Monday, January 19, 2015

நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியே - தவறே.



நியூயார்க்கில் உள்ள "ஆனந்தம்" என்ற இலங்கைத்தமிழர்  அமைப்பு திசம்பர் ஆறு  2014  அன்று  நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அடியேன் நிகழ்த்திய தொடக்கவுரை.
மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
பேச்சுக் கொடுத்த என் அம்மாவுக்கும்,
வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
வணக்கமும் நன்றிகளும்.
அம்மான்னு சொன்னதும் எந்த அம்மாவை சொல்னேன்னு யோசிக்காதீங்க. என் சொந்த அம்மாவைத்தான் சொன்னேன்.  
“செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”,என்பார்கள். இங்கு முதலில் வயிற்றுக்கு நல்ல காரசாரமான உணவை உண்டு விட்டு , அப்படியே போய் விடாமல்  இப்போது செவிக்குணவு தேடி வந்துள்ள அனைவருக்கும் நன்றி
அன்புப் பெரியோர்களே
அருமைத் தாய்மார்களே
இனிய குழந்தைகளே.
-என்ன எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? என்னுடைய குரு பேராசிரியர் சாலமன் பாப்பையா மாதிரி கொஞ்சம் try பண்ணேன். ம்ஹீம் அவர் மாதிரி  வருமா?
அவருடைய சாரீரமும் சரி, சரீரமும் சரி நல்ல கனமானவை.எனக்கு சாரீரமும் சரியில்லை (இருமியபடி   ) சரீரமும் சரியில்லை.
நான் என்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது, ஐயா அவர்கள் தமிழ்த்துறை தலைவராக இருந்தார்.

நண்பர் சிவபாலன் என்னை நடுவராக இருந்து பட்டிமன்றம் நடத்தித்  தர வேண்டும் எனக் கேட்டபோது நமக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைச்சேன். நம்ம ரொம்ப குண்டாவும் இல்லை, ரொம்ப ஒல்லியாவும் இல்லை. ரெண்டுக்கும் நடுவுல இருக்கிறதால நடுவரா போட்டிருப்பாரோன்னு  சந்தேகம் வந்தது. சீச்சீ இது எனக்கு மொக்கையா இருக்கேன்னு விட்டுட்டேன். ஆனா அவர் கேட்டார், உங்களுக்கு மணியடிக்கத் தெரியுமான்னு, மணி அடிக்க என்ன PHD -யா படிச்சிருக்கனும்னு நெனைச்சு, தெரியும்னேன். “அப்ப நீங்கதான் நடுவர்னு”, சொல்லி, இந்த மணியை என் கையில குடுத்துட்டார். இப்ப நான் இந்த மணியை நல்லா அடிக்கிறேனா இல்லையான்னு நீங்கதான் தீர்ப்புச் சொல்லணும்.
இங்கு ஆனந்தம் நிகழ்ச்சியில் திரளாகக் கூடியிருக்கும் தமிழ் மக்களைப் பார்க்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
“தமிழ் இனி மெல்லச்சாகும்” என்று கவிஞர் சொல்லியது உண்மையாகி விடுமோ என்ற பயம் எனக்குண்டு. ஏன்னு கேளுங்க. தமிழ்நாட்டில இப்ப தமிழ் இல்லை. போன மாசம் தமிழ்நாட்டுல இருந்து ஒருவர் வந்திருந்தார். தமிழ்நாடுன்னு சொன்னேன். இல்லைங்க அது இப்ப 'டமில்நாடு'. இந்த டமில் நாட்டுத் டமில் எப்படியிருக்குன்னு பாருங்க.
“Yesterday evening flight எடுத்து வந்தேன். flight full -ஆ இருந்துச்சு. Morning  flight delay ஆனதால கொஞ்சம் late ஆயிருச்சு. Is it ok?”
இதுதாங்க டமில் இதுக்கு பேர் தமிழா.
ஐயா தமிழில் பேசக்கூடாதான்னு  கேட்டா, “நாஷ்டா துன்னுச்சா? ன்னு கேட்கிறார் .அய்யய்யோ இதுக்கு அதுவே பரவாயில்லை.
“எனக்கு டமில் கொஞ்சும் கொஞ்சும் தெரியும்”. இது வேற நாட்டு மக்கள் சொல்லல தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த பிள்ளைகள் சொல்லுது. அதுல பெற்றோருக்குப் பெருமை வேற.
ஆனால் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவவேண்டும் என்று பாரதியார் சொன்னது இப்போது இலங்கைத் தமிழர்களால் நிறைவேறி உள்ளது. கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் பேசும் தமிழும் உச்சரிப்பும். இன்னும் தமிழாகவே இருக்கிறது.
“குழலினிது யாழ் இனிது என்று சொல்வார்கள் தம்மக்கள் மழலைச்சொல் கேட்காதவர்கள்”,  என்பது பழசு. “குழலினிது யாழ் இனிது என்று சொல்வார்கள் நம் யாழ்ப்பாணத்தமிழ் கேட்காதவர்கள்”, என்பது புதுசு.  என்னயாது இவர்கள் பேசும் தமிழ் இவ்வளவு இனிமையாக இருக்கே என்று வியந்தேன். அது ஏன்னா அதான் உங்க ஊர் பேரிலயே யாழ் இருக்கே.
நான் உறுதியாகச் சொல்வேன், வெளி நாடுகளில் இப்போது, புலம் பெயர்ந்த தமிழர்களால்தான் தமிழ் வாழ்கிறது. எனவே தமிழ் சாகவே சாகாது.

