Monday, December 15, 2014

வீணாப்போன கங்கை அமரன் !!!!!!!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா பாடல் 13- 'உறவுகள் தொடர்கதை'
Star Brothers Special Moments
Gangai Amaran with Ilayaraja
1978ல் வெளியான 'அவள் அப்படித்தான்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சுகமான பாடல் இது. முதலில் பாடலைக்கேட்போம்.

பாடலின் சூழல்:
தன்னுடைய முந்தைய உறவில் விரிசலோ முற்றுப்புள்ளியோ விழுந்த சோக சமயத்தில் நாயகி இருக்கும் போது, நான் இருக்கிறேன் உனக்கு, நாம் புதிய உறவில் இணைவோம் என்று ஆறுதல் கூறி நாயகன் பாடும் பாடல் இது.
இசைக்கோர்வை:
எளிய இசையில் சுகமான ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் இளையராஜாவின் மெலடி பாடல்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று என்று சொல்லலாம்.
பியானோவும், கிட்டார் பிளக்கிங்கும் (Plucking) பின்னிப்பிணைந்து, இணைந்தும், இணையாமலும், ஒலிக்க, "உறவுகள் தொடர்கதை", என்று காந்தர்வக்குரல் காதுகளை வருடுகிறது. குரலுக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சியில், மெலிதாக பின்னணி இசையும், இசைக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்று மென்குரலும் இணைந்து மெல்லிசை படைத்துள்ளனர். பியானோ, கிடார், பேஸ் புல்லாங்க்குழல் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குரல்:

கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் மெல்லிய தாலாட்டுப்போல ஒலித்து புண்பட்ட நாயகியின் மனதுக்கு மருந்திடுவது போல ஒரு சூதிங் (Soothing) எஃபக்ட் கொடுக்கிறது. இந்தப்பாடலில் ஜேசுதாஸ் எந்த உச்சரிப்புப் பிழையும் இன்றி பாடுவது இன்னொரு சிறப்பம்சம். 70களின் காலகட்டத்தில்  ஜேசுதாஸின் குரல் இன்னும் இனிமையாகவே ஒலிக்கிறது.
பாடல் வரிகள்:
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

வரிகளை எழுதியவர் கங்கை அமரன். எளிய வரிகளாய் இருந்தாலும் சந்தம் நன்றாகவே அமைந்துள்ளது. எதுகை, மோனையும் சிறப்பாகவே இருந்து நல்ல கவித்துவமும் இருக்கிறது. அதோடு பாடலின் சூழலையும் கதையையும் நன்றாகவே விளக்கும் படியான சிட்டுவேஷன் பாடல் என்றும் சொல்லலாம்.
குறிப்பாக பல்லவியைச் சொல்லலாம் அதன்பின் 2-ஆவது சரணத்தைவிட முதல் சரணம் நன்றாக அமைந்திருக்கிறது.
"உறவுகள் தான் தொடர்கதை போன்றது, ஆனால் உணர்வுகள் சீக்கிரம் முடிந்துவிடும் சிறுகதை போன்றது. ஆனால் ஒரு கதை முடிந்தாலும் அடுத்த கதை தொடரும் எனவே இனிமேல் இன்பம் தான்" என்று சொல்கிறது பல்லவி.
"உன் நெஞ்சில் பாரம் இருந்தாலும், உனக்காக இருக்கும் நான் அதனை சுமைதாங்கியாய் தாங்குவேன், உன் கண்களின் ஓரத்தில் ஈரம் எதற்கு, உன் கண்ணீரை நான் மாற்றுவேன்", என்று தைரியம் கொடுக்கிறது முதல் சரணம்.
சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே எழுதியிருக்கிறார் கங்க்கை அமரன் நிறைய குத்துப்பாடல்கள் எழுதியிருந்தாலும் இது போன்ற சில நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். ஞாபகத்துக்கு வரும் இன்னொரு சிறந்த பாடல் ஜானி என்ற திரைப்படத்தில் வரும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடல். அதில் ஒரு வரி எழுதியிருப்பார்.
"நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்" என்று.


இசைக்கருவி-வாசிப்பவர் (கிடார்), பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், இசைக்குழுத்தலைவர், டெலிவிஷன் ஆன்க்கர் என்ற பலமுகங்கள் பல திறமைகள் இருந்தாலும் அவர் 'இளையராஜாவின் தம்பி' என்று மட்டுமே அறியப்பட்டார். அதன்பின்னர் இப்போது இயக்குநர் "வெங்கட் பிரபு"வின் தந்தை என்று அறியப்படுகிறார்.
ஏனென்றால் பல திறமைகள் இருந்தாலும் ஒரு ஃபோகஸ் இல்லாமல் போனதால் தன் தனித்துவத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. இளையராஜா என்ற மிகப்பெரிய ஆளுமையின் நிழலில் அதிகம் தங்கியதால் ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம்.
இளையராஜாவுக்கு பல திறமைகள் இருந்தாலும், அவருடைய ஒரே நோக்கம் இசையமைப்பது மட்டுமே என்பதால் அவர் பெரிதாக பேசப்படுகிறார்.
இதுபோல பல்திறமைகள் இருந்த சிலர், தனிமுத்திரை பதிக்க முடியாமல் போனதை நான் பார்த்திருக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்லமுடியும்?  Jack of all trade, Master of None என்று இருப்பதைவிட ஸ்பெஷலிஸ்ட் என்று இருப்பதுதான் நலம் என்று இதனால் விளங்கிக் கொள்ளலாம்.
பாடலின் ராகம்:
இதே மெட்டை ஒட்டி இளையராஜா பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவற்றில் நாம் முன்னரே பார்த்த "தேவன் திருச்சபை மலர்களே" ஒன்று. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் "கோடைக்காலக் காற்றே" என்பது இன்னுமொன்று.

