Tuesday, August 5, 2014

இஸ்தான்புல்லில் பரதேசி: பகுதி 12 : சுல்தானின் கனவு மாளிகை

Fountain in the front 
இந்த பிரதான கட்டடத்தில் உயரமான சீலிங் வைத்த இரு தளங்கள் இருந்தன. முதல் தளத்தில் நுழைந்தவுடன் இடது புறத்தில் சில அலுவலகங்கள் இருந்தன. கொஞ்ச தூரம் உள்ளே நடத்தவுடன், இருபுறமும் படிகள் வைத்த கிராண்ட் ஸ்டெர்ஸ் (Grand Stairs) வந்தது. இது "கிரிஸ்டல் பெவிலியன்" என்று அழைக்கப்படுகிறது. 
Crystal Pavilion 
படிக்கட்டுகளின் ஓரம் முழுவதும் கைப்பிடிகள் வைத்து, இவைகளைத் தாங்கும் சிறு சிறு தூண்கள் முழுவதும் கிரிஸ்டலில் வடிவமைக்கப்பட்டிருந்த. அதோடு அந்தப்பகுதியின் கூரை கண்ணாடியில் அமைக்கப்பட்டிருந்ததால் நல்ல வெளிச்சமாக இருந்தது. ஒரு புறம் ஏறி வெராண்டாவைக் கடந்து சென்றால், பெரிய தர்பார் கூடம் வந்தது. 
Grand stairs
"தி கிராண்ட் செரிமோனியல் ஹால்", என்று அழைக்கப்படும் இந்த ஹால் மகாப் பெரியதாகவும் மிக உயரமாகவும் இருந்தது. ஒவ்வொரு இஞ்ச்சும் அலங்கரிக்கப்பட்டு நடுவில் மிகப்பெரிய டூமில்  ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
Ceremonial Hall with Victoria's Chandelier 
வழிகாட்டி சொன்னான், அது உண்மையிலேயே பெரிய டூம் இல்லையாம். அதில் வரையப்பட்ட ஓவியங்களின் முப்பரிமானங்கள் அது அப்படித்தோணும்படி அமைக்கப்பட்டிருக்கிறதாம். நானும் உற்று உற்றுப் பார்த்தேன். 

Doom 
அவன் சும்மா ஏமாற்றுகிறான் என்றுதான் எண்ணத்தோணியது. அவ்வளவு அருமையாக இருந்தது. ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. சுவர்களில் தங்கத்தை உருக்கி பெயின்ட் அடித்திருந்தார்கள். 37 நாடுகளை தன்னகத்தே கொண்ட சுல்தானுக்கு பணத்துக்கோ, தங்கத்துக்கோ என்ன பஞ்சமா?
Ambassador Hall
உயரத்தில் அந்தப்புற பெண்கள் அரசவை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும்படி பால்கனிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஹாலின் நடுவில் ஒரு பிரமாண்ட கார்ப்பெட் இருந்தது. அது ஹெரெக்கே (Hereke) கார்ப்பெட் என்றான். அதன் இருபுறமும் மிகப்பெரிய கிரிஸ்டல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. தவிர நடுவில் ரூமிலிருந்து மிக அழகிய பெரிய கிரிஸ்டல் சாண்ட்லியர் தொங்கியது. 750 விளக்குகள் பொருத்தப்பட்ட 4.5 டன் எடையுள்ள அந்த கிரிஸ்டல் விளக்கு விக்டோரியா மகாராணி அவர்களால் பரிசளிக்கப்பட்டு, பத்திரமாக கப்பலில் எடுத்து வரப்பட்டு இங்கே அமைக்கப்பட்டதாம். ஹாலின் ஓரங்களில் மிக அழகிய நாற்காலிகள் சுற்றிலும் போடப்பட்டிருந்தன. அழகிய நீல வண்ண மெத்தைகள் வைத்து தைக்கப்பட்டிருந்த அந்த நாற்காலிகளில் சற்றே உட்காரத் தோணியது. ம்ஹீம் அதற்கெல்லாம் அனுமதியில்லை.  
Pink Hall 
இங்குதான் முக்கிய அரசாங்க கொண்டாட்டங்கள் நடைபெறுமாம். முடிசூட்டு விழாவும், பதவியேற்பதும், பிறநாட்டு மன்னர்கள், தூதுவர்களை சந்திப்பதும் இங்கு நடைபெறுமாம். அது தவிர நாட்டின் மற்ற பகுதிகளின் கவர்னர்கள், நாட்டிற்கு அடங்கிய மன்னர்கள் கொண்டுவரும் வரியை/கப்பத்தை அளிப்பதும் இங்கேதான் நடக்குமாம்.
Blue Hall 
வந்தவர்கள் அதிசயத்துப் போகுமளவில் அலங்காரங்களும், காட்சிகளும், விலை உயர்ந்த பொருட்களும் சுல்தானின் அதீத அதிகாரத்தையும் வளத்தையும் பிரதிபலித்தன.
அந்த அரங்கத்தின் இரண்டு மூலைகளிலும் தனியறைகள் இருந்தன. ஒன்று சுல்தான் சிறு ஓய்வு எடுக்கும் அறை, மற்றொன்று அதிமுக்கிய விருந்தாளிகளை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் அறை. அதோடு யாரோடாதாவது அந்தரங்கமாய் ஆலோசனை செய்யவும் அந்த அறை பயன்பட்டது. அதிலும் சிறப்பாக வரவேற்பறை, தூதர்கள் அறை, பிங்க் அறை, புளு அறை, ரெட் அறை, கிறிஸ்டல் பெவிலியன் என பல அறைகள் இருந்தது. அங்கு வாழ்ந்த காலிஃப் அப்துல் மசிது அவர்களின் தனிப்பட்ட நூலகம் இருந்தது. மேலும் மறுபுறம் சென்றால் விருந்தினர் தங்கும் அறைகள், உணவு உண்ணும் டைனிங் அறைகள் ஆகியவை இருந்தன. அரண்மனையின் அந்தக் கட்டிடத்தில் மற்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதியில்லை.  
Sulthan's Library 
வெளியே வந்தால் அரண்மனையின் பக்கவாட்டு வாயில் வந்தது. பாஸ்பரஸ் ஆற்றை ஒட்டிய அந்த இடத்தின் வழியாகத்தான் கப்பல் வழியாக வருபவர்கள் வந்து செல்வார்கள். சுல்தான் மற்ற அரண்மனைகளுக்குச் செல்வதற்கும் அலங்காரப் படகுகள் அங்கு எப்பொழுதும் நிறுத்தப்பட்டிருந்தன.

