Thursday, January 8, 2015

நானும் வேலுப்பிள்ளை பிரபாகரனும்!!!!!!!!!!!!!!


எச்சரிக்கை : தலைப்பில் நான் குறிப்பிட்ட நபர் விடுதலைப்புலிகளின்  தலைவர்  பிரபாகரன் தானே என்று நீங்கள் நினைத்தால் அது சரிதான்.


எண்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நேரம். ஊரே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. இலங்கையில் சிங்களக் காடையர்கள் தமிழினத்தை நசுக்கி ஒழித்துவிட எல்லாவகையிலும்  முயன்று கொண்டிருந்தனர். குறிப்பாக அதிபராக இருந்த ஜெயவர்த்தனே. 
  1. Jeyawardene
அதனை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. கல்லூரி மாணவர்களும்  களத்தில் குதித்தனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று மனுக்கொடுத்தனர்.
Along with my classmates in  front of my college
அமெரிக்கன் கல்லூரியின் அருகில் உள்ள தேவர் சிலையைத் தாண்டி, ராஜாஜி மருத்துவமனை வழியாக செல்லும் மாணவர்களின் கோஷம் உள்ளே வகுப்பறையில் இருக்கும் எங்களுக்குத் தெளிவாக கேட்டும். ரத்தம் துடித்து, ஆத்திரம் மோலோங்கினாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம். எங்களுடைய மாணவர் தலைமைக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது. எங்கள் கல்லூரி வழியாக சென்ற மற்ற கல்லூரி மாணவர்கள் எங்களையும் பழித்தபடி சென்றார்கள். முன் கேட்கள் எப்பொழுதும் அடைக்கப்பட்டு இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஆத்திரம் உச்சத்திற்குப் போனது, லேடி டோக் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர்தான். எங்கள் கேட் முன்னால் நின்று பெண்கள் எங்களைப் பழிக்க ஆரம்பித்தனர். (லேடி டோக் எங்கள் சிஸ்டர் (?) நிறுவனம்) அவர்கள் கோஷத்தைக் கேட்ட எங்களுக்கு பெருத்த அவமானமாய்ப் போய்விட்டது. அந்த கோஷம் என்னவென்றால் "அஞ்சு பத்து அம்பது அமெரிக்கன் காலேஜ் ஒம்போது " என்பது - அதுவும் பெண்கள் சொல்வது.
Lady Doak College , Madurai
நாங்கள் மிகுந்த கோபத்துடன் வகுப்பறைகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்த ஒருவழியாக அனுமதி கிடைத்தது.
அடுத்த நாள் காலை, திரண்ட மாணவர்களில் சிலர் முதலில் லேடி டோக் காலேஜ் சென்று கோஷம் போடவேண்டும் என்று சொல்ல,( அது என்ன கோஷமென்று வெளியில் சொல்லமுடியாது ) பாதுகாப்புக்கு வந்த போலிஸ் அனுமதி மறுத்து தேவர் சிலை வழியாக அழைத்துச் சென்றனர். கோஷங்கள் காதைப்பிளந்தன.
"பனைமரத்துல வவ்வாலா? தமிழனுக்கு சவாலா?"
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"
“மாணவன் நினைத்தால் நடத்திக்காட்டுவோம்”
"டிவின்கில் டிவின்கில் லிட்டில் ஸ்டார், அமெரிக்கன் காலேஜ் சூப்பர் ஸ்டார்".
சில மாணவர்கள் (சத்தியமா நான் இல்லைங்க) வழியில் வந்த பஸ்களை தட்டியும், ஆட்டோக்களின் ரப்பர் ஹார்ன்களை பிடுங்கவும் ஆரம்பித்தனர். தட்டிக்கேட்ட போலிஸ்காரருக்கு எதிராக புதுக்கோஷம் ஒன்று எழுந்தது. " ஏட்டையா ஏட்டையா தொப்பில ஓட்டையா". போலீஸ்காரர்களுக்கு கோபம் வந்தாலும் பல்லைக்கடித்துக்கொண்டு வந்தார்கள்.
போய் கலெக்டர் ஆபிசில் மனுவைக் கொடுத்துவிட்டு ஹாஸ்டல் திரும்ப நல்லபசியில் ஹாஸ்டல் உணவை ஒரு வெட்டு வெட்டிவிட்டு பெரும்பாலானோர் சினிமாவுக்குப் போய்விட்டோம்.
"டேய் சேகரு இதுல விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகர் எங்க வந்தாரு?"
"கொஞ்சம் பொறுமையா கேளுரா மகேந்திரா"
மதுரையில் அப்பொழுதெல்லாம் போராளிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தேனிக்குப் பக்கத்தில் உள்ள கோம்பை என்ற பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து ஆயுதப்பயிற்சி நடந்தது. அரசாங்கம் அனுமதி அளித்ததா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டதா என்று தெரியவில்லை.

