Thursday, December 24, 2015

பரதேசியின் விடுமுறை

அன்பு நண்பர்களே ,
வேலைப்பளு காரணமாக இந்த மாதத்தில் நான் உங்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை .
இப்போது வேலை மற்றும் விடுப்பு இரண்டையும் ஒன்றிணைத்து , சீனா ( பெய்ஜிங்)  , இலங்கை ( கொழும்பு) , இந்தியா ( சென்னை, மதுரை,திண்டுக்கல், திருநெல்வேலி,மைசூர்,பெங்களுர் ) ஆகிய ஊர்களுக்கு வருகிறேன் .இந்தியாவில் வரும் ஜனவரி 6 முதல் 19 வரை இருப்பேன்.
சந்திக்க விரும்பும் நண்பர்கள் எனக்கு alfred_rajsek@yahoo.com என்ற  ஈமெயில் அனுப்பவும்.
நான் நியூயார்க் வரும்வரை என்னுடைய பதிவுகள் வராது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
ஆனால் விரைவில் திரும்பி பதிவுகளை தொடர்வேன் .

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Thursday, December 17, 2015

சென்னையில் வெள்ளம் : வாட்ஸ் அப்பில் ரசித்தவை !!!!!!!!!!!!!!


Velacheri

தமிழகத்திற்கு காவிரியில் இருந்த நீர் திறக்க முடியாது - கர்நாடகா பதில் மனு தாக்கல்.
வேளச்சேரியில நிக்கிற தண்ணிய வச்சு வேல்டுக்கே சப்ளை பண்ணுவோம், போவியா !!!



மழைத் தண்ணி ரொம்ப தேங்கி இருப்பதால நான் ஆபிசுக்கு வர முடியாது, லீவு வேணும்.
பாஸ்:- உன்னோட பயோடேட்டால உன் ஹாபி ஸ்விம்மிங்னு  போட்டிருந்தேல்ல, ஆபிஸ் வந்து சேரு சீக்கிரமா.



ஜெயலலிதா மைன்ட் வாய்ஸ்:- தண்ணில சம்பாதிச்ச பணம் தண்ணியிலேயே போயிரும் போல இருக்கு.

மக்கள் மைன்ட் வாய்ஸ்:- இன்னிக்காவது பனியன் ஜட்டி காயுமா?



வாடிக்கையாளர் : என்னப்பா இது ரெண்டு இட்லி , ஒரு வடை கொண்டு வர ரெண்டு மணி நேரமா?
சர்வர் : இட்லியும் வடையும் ரெடியா இருக்கு , அம்மா பட ஸ்டிக்கர் வரத்தான் நேரமாகுது.


வருணன் : நான் இது வரை 350 சென்டிமீட்டர் மழை பெஞ்சிருக்கேன்
ரமணன் :இல்லை 340 தான்
வருணன் :பொய் சொல்ற , பெஞ்ச எனக்குத்தெரியாதா ?
ரமணன் :அளந்த நான் பொய் சொல்றேனா ? 340 சென்டிமீட்டர் தான்.
வருணன் : மறுபடியும் சொல்ற , சரி எல்லாத்தையும் அழி, நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.
 ரமணன் : ????????????????










  முற்றும் 



Tuesday, December 15, 2015

சென்னை வெள்ளம் - உன் குத்தமா என் குத்தமா?



பரதேசி: இந்த வெள்ளப் பெருக்கத்திற்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

அதிமுக பிரமுகர்:
இதற்கு தி.மு.க ஆட்சிதான் காரணம். அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டார்கள். சரி சரி நான் பிசியாய்  இருக்கேன் , அப்புறம் வாங்க
 “டேய் சீக்கிரம் ஸ்டிக்கரை ஒட்டுரா:
அது  நம்ம பொருள் இல்லண்ணே”
“அப்ப ரெண்டு பக்கமும் ஸ்டிக்கரை ஒட்டுரா, அடுத்த வாட்டி நாம நிச்சயமா வரப்போறதில்ல, வந்தாலும் அமைச்சராவதும் நிச்சயமில்லை, இந்த வெள்ளத்திற்குத்தான் நன்றி சொல்லணும், முடிஞ்ச அளவுக்கு 2-3 தலைமுறைக்கு சொத்தைச் சேர்க்கணும்.

