Friday, September 18, 2015

வாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் !!!!!!!!!!!!!!!

வாட்ஸ் அப்பில்  A ஜோக்ஸ் !!!!!!!!!!!!!!!
வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6
சர்தார் ஜி
சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என் மனைவியை முத்தமிடுவேன், நீ எப்படி?
நண்பன்: தினமும் நீ அலுவலகம் போனபின் நான் உன் மனைவியை முத்தமிடுவேன்.
சர்தார்: ஹைய்யா, நான் தான் ஃபர்ஸ்ட்.

      ஒரு சர்தார்ஜிக்கு ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. அழைப்பில் "Pink Tie Only" என்று இருந்தது. அவனும் பார்ட்டிக்கு போனான். ஆனால் அவனுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் சட்டையும் பேண்ட்டும் கூட போட்டிருந்தாங்க.

Medieval Clip Art

அரசனின் நண்பன் :
         போருக்குப் போகுமுன் அரசன் தன் அழகான மனைவியை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, தன் நெருங்கிய நண்பனை அழைத்துதான் அவனிடம் அந்தச் சாவியைக் கொடுத்து, "நண்பா ஒருவேளை நான்கு நாட்களுக்குள் நான் வரவில்லையென்றால், அறையை திறந்து என் மனைவியை நீ எடுத்துக்கொள்" என்றான். சொல்லி விட்டு தன் குதிரையில் யுத்தத்திற்கு கிளம்பினான். ஒரு அரை மணி நேரத்தில் பின்னர் பின்னால் வேகமாக குதிரையில் யாரோ வருவது போல் தெரிந்தது. யாரென்று பார்த்தால் அரசனின் நண்பன் தான் அரக்கப்பரக்க வந்தான். என்ன விஷயம் என்று கேட்டால்,
"அரசே இந்தச் சாவி தப்பான சாவி" என்றான்.

எந்த மெஷின்?
     ஒரு நாற்பது வயது மனிதன், ஜிம்மில் உள்ள டிரைனரிடம் கேட்டான். ஒரு அழகான பெண்ணை மயக்க வேண்டுமென்றால் எந்த மெஷினை பயன்படுத்த வேண்டும் என்று. அதற்கு டிரைனர் சொன்னான், வெளியே இருக்கும் ATM மெஷினை.

ATM in Brazil


கணவன்: உனக்கு தசரத ராஜவைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
மனைவி: ஆமா கேள்விப்பட்டிருக்கிறேன்.
கணவன்: அவருக்கு மூன்று மனைவிகள்?
மனைவி: ஆமா அதுக்கென்ன?
கணவன்: அப்ப நான் இன்னும் இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொள்ளலாம்.
மனைவி: உங்களுக்கு இந்திராணி தெரியுமா?
கணவன்: சரி சரி விடுவிடு.

Indrani

வாழ்க்கையின் பின்னல் சுழற்சி:

பாஸ் செக்ரடரியைக் கூப்பிட்டு, இந்த வீக்கென்ட் பிஸினெஸ் டிரிப் இருக்கு, ரெடியாயிரு ரொம்ப நாளாச்சு.
செக்ரட்டரி தன் கணவனைக் கூப்பிட்டு, நான் என் பாஸோடு பிஸினெஸ் டிரிப் போகிறேன். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கணவன் தன் கேர்ள் பிரண்டைக் கூப்பிட்டு, என் மனைவி இந்த வீக்கென்ட் ஊரிலில்லை, நீ வீட்டுக்கு வந்துரு, ரொம்ப நாளாச்சு.
கேர்ள்ஃபிரண்ட் தான் வீக்கென்ட் டியூஷன் எடுக்கும் பையனைக் கூப்பிட்டு, சாரி இந்த வீக்கென்ட் டியூஷன் கிடையாது.
"பையன் பாஸைக் கூப்பிட்டு, அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் நான் வீக்கென்ட் ஃப்ரீ, உங்களோடு அதனை செலவழிக்க விரும்புகிறேன்.
பாஸ் உடனே செக்ரட்டரியை கூப்பிட்டு, புரோகிராம் கேன்சல்ட்.
செக்ரட்டரி கணவனைக் கூப்பிட்டு, பிஸினெஸ் டிரிப் கேன்சல்ட்.
 கணவன் கேர்ல் ஃபிரண்டைக் கூப்பிட்டு, "மீட்டிங் கேன்சல்ட்.
 கேர்ல்ஃபிரண்ட் பையனைக் கூப்பிட்டு, சாரி வழக்கம்போல் டியூஷன் உண்டு.
பையன் அப்பாவைக் கூப்பிட்டு, சாரி டாட் எனக்கு டியூஷன் இருக்கு" 
பாஸ் செக்ரட்டரியைக் கூப்பிட்டு.......

 மாப்பிள்ளை வீட்டார்:பொண்ணு புடிச்சிருந்தாதான் சாப்பிடுவோம்.
பெண்வீட்டார் : பொண்ணு புடிச்சி ருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்.

தொடரும் >>>>>>>>>>>>>>>>>>>>


2 comments:

  1. வாட்ஸ்ப்பில் வரலாற்று கால ஜோக்கைதான் போடுகிறார்களா என்ன? . ஒரு வேளை இந்த கால இளைஞர்கள் அந்த கால ஜோக்குகளை படித்திருக்க மாட்டார்கள் என மறுபதிப்பு செய்கிறார்களோ என்னவோ..இந்திராணி ஜோக்கை தவிர மற்றவைகள் அதிகால ஜோக்குகள்

    ReplyDelete
  2. //பொண்ணு புடிச்சி ருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்.//

    I was laughing out loud :). பகிர்வுக்கு நன்றி!!!

    ReplyDelete