
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 37
“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/11/blog-post_30.html
1979ல் வெளிவந்த “முதல்
இரவு” என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த பாடல் இது.
பாடலின்
பின்னணி:
இளம் காதலர்கள் இணைந்து போகும்
ரயிலில் டூயட் பாடுவது போல்
அமைக்கப்பட்ட பாட்டு இது.
இசையமைப்பு :
இரண்டு உப்புத்தாளை தாளம்
தப்பாது உரசினால் வரும் ரயில் போகும் சத்தத்தில் ஆரம்பிக்கிறது பாட்டு, பின்னர் ரயில் கூவும் சத்தம் வருகிறது. பின்னர் அதனுடன் கிடார்
ரிதம் ஸ்ட்ரம்மிங் இணைந்து அதே ரயில்
சத்தம் போல் ஒலிக்க ,ஊஊஊ என்று ரயில் கூவுவது போல் பெண் குரலில்
ஹம்மிங் வருகிறது. ஹம்மிங், ஃபேட் ஆகி முடியும் போது “மஞ்சள் நிலாவுக்கு”, என்று
ஆண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. பல்லவி ஆரம்பிக்கும்போது காங்கோ ஒரு வித்தியாச
ரிதம் பேட்டர்னில் சேருகிறது.அடுத்த வரியில் "இது முதல் உறவு" என்று
பெண் குரல் சேர்ந்துகொள்ள இருகுரலும் "இந்தத் திருநாள் தொடரும் தொடரும்” என்று மாறி மாறி பாட பல்லவி
முடிகிறது.
அதன்பின் வரும் முதல் BGM
ல் வயலின் குழுமம், புல்லாங்குழல், கீ போர்டு,
தபேலா மற்றும் காங்கோ ஆகியவை கலந்து கட்டி ஒன்றின் மேல் ஒன்று
உட்கார்ந்து பாடலின் அதே மூடை மெயின்டெய்ன் செய்து முடிக்க, சரணம்
"ஆடுவது பூந் தோட்டம்" என ஆண்
குரலில் ஆரம்பிக்கிறது. பல்லவி போலவே சரணத்திலும் ஆண் /பெண் குரலின் ஹம்மிங்கோடு
முதல் சரணம் முடிகிறது. இரண்டாவது BGM ல் ஒலிக்கும்
புல்லாங்குழல், வயலின் குழுமம், கிடார்
ஆகியவை முதல் BGMக்கு முற்றிலும் மாறாக எங்கெங்கோ சென்று
அலைந்து திரும்பவும் பழைய சுருதிக்கு வந்து சேர 2--ஆவது சரணம் "வீணையென நீ மீட்டு" என
பெண்குரலில் ஆரம்பிக்கிறது, முதல் சரணம் போலவே ஆண்பெண்
குரல்கள் மாறி மாறி ஒலிக்க ஊ ஊ என்று
ஹம்மிங்குடன் ரயில் சத்தம் வர அப்படியே ரயில் தூரத்தில் சென்று மறைகிறது.
வரிகள்:
மஞ்சள் நிலாவுக்கு
இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு
இன்று ஒரே சுகம்
இது முதல்
உறவு இது முதல் கனவு
இந்த திருநாள்
தொடரும் தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு
இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம்
தீண்டுவது பூங்காற்று
ஆசை கிளிகள் காதல்
குயில்கள் பாடும் மொழிகள் கோடி
ஆடி புனலில் காவிரி
ஓடிடும் வேகம்
அணைக்கின்ற பொதுமொழிகள்
ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
ஊஊஊ ……
வீணையென நீ மீட்டு
மேனிதனில் ஓர் பாட்டு
மேடை அமைத்து
மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி
காலம் முழுதும்
காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும்
இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை
ஊஊஊ
மஞ்சள் நிலாவுக்கு
![]() |
இந்தப் பாடலை எழுதியவர்
கவிஞர் கண்ணதாசன். இதை எழுதும் போது
கோப்பையும் கோலமயிலும் துணையாக இருந்தனவா என்று தெரியாது. ஆனாலும் காதல்
சொட்டும் இந்தப் பாடலில் காமத்தை சற்றே குழைத்து உள்ளே
அமைத்திருக்கிறார். பல்லவியிலேயே இதுதான் முதல் உறவு என்று சொல்வதோடு இதுதான்
முதல் கனவு என்றும் சொல்லி காதலர்களுக்கு
காதல்தான் எல்லாம் என்று சொல்லியிருக்கிறார். முதல் சரணத்தில் வழக்கமான
வரிகள் என்றாலும் இரண்டாவது சரணத்தில், "மேனியை
வீணையாக்கி பாட்டொன்றை மீட்டு என்று
சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரிகளில் வேண்டாம் விவகாரமாகப் போய்விடும்.
ஆனால் இதனைப் படிக்கும் போது கண்ணதாசன் காதல்தாசனா? இல்லை காமதாசனா?
என்று விளங்கவில்லை. காமமின்றி காதல் ஏது? ஆனால் காதலின்றி
காமம் தீது.
குரல்:
![]() |
Jeyachandran with P Susila |
இசையினிமைக்கு குரலினிமை
சேர்த்தவர்கள், ஜெயச்சந்திரனும் பி.சுசிலாவும் குறிப்பாக
எல்லா மலையாளிகளின் பேஸ் குரல்களில் ஒரு சோகம் ஒளிந்திருக்கும். இந்தப்பாடலில்
உற்சாகமாக ஆரம்பித்தாலும் 2-ஆவது சரணத்தில் "எந்நாளும்
உறவினரை பிரிவும் இல்லை" என்ற வரிகளில் சோகம் ஓடிவிடுகிறது. பி.சுசிலா தனது
இனிமையான குரலில் பாடலுக்கு அழகு சேர்க்கிறார். சேட்டைகள் இல்லாத ஆனால் இளமை
ததும்பும் குரல்.
இளையராஜா
அசால்ட்டாக இசை அமைத்திருக்கும் இந்தப் பாடல் அப்படியே ரயில் பயணத்தைக் காதுகளில் ஒலித்து கண்கள்
முன் கொண்டு வருகிறது. இந்தப் பாடலை ரயில் பயணம் செய்யும் போது கேட்டுப்
பாருங்களேன். என்ன டூயட் பாட துணை வேண்டுமா? அய்யய்யோ அதுக்கு
நான் ஒன்னும் செய்ய முடியாது.
இன்னும் வரும்>>>>
உண்மையில் இந்தப் பாடல் எனக்குப் பிடிக்காது. அதுவும் ஜயச்சந்திரன் பாடி எனக்குப் பிடிக்காத ஒன்றிரண்டு பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னொன்று 'ராத்திரிப் பொழுது...' இதே போல இன்னொரு இளையராஜாவின் ரயில் பாட்டு சொல்லி வீட்டுக் கிளம்புகிறேன்!! 'கூட்ஸு வண்டியிலே...
ReplyDeleteரயிலில் போகும்போது கேட்டால்தான் ஒரு வேளை பிடிக்கும் என நினைவிக்கிறேன் ஸ்ரீராம்
Delete//காமமின்றி காதல் ஏது? ஆனால் காதலின்றி காமம் தீது.//
ReplyDeleteஅருமை
நன்றி அன்பு
Deleteபாடலின் லிங்க் கொடுத்திருக்கலாம்
ReplyDeleteஅருமையான பாடல் நினைவுபடுத்தியதற்கு நன்றி
நன்றாகப்பாருங்கள் மேலே வீடியோ லிங்க் கொடுத்திருக்கிறேன்
Delete