சரி தலைப்பிற்கு வருவோம்.
நல்லது செய்திட பொய் சொல்லலாம் - சரியா?, தவறா?
என் மனைவிக்கு என்னோடு கல்யாணம் ஆகி 22 வருடம் ஆயிருச்சு. அப்ப எனக்கு எத்தனை வருஷம்னு ஆச்சுன்னு கேட்கறீங்களா? ஏங்க என்னப்பாத்தா கல்யாணம் ஆகி 22 வருஷம் ஆன மாதிரியா தெரியுது?
இத்தனை வருஷம் கழிச்சும், அவ இப்ப அடிக்கடி என்னைக் கேட்கும் கேள்வி, “என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”. நீங்களே  சொல்லுங்கஇதுக்கு நான் உண்மை சொல்றதா இல்ல பொய் சொல்றதா?.கண்ணதாசன் சொன்னபடி,”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம். மன்னிக்கவும் இறைவன் கொடுத்த வரம்
நான் அடிக்கடி பொய் சொல்லமாட்டேன், ஆனா அப்பப்ப பொய் சொல்வேன்.
"உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு", ஒரு பொய் ஐயையோ தப்பு தப்பு உண்மையைச் சொன்னேன். “போங்க நீங்க பொய் சொல்றீங்கன்னு”, சொல்றா.
இந்த பெண்கள்ட்ட ஒரு விஷயம். நீங்க எந்தப் பொய்யைச் சொன்னாலும் உடனே கண்டுபிடிச்சிருவாங்க. ஆனா நீங்க ஒரே ஒரு பொய்யைச் சொன்னா மட்டும் கண்டிப்பா நம்பிருவாங்க.
அது என்னன்னா, "ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே",. என்ன நான் சொல்வது உண்மைதானே.
இந்தப் பொய் சொல்றது எங்கிருந்து  வந்துச்சுன்னு நினைச்சா ஆச்சரியமாயிருக்கு.
எங்கம்மாதான் எனக்கு முதல் கிரேட் டீச்சர். தமிழை அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன். அந்த வகுப்பறையில நடந்ததெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா எங்கம்மாதான்  டீச்சர்ங்கறதால நான் மட்டும் அவுங்க மேஜை  மேலதான உட்காருவேன். ஏன்னா 5 ஆவது வயசுல நான் முத கிரேட் படிச்சாலும், ஒரு வயசுலர்ந்து அங்கதான உட்கார்றேன்.    
வகுப்பு ஆரம்பிக்கும் முன்னால எல்லோரையும் நிற்க வைத்து கண்களை மூடி பிரார்த்தனை பண்ணுவாங்க எங்கம்மா. பிரார்த்தனை முடிச்சு கண்ணைத்திறந்தவுடனே, யாராவது ஒரு பொண்ணோ பையனோ ஓடி வருவாங்க. டீச்சர் என் சிலேட்டை யாரோ உடைச்சுட்டாங்கன்னு". இப்படி தினம் ஒரு சிலேட் உடைஞ்சிச்சு. யாரு உடைக்கிறாங்கன்னு கண்டே பிடிக்க முடியல. ஒரு நாள் என்ட்ட கேட்டாங்க, "ஏன்டா தம்பி நீ ஏதும் உடைச்சியான்னு?”, நான் சொன்னேன் "சத்தியமா இல்லம்மான்னு". ஆனா நான் அப்ப சொன்னது பொய். என் அம்மா இங்கதான் இருக்காங்க, “அம்மா அந்த சிலேட்களை உடைச்சது வேற யாருமில்ல நான்தான்”. எல்லோரும் கண்ணை மூடியவுடனே நைஸா கீழே இறங்கி வந்து, சிலேட்டை ஒரு மிதி மிதிச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி மேலே ஏறி உட்கார்ந்திருவேன்.
“அம்மா என்னை மன்னிச்சுருங்க”. அப்பாடா இப்பதான் நிம்மதியாயிருக்கு, ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்துச்சுவேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து பாக்கறீங்க. கிளாஸ் டம்ளர் உடைச்சு கிடக்கு. யாரு டைச்சுதுன்னு கேளுங்க. நான் இல்லன்னு பொய்தான் முதல்ல வரும்.
சிறு குழந்தைகள்ட்ட கேளுங்க "ஏய் யார் இதைச் செஞ்சது". நான் இல்லைன்னு பொய்தான் வரும். இவ்வளவு சின்னக் குழந்தைகளுக்கு பொய் சொல்ல கத்துக் கொடுத்தது யாரு?
இது ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து வருதாம். சாப்பிடக் கூடாதுன்னு கடவுள் சொல்லியும் கேட்காம விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்டதால பாவம் வந்தது உலகத்தில். அது பரம்பரை பரம்பரையாய் வருது.
பொய்யால அழிந்தவங்களும் இருக்காங்க, வாழ்ந்தவங்களும் இருக்காங்க.
நான்கு பேரும் நல்ல பேச்சாளர்கள், சன் டிவி “கல்யாணமாலை” பட்டி மன்றத்தில் என்னோடு இணைந்து  பேசின இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இவங்களோட விவாதம் பண்ணி ஜெயிக்க முடியாதுன்னுதான்  நான் நடுவில வந்து உட்கார்ந்திட்டேன். வாதங்கள் துவங்கட்டும் .


