இறைமைந்தன்
இயேசு, நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
பிறந்து அன்பும் சமாதானமும் உலகில்
பரவ அருள் புரிவாராக .
அடியேன்
எழுதி மெட்டமைத்த கிறிஸ்மஸ் பாடல்களில் ஒன்றை கீழே தருகிறேன்.கேட்டு
மகிழுங்கள்.
ஒரு நாள் ஒரு நாள்
அதிகாலை
குளிரும்
பனியும் சூழ்ந்த வேளை
ஒளிர் வெள்ளிகள் முளைத்த வேளை
விடி வெள்ளியாய் உதித்த பாலன்
அவர் நாமம் நாமம் அதிசயம்
அவர் வல்லமை தேவ ரகசியம்
அவர் ஆலோசனையின் கர்த்தரே
அவர் சமாதான அரசரே
ஆதாம் மூலம் பாவம் வந்தது
அதனால்
ஆண்டவர் தொடர்பும் அறுந்தது
அந்த இருளை நீக்க ஒளியும் பிறந்தது
வந்து அருளும் மீட்பும் அன்புடன் தந்தது -அவர் நாமம்
நாமம்
ஆதி வார்த்தை வடிவம் கொண்டது
அன்பின்
உருவாய் அகிலம் வந்தது
கடும் அலகை நீக்க அருளும்
பிறந்தது
நம் ஆண்டவர் இயேசுவின் உருவில்
உதித்தது -அவர் நாமம் நாமம்.
அருமை... இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன் உங்களுக்கும் உரித்தாகுக .
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி மதுரைத்தமிழன்.
Deleteபாடல் அருமை சகலகலா வல்லவர் நீங்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.. பாராட்டுக்கள்
ReplyDeleteஉண்மையே.. :)
Deleteஇதை நான் வழிமொழிகிறேன்!!!
பாடலை நீங்கள் ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
Deleteஅண்ணே .. அருமையான இதமான பாடல் .... உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் .....😃
ReplyDeleteமிக்க நன்றி ANaND.
Deleteஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteAlfy. Nice way of telling X Mas. Good song. Congrats
ReplyDeleteThanks Inba, Merry Christmas to you and to your family.
Deleteஆல்பி சார்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் . நீங்கள் எழுதி இசையமைத்த பாடல் கேட்க நன்றாக இருந்தாலும் கிறித்துவப் பாடலுக்கென்று உள்ள இசை இல்லாமல் சினிமா இசை போன்ற அமைப்பில் உள்ளதாக நான் கருதுகிறேன் . சினிமா இசை பாதிக்காத பாடலாக அடுத்த பாடல் முயற்சியுங்கள். நீங்கள் பல்கலை வித்தகர். வாழ்த்துக்கள்.