயரை வைத்தார். சாம்பா என்று முதலில் அழைக்கப்பட்ட இது  , நம் தமிழக வழக்கப்படி நாம்  பெயர்ச்சொல் எழுதும்போது இப்படி முடிவில்லாமல் எழுதுவது இல்லையென்பதால் அதுவே சாம்பார் என்று ஆனது.
இதுதான் சாம்பாரின் கதை. சாம்பார் போலவே அதன் கதையும் சுவையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

சாம்பாரைப்பற்றி இவ்வளவு நேரமாக எழுதி எச்சில் ஊறிக்கொண்டு இருக்கும்போது, சரவணபவன் சாம்பார் ஞாபகம் வர, மனைவி மதிய உணவு கட்டிக் கொடுத்திருந்தாலும் அதனை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு லெக்சிங்டன் அவென்யுவில் இருக்கும் சரவணபவன் சென்று ஒரு தாலி மீல்ஸ் சாப்பிட்டேன். என் மனைவிட்ட தயவுசெய்து சொல்லிறாதீங்க.
முற்றும் 

25 comments:

  1. அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சாம்பார் போல இருக்கே, நடக்கட்டும் .. நடக்கட்டும்.

    நான் கேள்வி பட்டதுவரை ஜெமினி அவர்கள் எப்போது ஷூடிங்கிர்க்கு போனாலும் உணவு வேளையில் சாம்பார் இல்லாவிடில் டென்சன் ஆகி விடுவார் என்று ! அதனால் தான் அந்த பெயர்.

    ReplyDelete
    Replies
    1. காதல் மன்னன் ஆச்சே, தினமும் முருங்கை சாம்பார் சாப்பிட்டிருப்பாரோ ?

      Delete
  2. முன்னாடி DD ஒளியும் ஒலியும் every friday போடுவாங்க.. mostly வெள்ளிக்கிழமை சாம்பார் தான்.. கண்டிப்பா ஒரு பழைய ஜெமினி பாட்டு இருக்கும்.. that may also be the reason.not too sure.. :)

    ReplyDelete
    Replies
    1. அவருடைய soft nature characters in the movies..அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...

      Delete
    2. எப்படியெல்லாம் யோசிக்கிறார் நம்ம நண்பா ?

      Delete
    3. ரூம் போட்டு யோசிச்சது.. :D

      Delete
    4. நினைச்சேன், ஆமா ரூமில கூட இருக்கிறது யாரு ?

      Delete
    5. நண்பர்கள் விசு & alfy.. war room'la.

      Delete
    6. //அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சாம்பார் போல இருக்கே, நடக்கட்டும் .. நடக்கட்டும்.//
      யாருப்பா இங்கே அடல்ஸ் ஒன்லி கமெண்ட் போட்டு இருப்பது என்னைப் போல சிறுவர்கள் உலா வரும் இடம் இது பார்த்து கருத்து இடவும்

      Delete
    7. தமிழா, இதில் என்ன தவறு? நான் சிறுவயதில் இருந்தே முருகை காய் சாம்பாரை ருசித்து சாப்பிட்டவன் ஆயிற்றே?

      Delete
  3. ஏன் அண்ணே... இப்படி தான் முன்பு AR Rahman ஹோடேல்லுக்கு போறதா சொல்லிட்டு "அர்ரஹ்மான்" என்ற இடத்திற்கு போனீங்க. இப்ப "சாம்பார் " என்று நினைத்து கொண்டு ஆப்ரிக்கா ஹோடேல்லுக்கு போறீங்க ! முன்ன பின்ன விசாரிங்க anne. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட போகுது!

    ReplyDelete
    Replies
    1. தம்பி விசு என்ன செய்றது , நமக்கு முன்புத்தி அவ்வளவா வேலை செய்ய மாட்டேங்குது .

