Thursday, August 7, 2014

எம்பரர் !!!!!!!!!!!


கடந்த வாரம் போரடித்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, மனைவி சயன அறையில் மயங்கிக்கிடக்க ஆப்பிள் டிவி எடுத்து மேய்ந்ததில் நெட்ஃபிலிக்ஸில் கிடைத்ததுதான் எம்பரர் (Emperor).
அமெரிக்க ஜப்பானிய கூட்டுத்தயாரிப்பில் 2012ல் உருவான இந்தப்படத்தின் களம் 2-ஆவது உலகப்போர் முடிந்த பின்னர் ஜப்பானில் நடப்பதாகும்.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி, நாசசாகியான மாபெரும் அணு அழிவிற்குப்பின், அமெரிக்கா, ஜப்பானை  மறு சீரமைக்க, ஜெனரல் டக்ளஸ் மெக்கார்த்தரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. சுப்ரீம் கமாண்டராக மெக்கார்த்தர், அவருக்கு கீழே பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் பானர் ஃபெல்லர்ஸ் ஆகியோர் எடுத்த சீரிய முயற்சியின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
Emperor Hirohito 
 பேர்ல் ஹார்பர் பேரழிவுக்கு அப்போதைய ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோவும் ஒரு காரணம் என்றால் அவரை பதவி நீக்கம் செய்து முழு ஜனநாயகத்தை ஏற்படுத்தலாமா என்று அமெரிக்கா யோசித்து, அதற்கேற்ற இன்வெஸ்டிகேஷனை பானர் தலைமையில் முடுக்கிவிட்டது. 
            பானருக்கு ஜப்பான் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது எதனால்? கடவுளுக்கு இணையாக மதிக்கப்பட்ட பேரரசர் ஹிரோஹிட்டோவுக்கும் பேர்ல் ஹார்பருக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா? யார் அதன் காரணம் ?, எப்படி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கு இந்த திரைப்படத்தில் பதில்கள் அடங்கியுள்ளது. 
General MacArthur with Emperor Hirohito
            அணுகுண்டு வீச்சுக்குப்பின் முற்றிலும் அழிந்துபோன ஜப்பான் பகுதிகளை அப்படியே கண்முன் தத்ரூபமாக கொண்டுவந்தது இந்தப்படத்திற்கு வெற்றி.
Tommy Lee Jones
டக்ளஸ் மெக்கார்த்தராக நடித்த டாமி லீ ஜோன்ஸ்-ம் பானர் ஃபெல்லர்சாக நடித்த மேத்யூ ஃபாக்சும் தங்களுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் உலகப்போரின் கதாநாயகர்களை நேரில் கொண்டுவந்தனர்.
Mathew Fox
அதோடு பல கதாபாத்திரங்களில் நடித்த ஜப்பானிய நடிகர்களும் தாங்கள் சளைத்தவர்களில்லை என்று நிரூபித்தார்கள்.
பீட்டர் வெப்பர் டைரக்ட் செய்த இந்தப்படம் 2013-ல் ஜப்பானில் சூப்பர் ஹிட் ஆனது.
இசையமைத்த அலெக்ஸ் ஹெஃப்ஸ் (Alex Heffes) மற்றும் சினிமாட்டோகிராபி பொறுப்பேற்ற ஸ்டூவர்ட் டிரைபர்க் (Stuart Dryburgh) ஆகியோரும் தங்கள் வேலையை திறம்பட செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஜப்பான் எப்படி மாறிப்போனது என்று நமக்குத் தெரியும். இப்போது அவர்களுக்கு ராணுவம் கூடக் கிடையாது. அப்போது நடந்த சில நுண்ணிய வரலாற்று நிகழ்வுகளை அறிய விரும்புபவர்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்து மகிழலாம்.

2 comments:

  1. //உலகப்போரின் கதாநாயகர்களை//
    எனக்கு என்னவோ இவர்கள் எல்லாம் உலகபோரின் வில்லன்களாகதான் தெரிகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நம் கதாநாயகர்கள், எதிரிகளின் வில்லன்கள் .
      எதிரிகளின் கதாநாயகர்கள், நம் வில்லன்கள் .

      Delete