Thursday, June 28, 2018

பகத்சிங்கை கொன்ற காந்தி ?

Image result for the legend of bhagat singh

தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் 
பார்த்ததில் பிடித்தது 
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத் சிங் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தவர். அவருடைய புரட்சி வரலாறு ரத்தத்தில் சூடேற்றி தேசிய உணர்வூட்டும் ஒன்று. அவரின் வரலாற்றைப் படித்திருந்தாலும் தி.லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற  இந்தத் திரைப்படம் அதனை அப்படியே நேரில் பார்ப்பது போல கண்முன்  கொண்டுவந்தது. நெட்ஃபிலிக்சில் காணக்கிடைக்கிறது. நல்ல வசதியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பகத்திங். அவர் தந்தையின் கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெரிய பால் பண்ணையும் இருந்தது.
          சின்னவயதில் அவர் கண்முன்னே வெள்ளைக் காரர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்கள் அவர் மனதை மிகவும் பாதித்தது. அதன்பின் ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலை அவர் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி புரட்சி விதையை விதைத்தது.

          சிறு வயதிலிருந்தே மகாத்மா காந்தியால் கவரப்பட்டிருந்த பகத்சிங்  அவர் அறிவித்த "ஒத்துழையாமை இயக்கத்தில்"  பெரிதும் ஈர்க்கப்பட்டு தீவிரமாக பங்கு கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த அந்தப்புரட்சி மகாத்மா காந்தியால் பாதியில் கைவிடப்பட்டதால் பகத்சிங்  மிகவும் நொந்துபோனதோடு அதுவே அவர் காந்தியை விட்டு விலகிச் செல்வதற்கும் வழிவகுத்தது.  
          மனதில் எழுந்த புரட்சித்தீயால் "ஹிந்துஸ்தான் குடியரசு இயக்க”த்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக செயல் பட ஆரம்பித்தார்.  
          அந்த சமயத்தில் பஞ்சாபின் சிங்கம் “லாலா லஜபதிராவ்” பிரிட்டிஷ் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பகத்சிங்கை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. எனவே பகத்சிங் தன் நண்பர்களான சிவராம், ராஜகுரு, சுக்தேவ் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
          பின்னர் போலீசாரிடம் பிடிபட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கிருந்தபடியே புரட்சியை வளர்த்தார். ஆங்கிலேயர் இந்தியருக்கு எதிரான ஒரு சட்டத்தை பார்லிமென்ட் பில்டிங்கில் நிறைவேற்ற முயன்ற போது இந்தியரின் எதிர்ப்பைக் காட்ட, தன் நண்பன் பட்டுகேஸ்வர் தத் என்பவரின் மூலம் குண்டுகளை வீசினார்.     ஆனால் மக்களுக்கும் கூடியிருந்த அதிகாரிகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் காலியாக இருந்த பெஞ்சுகளை நோக்கியே குண்டுகள் எறியப்பட்டது. அவரும் கைதுசெய்யப்பட்டார்.  இந்த நிகழ்வு பகத்சிங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. குறிப்பாக இளைஞர்கள்  தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பகத்சிங்கை மிகவும் கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் காந்தியின் புகழுக்கு இணையாகப் பேசுமளவுக்கு பகத்சிங்கின் பிரபலம் உயர்ந்தது.
          லாகூர் ஜெயிலில் இருந்தபோதும் சுதந்திர போராட்ட வீரர்களை ஜெயிலில் ஒழுங்காக நடத்த வேண்டும் என்று அவர் தன் நண்பர்களோடு 63 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார்.      சாண்டர்ஸ் கேசில் பகத், சிவராம் & சுக்தேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
          இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் காந்தி நினைத்திருந்தால் இவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து விடுதலை செய்திருக்கலாம். முழு இந்தியாவும் இதனை எதிர்பார்த்தது. ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கோரினார் காந்தி. இதற்கு இந்தியா முழுவதும் எதிர் ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சிறையை உடைத்து உள்ளே புகுந்துவிடுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டதால் விதித்த நாளுக்கு முன்னதாகவே மார்ச் 23 1931ல் அதிகாலை நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Image result for bhagat singh

          நாடே சோகத்தில் மூழ்கியது. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?” என்று பாடிய பாரதியின் பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
          2002ல் வெளிவந்த இந்தப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை.
என்று தேசிய திரைப்பட விருது, பிலிம் ஃபேர் விருது, ஜீ சினி விருது போன்ற பல விருதுகளை வென்றது.          பகத்சிங்காக இளவயது அஜய் தேவ்கன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அருமையாக இசையமைத்தவர் நம் இசைப்புயல் A.R.ரகுமான் அவர்கள். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். அதோடு இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் தமிழரான K.V.ஆனந்த் அவர்கள். இப்போது பிரபல இயக்குனராகவும் மிளிர்கிறார்.
          இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.   
முற்றும்


முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில் 
பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 


