Monday, January 5, 2015

M.S.விஸ்வநாதனை கைவிட்ட இயக்குநர் ஸ்ரீதர் !!!!!!!!!

எழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 16 "நீ கேட்டால் நான் மாட்டேனென்று"

1978-ல் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப்படத்தில் பல ஹிட் பாடல்கள் இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். இதன் துள்ளல் இசை உற்சாகம் கொடுக்க வல்லது.
பாடலின் சூழல்:
காதலன் காதலியிடம் என்னவோ கேட்க, “நான் முழுவதுமாக உனக்கே சொந்தம், சொன்னதைக் கேட்கும் த்தினி நான்", என்று சொல்லி உற்சாகமாகப்பாடும் பாடல் இது. அப்படி என்ன காதலன் கேட்டிருப்பான் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அப்படி என்ன பெரிதாகக் கேட்டிருக்கப்போகிறான் நமக்குத் தெரியாததை. பாடலைக் கேட்போம்.

 இங்கே பாடல் வீடியோவை உங்களுக்கென கொடுத்திருந்தாலும், நான் வெறும் பாடலை மட்டுமே டவுன்லோட் செய்து கேட்பதால் இந்தப்படத்தின் சூழல், பாடல் படமாக்கப்பட்ட விதம் ஆகியவற்றை விட்டுவிட்டு பாடலையும் இசையைக் குறித்து மட்டும் எழுவது என் நோக்கமாகும். இந்தப்படங்களில் பெரும்பாலானவற்றை நான் பார்த்ததில்லை என்பதும் ஒரு காரணம்.
பாடலின் இசை:
இளையராஜாவின் உற்சாகம் பொங்கும் துள்ளல் இசைக்கு இந்தப்பாடல் பெரிய உதாரணம். பாடல் முழுதும் மெட்டு மற்றும் இசைக்கருவிகளின் பயன்படுத்துதலில் ஒரு துரித வேகம் தெரியும். சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருக்கும் கிராமிய மெல்லிசை மட்டும் மேற்கத்திய இசையின் சரிகலவை  இந்தப்பாடல் என்று சொல்லலாம். அதோடு இளையராஜாவின் எல்லாப் பாடல்களிலும் இருக்கும் ஒரு ஆதார மெலடியும் இந்தப்பாடலில் சுகமாக இருக்கிறது. இந்தப்பாடலின் ஆரம்பத்தில் கர்நாடக கச்சேரிகளிலும் பஜனைகளிலும் பயன்படுத்தும் தாளத்தை பயன்படுத்தியதோடு பேஸ், டிரம்பட் போன்ற பலவித இசைக்கருவிகளை பயன்படுத்தி விதவித இசையொலிகளை எழுப்பி கொண்டாட்ட நிலையினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீதரின் பல முந்தைய படங்களுக்கு MSV இசையமைத்தார். எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட். ஆனாலும் இளையராஜா என்ற புதுமையை நாடி ஸ்ரீதர் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம்தான் இணைந்தார். இளையராஜா அவர் நம்பிக்கையை ஏமாற்றாமல் ஹிட் பாடல்களை கொடுத்தார். ஒரு சமயத்தில் பாலசந்தரும் அதனையே செய்தார். "ஸ்ரீதர் MSV-யின் வெற்றிக் கூட்டணியைவிட்டு தன்னிடம் வருகிறாரே, ஒரு நாளில் இது எனக்கும் நடக்குமல்லவா", என்று இளையராஜா அப்போது நினைத்தாராம்.  சில வருடங்களுக்குப்பிறகு அதே போல் நடந்தது. "மணிரத்னம்-இளையராஜா" கூட்டணியில் எல்லாப்பாடல்களும் சூப்பர்ஹிட் என்றாலும் மணிரத்னம், ரோஜாவில் AR.ரகுமானிடம் இணைய இளையராஜாவின் சகாப்தம் முடிவை நோக்கி நகர்ந்தது.
பாடல் வரிகள்:

