Wednesday, December 10, 2014

கஷ்டம்டா சாமி !!!!!!!!!!!!

Indian-Passport-Renewal-or-Re-issue-Documents-list

சில நாட்களுக்கு முன்னால் எனது இந்திய பாஸ்போர்ட் காலாவதி (சரியாக படிக்கவும் ) ஆவதால், அதனை புதுப்பிப்பதற்காக எடுத்து வைத்தேன்.
பத்து வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். என்னிடம் இப்போது மொத்தம் இரண்டு பாஸ்போர்ட் இருக்கின்றன. முதலில் வாங்கியது. பின்னர் 10 வருட முன்னால் நியூயார்க்கில் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் ஆகியவை.
அதனை எடுத்துப்பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. 90 களில் வாங்கிய முதல் பாஸ்போர்ட்டில் இருந்த என் புகைப்படத்தில் இருந்த என்னை எனக்கே அடையாளம் தெரியவில்லை. அதன் பின்னர் 96ல் சிங்கப்பூர், மலேசியா போகும்போது எடுத்த விசாவில் கண்ணாடி போட்ட என்முகம். பின் US விசாவில் இருக்கும் சூட் அணிந்த சற்றே கனவு காணும் கலவர முகம். நியுயார்க்கில் 2004ல் புதுப்பிக்கும்போது எடுத்த கொஞ்சம் கான்பிடன்ஸ் கூடிய முகம். அதன்பின் இப்போது எடுத்த போட்டோவில் பார்த்தபோது, என்முகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று நினைத்து ஆச்சரியமாயிருந்தது.
90களில் இருந்த பால்வடியும் முகம் இப்போது தோல்வடியும் முகமாக மாறியிருந்தது. வயதின் கோடுகள் என்றும் சொல்லலாம், அனுபவ ரேகைகள் என்றும் சொல்லலாம்.
சரிவிடுங்க, என்னுடைய முக ஆராய்ச்சியில்லை இந்தப் பதிவு. பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போன இடத்தில் சந்தித்த சில சுவாரஸ்ய மனிதர்களைப் பற்றிய அக ஆராய்ச்சி இது.
அனுதினம் அதிகரிக்கும் இந்தியர்களின் தேவைகளைச் சந்திக்க முடியாமல் திணறிய நியூயார்க்கில் உள்ள இந்திய கான்சுலேட், விசா வழங்குதல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை அவுட்சோர்ஸ் செய்து, பி.எல்.எஸ் இன்டர்நேஷனல் (BLS International) என்ற கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. எனவே இப்போது புதுப்பிக்கும் கட்டணத்தோடு, பி.எல்.எஸ் நிறுவன சேவைக்கட்டணமும் கட்ட வேண்டும்.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு தனியாக ஒரு இடம் இருந்தது. அட்ரஸைப் பார்த்தால் எங்க ஆஃபிசுக்கு அடுத்த தெரு, வெரிகுட்.
ஆன்லைனில் அப்ளை செய்துவிட்டு அப்பாய்ண்ட்மெண்ட் புக் செய்தேன். ஒரு மாதம் கழித்துத்தான் தேதி கிடைத்தது. தேவைப்பட்ட எல்லா டாக்குமென்ஸ்ஸையும் ரெடி பண்ணி போனேன்.

போனவுடன் டோக்கன் பெற்றுக்கொண்டு உட்கார்ந்தேன். கவுன்ட்டரில் மொத்தம் நான்கு பேர். அதில் மூன்றுபேர் இந்தியர் ஒரு ஆப்பிரிக்க இளைஞன். இந்திய பாஸ்போர்ட் ஆபிசில் ஆப்பிரிக்கரா என்று நினைத்து சிரித்துக்கொண்டே உட்கார்ந்தேன்.
ஏற்கனவே ஒரு 20 பேர் காத்திருந்தனர். கவுன்ட்டருக்கும் உட்காருமிடத்திற்கும் அதிக இடைவெளி இல்லாததால் அங்கு நடப்பவற்றை பார்க்க மட்டுமல்லாது கேட்கவும் முடிந்தது.
இதோ உங்களுக்காக அவர்களின் கேஸ் ஸ்டடி.
முதல் அவலம்:
முதல் கேசே நம்ம ஜாதி. ஐ.டி (IT) ஐத்தான் அப்படி சொன்னேன். இளைஞன் H1B யில் இருக்கிறான். என்ன பிரச்சனை என்றால் பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டான் இப்போது நடந்த உரையாடலைக் கவனியுங்கள்.
பாஸ்போர்ட்டை எங்கே தொலைத்தீர்கள்?
"தெரியாது"
எப்போது எடுத்தது, நம்பர் ஏதாவது இருக்கிறதா?
"இல்லை".
"ஏதாவது நகல்கள் இருக்கிறதா?"
"இல்லை"
போலிஸில் கம்ப்ளைன்ட் செய்தீர்களா?
"இல்லை"
"தொலைந்தால் என்ன செய்வது என்று இந்திய கான்சுலேட் வெப் சைட்டில் போட்டிருக்கிறோமே"
"பார்க்கவில்லை"
"முதலில் போலிஸ் கம்பிளைன்ட் செய்துவிட்டு, வெப்சைட்டில் உள்ள விவரங்களை பார்த்துவிட்டு மறுபடியும் வாருங்கள்"
"சரி"
சரி உங்கள் கம்பெனியில் விசா எடுக்கும்போது பாஸ்போர்ட் காப்பி கொடுத்திருப்பிர்கல்லவா?
"அட ஆமாம்"
அதையும் வாங்கிக் கொண்டு, வாருங்கள்"
ஓகே, தேங்க்ஸ். அப்ப இந்தியாவுக்குப் போக முடியாது.
"முடியாது"
என் கல்யாணம்?
 தள்ளிப்போடனும்.