      Delete
  4. நாங்க எல்லாம் ஒரு காலத்தில் சாம்பார்ல குளிப்போம்...
    ஒரு தடவை, ஊட்டியில் ஹோட்டல் ஒன்றில் 3 இட்லி ஆர்டர் செய்தோம்..
    முதலில் ஒரு பெரிய சாம்பார் தட்டில் கொண்டு தந்தார் பரிமாறுபவர்.. சாதாரணமாக அந்த சாம்பாரில் 4 இட்லி சாப்பிடலாம்..
    ஒரே ஒரு இட்லியில் பாதி சாப்பிட்டு திரும்ப சாம்பார் கேட்டோம்..
    அதை விட 2 சுற்று சிறிய தட்டில் தந்தார்..
    மீதி பாதி அந்த சாம்பாரில் சாப்பிட்டு திரும்ப கேட்டோம்.. அதை விட 2 சுற்று சிறிய தட்டில் தந்தார்.
    இப்படியே பிட்டு, உண்டு, கேட்டு,
    அடுத்த தடவை கேட்ட போது ஒரு உள்ளங்கை அளவு சிறிய தட்டில் தந்தார்..
    இதற்கு மேல் கேட்டால் எங்கே ஸ்பூனில் கொண்டு வந்து ஊட்டி விடுவாரோ என்று பெரிய மனது பண்ணி,
    மீதி இருந்த இட்லிஐ பார்சல் செய்து சாம்பார் பார்சல் வாங்கி வந்தோம்.... ;-)

    ReplyDelete
    Replies
    1. நம்மளை மாதிரி ஆட்கள் இருந்ததால்தான் இப்ப எக்ஸ்ட்ரா சாம்பாருக்கு தனியா காசு கேட்கிறான் .

      Delete
    2. நண்பா ! நல்ல நகைச்சுவையான நிகழ்ச்சியாக இருக்கே ? இதை வைத்து ஒரு பதிவை போடலாமே? எனக்கு மட்டும் இது நிகழ்ந்து irunthaal, இந்நேரம் இதை பற்றி ஐந்து பதிவு போட்டு இருப்பேன்.

      Delete
  5. சாம்பாரின் கதை இவ்வளவு இருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இருக்கு திண்டுக்கல்லார் அவர்களே .

      Delete
    2. திண்டுகல் நண்பர் அறியாத விஷயமும் உண்டா?

      Delete
  6. சாம்பார் கதை - நல்லாவே இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. கதை என்றும் சொல்லலாம் வரலாறு என்றும் சொல்லலாம் , நன்றி வெங்கட்

      Delete
  7. ஹா ஹா ஹா ..ஊரு விட்டு ஊரு போயி பல்பு வாங்கிட்டு வந்துருக்கிங்க ..
    சாம்பார் பெயர்காரணம் சுவராசியம் .. அருமை ...!

    ReplyDelete
    Replies
    1. பெரிய பல்ப்தான் என்ன செய்வது .ஆனா அதுக்கு சேர்த்து வச்சு சரவணபவன்ல சாப்பிட்டேன்.தம்பி ஆனந்த். ரொம்ப நாள் கழிச்சு வந்தது மகிழ்ச்சி

      Delete
  8. ஆல்ஃபி அவர்களுக்கு, உங்களது இந்த பதிவைப் படித்ததும் எனக்கு வந்த நினைவுகளை ”சாம்பார் – கணேசன்” என்ற தலைப்பினில் ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் ரசித்தேன் .நீங்கள் சொல்லும் காரணம் உண்மையான காரணமாக இருக்கலாம். அல்லது இந்துநேசன் பயன்படுத்திய பெயராகவும் இருக்கலாம்.
      உங்கள் தமிழ் வாசிக்க சுவையாக இருந்தது
      . நன்றி தமிழ் இளங்கோ.

      Delete
  9. நண்பரே! ஜெமினி க்கு சாம்பார் ஜெமினி என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி நம்பள்கி போட்டிருக்கின்றார்.

    ஜெமினி சைவம் மட்டும் இல்லையாம். அவர் அசைவமும் சாப்பிடுவாராம் அதுவும் அவரே சென்று மீன் வங்கி வந்து ....

    ReplyDelete