Image result for fetna convention
Add caption

Monday, June 25, 2018

சௌபாவும் நானும்!!!! பகுதி 2

Related image
Sowba 

இதன் முந்தைய  பகுதியைப்படிக்க இங்கே சுட்டவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/06/blog-post_18.html
செளபாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் கஞ்சா போன்ற வேற வஸ்துக்கள் புகைப்பதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும், முதல் முறை தெரியாமல் கஞ்சா நிரப்பிய சிகரெட்டைக் குடித்ததால் தலை சுற்றி நாவறண்டு மிகவும் பயந்து போனார். செளபாவை கைத்தாங்கலாப் பிடித்துக் கொண்டு கீழிறங்கி வந்தேன். யாரோ இனிப்பு சாப்பிட்டால் சரியாய்விடும் என்றும் மற்றொருவன் சூடாக ஒரு காப்பி குடித்தால் ஓரளவுக்குத் தெளியும்  என்று சொன்னதால் கல்லூரியின் எதிரே இருந்த மல்லிகை காபி பாருக்கு அழைத்துச் சென்று இனிப்பு போண்டா ஒன்றையும் காபியையும் வாங்கிக் கொடுத்தேன். போண்டாவை ஓரிறு கடி கடித்துவிட்டு வேண்டாம் என்று சொன்னவர் காபியை முழுவதுமாகக் குடித்தார். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த இனிப்பு எதிர் வினையாற்ற அங்கிருந்து மெதுவாக நகர்ந்து பக்கத்தில் இருக்கும் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கேட்டுக்கேட்டு டூட்டி டாக்டரிடம் சென்றோம்.
செளபா கண்ணை மூடிக்கொண்டு தியான நிலையில் இருக்க, என்ன நடந்தது என்று அந்த இளம் டாக்டரிடம் சொன்னேன். அவர் ஒன்றும் சொல்லாமல் படக்கென்று எழுந்து எங்கோ போய் கொஞ்சம் முதிய ஒரு டாக்டரை அழைத்து வந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவன் தானே, என்று கேட்டுவிட்டு என்னைப்பார்த்து கண்ணாபிண்ணா வென்று கத்த ஆரம்பித்தார். “ஏண்டா நீயெல்லாம் படிக்க வந்தியா இல்ல கஞ்சா குடிச்சு சீரழிய வந்தியா, எந்த ஊரு நீ, உங்கப்பா அம்மா....”, என்று தொடர்ந்து பேச நான் பல முறை தடுத்தும் முடியவில்லை. பின்னர் அந்த இளம்டாக்டர் குறுக்கிட்டு, அவன் இல்லை இவன்தான் குடித்தது என்று செளபாவைக் காண்பிக்க, டாக்டருக்கு மேலும் கோபம்  வந்தது. “அமெரிக்கன் காலேஜ் ரொம்பக் கெட்டுப்போச்சு எல்லாப் பயல்களும் கஞ்சா குடித்து கெட்டுப் போறாய்ங்க. எந்த ஊருடா? ஓ ஹால்டலா யாரு இன்சார்ஜ் யார் பிரின்ஸ்பல் ஓ P.T. செல்லப்பாவா? போனைப் போடு வார்டனை   இங்கே கூப்பிடு”, என்று ஒரே அல்லோகலப்படுத்தி விட்டார். செளபாவின் தியான நிலை தொடர, நான்தான் வேர்த்து விறுவிறுத்து ரொம்ப பயந்துபோனேன். படக்கென்று காலில் விழுந்து அவர் பேசுவதை தடுத்தி நிறுத்தி என் தரப்பு நியாயத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.
ஒரு வழியாக சமாதானம் ஆன டாக்டர். ஊசி ஒன்றைப் போட்டு சில மருந்து மாத்திரைகளைத் தந்து எச்சரித்து அனுப்பினார்.
அவர் சொல்வது உண்மைதான். அப்போது அமெரிக்கன் கல்லூரியில் கஞ்சாப் பழக்கம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர் தவிர உள்ளே கேம்பசில் மற்றவர் நடமாட்டம் அதிகமிருக்கும். கஞ்சா விற்பவர்களும் குடிப்பவர்களும் இதில் அடங்குவர். கல்லூரியின் ஏராளமான மரங்களின் அடியே புகைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்க்கலாம். இந்தப் பழக்கத்துக்கு அடிமையான என்னுடைய சீனியர்கள், ஜூனியர்கள் என்று சில பேரை சாவு வரைக்கும் இந்தப் பழக்கம் இழுத்துச் சென்றது.
ஆனால் பி.டி. செல்லப்பா மிகவும் முயன்று இதனை முற்றிலுமாக மாற்றியமைத்தார். மரத்தடியில் மட்டுமல்ல எங்குமே புகைக்க முடியாத நிலையைக் கொண்டு வந்தார். அக்காலத்தில் மற்றவர் உள்ளே வருவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது.
இப்படி செளபாவுடன் என்னுடைய நினைவுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அதன் பிறகு உசிலம்பட்டி சிசுக்கொலை, சீவலப்பேரி பாண்டி என்று பல கட்டுரைகளை ஜூவியில் எழுதி எல்லோருக்கும்  தெரிந்த பத்திரிக்கையாளர் ஆனார். ஆனந்த விகடன் குழுமத்தின் அப்போதைய தலைவரான சீனிவாசன் அவர்களின் செல்லப்பிள்ளை ஆகி, ஒரு கட்டத்தில் ஆவி, ஜூவி  போன்ற பத்திரிகைகளின் மதுரையின் விற்பனைப் பிரதிநிதியாகி ஏராளமான பணம் ஈட்டினார். வறுமையில் வளர்ந்து வாழ்ந்த அவர் தோட்டம் துரவு என்று வளர்ந்தார்.
இதற்கிடையில் உருகி உருகிக் காதலித்த தன் அன்புக்குரியவரை மணந்தார். அந்தச் சமயத்தில் ஜாதி மாறி நடந்த பெரிய புரட்சித் திருமணம் இது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமண வாழ்க்கை இவருக்கு சரியாக அமையவில்லை. புரட்சித் திருமணம் வெகு சீக்கிரம் வறட்சித் திருமணம் ஆகி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தாயிடமும் தந்தையிடமும் மாறி மாறி வாழ்ந்த இவர்களின் பையன் தகாத வழியில் சென்று கடைசியில் கொலை வரை சென்றது, அவரோடு நெருங்கிப் பழகிய எங்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.  
நான் சென்னையில் இருந்து மதுரை செல்லும் போது செளபாவை  போய்ப் பார்ப்பது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார் . ஒருமுறை சென்னையிலிருந்து என்ன வாங்கி வரட்டும் என்று போன் செய்த போது "ஒன் மென் ஷோ" என்ற பெர்ஃபியும் கேட்டார். நான் அதனைக் கொண்டு சென்று கொடுக்கும் போது " ஏன்  ஒன்  மேன் ஷோ" என்று கேட்டபோது, "ஆம் ஆல்ஃபி இப்ப நான் நடத்துவது ஒன்  மேன் ஷோதானே", என்று தான் பிரிந்து வாழ்வதை வேடிக்கையாகச் சொன்னார்.
சமீபத்தில் நண்பன் சையது அபுதாகிர்  தொடங்கிய 1981-84 வாஷ்பர்ன் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து எங்களோடு அனுதினம் உரையாடிக் கொண்டிருந்தார். குழுவில் எல்லோருக்கும் இது பேரதிர்ச்சி.

