Thursday, February 26, 2015

மணிரத்னம் பகுதி 2

Conversations With Mani Ratnam 
மணிரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடு.
மணிரத்னம் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்.
1)    பல்லவி அனுப்பல்லவி (1983) - கன்னடம் - சிறந்த திரைக்கதை - கர்நாடகா மாநில விருது.
2)    உணரு (1984) - மலையாளம்.
3)    பகல் நிலவு (1985)
4)    இதயக்கோவில் (1985)
5)    மெளனராகம் (1986)- சிறந்த பிராந்திய மொழிப்படம் - தேசிய விருது. (லண்டன் போன்ற பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது)
6)    நாயகன் (1987) - தேசிய விருதுகள்: சிறந்த நடிகர் - கமல்ஹாசன், சிறந்த ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம், சிறந்த கலை இயககுநர் - தோட்டாதரணி. - மாஸ்கோ திரைப்பட விழா - ஆஸ்கார் பரிந்துரை.
7)    அக்னி நட்சத்திரம் (1988)
8)    கீதாஞ்சலி / இதயத்தை திருடாதே. தேசியவிருது - சிறந்த பொழுது போக்கு சித்திரம். நந்தி விருது - ஆந்திரா மாநில விருது.
9)    அஞ்சலி (1990) தேசிய விருது - சிறந்த பிராந்திய மொழி திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி ஷாம்லி,  சிறந்த ஆடியோ கிராஃபி - பாண்டுரங்கன். ரஷியா, லண்டன், ஸ்விட்சர்லேண்ட் - ஆஸ்கார் பரிந்துரை.
10) தளபதி (1991)
11) ரோஜா (1992) தேசியவிருது - சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான படம்  சிறந்த இசையமைப்பாளர் - A.R. ரகுமான், சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து, சிறந்த இயக்குநர், தமிழ்நாடு மாநில விருதுகள்: சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர்.
12) திருடா திருடா (1993) - தேசியவிருதுகள் : சிறந்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம், சிறந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் -சேது, திரைப்படவிழாக்கள்  - லாஸ் ஏஞ்சல்ஸ்.
13) பாம்பே (1995)- தேசியவிருதுகள்: சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு படம், சிறந்த படத்தொகுப்பாளர் - சுரேஸ் அர்ஸ், ஃபிலிம்பேர் விருது - சிறந்த இயக்குநர். ஸ்கிரீன் வீடியோகான் விருதுகள் - சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பாடகி (சித்ரா), சிறந்த பாடலாசிரியர் -வைரமுத்து, ஸ்காட்லந்து, காலாவிருது, ஜெருசலேம், ரோட்டர்டாம், ஹவாய், எடின்பெர்க், பாரிஸ், டொராண்டோ, ஜெர்மனி, லாஸ் எஞ்சலஸ், பிலடெல்பியா, ஸ்வீடன், வாஷிங்டன் DC.
