Thursday, December 18, 2014

கஷ்டம்டா சாமி !!!!!!!!!!!!! பகுதி 2

  1. Indian consulate in New York


இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும் 

http://paradesiatnewyork.blogspot.com/2014/12/blog-post_10.html

அவலம் 3:
சிறிது நேரத்தில், ஒரு குடும்பம் வந்தது. ஒரு வயதானவர் தடியை ஊன்றிக் கொண்டு மூச்சு வாங்க வந்தார். இரண்டாவது மாடியில் இருக்கும் இந்த ஆபிசுக்கு எலிவேட்டர் கிடையாது. அவரோடு ஒரு இளவயதுப்பெண், பேபி ஸ்டோலரில் ஒரு வயதுக் குழந்தை, கையில் மூன்று வயது ஆண் குழந்தை.  அந்தப்பெண் பரபரவென்று இருந்தாள். அவர்கள் பேச்சிலிருந்து நான் தெரிந்து கொண்டது, அந்தப் பெண்ணின் கணவன் H1B விசாவில் இருக்கிறான். அந்த வயதானவர் கணவனின் அப்பா, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக( ?) வந்திருக்கிறார்.  
"உங்களுக்கு என்ன வேணும்"?
"பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டும்".
"யாருக்கு?"
"என் மாமனாருக்கு, இதோ வந்திருக்கிறார்?".
"எங்கே கொடுங்கள்".
"என்னம்மா பாஸ்போர்ட் காலாவதி ஆகி எட்டு மாதம் ஆகிவிட்டதே".
"சாரி சார் கவனிக்கவில்லை"
வாட் எபவுட் விசா?
விசிட்டர் விசா, அதுவும் எக்ஸ்பயர் ஆகி 6 மாசமாச்சு, ஆனா எக்ஸ்டென்ஷனுக்கு அப்ளை செய்திருக்கிறோம்.
"இது சிக்கல், உங்கள் கணவரை வரச்சொல்லுங்கள்"
இந்த மேற்கண்ட 10 நிமிட உரையாடல் நடப்பதற்கு கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆகியது.
ஏனென்றால் மூச்சு வாங்கிய பெரியவர், அப்படியே கண்களை மூடி சேரில் உட்கார்ந்துவிட, பெண்ணின் கையைப் பிடித்திருந்த பையன் கையை உதறிக்கொண்டு, அங்கு மிங்கும் ஓடிக் கொண்டே இருந்தான். அவனை தெலுங்கில் அழைத்துக் கொண்டே ஓடிப் பிடித்து கையில் பிடித்துக் கொண்டு ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் மீண்டும் ஓடினான். நான்கூட ஒரு தடவை பிடித்துக்கொடுத்தேன். இதற்கிடையில் ஸ்டோலரில் இருந்த குழந்தை முழித்துக் கொண்டு வீல்வீல் என்று அலறியது. பசித்து விட்டது போல இருக்கிறது. பின்னர் தாயின் இடுப்பில் ஏறிக்கொண்டு கண்ணீருடன் சிரித்தது. பெரியவருக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் தெரியாதலால் பதில் சொல்ல முடியவில்லை.
இதற்கிடையில் இடுப்பில் இருந்த குழந்தை தாயின் கையில் இருந்த ஃபைலைப் பிடுங்கி கீழே எறிய தாள்கள் அந்த ஆஃபிஸ் முழுதும் பறந்தன.
நீதி:  கஷ்டம்டா சாமி.
BLS Passport Service office in New York
சில வாரங்கள் கழித்து எனக்கு ஈமெயில் வந்தது, என் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் ரெடியாக இருப்பதாக .பக்கத்தில்தானே, உடனடியாக சென்றேன் .பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தார்கள் .உறையின் மேல் என் பெயர்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே   இருந்த பாஸ்போர்ட்டில் வேறு முகம் இருந்தது .  உத்து உத்துப் பார்த்தாலும் அது என் முகம் இல்லை .பேர் கூட வேறாக இருந்தது . “இது என்னது இல்லை”, என்றேன் அந்தப்பெண்ணிடம்..அவள் பலரிடம் கலந்து பேசி , திரும்பவும் என்னிடம் அதே பாஸ்போர்ட்டை  கொடுத்து,   “இதை வைத்துக்கொள்ளுங்கள் நான் இதோ வருகிறேன்”, என்று  சொல்லி விட்டு உள்ளே சென்றாள். எனக்கு கோபமும் ஆத்திரமும் வந்து பசி வேறு எடுத்தது .
   உள்ளிருந்து குறைந்த பட்சம் மூன்று பேர் வந்து , என்னிடம் உள்ள பாஸ்போர்டில் உள்ள முகத்தையும் என் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு உள்ளே  சென்று குசு குசுவென்று பேசினர்.இது கான்சுலேட் செய்த தவறு தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்றும் பேசினார்கள் அதில் ஒருவர் சொன்னார் ,"மாறுவதற்கு சான்சே  இல்லை .ஏனென்றால் நீங்கள் உள்ளூர் என்பதால் நேரில் வருகிறீர்கள் .அவர் பாஸ்டனில் இருப்பதால்   அவருக்கு குரியரில் செல்கிறது என்றார்.
திடீரென்று மனதில் தோன்றி , “அந்த குரியரை அனுப்பிவிட்டீர்களா ?”,  என்று கேட்டேன் .இல்லை என்றார்கள். “அதை  எடுத்து வாருங்கள்”,   என்று சொன்னேன் .நான் சந்தேகப்பட்ட படியே அவருக்கு செல்லும் குரியரில் என் பாஸ்போர்ட் இருந்தது .நல்ல வேளை சரியான சமயத்தில் நான் சென்றேன் என்று நினைக்கும் அதே நிமிடத்தில் குரியர் ஆள் உள்ளே நுழைந்தான் . கொஞ்சம் பிந்தி வந்திருந்தால் என் பாஸ்போர்ட் பாஸ்டன் போயிருக்கும்.
நீதி : என்னத்தை சொல்ல போங்க.

