எழுபதுகளில் இளையராஜா: பாடல்
எண் 17 “ஒரு வானவில் போலே".
1977-ல் வெளிவந்த "காற்றினிலே வரும் கீதம்" என்ற படத்திற்காக
இளையராஜா அவர்கள் இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது. முதலில் பாடலைக்கேட்போமா?
பாடலின்
சூழல்:
வழக்கமான
காதலன் காதலி பாடும் டூயட் பாடல் என்றாலும் இந்தப்பாடலின் மெலடியில் ஒரு மறைவான
சோகம் இழையோடுகிறது. ஒரு வேளை படம் பார்த்தவர்களுக்கு இதனைப்பற்றி தெரியலாம்,
மலையாளிகளின் பேஸ் குரலில் இயற்கையாகவே இழையோடும் சோகமாகவும்
இருக்கலாம். அல்லது இந்த வகை மெட்டில் அல்லது ராகத்தில் ஒளிந்திருக்கும்
சோகமாகவும் இருக்கலாம்.
இசையமைப்பு:
இளையராஜா
எழுபதுகளில் இசையமைத்த இந்தப்பாடல் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இதமான
பாடல்களில் ஒன்று. இந்தப்பாடல் காதை மட்டுமல்ல மனதையும் வருடும் ஒரு பாடல்.
இராகத்திலும் இசையிலும் ஒரு புனிதத்தன்மை (purity) இருப்பதாக நினைக்கிறேன். இசையமைத்து 37 வருடங்களுக்குப்
பின்னரும் மிகவும் புதிதாக (Fresh) ஒலிக்கிறது. கிடார்
பேசுடன் ஆரம்பிக்கும் பாடலில் புல்லாங்குழல் இணைந்து தழுவ அதன்பின் வரும்
வயலின்கள் அப்படியே இவற்றை தூக்கி நிறுத்த, பாடல் ஆரம்பிக்கிறது. வயலின்களின்
மென்மையும் இரண்டாவது BGM-ல் வரும் கிடாரின் லீட் பீசும்
இந்தப்பாடலின் ஹைலைட்ஸ் என்று சொல்லலாம்.
பாடல்
வரிகள்:
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை
வென்றாய்
என் உயிரிலே நீ
கலந்தாய்
ஒரு வானவில்.....
வளர் கூந்தலின் மணம்
சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை
மனம்
கொள்ள
வருகின்ற முல்லை
இங்கே
கலைமானின் உள்ளம்
கலையாமல்
களிக்கின்ற கலைஞன்
எங்கே
கலைகள் நீ கலைஞன்
நான்
கவிதைகள் பாடவா
(ஒரு
வானவில்)
உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம்
தொடராதோ
இனியெந்தன் உள்ளம்
உனது
அணைக்கின்ற சொந்தம்
வளராதோ
இனியெந்தன் வாழ்வும்
உனது
தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்
(ஒரு
வானவில்)
பாடலை
எழுதியவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கண்ணதாசனின் டூயட் பாடல்களில் சற்றே
தூக்கலாக இருக்கும் காமரசம் இந்தப் பாடலில் காணப்படவில்லை. மாறாக மென்மையான
காதலும் அன்பும் பாடல் முழுவதும் இழையோடுகிறது.
"ஒரு வானவில் போல என் வாழ்வில் வந்தாய்" என்று பல்லவி
ஆரம்பிக்கும்போது காதலி தன் வாழ்வில் வந்தபிறகு, வாழ்வே வண்ணமயமாக மாறிவிட்டது என்று காதலன் சொல்வது செழுமையான உருவகம்.
முதலாம்
சரணத்தில் "கலைமானின் உள்ளம் கூட கலையாமல் களிக்கும் கலைஞன்”, என்று காதலி
பாராட்டுவதில் கண்ணதாசனின் டச் தெரிகிறது. காதல் பாடல்களில் கண்ணதாசனை மிஞ்ச
முடியுமா?