அடுத்த வாரம் இன்னொரு பாடலில் சந்திக்கிறேன்,.வருகைக்கு நன்றி .

21 comments:

  1. வீணாய் போன கங்கை அமரன். சரியா சொன்னீர்கள் அண்ணே. இதே கருத்தை நானும் பல மாதங்களுக்கு முன் ஓர் பதிவில் எழுதி இருந்தேன். நிறைய விஷயப்கள் அறிந்தும் தனக்கென்று ஒரு பெயரை எடுக்க தவறி விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. எந்தத் துறையிலும் நிலைத்து நின்று முத்திரை பதிக்கவில்லை என்பதைத்தான் சொன்னேன் தம்பி விசு .

      Delete
  2. ஆல்ஃபி, உங்கள் பாடல் விமர்சனங்களை ரசித்துக்கொண்டு இருக்கிறோம். அருமை. கங்கை அமரன் முழு நேரக் கவிஞராய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? வாழ்வில் பல திறன் படைத்திருந்தாலும் ஒரு திறனில் மேலோங்கி நிற்பது மிக அவசியம் என்பது தெளிவாகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது ஒன்றை முழு நேரமாக செய்திருந்தால் , நிச்சயமாக பேசப்பட்டிருப்பார் .
      வருகைக்கு நன்றி ரங்கா .

      Delete
  3. எனக்கும் கங்கை அமரன் குறித்து இந்த வருத்தம் மிகவும் உண்டு.. இளையராஜா'வின் ஆளுமையால் இவர் overshadow ஆகியிருக்க வாய்ப்பு உண்டு..
    இந்த பாடலுக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா .

      Delete
  4. Gangai amaran did not become waste...he just disppeared...

    ReplyDelete
  5. எல்லாம் நேரம் தான்... ம்... என்னவென்று சொல்வது...?

    ReplyDelete
    Replies
    1. நேரத்தின் மேல் குற்றம் சொல்வது பகுத்தறிவு ஆகாது . அவரவருடைய வெற்றி அவர்கள் கையில்தான் இருக்கிறது .முயற்சி செய்பவர்களுக்குத்தான் இறைவனும்
      உதவுவான்.

      Delete
  6. ம்ம் மிகச் சரியே! ஜாக் ஆஃப் ஆல் ட்ரேட் மாஸ்டர் ஆஃப் நண். என்பது. கங்கை அமரன் மட்டும் இல்லை நம்மில் பலரும் அப்படித்தான் இருக்கின்றோம்....அதுவும் இந்தியாவில்...

    அருமையான பாடல் பற்றிய விமர்சனம். ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. முத்திரை பதிக்கவேண்டுமேன்றால் ஏதாவது ஒரு துறையில் கவனம் செலுத்த வேண்டும்

      Delete
  7. Mr.Gangai Amaran directed many blockbusters movies too.........

    ReplyDelete
  8. நண்பர் ஆல்பி,

    உறவுகள் தொடர்கதை பாடலைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் அது ஒரு நீண்ட பின்னூட்டமாக அமைத்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. என்ன ஒரு காவியப் பாடல் அது! எனது பதிவில் அதைப் பற்றி எழுத இருப்பதால் இந்த ஒரு வாக்கியம் போதும் இப்போதைக்கு என்று நினைக்கிறேன்.

    தொடர்ந்து அருமையான ஏகாந்த கானங்களை விவரிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து வரும் பாடல் என்ன என்பதை தெரிவிக்காமல் இருப்பது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சார்லஸ் அவர்கள் அடுத்த பாடலை முன்னரே குறிப்பிட்டால் ஒரு சஸ்பென்ஸ் இருக்காது .எனவே குறிப்பிடவேண்டாம் என்று சொன்னார் .

      Delete
  9. நல்ல கவிஞர் கங்கை அமரன் செந்தூரப்பூவே பாடல் அவரின் தனித்துவம் கவிக்கு ஆனால் பலதோனியில் ஏறியதில் சறுக்கல் ஆனாலும் அவரின் பெயரும் சினிமாவில் நிலைக்கும் கரகாட்டக்காரன் வெற்றிபோல! அழகான அதிகம் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. அவரின் பெயரும் சினிமாவில் நிலைக்கும் என்பதில் சந்தேகமில்லை .வருகைக்கு நன்றி தனிமரம்.

      Delete
  10. ஆல்பி சார்

    இன்னுமொரு சுகந்தமான பாடல் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் பாடல்களை கேட்காதவர்கள் தங்கள் இசை ராஜ்யத்தில் கொஞ்சம் இழந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் .

    கங்கை அமரன் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் எழுதிய ' பூந்தளிர் ஆட ' அழகான கவிதை . கங்கை அமரனின் முத்திரை . பல்கலை வித்தகர்கள் ஓடும் நதி போன்றவர்கள் . ஓரிடத்தில் தேங்கி விரிய மாட்டார்கள். கங்கை அமரனும் அப்படித்தான்!

    ReplyDelete

  11. ஆஹா இப்படி ஒரு விளக்கம் இருக்கிறதா ?
    நன்றாகத்தான் பொருந்துகிறது நன்றி சார்லஸ்.

    ReplyDelete
  12. என்னால் நம்ப முடியல கங்கை அமரன் இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதியிருப்பாரா

    ReplyDelete