Image result for sowba funeral


மதுரையின் அருகில் இருக்கும் செளபாவின் பெரிய தோட்டம் பத்திரிக்கைத்துறை திரைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் பல பிரபல மனிதர்கள் வந்து கொண்டாடிச் செல்லும் இடமாக இருந்தது. இறுதியில் அந்த இடத்திலேயே தன் மகனைப்புதைக்கும் அளவுக்குப் போனது காலத்தின் கொடுமை. அதோடு நெருங்கிப்பழகிய பல பிரபலங்களில் ஒருவர் கூட உதவிக்கரம் நீட்டாதது கொடுமையிலும் கொடுமை.
சில நெருங்கிய நண்பர்களான நண்பர் பிரபாகர், வனராஜ் ஆகியோர் அவரைச் சிறையில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அப்போது கூட  சொத்தை எழுதிவைத்துவிட்டு தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன் என்று மிகுந்த விரக்தியோடு சொல்லியிருக்கிறார்.
இது கிட்டத்தட்ட தற்கொலைதான். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்து ஏற்கனவே சர்க்கரை வியாதி முற்றிய ஒருவருக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டது. நண்பர்களை மீளாத்துயரில் ஆற்றிவிட்டு மறைந்தார் செளபா.
"யாருக்கும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டான்" என்று அவரின் அம்மா சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
நம்பமுடியாத தொடர் நிகழ்வுகளைத் தொடர்ந்து செளபா மறைந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர எங்களைப்போன்றோருக்கு நீண்ட காலம் ஆகும்.
-முற்றும்.

முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா  நிகழ்வில்  ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில்

  பங்கு கொள்கிறேன்  .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள்  சந்திக்கலாம் . 
Image result for fetna convention
Add caption

Thursday, June 21, 2018

தமிழகத்தின் இருண்ட காலம் ?

Image result for தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்.
-டி.கே. ரவீந்திரன் (விகடன் பிரசுரம்)

தமிழகத்தை தொன்மைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். இவர்கள் மூவர் என்பதால் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு மன்னர்கள் மற்றவர்களை அடக்கி ஆளவும் இருவர் ஒன்று சேர்ந்து மூன்றாவது ஒருவரை அடக்குவதுமாகவே பெரும்பாலும் இவர்கள் காலங்கள் கழிந்தது. ஒருவர் முன்னேறி மற்ற இருவரும் தாழ்ந்து போய் இருக்கும் போது, இவர்கள் இலங்கை, சாளுக்கியம் (ஒரிஸ்ஸா) சாவகம் (இந்தோனேசியா) கடாரம் (மலேசியா) போன்ற நாடுகளுக்கு படையெடுத்துச் சென்றனர். குறிப்பாக சோழப்பேரரசு அன்றைய நாளில் குப்த மெளரியப் பேரரசுகளை விடப் பெரியது என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் வேறு அந்நியர் உள்ளே நுழைந்திருக்க முடியாது.  மூவரும் தமிழ் மன்னர்கள் என்றாலும் ஒற்றுமை தரும் வலிமையை உணராதே இருந்தார்கள். அதனால் இந்த ஒற்றுமையின்மை பல்லவர், நாயக்கர், மராட்டியர், மொகலாயர் மற்றும் ஆங்கிலேயர் உள்ளே வந்து ஆட்சியைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஆனாலும் இதில் ஆங்கிலேயர் தவிர மற்ற அனைவரும் தமிழுக்கும் தமிழருக்கும் பெரிய எதிரிகளாய் செயல்படாது நம் கலாச்சாரத்தை ஒட்டியே ஆண்டனர் என்பதால் நமக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் வரவில்லை. இல்லையென்றால் தமிழன் கதையும் தமிழின் கதையும் எப்போதோ முடிந்துபோயிருக்கும்.
Image result for களப்பிரர்