சில சமயங்கள் யூனிஃபார்ம் அணிந்து துப்பாக்கி ஏந்திய சிறுகுழுவினர் வரிசையாக நடந்து செல்வதை மதுரைத் தெருக்களில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இதில் பலகுழுக்கள் இருந்தாலும் பெரும்பாலும் LTTE, EPRLF  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிகம். அதுதவிர முன்னும் பின்னும் திறந்த வெளி ஜீப்பில் பாதுகாவலர் புடைசூழ இந்தக்குழுக்களின் தலைவர்கள் காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 
 அடுத்த நாள் மாலை புதிதாக வாங்கிய என்னுடைய ஸ்டோன் வாஷ் பேன்ட்டையும் (8 பாக்கெட்டுகள் கொண்டது-பாக்கெட்டுகள் அதிகம் இருந்து என்ன, செய்ய, உள்ளே வைப்பதற்கு ஒன்றும் இல்லையே) ஸ்டோன்வாஷ் சட்டையையும் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஸ்டோன்வாஷ் உடைகள் அப்போதுதான் அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தன. போடும்போதே நண்பன் சையது கேட்டான், "எப்படா விடுதலைப்புலியில் சேர்ந்த ? " என்று. ஒரு புன்சிரிப்பை பதிலாகக் காண்பித்துவிட்டு அவனும் நானும் வெளியே வந்தோம். ராஜாஜி மருத்துவமனையில் அவனுடைய  ஊரான கம்பத்துக்காரர் யாரோ ஒருவர் உடம்பு சரியில்லாமல் சேர்க்கப்பட்டிருப்பவரை பார்க்கப் போனோம்.
அமெரிக்கன் கல்லூரிக்கு முன்னால் இருக்கும் வணிக வளாகத்தில் இருந்த கிங் மெட்ரோ ஜுஸ் சென்ட்டரில் சையது வாங்கிக் கொடுத்த "மிக்சர் ஜீஸை" -குடித்துவிட்டு கூலாக இறங்கி இடதுபுறம் நடந்தோம். தேவர் வழக்கம் போல் இடுப்பில் கைவைத்து கம்பீரமாக நின்றிருந்தார்.  சிலைக்கு தினமும் காலையில் யாரோ புதிய மாலை ஒன்றைபோட்டு விடுவார்கள். பலவித டிராஃபிக்கில் புழுதி பறந்து கொண்டு இருந்தது. சிறிதுதூரம் நடந்தவுடன், மூன்று கார்களும் ஒரு ஜீப்பும் வேகமாக எதிர்புறம் வருவதை பார்த்தோம். முதல் காரிலும் மூன்றாவது காரிலும் துப்பாக்கிகள் தாங்கிய நான்குபேர் இருந்தனர்.  AK-47 ஏந்திய சிலர் ஜீப்பில் இருந்தனர். நடுவில் இருந்த காரில் முன்புறம் டிரைவர் அருகில் துப்பாக்கியுடன் ஒருவர் உட்கார்ந்திருக்க, பின்புறத்தில் இருவர் உட்கார்ந்திருந்தனர். ஏதோ போராளிகளின் தலைவர் செல்கிறார் என்று சையது சொன்னான்.   முன்னால் போன கார் விரைந்து சென்றுவிட, பின்னால் வந்த கார் தயங்கி நின்றது. அதன்பின் வந்த கார் கூட பின்னால் நின்றுவிட்டது.  