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும் ஹையா

அன்பே உன்னை ஆராதனை செய்கின்றவள் மனது
பொன் போன்றது பூப்போன்றது எண்ணங்களோ இனிது (2)
தாமரை பூவில் தேன் சிதற (2)
நீ கொஞ்சம் கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச
நாம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா
எங்கோ எங்கோ அம்மம்மா

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியக்கும்


கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில
பல்லாயிரம் பாடங்களும்  சொல்லாமலே புரிய
நீ ஒரு காதல் நூல் நிலையம் (2)
பொன்மாலை தோறும் உன் லீலை பாடும்
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா
நாளும் நீதான் சொந்தமோ

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும் ஹையா




பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. துள்ளல் இசைக்கு ஈடு கொடுக்குமளவிற்கு சிறந்த வரிகள் இல்லையென்றாலும், இரண்டாவது சரணத்தின் முதற்பகுதி நன்றாகவே வந்திருக்கிறது. "கல்லூரியில் கல்லாததை உன் கண் ஜாடையில் பயின்றேன், பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிந்தது, ஏனெனில் நீயே ஒரு காதல் நூல் நிலையம்", என்று சொல்வதில் கவிஞரின் கற்பனை நயம் வெளிப்படுகிறது. 
பாடலின் குரல்:
  1. Vani Jeyaram
இந்தப்பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். எனக்குத்தெரிந்து இந்தப் படத்தில்தான் இளையராஜா வாணி ஜெயராமை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கிறார். அதன்பின் பல ஹிட் பாடல்களை இருவரும் சேர்ந்து கொடுத்தனர். அவருடைய பளிச்சென்ற குரல் லாவகமான உச்சரிப்பு, தெளிவான உச்சரிப்பு ஆகியவை பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.ஹைய்ய்யா  என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் வேறு விதமாகப்பாடி  இளமையான நாயகியின் குறும்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் இளையராஜாவின் துள்ளல் பாடல் வரிசையில் இந்தப்பாடல் முக்கியமான ஒன்று.

தொடரும் >>>>>>>>>>>>>>>>

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு 

வாழ்த்துக்கள் .இந்த புதிய ஆண்டில் வளமும் ,நலமும், 

அமைதியும், அன்பும் பெருகட்டும்


17 comments:

  1. வித்தியாசமான பாடல் இன்று..
    மிகவும் நன்றி, தகவலுக்கும், இனிய நடைக்கும்..
    இன்று ஒரு ஆன்லைன் ரேடியோ கேட்டுக்கும் போது உங்கள் தொகுப்பில் இருந்து சில பாடல் தொடர்ந்து வந்தது..
    "அந்தபுறத்தில் ஒரு மகாராணி"
    "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்."
    என்று வந்து கொண்டு இருந்தது..
    உங்கள் நினைவு வந்து புன்னகை தந்தது..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

      Delete
    2. நன்றி.. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

      Delete
  2. //"ஸ்ரீதர் MSV-யின் வெற்றிக் கூட்டணியைவிட்டு தன்னிடம் வருகிறாரே, ஒரு நாளில் இது எனக்கும் நடக்குமல்லவா", என்று இளையராஜா அப்போது நினைத்தாராம். சில வருடங்களுக்குப்பிறகு அதே போல் நடந்தது. //

    இது இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இளையராஜாவை விட்டுப் போகாத ஒரே இயக்குநர் பாலுமகேந்திரா தான்...

    நீங்கள் சொல்வது போல் எழுபதுகளில் வந்த இளையராஜா பாடல்களில் பெரும்பாலானவை சட்டென்று முடிந்து விடுவது போல் ஓர் உணர்வு....