22 comments:

  1. இந்த அருமையான பட்டிமன்றத்தில் அடியேனுக்கும் வாய்ப்பு கொடு த்தற்கு மனமார்ந்த நன்றி . மேடையில் தங்கள் அருகிலேயே அமர்ந்து தங்களின் அர்த்தமான நகைச்சுவை பேச்சை ரசித்தேன் . நீங்கள் தொடர்ந்து மென்மேலும் பல பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும் என்பதே என் அவா.

    நல்ல பதிவு . தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. விசுAWESOME,
      கூப்பிட்டவுடன் கலிபோர்னியாவில் இருந்து வந்து சிறப்பான பங்கை அளித்த உமக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல .
      தங்கள் அருகிலேயே அமர்ந்து தங்களின் நகைச்சுவை பேச்சை ரசித்தேன் . நீங்கள் தொடர்ந்து மென்மேலும் பல பட்டிமன்றங்கள் பேச வேண்டும் என்பதே என் அவா.

      Delete
  2. நேரில் பார்த்த பட்டிமன்றம் மீண்டும் எழுத்து வடிவில் பார்ப்பது நகைச்சுவையை அனுபவித்தவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.. மேலும் அடுத்துவரும் பகுதியைப் படிக்க ஆவல்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நேரில் வந்து ஆதரவு தரும் நண்பர் ரங்காவுக்கு என் நன்றிகள் .

      Delete
  3. //// மூச்சுக்கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்
    பேச்சுக் கொடுத்த என் அம்மாவுக்கும்,
    வாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்
    வணக்கமும் நன்றிகளும்.///

    இங்கு பேச அனுமதி கொடுத்த மனைவிக்கு நன்றியில்லையா? தப்பு சார் தப்பு நீங்க மாபெரிய தப்பு இழைத்துவிட்டீர்களய்யா

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலேயே எல்லாம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டுதான வந்தேன் .

      Delete
  4. ஆ ரம்பமமே அருமையாக இருக்கு இது உண்மைங்க உங்களை மாதிரி எல்லாம் பொய் சொல்லவே இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆ >>>>> ரம்பமாய் இருப்பதால்தான் நீங்கள் நேரில் வருவதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும் .