ஆனால் இதற்கு நடுவில் வரலாற்று அறிஞர்களால் முழுதும் அறியப்படாத ஒரு காலம் இருந்தது. அது கிபி 300 முதல் 600 வரைக்கும் இடைப்பட்ட முந்நூறு ஆண்டு காலம் ஆகும். அதில் களப்பிரர் நம் நாட்டைப் பிடித்து ஆண்டனர். பல வருடங்களாக அதனைப்பற்றி எந்தச் சான்றுகளும் இல்லாமல் இருந்ததால் இதனை வரலாற்று ஆய்வாளர்கள் "இருண்ட காலம்" என்றே அழைத்தனர். ஆனால் தற்சமயம் சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்ததனிமித்தம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இருள் விலகி வருகிறது. அந்த வரிசையில் எழுதப்பட்ட ஆய்வு நூல்தான் நான் மேற்குறிப்பிட்டுள்ள இந்தப் புத்தகம். பல புத்தகங்களைப் படித்து எழுதப்பட்ட இந்த ஆய்வு நூலில் நான் படித்துத் தெரிந்து கொண்ட களப்பிரர் கால விடயங்களை வழக்கம்போல் புல்லட் பாயின்ட்டில் கீழே தருகிறேன்.
1.   களப்பிரர், ஜைன / பெளத்த சமயத்தை வெகுவாகப் பின்பற்றி சைவ / வைணவ சமயங்களை ஒழித்ததோடு, பிராமணர்களையும் ஒதுக்கி வைத்ததால், பிராமணர்கள் திட்டமிட்டு அவர்களின் வரலாற்றுச் சான்றுகளையும் ஆவணங்களையும் அழித்துவிட்டார்கள் என்ற கூற்று இருக்கிறது. இது பெரும்பாலும் உண்மையில்லை ஏனெனில் கலப்பிரரில் சிலர் சைவ வைணவ சமயங்களையும் ஆதரித்தார்கள் மற்றும் பின்பற்றினார்கள் என்பதை ஆசிரியர் ஆதாரங்களோடு விளக்குகிறார்.
2.   களப்பிர சமூகத்தை 'கல்புரீஸ்” என்றும் இந்தோ ஆரியவம்சாவளி என்று சிலர் சொன்னாலும், களப்பிரர் கன்னடர் என்றும் ஆரம்பத்தில் ஜைன சமயத்தை மட்டுமே பின்பற்றினர் என்பதையும் வரலாற்று அறிஞர்கள் இப்போது நிரூபித்துவிட்டார்கள்.
3.   முதலில் தர்மபுரி சேலம் பகுதியை உள்ளிட்ட 'மழவ நாட்டை’ப் பிடித்து, பின்னர்கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சேர சோழ பாண்டியரை  முறியடித்து ஆட்சியைப் பிடித்தனர்.  
4.   அப்போது சேர, சோழ பாண்டிய மூவேந்தர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்ததால், களப்பிரர் அவர்களை எளிதாக முறியடித்தனர்.
5.   ஆனால் அப்போது உன்னத நிலையில் இருந்த பல்லவரை அவர்களால் அசைக்க முடியவில்லை.அவர்கள் பிடித்த இடங்களே பரந்து விரிந்த மூவேந்தர் நிலமானதால் அதுவே போதுமான அளவு இருந்தது.
6.   இப்போது பல கல்வெட்டுகளும், செப்பேடுகளும் களப்பிர வரலாற்றை விளக்கும் வகையில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.
7.   அதன் மூலம் களப்பிரர், களப்பாழர், கள்வர், கலியரசன் என்று அழைக்கப்படும் அனைவரும் ஒருவரே என்று விளங்குகிறது. 
8.   களப்பிரர் தம்மை சூரிய சந்திர குலமென்று சொல்லிக் கொண்டனர். அவர்களுக்கு பெரிய எதிரிகளாக பல்லவரும் சாளுக்கியரும் இருந்தனராம்.
9.   கிபி.300 முதல் 600 வரை பெரும் நிலப்பரப்பை ஆண்டு அதன்பின் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல பகுதிகளை குறுநில மன்னர்களாய், அதன் பின் ஊர்த்தலைவர்களாகவும் ஆண்டனர் என்று வரலாறு சொல்லுகிறது.
10.                தஞ்சைப் பகுதியின் கள்ளர் என்பவர் களப்பிரர் என்றும் அவர்களின் அரசனின் பொதுப் பெயராக அச்சுதன் என்றும் அவர்களின் அரசனின்  பொதுப் பெயராக அச்சுதன் என்ற பெயர் விளங்கி வந்தது என்றும் தெரிகிறது.
11. 63 நாயன்மார்களில் ஒருவரான  கூற்றுவர் என்பவர்  களப்பிரர் என்றும்,12 ஆழ்வார்களில் ஒருவரான 'திருமங்கை ஆழ்வார்களப்பிர அரசர் குலத்தில் உதித்தவர் என்று ஆய்வு சொல்கிறது. 
களப்பிர அரசர் குலத்தில் உதித்தவர் என்று ஆய்வு சொல்கிறது.
12.                சிறிது சிறிதாக தங்கள் பகுதிகளைப் பறிகொடுத்த பின் இறுதியில் களப்பிரர் கொங்கு நாட்டை ஆண்டனர் என்றும் பல்லவ மன்னன் அபராஜிதன் அங்கு படை யெடுத்து வந்து அவர்களை முற்றிலுமாக ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றினான் என்று தெரிய வருகிறது.
13.                களப்பிரரை பாண்டிய நாட்டிலிருந்து முறியடித்தவன் பாண்டியன் கடுங்கோன்.
14.                களப்பிரருக்கு கட்டுப்பட்டு சோழர் வாழ்ந்து வந்த போது, பல்லவன் சிம்ம விஷ்ணு களப்பிரரை முறியடித்து சோழரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
15.                பின்னர் சோழ வம்சத்தில் சிலர் தெலுங்கு தேசத்தில் உள்ள கடப்பா கர்த்தூர் ஆகியவற்றை பல்லவருக்கோ அல்லது சாளுக்கியருக்கோ மாறி மாறி கட்டுப்பட்டு ஆண்டு வந்தனர்.
16.                தமிழிலக்கியங்களாகிய நால் வகை  பாக்களான, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகியவை களப்பிரர்  காலத்தில் சிறப்புப் பெற்றது. பதினென் கீழ்க்கணக்கு, நாலடியார் ஆகியவை களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள்.
17.                முத்தரையர், சேர்வை, முக்குலத்தோர், வன்னியர் ஆகிய சமூகங்கள் களப்பிர சமூகத்திலிருந்து வந்தவையாக இருக்கலாம் என்று  நம்பப்படுகிறது. களப்பிரர் என்றால் முரடர்கள், தமிழை அழித்தனர், காட்டு மிராண்டி ஆட்சி நடத்தினர் என்று நம்பப்பட்டவை வெறும் கற்பனைகள் தான் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
18.                களப்பிரர் காலத்தில் வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பதிகளும் வட்டெழுத்தில் எழுதப்பட்டதால் களப்பிரர் காலத்தில் இது தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
களப்பிரர் பற்றிய வியப்பூட்டும் பல தகவல்கள் பல இந்தப்புத்தகம்  முழுவதும் விரவிக்கிடக்கின்றன .தமிழர் வரலாறு பற்றி அறிய விரும்புவார்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது
 
-முற்றும்.

Monday, June 18, 2018

சௌபாவும் நானும்!!!!