நீதி: ஐயாமார்களே பாஸ்போர்ட்டை லாக்கரில் வையுங்கள், சும்மா கையில் வைத்துக்கொண்டு சுற்றாதீர்கள். சில நகல்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அவலம் 2:
           சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?.
"பாஸ்போர்ட்  புதுப்பிக்கவேண்டும்"
"இது யாருடைய பாஸ்போர்ட்"
"என் கணவரின் பாஸ்போர்ட்"
"என்ன விசாவில் வந்தார்"
பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் (Performing Arts)
"காட்டுங்கள்"அட விசாவும் எக்ஸ்பயர் ஆகிவிட்டதே"
"ஐயோ, பார்க்கவில்லையே"
"நீங்கள் என்ன விசாவில் இருக்கிறீர்கள்".
"அதே விசாதான்".
"அப்ப உங்களதும்?”
"ஆமா இப்பத்தான் பார்க்கிறேன்."
நீங்கள் நாட்டில் இருக்க முடியாது, பாஸ்போர்ட் இங்கே புதுப்பிக்கவும் முடியாது. அவரை வரச்சொல்லுங்கள், கான்சுரிடம் விண்ணப்பம் செய்தால், தற்காலிக பாஸ்போர்ட் தருவார்கள். அதை வைத்து இந்தியாவிற்குச் செல்லுங்கள். ஓவர் ஸ்டே பண்ணதால் நீங்கள் அமெரிக்காவுக்கு இனிமேல் வரமுடியாது.
நீதி: உங்கள் விசா எக்ஸ்பயர் ஆகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே இங்கு இருந்துவிட முடியாது. மறுபடியும் திரும்பி வரவே முடியாது.

அவலங்கள் தொடரும் >>>>>>>>>>>>


பின்குறிப்பு : இன்று மாலை அலுவல் வேலையாக ஆஸ்டின் , டெக்சஸ் செல்வதால் நாளை வரவேண்டிய பதிவு இன்றே வருகிறது .மறுபடியும் திங்களன்று சந்திக்கலாம் .
நண்பர்களின் கவனத்திற்கு , என்னுடைய பதிவுகள் வாரமிருமுறை , பிரதி திங்கள் மற்றும் வியாழன் தோறும்  வருகிறது .உங்கள் தொடரும்  ஆதரவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

8 comments:

  1. ஐயோ ... ஐயோ ! இந்த பாஸ்போர்ட் விஷயத்தில் இங்கே என்ன நடந்தது என்று நான் எழுத ஆரம்பித்தால் , அதை வைத்து ஒரு 50 பதிவே போடலாம் !

    என்ன தான் சொல்லுங்க ! இவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த முதலாவதாக வந்த ஆளுக்கு ஒரு நல்ல காரியம் நண்டந்து இருக்கு.

    புரியிலையா? ஒன்னும் இல்ல, காணாலாம் ஒரு ரெண்டு மாதம் தள்ளி போச்சே அதை தான் சொன்னேன். இன்னும் கொஞ்சம் நாளைக்கு அவர் சந்தோசமா இருப்பார் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. என்னடாது , நானே எனக்கு போட்டியை உருவாக்கிட்டேனோ?

      Delete
  2. அனைவருக்கும் ஒரு பாடம்...!

    எப்படியோ இந்த முறை நம்ம ஊருக்கு வர்றீங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு வருவது விரைவில் நடக்கும்.உங்களைபார்க்காமல் திரும்பமாட்டேன் .திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  3. எனது இந்திய பாஸ்போர்ட் காலாவதி அப்படினா ? வேறுநாட்டு பாஸ்போர்ட் இருக்கா ?

    90களில் இருந்த பால்வடியும் முகம் உண்மைதானே,, நானும் நம்பிட்டேன் நண்பா.

    பயனுள்ள பதிவு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இருப்பது இந்திய பாஸ்போர்ட் மட்டும்தான் என்பதைத்தான் அப்படி எழுதியிருந்தேன் .கில்லர்ஜீ .90 களில் நிச்சயமாக பால் வடியும் முகம்தான் , பருக்களிளிருந்து .

      Delete
  4. Replies
    1. நல்ல அனுபவமா , இல்லை இல்லை கெட்ட அனுபவம் வெங்கட்

      Delete