கருணாநிதி : நீங்கள் வெள்ளத்தில் இருந்தாலும் என் உள்ளத்தில் இருக்கிறீர்கள்.( (நல்ல வேளை என் வீடு பள்ளத்தில் இல்லை)

ஜெயலலிதா :
வாக்காளப் பெருமக்களே, உங்கள் அன்பு சகோதரியான நான் இருக்கிறேன், எதற்கும் கவலை வேண்டாம் (நெலமை மோசமாத்தான் இருக்கு, ஹெலிகாப்டரை  ரெடி  பண்ணி, கொட நாட்டுக்கு விடு)

மு.க.ஸ்டாலின்:
இந்த அரசு, கலெக்சன் கமிஷன் என்று இருக்கிறது, ஆனால் எலக்சன் என்று ஒன்று வருகிறது. (அந்நியச் செலாவணி வழக்கும் வரும்போல இருக்கே)
வைகோ:
இந்த கோயபல்ஸ் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கிறேன். ஜெயலலிதா அம்மையார் இலங்கைத் தமிழருக்கு நன்மை செய்திருக்கிறார். அவரை எதிர்க்க வேண்டாம். இந்த இரண்டு கழகங்களும் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டன. இதனைக் கண்டித்து என் தம்பிகள் புடைசூழ நடைப் பயணம் இதோ கிளம்பி விட்டேன்.
“அண்ணே நடக்க ரோடே இல்லை, முழுசா தண்ணி தேங்கியிருச்சு, வேணா போட்ல போகலாம்”
என்னை நடக்கவிடாதபடி அமெரிக்கா சதி செய்கிறது”.

நரேந்திரமோடி:

என்னது சென்னைக்குப்போவனுமா? செக்ரட்டரி சென்னைக்குப் போக முடியுமா? இல்லை ஜி இன்னும் மூணு வருஷத்திற்கு உங்க டிராவல் புக்குடு.
ஆமாமா இன்னும் பார்க்காத நாடு பல இருக்கு, என்னாது வெள்ளப் பெருக்கத்திற்கு யாரு காரணமா அது வேற யாரு காங்கிரஸ் தான், இத்தாலி நாட்டு சதிதான்.

சொர்க்கத்தில் ( ?): 

MGR:  என்ன இப்படி ஆயிருச்சு, நீங்க அணை கட்டினீங்க சரி, டிரைனேஜ் கட்டவேயில்லையே?

காமராஜர்: அதான் என்னை வரவிடலையே. அதெல்லாம் வெள்ளைக்காரனை கேட்கனும். ஆகட்டும் பார்க்கலாம் அடுத்த ஜன்மத்தில.


வெள்ளைக்காரன்: ஏன் என்ட்ட கேக்கற, ஜார்ஜ் கோட்டைக்குள்ளே தண்ணி வராம கட்டிட்டோம்ல.ஆற்காடு நவாபைக் கேளுப்பா, எல்லாத்துக்கும் நான் தான் கிடைச்சேனா.
Arcot Nawab

ஆற்காடு நவாபு: நான் அங்கே  இங்கே ஓடி ஒழியவே நேரம் பத்தாம இருந்துச்சு இதெல்லாம் எனக்கு முன்னால ஆண்ட நாயக்கரைக் கேளுங்க.

நாயக்கர்: ஐயா எனக்கு எதுவுமே தெரியாது, பல்லவனைக் கேளு, வெறும் பாறையை மட்டும் குடைஞ்சிட்டு இருந்தாரு, இதெல்லாம் பாக்கனுமில்ல.

பல்லவன்: யோவ் நான் இருந்தப்ப சென்னைன்னு ஒண்ணு இல்லவே இல்லை. இருந்த ஆறு குளம் ஏரி எல்லாத்திலும் வீடு கட்டிட்டு, இருந்த எல்லா கிராமத்தையும் ஒன்னாச்சேர்ந்து நகரம் ஆக்கினீங்களே, அதான் இப்ப நகரம் நரகம் ஆயிருச்சு.

- ஆண்டவனே இதுக்கு முடிவோ தீர்வோ எதுமேயில்லையா?.


Friday, December 4, 2015

மாமழை தூற்றுதும் மாமழை தூற்றுதும் !!!!!!!!!!!!!!!!!!!!!


           மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று  சொன்ன காலம் போய்
மாமழை தூற்றுதும்  மாமழை தூற்றுதும்  என்ற காலத்தில் உள்ளது நம் சென்னை
 நகரம்.
தமிழ்  மக்களின் உண்மையான உதவி செய்யும் குணம்  இதன் மூலம் வெளிப்பட்டு, மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும்   விதத்தில்  அமைந்துள்ளது துயரத்திலும் ஒரு ஆறுதல்.உதவிக்கு  தொலைபேசி எண்களில் சிலவற்றை தொகுத்து கீழே தந்துள்ளேன்.இறைவன் இதற்கு மேலும் சோதிக்காமல் , மழையை நிறுத்தி மக்களை காப்பாராக

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் எந்த உதவிக்கு, எந்த எண்ணில் அழைக்கலாம் என விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த உதவி எண்களை பயன்படுத்தி உதவி பெறுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
*
கழிவுநீரை வெளியேற்ற - 45674567...
* விழுந்த மரங்களை அகற்ற, நீர் தேங்கி இருந்தால் - 1913
 * தீ மற்றும் மீட்பு பணிக்கு - 101
 * மின்சார உதவிக்கு - 1912
 * மாவட்ட அவசர உதவி எண் - 1077
 * மாநில அவசர உதவி எண் - 1070



சென்னை நகரில் மழை பாதிப்பு அவசர உதவிக்கு 1800 4251914 மற்றும் 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
 * மரம் விழுதல் மற்றும் மழை நீர் தேக்கம் - 1913,
மாவட்ட அவசர எண் - 1077,
மின்சாரம் - 1912,
 தீ மற்றும் மீட்பு - 101...
 * திருவள்ளூரில் அவசர உதவிக்கு 044 - 27665332 என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்....
 * காஞ்சிபுரத்தில் அவசர உதவிக்கு 044 - 27237107, 207 ஆகிய எண்களிலும், தாம்பரத்தில் 94450 51077, 74017 64105 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்...
 * திருவொற்றியூர் - 94451 90001, மணலி - 94451 90002, மாதவரம் - 94451 90003, தண்டையார்பேட்டை - 94451 90004 மற்றும் ராயபுரம் - 94451 90005 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்...
 * திரு.வி..நகர் - 94451 90006, அம்பத்தூர் - 94451 90007, அண்ணாநகர் - 94451 90008, தேனாம்பேட்டை - 94451 90009 மற்றும் கோடம்பாக்கம் - 94451 90010 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
 * வளசரவாக்கம் - 94451 90011, ஆலந்தூர் - 94451 90012, அடையார் - 94451 90013, பெருங்குடி - 94451 90014 மற்றும் சோழிங்கநல்லூர் - 94451 90015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சர்வீஸ் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
படகு உதவிக்கு அழைக்கவும் : தேனாம்பேட்டை - 9445190009 ஆலந்தூர் - 9445190012 வலசரவாக்கம்- 9445190011
ராயபுரத்திலுள்ளோர், 9445190005, திருவிக நகர் பகுதிக்கு, 9445190006, அம்பத்தூர் பகுதிக்கு 9445190007, அண்ணா நகருக்கு 9445190008 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாட

படகு
சர்வீஸ் தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்- 7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.

சென்னை & கடலூர் நண்பர்கள் கவனத்திற்கு
திருப்பூரில் 4பனியன் நிறுவனம் ஆடைகள் கொடுக்க தயாராக உள்ளது.மோகன்  - 88833-22133 #ChennaiRainsHelp

 சென்னை-புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பாலுக்கு நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள்-குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆவின் பால் தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக, சென்னை மாநகரம்-புறநகரப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், 98403 87510, 98409 07494, 94439 44908 ஆகிய செல்போன்எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளனர். 'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என கேட்டுக் கொண்டு உள்ளனர்.

ஸ்கைப் அறிவிப்பு :இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் - தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக அமுல்படுத்துகிறோம்.கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில் இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.





Tuesday, December 1, 2015

நியூயார்க்கில் சூப்பர் சிங்கர் ஜெஸிக்கா!!!!!!!!!!!!!!!!


தீபாவளித்திருநாளைக்  கொண்டாடும் முகத்தான், நியூயார்க் தமிழ்ச்சங்கம், கடந்த 15ஆம் தேதி (நவம்பர் 15, 2005) ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியது. சூப்பர் சிங்கர்கள் திவாகர், சோனியா, தீபக் இவர்களோடு, ஈழத்து  இளங்குயில் ஜெஸிக்கா ஜூட் வந்தது ஹைலைட். கோபாலும் வந்திருந்தார், அதோடு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்ஸ், ஆனந்தி, அமுதவாணன் மற்றும் பிரியா வந்திருந்தார்கள்.


