Monday, December 22, 2014

இளையதளபதியின் அம்மாவின் இசை !!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா: பாடல் 14 “மாலை இளம் மனதில்"
1977ல் வெளிவந்த 'அவள் ஒரு பச்சைக்குழந்தை' என்ற படத்தில் வெளிவந்த பாடல் இது. பாடலை முதலில் கேட்போம்.
https://www.youtube.com/watch?v=3s0IEi0y4NE

இசைக்கோர்வை:
கிடார் பீசோடு ஆரம்பித்து அக்கார்டியன் இசை சேர்ந்து டிரம்சுடன் சீப்பு இன்ஸ்ட்ருமென்ட் (பெயர் தெரியவில்லை) மற்றும் புல்லாங்குழல் இசை கூவி முடிக்க பெண் குரலில் "மாலை இளம் மனதில்" என்ற பல்லவி ஆரம்பிக்கிறது. முதலாவது BGM-ல் கிடார் வந்து, பின்னர் புல்லாங்குழல் மறுபடியும் கிடார் வந்து முடிய ஆண்குரலில் "மலர் போல பெண்ணொன்று ", என்று சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM-ல் இசையின் சுதி சிறிது வேறுபட்டு செகண்ட்ஸில் ஒலித்து, அதே இசைக்கருவிகளின் காம்பினேஷனில் ஒலித்து முடிய, மறுபடியும் பெண்குரலில், "விழி மீது துங்கும் போதும்" என்று 2-ஆவது சரணம் ஆரம்பித்து முடிவில் ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து பாடி பாடல் முடிகிறது. 2-ஆவது சரணத்தின் முதல்வரி முதலாம் சரணம் போலன்றி சற்றே மாறுபட்டு ஒலிக்கிறது.
வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒலிக்கும் இந்தப்பாட்டு இளையராஜாவின் பல பாட்டுகளுக்கு முன்னோடியாகும். குறிப்பாக "இளமை எனும் பூங்காற்று" என்ற பாடலின் முன்னோடி இந்தப்பாடல் என்றும் சொல்லலாம்.  

பாடலின் குரல்கள்:
Shoba
இந்தப்பாடலை இணைந்து பாடியவர்கள் "ஷோபா சந்திரசேகர்" மற்றும் S.N.சுரேந்தர். ஷோபா, இயக்குநர் S.A.சந்திரசேகர் அவர்களின் மனைவி என்பதும் இளையதளபதி விஜய் அவர்களின் தாய் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஐந்து வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்றவர். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கலூரியில் பட்டம் பெற்றவர். இவருடைய முதல் பாட்டு M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் 1967-ல் வெளி வந்த "இரு மலர்கள்" என்ற படத்தில் " மகராஜா ஒரு மகாராணி" என்ற பாடலில் சதனுடனும் TMS உடனும் இணைந்து பாடியது .இளையராஜாவுக்கு இதுதான் முதலில் பாடிய பாடல் . நன்றாகத்தான் பாடியிருக்கிறார்.  என்ன காரணத்தாலோ பிரபலமாகவில்லை. ஷோபா பல படங்களுக்கு கதை எழுதி சிலவற்றை டைரக்டும் செய்திருக்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி  ஒன்றும் இல்லை. அதன் பின்னர் சில பாடல்கள் பாடியுள்ளார்.சில பாடல்களை ஏன் பாடினார் என்றும் தெரியவில்லை . அவை யாவன  “பொட்டிக்கடையிலே புட்டு இருக்குது (நீதியின் மறுபக்கம்),”தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா”,”கோடம்பாக்கம் ஏரியா” ,”பீர் வேணுமா பிராந்தி வேணுமா”. இப்போது சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கர்னாடிக் பாடல்கள் பாடுகிறார்.
SN Surendar
  சரி இப்ப நம்ம பாட்டுக்கு வருவோம்.இதில் எனக்குப்பிடித்தது ஷோபாவின் குரல் S.N.சுரேந்தர் அதிகமாக மூக்கில் பாடுபவர் என்பதால் அவருடைய குரல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதோடு பொன்வண்டு என்பதை பொன் வள்ன்டு என்று பாடுவதும் அறவே பிடிக்காது.ஆனால் இவர் பின்னணிப் பாடகர் என்பதைவிட நடிகர் கார்த்திக் (அலைகள் ஓய்வதில்லை) மற்றும் நடிகர் மோகன் அவர்களுக்கு பின்னனி குரல் கொடுத்து பிரபலமடைந்தார். அதோடு கங்கை அமரன் இசைக்குழுவில் பெரும்பாலும் இடம் பெற்றிருப்பார். அதற்கு மேலாக அண்ணன் தங்கை காதல் டூயட் பாடுவது என்பதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அநாச்சாரம். இதில் அவர்கள் என்ன பீலிங் கொடுக்க முடியும்.