பின்குறிப்பு: பலபேர் கம்ப்ளைன்ட் செய்ததால் அந்த ஏஜன்சியையும் மாற்றிவிட்டதாக கேள்வி.


10 comments:

  1. உள்ளே போய் குசு குசுன்னு பேசுனாங்களா? என்ன ? எதிரில் உள்ள இந்த ஆளின் முகத்தில் தெரியும் ராஜகளை இந்த பாஸ்போர்டில் இல்லையே என்று பேசி இருப்பார்களா?

    நீங்கள் நேரத்திற்கு போனதுனால் தப்பித்தது உங்கள் பாஸ்போர்ட் மட்டும் இல்லை anne. அந்த பாஸ்டன் ஆளோட பாஸ்போர்டும் தான். உங்களுக்கே தெரியாமல் இன்னொருவருக்கு உதவி சித்து இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. அப்பாடி இனி நான் நிம்மதியா சாவேன் .நம்ம ராஜகளையை ஒரு ஆளாவது உணர்ந்து கொண்டாரே .நன்றி விசு .

      Delete
    2. ராஜகளையும் இல்ல, தவகளையும் இல்ல.
      என்னடா இது நேர்ல இப்படி இளமையா அழகா இருக்காரு, ஆனா போட்டோ'ல அழுக்கா இருக்கே.. கண்டிப்பா அவர் இவர் இல்லை அப்படின்னு முடிவு பண்ணிட்டு இவரு போன் நம்பர் வாங்கலாம்னு discuss பண்ணிருப்பாங்க..

      Delete
    3. ஒ தவகளையும் இருக்கா , இந்த தவம் செய்யறதால் வருவதுதானே தவகளை.
      ஆமா போன் நம்பர் எதுக்கு ?

      Delete
  2. பாஸ்போர்ட் கையில் கிடைச்சதும் ஓடிப்போகாம பொறுமையாக திறந்து பார்த்தீங்களே, அதுவே பெரிய விஷயம் ஆல்ஃபி. விசு சொன்னதுபோல நீங்களும் தப்பிச்சீங்க, பாஸ்டன்காரும் தப்பிச்சார். இல்லேன்னா இன்னொரு தனி ப்ளாக் 'பாஸ்போர்ட் திரும்ப கிடைத்த கதை' என எழுதவேண்டி வந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீங்களும் தப்பிச்சீங்க ரங்கா .

      Delete
  3. Replies
    1. நமக்கு எங்க நல்ல நேரம் இருக்கு , ஒருவேளை அந்த பாஸ்டன்காரனுக்கு நல்ல நேரம்னு நினைக்கிறேன்

      Delete
  4. இங்க தான் இந்த மாதிரி எல்லாம் சகஜம் நு பார்த்தா ஒன்றிற்கு இரண்டு மூன்று முறை செயூரிட்டி செக் செய்யும் அமெரிக்காவுலுமா இப்படி...நல்ல காலம்தான்...

    ReplyDelete
  5. செக்யூரிட்டி செக் செய்கிறார்கள் . ஆனால் கோட்டை விட்டு விடுகிறார்களே ?

    ReplyDelete