குரல்:
பாடலைப்
பாடியவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி. எனக்குப்பிடித்த மலையாளக்குரல்களில்
ஜெயச்சந்திரன் குரல் முதன்மையானது. ஏனென்றால் செழுமையான அடர்ந்த பேஸ் குரல்
மட்டுமின்றி, 'யரலவளழ' “எனக்கு வரல" என்று பாடும் மலையாளக்குரல்களில், ல,ள,ழ மட்டுமின்றி ர,ற மற்றும் ன,ண வையும் சிறப்பாகப் பாடுபவர்
ஜெயச்சந்திரன். ஆனால் அவரின் எல்லாப்பாடல்களிலும் ஒலிக்கும் சோகம்தான் கொஞ்சம்
உறுத்துகிறது.ஜானகி இதில் அழகான மற்றும் அளவான விகிதத்தில் அன்பை வெளிப்படுத்தி
அசத்தியிருக்கிறார்.
எழுபதுகளில்
இளையராஜா இசையமைத்த பாடல்களில் முக்கியமான, சொல்லத்தகுந்த பாடல் இது என்பதில் சந்தேகமில்லை.
தொடரும் >>>>>>>>>>
அன்பு நண்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் நல்
வாழ்த்துக்கள் .
அன்பும் அமைதியும் , அருளும் பொருளும் , பொங்கல்
பொங்குவது போல் உங்கள் இல்லங்களில் பொங்கி
வழியட்டும் .வாழ்க வளமுடன் .
வாழ்த்துக்கள் .
அன்பும் அமைதியும் , அருளும் பொருளும் , பொங்கல்
பொங்குவது போல் உங்கள் இல்லங்களில் பொங்கி
வழியட்டும் .வாழ்க வளமுடன் .
என் மனம் கவர்ந்த பாடலே..இசையும் வரிகளும் சேர்ந்து...
ReplyDeleteநன்றி..
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பா.
Deleteஎன்னவொரு இனிமையான பாடல்...!
ReplyDeleteஇனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...
பொங்கல் நல் வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்
Deleteஎனக்கும் பிடித்த பாடல் இது.
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்!
நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteமிகவும் பிடிக்கும், ரசித்துக் கேட்கும் பாடல்.....வரிகளும்..
ReplyDeleteதங்களுக்கும் எங்கள் இனியத் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
நன்றி Thulasidharan.
Deleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
வாழ்த்திற்கு மிக்க நன்றி!தங்களுக்கும் இனியத் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
Deleteநண்பர் ஆல்ஃபி,
ReplyDeleteநல்ல பாடல்தான். கேட்க தொல்லை செய்யாத இசை. ஆரம்பகால இளையராஜாவின் இனிமையை இதிலும் கேட்கலாம். இதில் இன்னொரு நல்ல பாடல் இருக்கிறது. கண்டேன் உன்னை என்று துவங்கி காற்றினிலே வரும் கீதம் என்று பல்லவி முடியும்.
அதில் எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான் .
Deleteநன்றி காரிகன் .
ஆல்பி சார்
ReplyDeleteமேற்கத்திய இசை நுணுக்கங்களுடன் கூடிய பாடல் . இன்னும் கூட அதன் சிறப்பை நீங்கள் அலசி ஆராய்ந்து இருக்கலாம் . இப்போது இது போன்ற பாடல்கள் இளையராஜாவே படைப்பதில்லை. அதுதான் அவரின் தனிச் சிறப்பு . ஒன்று போல மற்றொன்றை கொடுப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. 38 வருடங்கள் தாண்டியும் வெவ்வேறு பாடல்கள்தான் கொடுக்கிறார். இது புரியாமல் அவருக்கு சரக்கு தீர்ந்தது என்று பேசும் கூட்டம் உண்டு.
எல்லாப்பாடல்களும் ஹிட் என்ற நிலை போய் ஏதாவது ஒரு பாடல்தான் ஹிட் என்ற நிலை இப்போது இருப்பது கசப்பான உண்மைதான் சார்லஸ்.
Delete