அங்கிருந்து இடதுபுறம் நடந்து சென்றால் இன்னொரு பெரிய அரண்மனை வந்தது. அதுதான் பட்டத்து இளவரசனின் அரண்மனை என்றார்கள். டொப்கப்பி போல இங்கேயும் அடைத்துத்தான் வைத்தார்களா என்று தெரியவில்லை.  நல்ல விசாலமாக பல அறைகளைக் கொண்டதாக இருந்தது. இதுவும் மியூசியமாக மாற்றப்பட்டு சுல்தானுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பலவித ஓவியங்கள் பல அறைகளில் மாட்டப்பட்டு இருந்தன. பிரபலமான பல ஓவியர்கள் வரைந்த அந்த ஓவியங்கள் பெரியதும் சிறியதுமாம் பல சைஸ்களில் இருந்தன. அதனை நன்றாகப் பார்க்க வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது. அவ்வளவு ஓவியங்கள் இருந்தன.
Palace of the Crown Prince

முடிந்த அளவு கண்களால் ஸ்கேன் செய்துவிட்டு இறங்கி வந்து, மெயின் பில்டிங்கை சுற்றி வந்தால் பின்புறம் இருந்தது அந்தப்புறம் (மறுபடியுமா?). சுல்தானின் அந்தப்புறம் பற்றி பல தகவல்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். படிக்கவில்லை என்றால் மறுபடியும் பகுதி 8-க்குச் செல்லவும்.
நுழைந்து மேலே சென்றால் ஒரு மிகப்பெரிய ஹால் வந்தது. பல நாற்காலிகளும், கண்ணாடிகள் வைத்த வார்ட்ரோப்கள் ஆகியவை இருந்தன. பின்னர் பல பெரிய சிறிய அறைகளும் ராணிகள் குளிக்க ஹமாம் என்றழைக்கப்பட்ட குளியலறைகளும் வந்தன. சுல்தானின் படுக்கையறையை விட குளியலறை பிரம்மாண்டமாக இருந்தது.

Sulthan's Bathroom
அதில் ஒரு அறையில்தான் அட்டாதுர்க் (அத்தா துருக்கி) தங்கியிருந்தாராம். யார் இந்த அட்டாதுர்க், அடுத்த வாரம் பார்ப்போமே. 


Pictures courtesy : Google Search 

தொடரும்.

4 comments:

  1. தங்கத்தை உருக்கி பெயின்ட் அடித்திருந்தார்கள். //////. ஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் உருக்கி அடிக்க நம்ம ரத்தத்தை தவிர வேற ஒண்ணுமில்லை

      Delete
  2. ப்ளூ ஹால் , ப்ளூ கலர்ல இல்லையே.. காரண பெயர் இல்லையா ..?

    ReplyDelete
    Replies
    1. ப்ளூ கலரில் கார்பெட்டும் திரைசீலைகளும் சாண்டெலியரும் இருக்கின்றன தம்பி .

      Delete