    ReplyDelete
    Replies
    1. "இளையராஜாவை விட்டுப் போகாத ஒரே இயக்குநர் பாலுமகேந்திரா தான்."..ஆனால் அழியாத கோலங்களை போட்டுவிட்டு ,மூன்றாம் பிறையை தேடிப்போய் விட்டாரே .அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் .வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
    2. Azhiyatha Kolangal Music by Salil Chodhry. Not Ilayaraja.

      Delete
    3. Dear Paramesh, I mentioned about Balu Mahendra and not about Ilayaraja in my reply.

      Delete
  3. அந்தக் கால இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு கார் காலம் திண்டுக்கல் தனபாலன் அவர்களே .

      Delete
  4. ஆல்ஃபி.

    மிகச் சரியான தலைப்பு. மணிரத்னம், பாரதிராஜா, பாலச்சந்தர் போன்றவர்கள் இளையராஜாவை விட்டு ரஹ்மானுக்கு தாவியபோது அதை அநியாயம், சுயநலம் என்று கொட்டித்தீர்த்த ராஜா ரசிகர்கள் ஸ்ரீதர், பாலச்சந்தர், ஏ வி எம் நிறுவனம் போன்ற பலர் எம் எஸ் வி யை கழட்டிவிட்டு இளையராஜாவுக்கு மாறியதை மட்டும் விமர்சிப்பதில்லை. கேட்டால் அது ராஜாவின் இசைத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று சொல்வார்கள்.

    ஸ்ரீதர் முதலில் இளையராஜாவிடம் வந்தபோது அவர் இசையமைக்க மறுத்துவிட்டது எம் எஸ் வி மீது அவர் கொண்டிருந்த உண்மையான மரியாதை மற்றும் அபிமானத்தைக் காட்டுகிறது. அதற்காக இ. ரா வைப் பாராட்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லியிராவிட்டால் அவர்கள் ரசிகர்கள் இல்லையே .நம் தமிழ் ரசிகர்கள் எப்போதும் அப்படித்தானே? நன்றி காரிகன்.

      Delete
  5. ஆல்பி,

    இளையராஜாவைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.என் தளம் நீங்கள் வந்ததில்லை என்பதால் இந்த அழைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக வருகிறேன் .

      Delete
  6. அருமையான பாடல் பகிர்வு. இளையராஜா நினைத்தது சரிதானே! அவர் சகாப்தம் முடிவுற்று...கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி இருந்து அவரும் இடையில் ஹாரிஸை மாற்றினார்.....இது இப்படித்தான்....ஸ்கூல்பையன் கார்த்தி சரவணன் சொன்னது போல் பாலுமகேந்திரா மட்டுமெ..மாற்றாமல் இருந்தவர்...ம்ம்ம்ம் போய்விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.துளசிதரன் .

      Delete
  7. நல்ல பாடல்.அதன் சிறப்புகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    எந்தக் கலைஞனுக்கும் இந்த நிலை வரத்தான் செய்யும்.இயக்குனர்களைப் பொறுத்தவரை முதல் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே அவர்களுடைய திறமையின் மீது அபார நம்பிக்கை வைப்பார்கள். பின்னர் தங்கள் வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள அப்போது உச்சத்தில் உள்ள இசை அமைப்பாளர்கள் நடிகர்களை பயன்படுத்திக் கொண்டால் தனது வெற்றி தடைபடாது என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது .தயாரிப்பாளர்களும் முதன்மைகளின் கூட்டணியால் யாராவது ஒருவராவது படத்தை கப்பாற்றிவிடமுடியும் என்று நம்புவதே. இதில் பழையவர்கள் ஓரங்கட்டப் படுவது இயல்பானதே. அதை அவர்கள் புரிந்து கொண்டால் மன வருத்தம் ஏற்படாது . (ஏற்பட்டாலும் பயனில்லை என்பது வேறு விஷயம்)

    ReplyDelete
    Replies
    1. இதனை சுயநலம் என்பதா பொது நலம் என்பதா ?
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி.என்.முரளிதரன்.

      Delete