வழக்கம்போல் பரதேசி ஆஜர். பொருளாளர் ரங்கநாதன், அவர் மனைவி, நண்பர் சிவபாலன், அவர் மனைவி, செயலாளர் ராம்மோகன் அவர் மனைவி, முன்னாள் தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை, அவர் மனைவி ஆகியோர் வரவேற்றனர்.
ஃபிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்ப்பிள் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழர் கூட்டம் ஜிலுஜிலுவென திரண்டு வந்திருந்தது. குறிப்பாக ஜெஸிக்காவைப் பார்க்க இலங்கைத் தமிழரும் திரளாக வந்திருந்தனர்.

3 மணிக்கு ஆரம்பமாவதாக விளம்பரப்படுத்தியிருந்தும் வழக்கம்போல் நான்கு மணிக்கு ஆரம்பித்தது. திடீரென்று சில பெண்கள் மேடையில் தோன்றி எந்த அறிவிப்புமின்றி 'தமிழ்த்தாய் வாழ்த்து' 'நீராரும் கடலுடுத்த' பாட, ஒரு சிலர் மட்டும் எழுந்து நின்றனர். என் வரிசையில் நான் மட்டும்தான் எழுந்து நின்றேன்.மற்றவர் எழுவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது பாடல் முடிந்துவிட்டது. அடுத்து வந்த பெண், "ப்ளீஸ் ரைஸ் ஃபார் நேஷனல் ஆன்தெம் " என்று தெளிவாகச் சொல்ல இப்போது அனைவரும் எழுந்து நிற்க, அமெரிக்க தேசீய கீதத்தை மிக அருமையாக பாடினாள். அதன் பின்னர் தலைவர் விஜயகுமார் வந்து வணக்கம் கூறி  மறைந்த தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த வேண்டி, எல்லோரும் மீண்டும் எழுந்துநின்றோம்.
அதே ஆடிட்டோரியத்தில் கலாம் வந்து உரையாற்றியதை முன் வரிசையில் இருந்து பார்த்து அனுபவித்தது, கண்முன் வந்து போனது.
நியூஜெர்சியின் வசந்த் வசீகரனின் இசைக்குழு மேடைக்கு வந்தது. கீபோர்டில் வசீகரன், ஒரு புல்லாங்குழல் கலைஞர்டிரம்ஸ், ஒரு பேஸ் கிட்டார், ஒரு தபேலா இவ்வளவுதான் இசைக்குழு. லீட் கிட்டார் இல்லாதது மிகப்பெரிய குறையாகத் தெரிந்தது. புல்லாங்குழல் தவிர லீட் இன்ஸ்ருமென்ட்  எதுவும் இல்லாததால் எல்லாவற்றையும் கீபோர்டில் வாசிக்க வேண்டிய கட்டாயம். வசீகரன் மூன்று கீபோர்டுகளை வைத்துக் கொண்டு ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் நன்றாகவே வாசித்தார். ஆனால் ரிதம் வாசிக்க யாருமில்லாததால் பல பாடல்கள் டைட்டாக இல்லை.
வழக்கம்போல் சுரேஸ் கிருஷ்ணா, KS. ராஜா பாணியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Soniya
முதல் பாடலாக "ஹம்மா ஹம்மா" பாடலை தீபக் பாடினார். ஆரம்பத்தில் தனியாகச் செய்த ஆலாபனையில் இருந்த கச்சிதம் பாடலில் அமையவில்லை. இசையும் டைட்டாக இல்லை. அதன்பின் வந்த சோனியா "இது ஒரு நிலாக்காலம்" பாடினார். இந்தப் பாடல் இளையராஜாவின் வெஸ்டர்ன் ஜான்ராவில் ஒரு முக்கியமான பாடல். இசை, குரல் குறிப்பாக பேஸ் கிட்டார் அனைத்தும் அற்புதமாக இருந்தன.