14) இருவர் (1997) - தேசிய விருதுகள்: சிறந்த துணை நடிகர் - பிரகாஷ்ராஜ், சிறந்த ஒளிப்பதிவாளர் – சந்தோஷ் சிவன், பெல்கிரேட் ஆட்டம் திரைப்பட விழா - சிறந்தபடம். திரைப்படவிழாக்கள்- ஸ்டாக்ஹோல்ம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்பிரான்சிஸ்கோ, எட்மாண்டன், கிளீவ்லேண்ட், நியூபோர்ட், ஹாங்காங், வாஷிங்டன் DC,  பிலடெல்பியா, பின்லாந்து, டர்பன், நியூயார்க்.
15) தில்சே (உயிரே) 1998 - தேசியவிருதுகள்: சிறந்த ஒளிப்பதிவாளர் - சந்தோஷ் சிவன், சிறந்த ஆடியோகிராபர் H.ஸ்ரீதர், சிறந்த ஆசிய திரைப்படம் (பெர்லின்) திரைப்பட விழாக்கள்: டோக்கியோ, பெல்கிரேட், வாஷிங்டன் DC, மாஸ்கோ, ஹெல்சிங்கீ, கொல்கத்தா.  
16) அலைபாயுதே (2000)- திரைப்படவிழாக்கள்: புதுடெல்லி, பூசான், கொல்கத்தா, பிர்மிங்ஹாம், லண்டன், டோக்கியோ, பெர்லின், பாரிஸ்,  மாண்ட்ரியல், தானிஷ், St.Louise, ஃபினீத், , ஜூரிச், ஸ்விஸ், வான்கூவர்.
17) கன்னடத்தில் முத்தமிட்டால் (2002) விருதுகள்: சினிமா எக்ஸ்-சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த நடன இயக்குநர் - பிருந்தா, சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் - விக்ரம் தர்மா, சிறந்த குழந்தை நட்சத்திரம் -பேபி கீர்த்தனா, சிறந்த நடிகை-சிம்ரன், சிறந்த திரைப்படம் - லாஸ் ஏஞ்சலஸ் திரைப்படவிழா, ஜெருசலேம் திரைப்படவிழா, இஸ்ரேல், லிம்வான் வீ ர் இன் ஸ்பிரிட் ஆஃப் பிரீடம் விருது. பிலிம்போர் விருதுகள்: சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், ரவி.கே. சந்திரன், சிறந்த நடிகை-சிம்ரன். தேசியவிருதுகள்: - சிறந்த தமிழ்மொழிப்படம், சிறந்த இசையமைப்பாளர், AR.ரஹ்மான், சிறந்த பாடலாசிரியர்-வைரமுத்து, சிறந்த ஆடியோ-AS.லஷ்மி நாராயணன், சிறந்த எடிட்டிங் - A.ஸ்ரீதர் பிரசாத், திரைப்பட விழாக்கள்:- புதுடெல்லி, மினியோபோலிஸ்.
18) ஆய்த எழுத்து / யுவா (2004): திரைப்பட விழாக்கள்- வெனிஸ், பூசான், பாங்காக், பாம்ஸ்பிரிங்ஸ், டென்மார்க்.
19) குரு (2006) - இந்தி - திரைப்பட விழாக்கள்: கான், இபிசா, பூசான், தர்க்ஸ் & கேங்கஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கைரோ, ரோம், ஸ்டூட்கார்ட்.
  1. Ravan Shooting
20) ராவணன் / ராவன் (2010) - திரைப்படவிழாக்கள்:- வெனிஸ், பூசான், மாண்ட்ரீயல்,  இந்தோ-அமெரிக்கன், ஸ்டாக்ஹோல்ம், நியூயார்க். விருது: -ராவன் - சிறந்த ஆடியோகிராபி - அப்ஸரா விருது.