பாடல் வரிகள்:
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மலர் போல பெண்ணொன்று மடி மீது பொன் வண்டு..
மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று..
ரதி மன்மதன்.. ரதி மன்மதன் காவியம் இதுதான் இன்று

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..

விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விழி மூடித் தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே அதுதான் வேண்டும்..
இனி என்னவோ ஓ ஓ ஓ..
இனி என்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்

மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது..மாலை..



பாடல் வரிகளை எழுதியவர் கங்கை அமரன். சந்தத்தில் திறமையாக எழுதக் கூடியவர் கங்கை அமரன். ஆனால் இவர் எழுதிய பாடல்களில் பல்லவி முதல் சரணத்தில் இருக்கும் கவித்துவம் 2-ஆவது சரணத்தில் இருப்பதில்லை. இந்தப்பாடலும் அதற்கு உதாரணம்.

குரலின் வரிகள்:

வேறு சில குறைகள் இருந்தாலும், இசையில் ராஜா எந்தக் குறையையும் வைக்கவில்லை என்பதால் இது எனக்குப்பிடித்த பாடல். 

தொடரும் >>>>>>>>>>>>>>>>

22 comments:

  1. கேட்ட பாடல், தெரியாத தகவலுக்கு நன்றி.
    எனக்கு பாடகர் சுரேந்தர் அவர்களின் குரல் மிக பிடிக்கும், சில தமிழ் உச்சரிப்புகள் தனித்து இருக்கும்.. சில பாடல்கள் அவர் குரலில் மிக நன்றாக இருக்கும்...
    சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லையா, அல்லது கிடைத்த வாய்ப்புகள் சரி வர பயன்படவில்லையா.. தெரியவில்லை..
    ஷோபா அவர்களின் திரைப்பாடல்கள் (அவர் மகன் படங்களில்) ஏன் பாடினார், அதுவும் அந்த பாடல் வரிகள்/சூழல்களுக்கு ஏன் பாடினர்.. ::???

    ReplyDelete
  2. ஏன் ஏன் ஏன் நண்பா ?

    ReplyDelete
  3. அது தான் தெரியவில்லை.. :-)

    ReplyDelete
  4. ஆமாம்... இந்த தகவல்கள் எல்லாம் எப்படி உங்களுக்கு கிடைக்கிறது...? பல தகவல்கள் அறியாதவை...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அங்கங்க பீராயின்சதுதான், திண்டுக்கல்லாருக்கு நன்றி.

      Delete
  5. ஆல்ஃபி,

    அதிகம் பேர் கேட்காத பாடல் இது. இளையராஜாவின் பாடல்தானா இது என்ற சந்தேகம் கொடுக்கக்கூடிய பாடல். எம் எஸ் வி, வி குமார் சாயல் அதிகமாக இருக்கும் இந்தப் பாடலில்.

    சுரேந்தரின் குரல் எனக்குப் பிடிக்கும். பாடகராக வர வேண்டியவர் பின்னணிக் குரல் கொடுத்து அதிலும் நடிகர் மோகனுக்கு மிகப் பொருத்தமாக பேசி பலரையும் இது மோகன் குரல் என்றே நம்பவைத்தவர். இதனால் பல வாய்ப்புக்களை இழந்ததாக அவர் சொல்லியிருந்தார் ஒரு பேட்டியின்போது. மோகன் தன் சொந்தக் குரலில் பேசியதைக் கேட்ட மக்கள் இது மோகன் குரலே அல்ல என்று ஒரே போடு போட்டு, அதன் பின் மோகனின் கோட்டை சரிந்தது உங்களுக்குத் தெரியும்தானே?

    கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் இவர் பாடிய பூவாடைக் காற்று மிக அருமையான பாடல். அதிலும் இவர் சொல்லும் லலலா கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

    ReplyDelete
  6. காரிகன்... பூ வாடைக்காற்று பாடலை பாடியது கிருஷ்ணசந்தர் என்று ஞாபகம். ஆனால் நிச்சயமாக சுரேந்தர் இல்லை. நம்பவில்லை என்றால் YouTube-ல் பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. காரிகனுக்கும் அடி சறுக்கும் என்பதை நம்பமுடியவில்லை .

      Delete
  7. ஆல்ஃபி,

    நானென்ன அவதாரமா தவறுகள் செய்யாமலிருக்க? குமார் சொல்வது உண்மைதான். அது கிருஷ்ண சந்தர்தான். இதுதான் அவருக்கு முதல் படம்.( என்று நினைக்கிறேன்.) தவறான குறிப்புக்கு வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். மற்றும் குமார் அவர்களுக்கு எனது நன்றி.

    ReplyDelete
    Replies
    1. திரு.காரிகன் நீங்கள் நிறையவே தவறாக பதிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக இளையராசா இசை குறித்து

      Delete
  8. நல்ல பாடல்.... ரசித்தேன் நண்பரே....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  9. சுரேந்தர் குரல் பிடிக்கும் ஊமைவிழிகள் படத்தில் மாமரத்து குயில் பாடல் என் ராசாவின் மனசில் படத்தில் வரும் பாரிஜாதப்பூவே எல்லாம் சிறப்பாக பாடியிருக்கின்றார்! இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலித்தது ஒருகாலத்தில் மீண்டும் நினைவூட்டியதுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. தங்கள் வருகைக்கு நன்ற.தனிமரம்.

    ReplyDelete
  11. Dear Alfy, Just found your blog and have started liking it. Like others I too like SN Surendar's voice in both singing and dubbing.

    If you don't like nasal voices does that mean you dislike TMS' voice too?

    ReplyDelete
    Replies
    1. ஹை பிச்சில் கேட்பதற்கும் லோ பிச்சில் கேட்பதற்கும்
      வித்யாசம் இருக்கிறது.
      தவிர எல்லாப்பாடல்களும் அப்படி இல்லை ,Thanks Ravi

      Delete
  12. ஆல்பி சார்

    நல்ல பாடல். ஹிட் ஆகவில்லை. காரணம் சரியாக சொல்ல முடியாது . மக்களின் மனதை கொள்ளையிடவில்லை .

    இளையராஜா ஆரம்பத்தில் ஷோபா குடும்பம் நடத்திய இசைக் குழுவில் கீ போர்ட் வாசித்துக் கொண்டிருந்தார் என்பதை ஷோபா சந்திரசேகர் ஸ்பெசல் குமுதத்தில் வாசித்த ஞாபகம் . இசையமைப்பாளராக ஆன பிறகு பழகிய பாசத்திற்காக ஷோபா மற்றும் சுரேந்தர் இருவருக்கும் வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். மற்றபடி ஷோபாவும் நல்ல பாடகிதான். Legends மத்தியில் அவரால் ஒளிரமுடியவில்லை .

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று நினைத்தேன் .தகவலுக்கு
      நன்றி சார்லஸ்.

      Delete
  13. ஷோபா சந்திரசேகர் அவர்களின் தாய் மொழி தெலுகு தானே ஒரு சிறு அய்யம்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை அவர்கள் தமிழ்தான் .முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள்

      Delete
    2. தெலுகு வழி இசை வேளாளர் எனும் முதலியார் தானே ?

      Delete
    3. அவ்வளவு ஆழமாக போகனுமா என்ன ?

      Delete