குறிப்பாக செளண்ட் சிஸ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதனைக் குறை சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தத் தடவை சூப்பராக இருந்தது.  செளண்ட் சிஸ்டம் மிக முக்கியம் என்று வசீகரனுக்குத் தெரிந்திருப்பது ஒரு இசைக்கலைஞனுக்கு மிக முக்கியம். அதன் பின்னர் திவாகர் வந்து பாடிய 'சந்தனத் தென்றல்" பாடல் அவ்வளவாக எடுபடவில்லை. திவாகரின் தொண்டை சரியில்லையென்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அப்பாடலில் வரும் 'நியாயமா?' என்ற வரியில் உச்சஸ்தாயி போர்ஷனை ஒருதடவை கூடப் பாடாதது நியாயமா திவாகர்? ஆனால் பாடியிருந்தால் நிச்சயம் தொண்டை கிழிந்திருக்கும்.
அதன் பின்னர் கோபால் வந்து "செந்தமிழ் தேன் மொழியாளை" புகழ, அவள் பழையவள் என்றாலும் "பைந்தமிழ் இதழில் பழரசம் கொடுக்கும், பருகினால் தலைகுனியும்", அழகிதான்.
Jessica Jude
அதற்கடுத்து ஆவலுடன் எதிர்பார்த்த ஜெஸிக்கா வந்து, 'பாடவா உன் பாடலை ?' என்று கேட்டுப் பாடினார். பர்ஃபக்ட் சுதி, தாளம், இசை எல்லாம் கூடி அற்புதமாக இருந்தது. ஜெஸிக்காவின் குரலில் இனிமை கூடியிருந்தது.
Anandhi
ஜோடி நம்பர் 1 ஆனந்தி வந்து ஒரு பெல்லி டான்ஸ் ஆடி அசத்தினார். அசாத்தியமாக இருந்தது. ஆனந்தியின் திறமை வியக்க வைத்தது. அதன் பின்னர் பிரியா ஹிந்திப் பாடலுக்கு ஆடியதோ அல்லது ஆனந்தி பிரியா ஆடிய டூயட்டோ எடுபடவில்லை.
Amuthavanan
இடையில் வந்த அமுதவாணன் தனுஷின் பாடலுக்கு பல நடிகர்கள் ஆடினால் எப்படி இருக்கும் என்று ஆடியது ஹில்லரியஸ். அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அமுத வானனின் திறமை அசர வைத்தது.
கோபால் வந்து 'தகிட ததுமி' என்ற பாடலை விசிலடித்துப் பாடினார். சில ஹைபிச்களை லோ ஆக்டேவில் விசிலடித்தது எடுபடவில்லை. ஆனால் எந்த இடத்திலும் சுதி போகாதது ஒரு ஆச்சரியம்தான்.
திவாகர் சோனியா பாடிய “பூப்போட்ட தாவணி”, தீபக் சோனியா பாடிய வெண்ணிலவே பாடலை விட நன்றாக இருந்தது.
ஜெசிக்கா பாடிய 'என்னுள்ளே என்னுள்ளே', மாலையில் யாரோ, கொஞ்சம் நிலவு, புத்தம்புது காலை மற்றும் அவள் அப்பாவுடன் இணைந்து பாடிய பனி விழும் இரவு, ஆகிய அனைத்தும் நன்றாகவே இருந்தன. சோனியாவின் 'தீ தித்திக்கும் தீ' மிக அற்புதமாக அமைந்த மற்றொரு சோலோ.  
 ஜெசிக்காவின் 'விடைகொடு' பாடலில் பழைய உருக்கம் வரவில்லை. எத்தனையோ தடவை பாடியிருப்பாள் என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.
இடைவேளையில் மூன்று முக்கிய விருந்தினர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர்.
1.    ராஜ ராஜேஸ்வரி நியூயார்க்கின், முதல் இந்திய, பெண், தமிழ் நீதிபதி.
2.    Dr. ராமநாதன் ராஜீ, நியூயார்க் நகர சுகாதாரத் துறையின் தலைவர், 35000 பேர் இவர் கீழ்.
3.    பூஜா குமார்:- விஸ்வரூபம் மற்றும் சில படங்களின் கதாநாயகி, Miss India US.
Thalaivar Vijaykumar with Jessica:"இசைப்பூங்குயில்" பட்டம்
அதோடு ஜெஸிக்காவுக்கு, "இசைப்பூங்குயில்" பட்டம் கொடுத்து மகிழ்வித்தனர்.
மொத்தத்தில் மிக ரம்மியமான ஒரு மாலைப் பொழுதைக் கொடுத்த நியூயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்த்துக்கள்,நன்றிகள்.  

Add caption
-முற்றும்.

Photos courtesy : NY Tamilsangam.