எழுபதுகளில் இளையராஜா: பாடல் எண்: 36
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/spb.html
1979ல் வெளிவந்த 'லட்சுமி' என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து ஹிட்டான
பாடல் இது.இதோ அந்தப்பாடல் லிங்க்
பாடலின் பின்னணி:
தன் திருமணத்தை எண்ணி கனவு காணும் கன்னிப்பெண்
ஒருவள் பாடுவது போல அமைந்த துடிப்பான பாடல். கன்னி என்ற கான்செப்ட் இந்தக்
காலத்தில் பதமிழந்து போனதால் நான் கன்னி என்று குறிப்பிவதை திருமணமாகாத பெண் என்று
எடுத்துக் கொள்ளவும்.
இசையமைப்பு:
![]() |
இளையராஜாவுக்கு கைவந்த கலையான கிராமிய இசையை
தன்னுடைய மேட்டில் அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். பலவிதமான வெஸ்டர்ன்
இசைக்கருவிகள் பயன் படுத்தப்பட்டிருந்தாலும் பாடல் அந்த கிராமிய மணத்திலிருந்து
கொஞ்சம் கூட விலகாமல் ஒலிக்கிறது. முழுவதுமாக பெண் குரலில் ஒலிக்கும் சோலோ பாடலான
இது ம்ம்ம் என ஹம்மிங்கில் ஆரம்பித்து ரரிரரிரா ரரிரரிரா என்ற தாலாட்டு போல
ஒலிக்கும் ஹம்மிங்கில் முடிய, அதோடு புல்லாங்குழல் வயலின், செண்டை மேளம் ஒழிக்க, “மேளம் கொட்ட நேரம் வரும்”, என்று பல்லவி ஆரம்பிக்கும் போது தபேலா சேர்ந்து கொள்கிறது. முதல் பீஜிஎம்மில்,
கீ போர்டு , புல்லாங்குழல் , பெல்ஸ், பேஸ் கிட்டார் ஆகியவை கலந்து
கட்டி தாளம் போட்டு அப்படியே மகிழ்ச்சி மூடில் தொடர "ஆல
வட்டம் போடு தடி" என்று சரணம் ஒலிக்கிறது. 2-ஆவது
பிஜிஎம்மில் வயலின் குழுமம் அப்படியே ஆரோகரித்து தலைமையேற்க அதோடு இணைந்து
கீபோர்டும் தாளத்திற்கு கடசிங்காரியும் இணைந்து இடத்தையும் காதையும் நிரப்ப 2
ஆவது சரணம் "ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு" என்று
ஆரம்பித்து இறுதியில் மீண்டும் ஹம்மிங் வந்து பாடல் நிறைவு
பெறுகிறது.
பாடலின் வரிகள்:
மேளம்
கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலையிட போறவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலையிட போறவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்
![]() |
ஆலங்குடி சோமு |
கிராமிய மெட்டுக்கு ஒத்த அருமையான பாடல் வரிகளை
எழுதியவர் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள்.
இவர் பழைய காலத்து ஆள். எம்.எஸ்.வியிடம் அநேக சிறப்பான பாடல்களை
எழுதியிருக்கிறார். "ஆண்டவன் உலகத்தின் முதலாளி", "தாயில்லாமல் நானில்லை", உள்ளத்தின் கதவுகள்
கண்களடா”, போன்ற பல கருத்துள்ள தத்துவப்பாடல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய
"பொன் மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள்"
என்றபாடல் ஆல்டைம் ஃபேவரைட். தன் மனைவி இறந்த சமயம் எழுதிய "மலை சாய்ந்து
போனால் சிலையாகலாம்" என்ற பாடல் சிறப்பான வரிகளைக் கொண்டது .
இந்தப்பாடலிலும் மெட்டில் ஒட்டும் உறுத்தாத
வரிகளை கிராமியக் கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறார். "ஆலவட்டம் போடுதடி
நெல்லுப்பயிறு, ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து" என்ற
வரிகளிலும், "ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு
காத்திருப்பேன், ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம்
முடிப்பேன்" என்ற வரிகளிலும் கவிஞரின் எளிய கவிதை மனம் வெளிப்படுகிறது.
பாடலின் குரல்:
B.S SasiRekha |
முழுவதும் பெண் குரலில் வரும் சோலோ பாடலான
இந்தப் பாடலைப் பாடியவர், B.S. சசிரேகா. இனிமையான
குரலைக் கொண்ட சசிரேகா, இளையராஜாவுக்கு ஏராளமான பாடல்களைப்
பாடினாலும் பெரும்பாலானவை ஹிட் ஆகவில்லை. "வாழ்வே மாயமா? வெறுங்கனவா", “என் புருஷந்தான் எனக்கு
மட்டும்தான், "செவ்வானமே பொன்மேகமே " போன்றவை
விதிவிலக்குகள். A.R ரகுமானுக்குப் பாடிய, “மானூத்து மந்தையில”, பாடலும் ஹிட் ஆனது. மனோஜ்கியான், T. ராஜேந்திரர்
போன்ற பல இசையமைப்பாளர்களுக்கு பாடியிருக்கிறார். இவரின் சிறப்பான தமிழ்
உச்சரிப்பு போற்றத்தகுந்தது. ஆனால் மக்கள் இவரை மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறன்
.
இந்தப் பாடலில் மறுபடியும் கிராமிய
மணத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் இளையராஜா.கேட்க இனிமையான இந்தப்பாடலின்
மெட்டு, வரிகள், குரல் என்று எல்லாமே
கச்சிதமாகப் பொருந்துகிறது. இளையராஜாவின் ஆரம்பக்கட்டமென்றாலும் பாடலின் பல இடங்களில்
இளையராஜாவின் தனித்துவம் வெளிப்படுகிறது. மனதை வருடும் இந்தப் பாடலை எப்போது
வேண்டுமானாலும் கேட்கலாம்
-தொடரும்.
நல்ல பாடல்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் .
Deleteஏதோ வீடியோ க்ளிப் இணைத்தீர்கள் அதனால் பாட்டை கேட்டு ரசித்தேன்....
ReplyDeleteஆஹா மதுரைக்காரர்களின் ரசனையே தனிதான்
Deleteமந்திர இசைக்கு மந்திர விமர்சனம் !
ReplyDeleteமந்திரமோ தந்திரமோ எந்திரம் போல் எழுதுகிறேன் என் திறம் அவ்வளவுதான் .
Deleteஇந்த விசித்திர எந்திரத்தை சரித்திரத்தில் சித்திரமாய் பொறித்து விடலாமா:)
Deleteஅய்யய்யோ அதுக்குள்ளயா?
Deleteஅப்படி சொல்லவில்லை.. நீங்கள் ஒரு வாழும் சரித்திரம்..
Deleteசரித்திரமா இல்லை தரித்திரமா என்பது வாசகர்களுக்கே வெளிச்சம்
Deleteஆல-ஆள
ReplyDeleteபாக்கு-பாக்க
அருமையான பாடல்.. வழக்கம் போல் உங்கள் ரசனையான வரிகளும் அருமை...
உங்கள் ரசனையை மிஞ்சியதல்ல என் ரசனை நண்பா.
Delete