“மகேந்திரா
ஏலேய் மகேந்திரா?”
“சொல்றா
சேகரு,
நேரங்கெட்ட நேரத்தில கூப்பிடும்போதே நெனைச்சேன். அது நீயாத்தேன்
இருக்கும்னு.”
“பொங்கல்
நல்லாப்போச்சா?”
“சூப்பரா
போச்சு மச்சி”
“ஹீம்
நியுயார்க்கில வாக்கப்பட்ட நான் என்னத்த கண்டேன்.
அதும் பண்டிகை காலத்துல நம்மூரை ரெம்ப மிஸ் பண்ரேண்டா. ஒரு அடா புடான்னு
பேசறதுக்கு கூட ஒரு ஆள் இல்லடா. கொஞ்ச நேரம் பேசலாமா ப்ளீஸ்?
”
“சர்ரா
சீக்கிரம் சொல்லு, ஆவ்வ்வ்வ்
நடுராத்திரில எழுப்பி இப்படி நக்கலடிக்கிற”.
“டேய்
ஒரு சவளம் கரும்பை ஒரே முட்டா தின்பேல்ல. இங்கன ஒரு துண்டு கூட இந்த வருஷம்
கிடைக்கலடா”.
“விர்ரா
விர்ரா அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை
வேணும்ல.”
“நெய்ப்பொங்கல் செஞ்சு தாம்மான்னு கேட்டா, என் பொண்டாட்டி பொய்ப்பொங்கல்
செஞ்சு தந்தா. மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல”.
“நாய்
பெற்ற தெங்கம்பழம் கதைதான், உனக்குத்தான்
சுகர் ஆச்சே, டயட் பொங்கல் செஞ்சிருப்பாங்க”.
“நான்
நம்மூரை
ரெம்ம்ம்ப மிஸ் பண்றேண்டா”
“
அட வேற என்னதாண்டா மிஸ் பண்ற சொல்லித் தொலையேன்டா”.
“சொல்றேன்
கேளு. மொத்தம்
பத்து விஷயம் இருக்கு”
1.
நம்மூர் விடலைப்
பிள்ளைக, வெத்தலை போட்ட நாக்கை சுழட்டிக்கிட்டே சுத்தி நிக்க,
ஊர் இளவட்ட நடுக்கல்லை தலைக்கு மேலே தூக்குவேனே, ஞாபகம் இருக்கா?
2.
நம்மூர் டீனேஜ்
பொண்ணுகல்லாம், சேகரு சேகருன்னு பின்னாடி கணக்குப் பண்ண சுத்துவாங்களே. யாரைக்
காதலிக்கிறதுன்னு தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடுவேனே.
3.
ஜல்லிக்கட்டுக்கு
ஒரு மாசம் முன்னாலேயே ஒடம்பை தயார்படுத்தி, நம்ம ஜமீந்தார் வீட்டு காங்கேயம் காளையை முத ஆளாப்பிடிப்பேனே.
4.
நம்மூர் கிருஷ்ண ஜெயந்தி வழுக்கு
மரத்திருவிழால, வழுக்குற உளுந்தம் பசையையும் அடிக்கிற தண்ணியையும் மீறி உச்சிமேலேறி
அஞ்சு பவுன்
தங்கத்தை அள்ளி எடுப்பேனே.
5.
நம்மூர் வடக்குத்
தெருவில நடக்கிற கபடி போட்டில ஒத்த ஆளாப் போயி, ஒம்போது பேரைத்தூக்கிட்டு வருவேனே.
6.
நம்மூர்
முத்தாளம்மன் கோயில் திருவிழால அம்மன் உலா வரும்போது சிலம்பம் சுழட்டிக்கிட்டு
முன்னால வரும்போது ஊரே வாயப்பிழந்துட்டு பாக்கும்ல.
7.
நம்ம ஹைஸ்கூலுல
வகுப்புக்குள்ளே வந்த நல்ல பாம்பை நடுவுல புடுச்சு சுத்துனேன்ல,
பொண்ணுங்களெல்லாம் என் கையைப்பிடிச்சு ஆனந்தக் கண்ணீர்
விட்டாங்கல்ல .
8.
நம்ம ஜமீந்தார்
வீட்டு அடக்க முடியாத முரட்டுக் குதிரையை ஏறி அடக்கி "மதுரைவீரன்" என்ற
பெயர் போயி "குதிரைவீரன்னு" பேர் எடுத்தேன்ல.
9.
தேனி ரேக்ளா வண்டி
ரேஸில, என் மயிலைக்காளையைப் பூட்டி
பறந்து பறந்து வந்து ஜெயிப்பேன்ல.
10. எல்லாத்துக்கும்
மேல ஊரே திரண்டுவந்து என்னை ஊர்த் தலைவராய் இருக்கச் சொல்லி வற்புறுத்தும் போது,
ஜனநாயகம் தளைக்கனும்னு சொல்லி தேர்தல்
நடத்திட சொல்லிவிட்டு ஒதுங்கியிருந்து ஒளிவிசினேன்ல.
அது
ஒரு இளமைக்காலம்டா மகேந்திரா.
இதையெல்லாம்
மகேந்திரன்.
அமைதியா கேட்டான்னு
நெனைக்குறீங்க? அதான் இல்ல. என் முத்தான பத்து
சாதனைகளுக்கும் தன் சத்தான பதிலைக் கொடுத்தான்.
அத
அடுத்த
வாரம் விசாலக்கிழமை சொல்றேன் ,மறக்காம வந்துருங்கப்போய்.
தொடரும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
We are waiting :)
ReplyDeleteஅடுத்த வாரம் விசாலக்கிழமை சொல்றேன்.
Deleteபொய்ப் பொங்கல்-னு பேர் வைக்கும்போதே நெனைச்சேன். அதுவரை ஒபாமா வீட்ல கூப்ட்டாங்கன்னு சொல்லலை.. பொங்கலோ பொங்கல் ஆல்பி..
ReplyDelete.இந்த வருஷம் நீங்களும் கூப்பிடலை.நான் என்னதான் செய்றது ?நன்றி ரங்கா
Deleteசுவாரஸ்யத்தை தொடர்கிறேன்...
ReplyDeleteஎழுத்து (Font) வித்தியாசமாய்... அழகாய்...
நன்றி திண்டுக்கல்.
Deleteஅதென்னப்பா கல்லத் தூக்கி பரீச்சை எல்லாம் அது நீங்கதானே.....ஹஹ
ReplyDeleteநம்ம ஜமீந்தார் வீட்டு அடக்க முடியாத முரட்டுக் குதிரையை ஏறி அடக்கி "மதுரைவீரன்" என்ற பெயர் போயி "குதிரைவீரன்னு" பேர் எடுத்தேன்ல.//
ஓ இப்படியெல்லாம் வேற கதை போகுதா...ஹஹஹ ரசித்தோம்....விசாலக் கிழமைக்கு வெயிட்டிங்கு...
விசாலக்கிழமை கதை கந்தலாயிருமோன்னு பயமா இருக்கு .
Delete