21) கடல் (2013) திரைப்படவிழாக்கள்:-Norway
·         24FPS International Animation Awards :Best Visual Effects Feature Film Studio India
·         2013 MTV Europe Music Awards: Best Indian Act for "Nenjukkule
·         Best Introduced Actor:       Gautham Karthik
·Radio Mirchi South:Top 50 songs of the Year 2013    Nenjukkule (Ranked as #1)          A. R. Rahman

·         Norway Tamil Film Festival Awards :Best Music Director

முற்றும் 

Monday, February 23, 2015

நியூயார்க்கில் மதுரை வீரன்


ஒரு சனிக்கிழமை காலை நான் வழக்கம்போல் எழுந்து சேப்பல் செர்வீசுக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தேன். பக்கத்தில் கொஞ்ச நாளாக காலியாக இருந்த வீட்டில் சாமான்கள் யூ ஹாலில் (U-Haul) இறங்கிக் கொண்டிருந்தது. புதிதாக ஒரு குடும்பம் வருகிறது என்று தெரிந்தது. எந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்களோ என்ற எண்ணத்தோடு அருகில் சென்றேன். பழுப்புநிற டோயாட்டா கேம்ரியில், மெல்லிய மீசை வைத்த ஒருவர் புகை விட்டுக் கொண்டு இருந்தார்.
நான் அருகில் சென்றதும் புகையை கையால் விரட்டியபடி புன்னகைக்க முயன்றார். காரில் "துஜே தே கா டு யே ஜானா சனம் ", ஒலித்துக் கொண்டிருந்தது. இண்டியன்? என்று கேட்டேன், ஆமா என்று தலையாட்டி அவரைப் பார்த்து, "கியா ஹாலா ஜி " என்று எனக்குத் தெரிந்த ஹிந்தி வார்த்தையை பிரயோகித்தேன்.    
 "வாட்" என்றார். சிகரெட் துண்டை எறிந்துவிட்டு. "துமாரா நாம் கியா ?", என்று எனக்குத் தெரிந்த அடுத்த ஹிந்தி வார்த்தையை சொன்னேன்.
"ஐ டோன்ட் அன்டர்ஸ்டான்ட்", என்று சொன்னார். "விச் பார்ட் ஆஃப் இண்டியா யு ஆர் பிரம்", என்றேன். அப்போதுதான் சொன்னார், அவர் டிரினிடாட் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர் என்று.
இவர்கள் சாப்பிடுவது அரிசிச்சோறு. பழக்க வழக்கங்கள் நம்மைப் போலஉருவமும் நம்மைப்போலவே. இவர்களில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லீமுகளும் உண்டு. கேட்பது ஹிந்திப் பாடல்கள், பார்ப்பது ஹிந்திப் படங்கள், ஆனால் பேசுவது மட்டும் உடைந்த ஆங்கிலம்.  இவர்கள் கதை ஒரு பரிதாபகரமான கதை.
பரஸ்பர அறிமுகம் முடிந்தவுடன், தான் கன்ஸ்ட்ரக்சன் தொழிலில் இருப்பதாகக் கூறி தன்னுடைய பிஸினெஸ் கார்டைக் கொடுத்தார்.
அதில் போட்டிருந்த பேரைப் பார்த்ததும் நான் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். அதில் "Madira viraen என்று போட்டிருந்தது. அது நம்ம "மதுரை வீரன்" என்று புரிந்து கொள்வதற்கு எனக்கு வெகு  நேரம் ஆகவில்லை.
இதோ ஒரு தமிழன், அதுவும் மதுரைக்காரன் தன்னுடைய வேரை மறந்து, மொழியை மறந்து தான் தமிழன் என்று கூடத் தெரியாமல் ஆனால் ஏதோ ஒரு மூலையில் கலாச்சாரம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.
அவர் ஒரு இந்து, இஷ்ட தெய்வம் மாரியம்மன் முக்கிய பண்டிகை தீபாவளி. மனைவி பெயர் Maidile (மைதிலி) மகள் பெயர் Rada( ராடா என்கிறார்கள்).
அவருக்கு இந்தியாவில் டெல்லி பம்பாய் தவிர வேறு ஊர்கள் தெரியவில்லை. ஆனால் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தெரிகிறது. கிரிக்கெட்  வீரர்கள் எல்லாம் தெரிகிறது.
கமல்ஹாசன் தெரியுமா? என்று கேட்டேன். அவர் சொன்னார். "அவரை ரொம்பப் பிடிக்கும், “ஏக் துஜே கேலியே", பத்துமுறை பார்த்தேன்.ஆனால் ஏன் "அவர் நடிப்பதேயில்லை", என்றாரே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவை அறிமுகப்படுத்தினேன். அவருடைய பூர்வீகத்தை கொஞ்சம் கொஞ்சமாக விளங்க வைத்தேன்.அவருக்குத்தெரிந்த ஹேமமாலினி , ரேகா,ஸ்ரீதேவி A.R. ரஹ்மான்     அனைவரும்  தமிழ்தான் என்று சொன்னேன்.
அதன்பின்னர் இதனைக் குறித்து மேலும் அறிய ஆர்வம் மேலிட்டதால் நான் செய்த கூகுள் ஆராய்ச்சியில் தெரிந்து கொண்டவற்றை கீழே கொடுக்கிறேன்.
ஆங்கிலேயர் உலகத்தின் பாதி நாடுகளை ஆக்ரமித்து, ஆண்டு கொண்டிருந்த சமயம் அது. கரீபியன் தீவுகளில் கரும்புத் தோட்டங்கள் வளம் கொழித்தன. பெரும்பாலும் பிரிட்டிஷ் முதலாளிகள்,வேலை செய்ய ஆப்பிரிக்க அடிமைகள். அச்சமயத்தில் 1833ல் இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால், அவர்கள் ஆண்ட எல்லா நாடுகளிலிருமிருந்த ஆப்பிரிக்க அடிமைகள் விடுதலை பெற்று தங்கள் எஜமானர்களைத் துறந்து வெளியேறினர்.
வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்ட முதலாளிகளின் மனதில் உதித்த புதிய திட்டம்தான் இந்தியாவில் இருந்து ஆட்களைக் கொண்டுவருவது என்பது.