நடுவில் இருந்த காரின் பின்புறக் கண்ணாடி இறங்க ஒருவர் தலையை நீட்டி என்னைக்கூப்பிட்டார். என்னைத்தான் கூப்பிடுகிறாரா என்ற சந்தேகத்தில் நான் சையதைப் பார்க்க அவன், "உன்னைத்தான் போடா" என்றான். நான் கிராஸ் பண்ணி 'அங்கு' செல்ல, காரின் பின்புறம் ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் "நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் ?", என்று கேட்டார். திடுக்கிட்ட நான், "நான் எந்த இயக்கமுமல்ல அமெரிக்கன் கல்லூரி மாணவன்" என்று சொன்னேன். அவர் பக்கத்தில் இருந்த இன்னொருவர் புன்னகையுடன், "சரி தம்பி நீ போகலாம்", என்றார். நான் திரும்பவும் கிராஸ் பண்ணி வந்துவிட, சையது கேட்டான், "டேய் நல்லாப்பாத்தியாடா யார்னு தெரிஞ்சுதா?”, என்றான். "இல்லையே", என்றேன். "போடா லூசு அவர்தாண்டா விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரன்", என்றானே பார்க்கலாம். நான் மறுபடியும் பார்ப்பதற்குள், கார்கள் வேகமெடுத்து விரைந்தன. ஒரு மாபெரும் தலைவனை நேருக்கு நேர் சந்தித்தும் சரியாக பார்க்கவில்லையே என்பதை இன்று நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.அவர் கூட இருந்தது பொட்டு அம்மனாய் இருக்கவேண்டும் .

முற்றும் 

13 comments:

  1. நல்ல சந்தர்ப்பம்.. நழுவி விட்டது.
    தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நமக்கு வந்த எந்த சந்தர்ப்பமும் கைகூடவில்லை நண்பா .

      Delete
    2. சொந்த கதையில வேற ஏதோ கூட கைகூடவில்லை போல் இருக்கிறதே..
      உள்குத்து இருக்கும் போல இருக்கிறது.. :)
      ம்ம்ம்..நண்பர் விசுவிடம் கேட்க வேண்டும்..

      Delete
    3. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ?

      Delete
    4. ஆஹா.. பல சங்கதிகள் சங்கத்தில் வெளி வருதே..
      சொன்னது சரியே..
      நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ???
      நடந்ததையே நினைத்து இருந்தால்..
      மிகச் சரி நண்பரே..

      Delete
  2. எதிர்பாராத கடைசி ட்விஸ்ட்... இது மட்டும் இல்லையென்றால் இந்தப் பதிவு சாதாரண வாழ்க்கைக் குறிப்பாகப் போயிருக்கும்... சூப்பர் சார்....

    ReplyDelete
    Replies
    1. நமது வாழ்கையில விரும்பியோ விரும்பாமலோ அடிக்கடி ட்விஸ்ட் ஆயிருது
      .நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  3. Replies
    1. வேற என்னாங்க பண்றது நீங்களே சொல்லுங்க திண்டுக்கல்லாரே ?

      Delete
  4. அட! நல்ல சுவாரஸ்யம்தான். ஆனால் மிஸ் ஆகிய ஒரு நொடி !

    ReplyDelete
  5. கூப்பிட்ட நீ பாக்காம கூட வந்த நான் பாத்த நிகழ்வு அது.....மறக்க முடியுமா ஆல்ஃபி?..... புலிகள் சுதந்திரமாக நடமாடிய எம் ஜி ஆர் காலம் அது...

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே நீ என்னை விட அதிர்ஷ்டசாலிதான் சையது .

      Delete