சௌபாவும் நானும்!!!!
Image result for sowba
செளபா என்கிற சவுந்திரபாண்டியன்
"ஆல்ஃபிஈஈஈஈ” சாகும் தருவாயில் இருக்கும் யாரோ ஒருவர் உயிர் தவிப்பில் கதறுவதைப்போல அந்தக்குரல் கேட்டது. வாஷ்பர்ன் ஹாலில் அன்று மாத விருந்து. அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும்   வாஷ்பர்ன் ஹால் ஒரு சிறப்பு வாய்ந்த மாணவர் விடுதி. அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நிறைய விடுதிகள் இருக்கின்றன. ஜம்ரோ ஹால் என்பது பி.யு.சி  இருந்த காலத்தில் மிகச்சிறப்பாய் செயல்பட்டதாம். அது கல்லூரியின் பின்னால் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது. அதற்கு முன்னால்  இருப்பது டட்லி ஹால் என்ற புதிய கட்டிடம். பாருங்கள் புதியகட்டிடம் என்று நான் சொன்னது நான் படிக்கும்போது. ஆனாலும் இப்போதும் 100 வருடப் பழமையான மற்ற விடுதிகளை நோக்கும் பொது இது புதிதுதான். இது சைவ விடுதி. இது தவிர “வேலஸ் ஹால்” என்ற ஒன்றும் மாணவியருக்கு வேலி சூழ்ந்த மற்றொரு விடுதியும் இருக்கின்றன.
இதில் மிகவும் பிரபலமானது 'வாஷ்பர்ன் ஹால்'. இது ஒரு அசைவ விடுதி வெள்ளிக்கிழமை தவிர தினமும் ஆட்டுக்கறிதான். சதுர  வடிவில் இரு தளங்கள் கொண்ட இந்தக் கட்டிடம்தான் மாணவரின் முதல் சாய்ஸ், இது கிடைக்கவில்லையென்றால் தான் மற்ற விடுதிகளுக்குப் போவார்கள். அமெரிக்கன் கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும் இங்கே தங்கிப் படித்தது நான் செய்த பாக்கியம் என்பேன்.
இங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழு, பொதுச் செயலாளர் தலைமையில் இயங்கும். ஒரு வார்டன்,அவருக்கு பக்கத்தில் ஒரு பங்களா. அவர் தவிர மூன்று அல்லது நான்கு கண்காணிப்பாளர்கள் (சூப்பரின் டென்டென்ட்) உள்ளேயே தங்கியிருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் புதிதாய்ச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களாய் இருப்பார்கள். 
Image result for washburn hall, Madurai
வாஷ்பர்ன் ஹால்
இந்த வாஷ்பர்ன் ஹாலில் தினமும் நடப்பது விருந்துதான் என்றாலும் மாதமொருமுறை பெரிய விருந்து நடக்கும். மட்டன் பிரியாணி, கோழி வருவல், ஐஸ்கிரீம் பீடா என்று அமர்க்களப்படும்.
அன்று உண்டு களித்து உண்ட மயக்கத்தில் தூங்குவதா இல்லை திங்கள் பரீட்சைக்குப் படிப்பதா என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அந்தச் சத்தம் கேட்டது. ஹாஸ்டலில் பெரும்பாலும் யாருமில்லை. உண்டு முடித்து வெளியே திரைப்படத்துக்குப் போயிருப்பார்கள். எனக்கு திங்கள் முதல் பீரியட்டில் ஒரு பரீட்சை (Quiz) இருந்ததால் நான் எங்கும் வெளியே செல்லவில்லை படிக்க உட்கார்ந்தாலும் கண்கள் சுழற்றி சுழற்றி அடித்ததால் படிக்கவும் முடியவில்லை.
"டேய் ஆஃல்பி சீக்கிரம் வா" என்று மறுபடியும் அந்தக்குரல் கேட்க, என் அரைமயக்கம் முற்றிலுமாய்த் தெளிந்து இப்போது யார் கூப்பிடுவது என்று எனக்கு உடனே தெரிந்தது. கீழ்த்தளத்தில் இருந்த என் ரூமுக்கு நேர் எதிரே மேல் தளத்தில் இருந்த ரூமில் இருந்து ஜன்னல் வழியாக கூப்பிட்டது செளபாதான்.
செளபா என்கிற சவுந்திரபாண்டியன் அப்போது தமிழ் இலக்கியம் படிக்கும் இரண்டாமாண்டு மாணவன். பேராசிரியர் சாலமன் பாப்பையா துறைத்தலைவராய் இருந்த போது அங்கு மிகவும் பிரபலமாய் இருந்த மாணவன். என்னையும் தமிழ்த்துறையில் சேர்க்க செளபா முயன்றதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.
ஜூனியர் விகடனின் முதலாமாண்டு மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து மதுரைப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் தான் செளபா. இடது சாரிப் பாசறையில் வளர்ந்ததால் நல்ல பேச்சுத் திறமை வாய்க்கப்பெற்றவர். சந்தக் கவிதை எழுதும் திறமையும் இருந்தது. சங்கரையா போன்ற தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. கம்யூனிஸ்ட் மேடைகளில் ஒரு மாணவப் பேச்சாளராய்க் கலக்கியதால் கல்லூரிகளுக்கிடையே நடந்த பல பேச்சு, கவிதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள் பெற்றவர். அவருடைய சந்தக் கவிதைகளில் புரட்சிக் கனல் தெறிக்கும். “நியூட்ரான் பல்லுடனும் ஹைட்ரஜன் நாக்குடனும்” என்று தொடங்கும் அவரது கனல் கவிதை இன்றும் செவிகளில் ஒலிக்கிறது.
“உன்னிடத்தில் என்னைத் தந்துவிட்டேன்
எந்தன் உள்ளமெல்லாம் பூத்ததே
உந்தன் சின்ன விழி சிந்தும் புன்னகையில்
ஒளி மின்னலிடை மின்னும் மென்னகையில்
எந்தன் ஜீவனுக்கும் வேர்த்ததே.
என்று அவர் எழுதிய பாடலுக்கு என்னுடைய கிடாரில் கார்ட்ஸ் அமைத்து இசையமைக்க முயன்றது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. இதெல்லாம் நடந்தது 1982ல். 1981 ஜூன் முதல் 1984 ஏப்ரல் வரை நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன்.