1838-ல், இரண்டு கப்பல் நிறைய இந்தியர்கள் கல்கத்தாவிலிருந்து பிரிட்டிஷ் கயானா வந்து சேர்ந்தார்கள். அந்தக் கப்பல்களின் பெயர் விட்பி(Whitby) & ஹெஸ்பரஸ் (Hesperus)
இதில் கொடுமை என்னவென்றால் ஏஜென்ட்கள் மூலம் நாட்டின் பல பகுதிகளினின்று அதிகபட்சம் 1000 கி.மீ தூரத்தில் இருந்து வந்த மக்களுக்கு தாம் என்ன வேலை செய்யப் போகிறோம் என்பது மட்டுமல்லாது, கடல் கடந்து தாய் வீட்டைவிட்டு வெளி நாட்டுக்குச் செல்லப் போகிறோம் என்பதும் சுத்தமாக தெரியாது. எனவே இந்த நான்கு மாத கப்பற் பயணத்திற்கு ஆயத்தமாகவும் வரவில்லை என்பதால் மிகுந்த துயரத்துக்குள்ளானார்கள்.  அதோடு நிறையப்பேர் கடல் பயணத்தில் இறந்தும் போயினர்
கரும்புத் தோட்டப்பகுதிகளில் வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட இவர்கள் அடிமைகளைப் போலவே கடுமையாக நடத்தப்பட்டனர். எதிர்ப்பவர்கள் தீவிரமாகத் தண்டிக்கப்பட்டதோடு, சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

கயானாஜமைக்கா,டிரினிடாட், மார்ட்டினிக், சூரிநாம் மற்றும் சில பிரிட்டிஷ் தீவுகளுக்கு  புலம் பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 25 லட்சம் பேர்.1838ல் ஆரம்பித்த இந்த புலம் பெயர்தல் 1917 வரை தொடர்ந்தது. இதில் 20% பேர் தமிழ் மற்றும் தெலுங்கர்களாம், மற்றவர்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து போனவர்கள்.
இதிலே பல  நாடுகள், மே மாதத்தில் ஒரு நாளை இந்தியர் புலம்பெயர்ந்த நாளாக அறிவித்து அரசாங்க விடுமுறை நாளாக அனுசரிக்கிறது.
VS Naipaul
V.S Naipaul
இப்போது அரசியல் பொருளாதார நிலையில் சிறிது முன்னேறிய இவர்களுள் ஒருவர்தான் நோபல்பரிசு பெற்ற வி.எஸ். நய்பால் (V.S.Naipaul) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் முன்னாள்  காப்டன் ஷிவ்  நாராயன் சந்தர்பால் இன்னொருவர்.
Chanderpaul