      Delete
  5. ஆரம்பமமே என்று டைப்புதான் பண்ணினேண் ஆனால் ஆ வுக்கு அப்புறம் எப்படி இடைவெளி வந்துச்சுன்னு தெரியலைங்க.. மீண்டும் சொல்லுகிறேன் ஆரம்பம் மிக அருமையாக இருக்கிறது பாராட்டுக்கள்

    இப்படி பெரியவங்க பேசுறதை இந்த சிறியவனுக்கு கேட்க கொடுத்து வைக்கவில்லை என்றாலும் படிக்காவாவது கொடுத்து வைச்சிருக்கு அதுக்கு இந்த வலைத்தளத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நட்பு கருதி எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் உண்மை வெளியே வந்து விடுகிறது .
      அப்புறம் சந்தடி சாக்கில என்னை வயசானவனா ஆக்கிட்டீங்க.

      Delete
  6. தமிழை பற்றி பேசும் போது வேஷ்டி கட்டி வந்து பேசி இருக்கலாமல?? அப்படி வந்திருந்தா ரஜினி வந்த மாதிரி அந்த இடம் அதிர்நு இருக்கும்ல

    ReplyDelete
    Replies
    1. வேஷ்டி கட்டுவது நல்ல கலாச்சாரம்தான் .
      ஆனா அவிழ்ந்து விழுந்தா அநாச்சாரம் ஆய்விடுமே .

      Delete
  7. பெற்றோர் எவ்வழி, குழந்தையும் அவ்வழி...

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை திண்டுக்கல்லார் அவர்களே

      Delete
  8. நண்பர் ஆல்பி,

    இதன் வீடியோ இருந்தால் அதை பதிவிடவும்.

    ReplyDelete
  9. தோழர் காரிகன் , இதுவரை என் கைக்கு வரவில்லை

    ReplyDelete
  10. அருமையான நகைச்சுவை கலந்த கவர்ச்சிகரமான பேச்சு....ஐயோ கவர்ச்சின உடனே வேற எதுவும் நினைச்சுறாதீங்கப்பா....நாங்க நல்ல..பிள்ளைங்க்.....கோ..

    சரி நம்ம நண்பர் விசு பேசினது எப்ப வரும் நண்பரே! காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ,விசுவிடம் சொல்லி அவருடைய பேச்சை போடச்சொல்லுங்கள்

      Delete
  11. நண்பர் பரதேசி அவர்களுக்கு,

    அனேக நமஸ்காரங்கள்.

    தங்களின் பட்டி மன்ற முக உரை மிக மிக அருமை, நகைச்சுவையாகவும், சொற் சுவையாகவும் இருக்கிறது.

    பெண்களால் கண்டுபிடிக்கமுடியாத ஒரு பொய்யை இப்படி பகிரங்கமாக சொல்லிவிட்டீர்கள் இனி உண்மையிலேயே மனைவியை அழகு தான் என்றாலும் நம்ப மாட்டார்கள் என நினைக்கின்றேன்.

    முழு பட்டிமன்ற நிகழ்ச்சியையும் காணொளி மூலம் காண ஆவலை இருக்கின்றேன்.

    முடிவு நன்மை கருதி பொய் சொல்லலாம் என்று தான் இருந்திருக்கும், சரிதானே.

    பாராட்டுக்கள் உங்களுக்கும் எங்கள் நண்பர் விசுவிற்கும்.

    நட்புடன்,

    கோ

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி koilpillai.உங்களைப்பற்றி நிறைய நல்ல செய்திகள் விசுவிடம் கேள்விப்பட்டேன் .தங்கள் தமிழ்ப் பணி தொடருட்டும் .

      Delete
  12. அருமை!

    இப்ப திடீர்னு ஒருத்தர் வீட்டுக்குப்போறோமுன்னு வச்சுக்குங்க. நாம் வருவது தெரியாததால் அவுங்களுக்கு மட்டும் சமையல் செஞ்சு வச்சுருப்பாங்க. இல்லை அப்பதான் சாப்பிட்டு முடிச்சுருப்பாங்க. நமக்கு எதாவது கொடுக்கணுமேன்னு இல்லத்தரசி பாய்ஞ்சு தேடும்போது, 'ஒன்னும் வேணாங்க. இப்பதான் சாப்பிட்டு முடிச்சு கையோடு வந்தோம்' னு சொல்லும் சின்னப்பொய் நான் அடிக்கடி பயணங்களில் சொல்வதே. இது நல்ல பொய்தானே!

    ReplyDelete
    Replies
    1. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அப்படி அமைந்துவிடுவது சகஜம்தான்.முடிந்தவரை அப்படிப்பட்ட உணவு நேரத்தில் அறிவிப்பின்றி செல்வதை தவிர்ப்பதே நலம். நன்றி துளசி கோபால்.

      Delete