அதோடு வாஷ்பர்ன் ஹால் வார்டன் “ஜான் சகாயம்” அவர்கள் அனுமதியோடு என்னுடைய முயற்சியில் வெளிவந்த கையெழுத்துப் பிரதியான “வாஷ்ஜேர்ன்” என்ற பத்திரிக்கைக்கு நான் எடிட்டராகவும் என்னுடன் செளபா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து பணியாற்ற நண்பர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் பிரபாகர் அவர்கள் தன்னுடைய லே அவுட் மற்றும் சித்திரங்களால் சிறப்பித்தார். செமஸ்டருக்கு ஒரு முறை அது அச்சிலும் வந்தது.
செளபா எல்லாவற்றையும் கவிதையிலேயே வெளிப்படுத்த முயல்வார். ஒரு சமயம் அறையில் சிகரெட் பிடித்ததால் மிகவும் கட்டுப் பாடுகளை எதிர்பார்க்கும் வார்டன் ஜான் சகாயம், ரூமை விட்டு வெளியே போகச் சொல்ல, செளபா இப்படி எழுதினார்.
“அதிகாலையில்
அறையைவிட்டு வெளியே செல்ல
ஆணையிட்டார்
அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர்” என்று.
நினைவுகள் எங்கேயே போய்விட்டன. ஆல்ஃபி என்று அதிரடியாகக் கூப்பிட்டதும், தலை தெறிக்க ஓடிச் சென்று மேலே ஏறி செளபாவின் ரூமுக்குள் நுழைந்தேன். பாதி உடல் கட்டிலிலும் மீதி உடல் கீழேயும் கிடக்க செளபாவின் கண்கள் ஒரு பக்கம் மேலே இழுத்துக் கொண்டிருக்க, நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. நான் உடனே ஓடி தண்ணீரைக் கொண்டு போய்க் கொடுத்து,
“என்ன செளபா, என்னாச்சு?” என்றேன். பதறியபடி
“ஆல்ஃபி நான் சாகப்போகிறேன், என்னைக் காப்பாத்து” என்று உறக்கக்கத்தினார்.
“வாங்க உடனே ஆஸ்பத்திரிக்குப் போகலாம்” என்று சொல்லி கைத் தாங்கலாக அழைத்துச் சென்றேன். என்னுடைய செட் என்றாலும் வயதில் மூத்தவர் என்பதால் நீங்க வாங்க என்று பேசியே பழகி விட்டேன்.
என்னாச்சு என்று கேட்டபோதுதான். ரூமில் அவருடைய ரூம்மேட் வைத்திருந்த சிகரெட்டை எடுத்துக் குடித்ததாகவும் ஆனால் அதின் உள்ளே இருந்தது கஞ்சா என்று தெரியவில்லை என்றும் சொன்னார். எனக்குப் பகீரென்றது.
- தொடரும்.   

நண்பர்களே வருகின்ற சனிக்கிழமை ( ஜூன் ௨௩ ) மாலை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் கோடை விழாவில் அடியேன் பங்கு பெற்றுப்பேசும் பட்டிமன்றம் நடக்க இருக்கிறது .நியூயார்க் , நியூ ஜெர்சியில் வாழும் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன் .





Monday, June 11, 2018

தள்ளிப்போன தற்கொலை முயற்சி !!!!


Image result for தூக்குப்போட்டுக் கொள்வது
வேர்களைத்தேடி பகுதி -16
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/05/blog-post.html
            பட்டினி, தாகம், செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்த சோகம், கண்ணீரினால் காய்ந்த கன்னங்கள், உலர்ந்து போன உதடும் மனசும் என்று கலந்து கட்டிய ஒரு உணர்வில்தான் தற்கொலை பண்ணிக்கொள்ள நினைத்தேன். மனதை ஒரு நிலைப்படுத்திவிட்டு ஒவ்வொரு வழியாக யோசித்தேன்.
          உடனே தோன்றியது தூக்குப்போட்டுக் கொள்வது. அம்மா கொடிக்குக்  கட்டும் நைலான் கயிறும் இருந்தது நினைவுக்கு வந்தது. இதே சமயலறையில்  போட்டுக் கொள்ளலாம் என்று அண்ணாந்து பார்த்தேன். அங்கே மேலே லாகடத்தில் '' வடிவில் கம்பியும் இருந்தது.
Related image

            ஆனால் இரண்டு காரணத்திற்காக அதை கைவிட்டேன். சாப்பாடு சமைத்து சாப்பிடுமிடத்தில் நான் இறந்து போனால் என் தம்பிகளுக்குப் பயமாயிருக்கும். அப்புறம்  எப்படி என் அம்மா எங்கே சமைக்க முடியும்? எப்படி எல்லோரும் அதே இடத்தில் சாப்பிட முடியும்? என்று நினைத்தேன். இது முதல் காரணம். இரண்டாவது காரணம், தூக்குப்போட்டால் கழுத்து எலும்பு முறிந்து நாக்கு முழுவதுமாக வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். பார்க்கவே கோரமாக இருக்கும். எனவே அப்படியெல்லாம் சாகவேண்டாம் என்று முடிவு செய்தேன்.
          அடுத்த முறையாக எலி மருந்து பாஷானம் தின்று செத்துவிடலாம் . இது ரொம்ப ஈஸி. மூலைக்கடைச் செட்டியார் காதையில் கேட்டால் சந்தேகமே வராமல் தந்துவிடுவார். நம் வீட்டில் கூட அம்மா போன தடவை வாங்கினது மீதமிருக்கும் கண்டுபிடித்துவிடலாம் என்று மெதுவாக எழுந்து தேடினேன். ஆஹா சமையலறை அலமாரியில் அம்மா வெளிப்படையாகவே வைத்திருந்தார். எடுத்தேன் முகர்ந்து பார்த்தேன்.
Image result for எலி மருந்து

          நாத்தம் குடலைப்பிடுங்கி வாந்தி வந்தது. ஓங்கரித்தேன். சத்தம் கேட்டு என் அம்மா வர அவசரமாக அதனை வைத்துவிட்டு மீண்டும் முழங்காலுக்கு வந்தேன்.
          "போதும்டா சேகர் எந்திரி" என்றார் என் அம்மா.
          "இல்லை"
          சரி விடுறா நம்ம அப்பாதான, எந்திரி நான் சொல்லிக்கிறேன்.
          "இல்லம்மா அப்பா சொன்னாதான் எந்திரிப்பேன்".
         