நாடு, மொழி மற்றும் கலாச்சாரமிழந்து வேற்று ஆட்களாக மாறிவிட்ட இவர்களுக்கு முக அடையாளமும் மத அடையாளமும் மட்டும் அப்படியே இருக்கிறது. இவர்களைக் குறித்து கவலைப் பட்ட எனக்கு, ஒரு காலத்தில் என் பிள்ளைகளும், என் பிள்ளைகளின்  பிள்ளைகளும் என்ன ஆவார்கள்  என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.
முற்றும் 

Thursday, February 19, 2015

மணிரத்னம் பகுதி 1


மணிரத்னம் படைப்புகள் ஒரு உரையாடல்.
கிழக்கு பதிப்பகம் வெளியீடு.
பரத்வாஜ் ரங்கன் என்பவர் தேசிய விருது பெற்ற திரை விமர்சகர். "ஹிண்டு" பத்திரிகையில் மூத்த எடிட்டர். இவர் மணிரத்னத்துடன் செய்த உரையாடல்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட புத்தகம்தான் இது. "அரவிந்த் சச்சிதானந்தம்"  என்பவர் தமிழில் மொழிபெயர்த்து கிழக்கு பதிப்பகம் இதனை  வெளியிட்டிருகிறது.
  1. Bharathwaj rangan
பரத்வாஜ் ஒரு திரை விமர்சகர் மட்டுமல்லாது, மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகன். இதுவரை வெளிவந்த அவரின் அனைத்து படைப்புகளையும் விருப்பு வெறுப்பின்றி இருவரும் சேர்ந்து இந்தப்புத்தகத்தில் அலசுகின்றனர்.

