Thursday, March 29, 2018

பரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்


Image result for H1 B lottery
அமெரிக்க கனவு
அழிந்து போனது
ஹெச்1பி லாட்டரி!

கைக்கெட்டியது
வாய்க் கெட்டவில்லை
கான்சுலேட்டில் 221ஜி!

லாட்டரி கிடைத்தும்
அதிர்ஷ்டமில்லை
ஹெச்1பியில் ஆர்.எஃப் இ,!

பச்சை அட்டை
பலிக்குமா
புதிய அரசாங்கம்!

உடைக்கும் லேயர்
பிராஜெக்ட்டுக்கும்  லேயர்
நியூயார்க்!

இன்று வெள்ளைப்பனி ஆஹா
நாளை தொல்லைப்பனி சீச்சீ
பிளாக் ஐஸ் !

பாஸ்போர்ட் மாறலாம்
முகம் மாறுமா?
அமெரிக்க குடியுரிமை

காலையில் ஓட்மீல்
மாலையில் பாஸ்தா
இரவில் இளையராஜா



சுவர் கட்டுவேன்
பவர் காட்டுவேன்
ஒருநாள் மாட்டுவேன்

சப்வேயில் உட்கார இடம் ஆஹா
ஓடிப்போய் இடம்பிடித்தால்
ஓரத்தில் ஹோம்லஸ்

அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் ஈமெயில்
அட்லீஸ்ட்  ஒரு வாட்ஸ் அப் மெசேஜ்

வேற்றுமையில் ஒற்றுமை
ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்
அமெரிக்கத் தமிழன்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
அரங்கம் செல்வோம்
ரஜினி படம்.

சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெரிக்க ஃபிரிட்ஜ்

ஜாக்கிங் செல்வோம்
சைக்கிள் ஓட்டுவோம்
எல்லாமே ரூமுக்குள்.

அழுக்கு மூட்டை மீனாட்சி
மூஞ்சி கழுவி நாளாச்சு
பிராஜக்ட் டெலிவரி !

தமிழனும் தமிழனும்
ஒன்று சேர்ந்தால்
வேறு என்ன ஆங்கிலம்தான் !  


18 comments:

  1. Replies
    1. நன்றி மதுரைத்தமிழன்

      Delete
  2. // பாஸ்போர்ட் மாறலாம்
    முகம் மாறுமா?
    அமெரிக்க குடியுரிமை //


    முகம் மாறுமே வயசு ஆனவுடன்

    ReplyDelete
    Replies
    1. நிறமும் முகமும் மாறாது எப்போதும் இந்திய முகம்தான் என்பதைச்சொன்னேன்

      Delete
    2. நிறம் மாறாது என்றால் நீங்கள் ஏன் தினமும் பேர் அண்ட் லவ்லி உபயோக்கிறீங்க

      Delete

  3. // காலையில் ஓட்மீல்
    மாலையில் பாஸ்தா
    இரவில் இளையராஜா ///

    இடலி தோசை வடை சாப்பிடாதவரா நீங்கள் அப்ப நீங்க ஆண்டி தமிழந்தான்

    ReplyDelete
    Replies
    1. நான் தமிழ் ஆண்டிதான் தமிழா அதனால்தான் பரதேசின்னு பேரு

      Delete
  4. // வேற்றுமையில் ஒற்றுமை
    ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்
    அமெரிக்கத் தமிழன் ///


    நீயூஜெர்ஸி தமிழ் சங்கங்களை இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது

    ReplyDelete

  5. // ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
    அரங்கம் செல்வோம்
    ரஜினி படம்.///

    நீங்க ரஜினி ஆளா அதுதானே பார்த்தேன் வேறு எந்த பதிவிலும் உங்கள் கருத்துகளை பார்க்க முடியவில்லை என்று

    ReplyDelete
  6. // சாதம் ஒரு வாரப் பழசு
    சாம்பார் ஒரு மாதப்பழசு
    அமெரிக்க ஃபிரிட்ஜ்///

    இது வீட்டுல மட்டுமல்ல இங்குள்ள சரவணப்பவனிலும் அதே கதைதானமே

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ இது எனக்கு தெரியாதே

      Delete
  7. // ஜாக்கிங் செல்வோம்
    சைக்கிள் ஓட்டுவோம்
    எல்லாமே ரூமுக்குள்.///


    ஜாக்கிங் & சைக்கிள் வெளியே ஓட்டுனால் பரவாயில்லை ஆனால் கூடவே பெண்களையும் வைத்து ஒட்டிஸ் சென்றதை வீட்டில் பார்த்துவிட்டார்களா? யாரு அந்த கொரியப்பெண்ணா அது

    ReplyDelete
    Replies
    1. அந்த கொரியப்பெண்ணை நான் மறந்தாலும் நீங்கள் மறக்கவில்லை போல இருக்கிறது .

      Delete
  8. ரசித்தேன் + சிரித்தேன்...

    ReplyDelete
  9. அமெரிக்க வாழ் தமிழர்களின் மொத்த ஆதங்கத்தையும் ஒருங்கிணைத்து எழுதிய கவிதை.
    //சாதம் ஒரு வாரப் பழசு
    சாம்பார் ஒரு மாதப்பழசு
    அமெரிக்க ஃபிரிட்ஜ்

    அழுக்கு மூட்டை மீனாட்சி
    மூஞ்சி கழுவி நாளாச்சு
    பிராஜக்ட் டெலிவரி !//

    ReplyDelete
  10. முயற்சி இல்லை உச்சம் அற்புதமான கவிதைகள் தொடரவாழ்த்துக்களுடன்

    ReplyDelete