          "கோபச் சனியன் பிடிச்ச இந்த ஆளை வெச்சுக்கிட்டு பெரிய தொல்லையா இருக்கு. நீசப்பய" என்று சொல்லிவிட்டு அம்மா போனார்கள். அதீத கோபப்படும்போது அம்மா சொல்லும் அந்த வார்த்தை "நீசப்பய" என்பது. ஓரிரு சமயத்தில் “எங்கேயோ கிடந்து வந்த நீசப்பய" என்பார்கள். அப்படிச் சொல்லித்திட்டும்போது எனக்கு சிரிப்பு வந்துவிடும். சில சமயங்களில்         அவர்கள் சொல்வதற்கு முன்னால் அதனை நான் சொல்லிவிட அம்மாவுக்கு சிரிப்பு வந்துவிடும். சரி இப்ப தற்கொலைக்கு வருவோம்.
          எலிப்பாஷான முயற்சியையும் கைவிட்டு, பாப்பான் கிணற்றில விழுந்துரலாம்னு நினைச்சேன். எங்க தெருவுக்கு மட்டுமல்ல பக்கத்திலுள்ள பல தெருக்களுக்கு பாப்பான் கிணறுதான் குடி தண்ணீர். பக்கத்தில் டேங்க் கட்டி குழாய்கள் போட்டார்கள். அதற்கு தனபால் என்பவரையும் நியமித்து காலையிலும் மாலையிலும் மோட்டார் போடுவார்கள். அருமையான தண்ணீர். மோட்டார் போடவில்லையென்றாலும் கூட கிணற்றிலிருந்து இறைத்து எடுத்துக் கொள்வோம். மோட்டார் போட்டு முடித்த போது ஓடிப்போய் உள்ளே பார்ப்பேன். தண்ணி முழுவதுமாக தீர்ந்து போய் அடிப்பகுதி தெரியும்.  
Image result for பாழடைந்த கிணறு

அப்போது உற்றுப் பார்த்தால் தண்ணீர் ஊறுவது தெரியும். ஒரு மணி நேரத்தில் நிறைய தண்ணீர்     வந்துவிடும். தண்ணீர் ஊற்றிலிருந்து சிறிது சிறிதாக கொப்பளித்து வந்து நிரப்புவது கண்கொள்ளாக் காட்சி. அந்தக் கிணற்றில் நீர் இருக்கும்போது விழுந்தாலும் சரி நீர் வற்றியபோது விழுந்தாலும் சரி சாவு நிச்சயம். நீர் இல்லாத போது விழுந்தால் பாறையில் மண்டை தெறித்து சாவது நிச்சயம். நீர் இருக்கும் போது விழுந்தாலும் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் சாவு நிச்சயம்.
          ஆனால் மக்களுக்கு குடிநீர் தரும் அமுதசுரபியாக இருக்கும் கிணற்றில் நான் விழுந்து செத்துப்போனால், பின்னர் அதிலிருந்து எப்படித் தண்ணீர் குடிப்பார்கள். கிணறு இருக்கும்வரை என்னை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என்பதால் அந்த முடிவையும் கைவிட்டேன்.
          இறுதியாக இப்படியே பட்டினி கிடந்தால் கூட செத்துவிடுவோமே அப்படியே இருக்க வேண்டியது தான் என்று நினைத்த போது மீண்டும் உலர்ந்த கன்னங்களில் சூடான கண்ணீர் உருண்டது.
          மதியத்திலிருந்து முழங்காலில் நிற்கிறேன். முழங்கால் இரண்டும் கெஞ்சியது. என் அப்பாவும் அம்மாவும் பள்ளிக்குப்போய் 4 மணிக்குத்தான் திரும்ப வந்தார்கள். பசி காதை அடைத்தது. மதியம் வந்த என் அம்மா போட்டு வைத்திருந்த சாப்பாடும் அப்படியே இருந்தது.
          வந்து பார்த்த என் அம்மா, "டேய் சேகர் இன்னுமா சாப்பிடல, எழுந்து வாடா வந்து சாப்பிடு" என்றார்கள்.
          நான் என் அம்மாவை முறைத்தேன். நான் தான் பட்டினி கிடந்து சாகலாம் என்ற முடிவில் இருக்கிறேனே. அதற்குள் என் அப்பா உள்ளே வந்து ஒரு உருமு உரும நான் அப்படியே உட்கார்ந்து ஆறிப்போன சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தேன். எங்கப்பாவுக்கு அப்படி ஒரு மரியாதை கலந்த பயம். என் தற்கொலை முயற்சியும் கைவிடப்பட்டது.
          ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவுதான் திட்டும் அடியும்  வாங்கினாலும் ஒரு முறை  கூட அவரை எதிர்த்துப் பேசினதில்லை, எதிர்த்து முறைத்ததில்லை.          மனசில் கூட எதிர்ப்பு எண்ணங்கள் தோன்றியதில்லை என்பதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் என்பதையும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு முறை தவிர அடிவாங்கிய மற்ற எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு தவறு செய்துதான் மாட்டியிருக்கிறேன். எனவே அப்போது நானே என் உடம்பை அடிவாங்க தயார் செய்து கொள்வேன்.
          இப்போது சென்று பார்த்தபோது பார்ப்பான் கிணறு தூர்ந்து போய்க்கிடந்தது. உள்ளே பாழடைந்து நீரின்றி வெறும் தேங்காய் மட்டைகளும், பழைய செருப்புகளும் இன்னும் பலவித குப்பைகளும்தான் அதிலிருந்தன. அதைப் பார்க்கும்போது மனதை ஏதோ செய்தது. ஆழ்குழாய் கிணறுகள் வந்துவிட்டன என்பதால் கிணறுகளை பராமரிப்பதும் இல்லை தேவையும் இல்லை. ஆனால் அந்தக் கிணறுமுன் நடந்த பெரிய சண்டை ஞாபகம் வந்தது. அதனை அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
 தொடரும்



Thursday, June 7, 2018

அமெரிக்கர்கள் செய்த அநியாயம் !