மணிரத்னம் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட இன்னுமொரு ரத்னமான A.R.ரஹ்மான் அவர்கள் முகவுரை எழுதியிருக்கிறார் . A.R.ரஹ்மான், மணிரத்னம் அவர்களை எப்படி தன் மனதில் குருவாக உருவகித்திருக்கிறார் என்பது அதில் வெளிப்படுகிறது. இத்தனைக்கும் A.R.ரஹ்மான் தீவிரமான ஆத்திகர் . மணிரத்னம் ஒரு நாத்திகர். ஆனாலும் இருவரும் இணைந்து பல அரிய பாடல்களைக் கொடுத்திருக்கின்றனர்.
மணிரத்னம் அவர்களைப்பற்றி சில அரிய செய்திகள், அவர் பயன்படுத்திய உத்திகள் இப்புத்தகத்தில் ஆழமாக ஆராயப்பட்டிருக்கிறது.
சினிமாவைப்பற்றி படிப்போ அனுபவமோ இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து முத்திரை பதித்திருக்கிறார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவரைப்பற்றி நான் அறிந்து கொண்ட சில செய்திகளை கீழே பட்டியலிடுகிறேன். அவை இந்தப்புத்தகத்தை படிக்கத்தூண்டுமென நம்புகிறேன்.
1)    திரையுலகில் இரண்டுவித படைப்பாளிகளைப்பார்க்கலாம். ஒரு பகுதியில் வெறும் பொழுதுபோக்கு நோக்கில் (கமர்சியல்) படம் எடுப்பவர்கள். மற்றொரு பகுதியினர். கலைப்படைப்புகளை மட்டும் தவம் போல் எடுப்பவர்கள். ஆனால் மணிரத்னம் இதன் இரண்டுக்கும் நடுவில் உள்ளவர்.
2)    வெகு ஜனப்படைப்பாளி என்றே அறியப்பட விரும்பினாலும் வியாபார சமரசம் செய்வதில்லை.
3)    சிறுவயதில் சிவாஜி மற்றும் நாகேஷின் ரசிகன்.
4)    பதின் பருவம் வந்தபோது K.பாலச்சந்தர் அவர்களின் படங்களை விரும்பிப்பார்த்தார்.
5)    MBA-Finance படித்து 1 1/2 வருட காலம் Financial Consultant ஆக வேலை பார்த்து, பின்னர் அதனை விட்டு விட்டு முழுநேரமாக திரைத்துறைக்கு வந்தவர்.
6)    ஆனால் அவர் குடும்பத்தினர் பலர் திரைத்துறையில் இருந்தனர். அவருடைய சித்தப்பா, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, "உத்தம புத்திரன்", "கல்யாணப்பரிசு", "பட்டணத்தில் பூதம்" மற்றும் சில இந்திப்படங்களை தயாரித்தவர். அவருடைய அண்ணன் G .வெங்கடேஷ் திரைப்பட ஃபைனான்ஸ் மற்றும் பட விநியோகம் செய்தார்.
7)    திரைத்துறைக்கு வரும்போது அப்பா ஆட்சேபனை சொல்லவில்லை. ஆனால் அம்மா மிகவும் கவலைப்பட்டார்.
8)    மணிரத்னம் இயக்கிய முதல் படம், "பல்லவி அனுபல்லவி" என்ற கன்னடப்படம். லட்சுமி, அனில் கபூர், கிரன் ஆகியோர் நடித்த இந்தப்படத்திற்கு ,"பாலுமகேந்திரா" ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்தார். லெனின் அவர்கள் எடிட்டிங்.
9)    இளையராஜா அப்போது வாங்கிய சம்பளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு இசையமைத்தார்.
10) திரைக்கதையை ஆங்கிலத்தில்தான் எழுதினார். ஏனென்றால்  இவருக்கு கன்னடம் தெரியாது. குறைந்த பட்ஜெட் என்பதால் கன்னடத்தில் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
11) முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான கர்நாடகா மாநில விருதினைப் பெற்றார். அதிலிருந்து விருதுகள் அவரை துரத்த ஆரம்பித்தன.
12) அந்தச்சமயத்தில் வெளிவந்த பாரதிராஜாவின்,“16வயதினிலே”மற்றும் மகேந்திரனின் ,”உதிரிப்பூக்கள்”, மணிரத்னம் அவர்களை வெகுவாகப் பாதித்தன.
13) நான்கு படங்களுக்குப்பின் தான் அண்ணன் GV தயாரிக்க, "மெளனராகம்" வெளிவந்தது. GV-க்கு அதுதான் முதல் படம்.
14) மெளனராகத்திற்குத்தான் முதன் முதலில் மணிரத்னம் தமிழில் திரைக்கதை எழுதினாராம்.
15) பகல் நிலவு படத்தில் யாருக்கும் மேக்கப் கிடையாது.
16) மணிரத்னம் தன் எந்தப்படத்தையும் வெளியான பின் பார்த்தது கிடையாது.
17) தன் படங்களுக்கு இவர் "ஸ்டோரிபோர்டு" அமைப்பது கிடையாது. கர்ணனின் கதையே 'தளபதிக்கு” . இதில் கர்ணன்தான் ரஜினிகாந்த்.  
18) 'ரோஜா' என்பது காஷ்மீரில் கடத்தப்பட்ட ஒரு இன்ஜினியரின் உண்மைக்கதை.
19) “திருடா, திருடா”, -ஹர்ஷத் மேத்தாவின் ஊழலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
20) 'குரு' கதை அம்பானியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
21) “இருவர்” என்பது கருணாநிதி - எம்ஜியார் நட்பையும் பிரிவையும் தழுவி எடுக்கப்பட்டது.
திரைப்பட ஆர்வலர்கள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர்களும், திரைப்படத்துறையில் நுழைய மற்றும் வளர விரும்பும் யாவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். 

மணிரத்னம் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் விருதுகளின் பட்டியலை அடுத்த பகுதியில் தருகிறேன்.

அடுத்த பகுதியில் நிறைவு  பெறும் .