Image result for princess kaiulani

பார்த்ததில்  பிடித்தது.
பிரின்சஸ் கையூலானி
          சுமார் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு கான்ஃபிரென்சுக்காக ஹவாயில் உள்ள ஹானலூலுவுக்குப் போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கூட என் பெரிய மகள் அனிஷாவும் வந்தாள். நியூயார்க்கிலிருந்து நீண்ட தூரத்தில் இருக்கிறது ஹானலூலு. நேர வித்தியாசம் கூட பத்துமணி நேரத்திற்கு மேல் கிட்டத்தட்ட இந்தியாவுக்குப் போவது போல  
          19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிலிருந்து சில கிறித்தவ மதப் பிரச்சாகர்கள் ஹவாயில் நுழைந்தனர். அவர்களின் போதனைகளை ஏற்று ஹவாயின் அரச வம்சம் கிறித்தவ மதத்தைத் தழுவியது. அங்கேயே குடியேறிய அந்த அமெரிக்கர்களின் இரண்டாவது தலைமுறை, நிர்வாகப்பணிகளிலும் அரசாங்க பதவிகளிலும் அமர்ந்தனர். இவர்கள் ஹவாயின் வாழ்க்கை முறையை முற்றிலும் நவீனமயமாக்க முயன்றதால் மக்களிடமிருந்தும் மன்னரிடமிருந்தும்   எதிர்ப்பு வந்தது. அதன்பின் சண்டையும் வந்ததால் அவர்கள் பேர்ல் ஹார்பரில் நிலை கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்திடம் உதவி கேட்டனர். அமெரிக்க ராணுவம் அதிரடியாக நுழைய நிலைமை தலைகீழாக ஆகியது. அங்கிருந்த வெள்ளைத்தலைவர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து, இதனை அமெரிக்க மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் அல்லது நாங்கள் தனிநாடாக பிரகடனம் செய்வோம் என்று சொல்ல வேறு வழியின்றி அமெரிக்கா  ஹவாயை 50ஆவது மாநிலமாக சேர்த்துக் கொண்டது.
          இது மிகவும் அநியாயம் என்பதால் இன்றுவரை அதனை எதிர்த்து  போராடி வருகிறார்கள். ஆனால் இப்போது அந்த நாட்டில் வாழும் மண்ணின் மைந்தர்களின் சதவீதமும் குறைந்துவிட்டது. அமெரிக்க அதிபராக கிளின்ட்டன் இருந்த போது இவ்வாறு நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு மன்னிப்புக்  கேட்டார். ஆனால் திரும்பவும் ஹவாயை அந்த மக்களிடம் ஒப்படைப்பது என்பது இயலாத காரியமாகி விட்டது. பராக் ஒபாமா  கூட  ஹவாயில் பிறந்து வளர்ந்தவர்தான்.
          இதன் அடிப்படையில்  படம் நெட் பிலிக்சில் வரவும் உடனே ஆர்வமாக என்னுடைய லிஸ்ட்டில் அதனை இணைத்து கடந்த வாரம் பார்த்து முடித்தேன்.
Image result for david kalakaua
King David Kalakaua
          அயோலானி அரண்மனையில் முதன் முதலாக மின்சாரம் பொறுத்தப்படுவதில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரே அரண்மனை இதுதான் .ஏனென்றால் அமெரிக்காவின் மற்ற பகுதிகளை  எந்த மன்னரும் ஆளவில்லை .கலாக்குவா அப்பொழுது அரசராக இருந்தார். அவர் மனைவி ராணி லீலியோ கலானி.  அரசர் கலாக்குவாவின் தங்கைக்கும் அவரது ஸ்காட்டிஷ் கணவருக்கும் பிறந்தவர்தான் இளவரசி கையூலனி.  
Image result for lorrin thurston
Lorrin Thurston
          மின்சாரம் வந்த அதே நேரத்தில் வெள்ளை வீரர்களுடன் உள்ளே நுழைந்த வெள்ளை அமெரிக்கர்களின் தலைவர் லாரின் தேர்ஸ்டன் (Lorrin Thurston) மன்னரை மிரட்டிப் பணிய வைத்து அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வலியுறுத்துகிறான். மன்னரின் பாதுகாவலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்தக் கலாட்டாவிலிருந்து பாதுகாக்க இளவரசி கையூலனியின் ஸ்காட்டிஷ் தந்தை அவளை இங்கிலாந்துக்குக் கொண்டு போய் படிக்க வைக்கிறார்.
          இப்படி இருக்கும் போது மன்னர் டேவிட் கலாகுவா சிறிய வயதிலேயே இறந்து போன செய்தி இளவரசிக்கு எட்டுகிறது. அவள் அமெரிக்காவிற்குச் சென்று அப்போதிருந்த அதிபர் கிளீவ்லேண்டைச் சந்திக்கிறார். 
Image result for princess kaiulani
Princess Kaiulani
          அதற்கு கிளீவ்லேண்ட் ஆதரவு தெரிவித்தாலும் அவருடைய பதவி சீக்கிரம் முடியவிருப்பதால் பெரியதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.      எனவே இளவரசி கையூலனி தன்  நாட்டுக்குத் திரும்புகிறார். அதற்கு முன் படிக்கும்போது அங்கு அமெரிக்க இளைஞன் ஒருவனிடம் காதலில் விழுகிறாள். அந்தக் காதல் கைகூடியதா, தன் மக்களுக்கு அவரால் உரிமைகளைப் பெற்றுத்தர முடிந்ததா என்பதை திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
          அக்டோபர்  2009ல் ஹவாயிலும்/ மே 2010ல் அமெரிக்காவிலும் இது ரிலீஸ் செய்யப்பட்டது. ராபர்ட் பைன் மற்றும் மார்க் ஃபோர்பி  இதை எழுத மார்க் ஃபோர்பி இயக்கியிருக்கிறார். பிரின்சஸ் கையூலனியாக கோரியங்கா கில்ச்சர் (Qarianka cilcher) தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். லாரி தேர்ன்ஸ்டனாக பேரி பெப்பர் நடித்திருக்கிறார்.
Image result for Q'orianka kilcher
Qarianka cilcher
          இது ஹவாயில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது சிறந்த படமாக ஆடியன்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டது. (Audience Award)
          ஹவாயின் வரலாற்றை அறிய விரும்பும் ரசிகர்கள் இதனைப் பார்த்து மகிழலாம்.
- முற்றும்.