
பார்த்ததில் பிடித்தது
லின்கன்
ஆப்ரகாம் லின்கன் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை வேறு ஒரு கோணத்தில்
காட்டுகிற படமே லின்கன் என்ற இந்தப் படம். 2012ல் வெளிவந்த
இந்தப்படம் இப்போது நெட் பிலிக்சில் உள்ளது.
அமெரிக்க நாடு பழமையான நாடு அல்ல. இந்தியாவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து
கொண்டிருந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் போது இதுதான் இந்தியா என்று
தான் நம்பினார். இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர் என்றே நினைத்தார். அதனால்தான்
இவர்களுக்கு சிவப்பிந்தியர் என்ற பெயர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. சிறுசிறு
பகுதிகளாகப் பிரிந்து பல மொழிகள் பேசின பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் இருந்தான்.நாகரிகத்தில் பின் தங்கியிருந்த இந்த
மக்களை தோற்கடிப்பது பெரிதான காரியமாக இருக்கவில்லை. பெரும்பாலான தென் அமெரிக்க வட
அமெரிக்கப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள்தான் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து
வந்தனர். எனவே ஐரோப்பியர் இந்தப் பகுதிகளுக்கு வந்து நிரம்பினர். தென் அமெரிக்கா
முழுவதுமாக ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் நிறைந்தது இப்படித்தான். வட அமெரிக்காவில்
இருக்கும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பெருவாரியாக இவர்கள் குடியேறினர். இவற்றுள் பல
பகுதிகள் ஸ்பெயின் அரசனின் கட்டுப் பாட்டில் இருந்தது. புதிய வல்லரசாக உலகத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்த
இங்கிலாந்தின் கண்ணில் பட, கனடா மற்றும் அமெரிக்க பகுதிகளை அவர்கள் ஆக்ரமித்துக்
கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாக தொடர்ந்த பின் அமெரிக்காவில் வாழ்ந்த
பல இன மக்களை ஒன்று சேர்ந்து
பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து ஆங்கிலேயரை விரட்டி அடித்து தங்கள் சொந்த அரசை
நிறுவினர்.
அவ்வாறு நிறுவிய காலத்திலிருந்து மிகுந்த தொலைநோக்கு கொண்ட
பல தலைவர்கள் அமெரிக்காவை தொடர்ந்து முன்னேற்றி வந்ததால் இப்போது உலகின் தலைசிறந்த
நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கி வருகிறது. வெறும் 13
காலனிகளைக் கொண்டு சுதந்திரப் பிரகடனம் செய்த அமெரிக்க நாடு
இப்போது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டு இருக்கிறது. இதில் போரினால் வென்று
இணைக்கப்பட்டவை என்று பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.
முழு நாடும் இரண்டாகப் பிரிந்து ஒன்றோடு ஒன்று யுத்தம்
செய்து உள்நாட்டுப் போரில் வாடிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க ஐக்கிய
நாட்டின் தலைவராக இருந்த ஆப்ரகாம் லின்கன் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியால் போர்
முடிந்து அமைதி திரும்பியதோடு, அமெரிக்காவில் வாழும் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு
என்பதைக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லின்கன் அவர்கள்.
அந்தச் சமயத்தில் கறுப்பின மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக
இருந்தார்கள். ஓட்டுரிமை கிடையாது. அரசாங்கத்தில் பங்கு கிடையாது. அது மட்டுமல்ல
பெண்களுக்கும் கூட ஓட்டுரிமையோ சம உரிமையோ இல்லாத காலமது.
ஆப்ரஹாம் லின்கன் எந்த எதிரிப்புகளையும் பொருட் படுத்தாது,
அடிமைத்தனம் என்பதை
முற்றிலும் ஒழித்து எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வகை செய்தார். நல்ல காரியங்களை செய்வதற்கு சில
குறுக்கு வழிகளில் சென்றால் பரவாயில்லை, இறுதிப் பயன் மட்டும் நன்மையாக இருந்தால் போதும்
என நினைத்து செயலாற்றிய உறுதியான மனம் படைத்தவர் ஆப்ரகாம் லின்கன். நல்ல தலைவர்களை இந்த உலகம் உயிரோடு விட்டுவைக்குமா ? ஆப்ரகாமின் நிலமையும் அப்படித்தான் ஆயிற்று .
![]() |
Stephen Spielberg |
உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீபென் ஸ்பீல்பர்க்
அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது. எனவே தரத்திற்கு எந்தக் குறைவுமில்லை.
நடிகர்கள் எல்லாம் உண்மைக் கதாபாத்திரங்கள் போலவே இருக்கிறார்கள், நடிக்கிறார்கள்.
குறிப்பாக லின்கனாக நடித்த டே லூவிஸ் (Day Lewis) தூள் கிளப்பியிருக்கிறார். இந்தப்படம்
டோரிஸ் கேர்ன்ஸ் (Doris Kearns Goodwiin) குட்வின் எழுதிய “டீம் ஆப் ரைவல்ஸ் தி பொலிட்டிகல் ஜீனியஸ் ஆப்
ஏப்ரகாம் லின்கன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்தவர் “டோனி குஷ்னர்” .ஜான்
வில்லியம்-ன் இசை சிவில் வார் யுகத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறது.
![]() |
Day Lewis |
ஒரு வித்தியாசமான ஆப்ரகான் லின்கனின் மறுபுறமான கணவன், தந்தை, நாட்டின் பொறுப்பான தலைவர் என்ற
பல முகங்களை இந்தப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஸ்டீபன்
ஸ்பீல்பர்க்.
அமெரிக்க வரலாற்றின் முக்கிய பகுதியான லின்கனின் வாழ்க்கை
பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
முற்றும்
முக்கிய அறிவிப்பு
டொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)
டொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)
பார்க்க வேண்டும்... நன்றி...
ReplyDeleteநம்ம ஊருக்கு எப்போது பயணம்...?
மே 4,5 and 6 மதுரைக்கு வருகிறேன் தனபாலன்.
Deleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றி. குறித்துக் கொண்டேன் அவசியம் பார்க்கவேண்டும், https://www.netflixmovies.com/lincoln-2012 இந்தப் படத்திற்கான சுட்டி.
ReplyDeleteசுட்டிக்கு மிக்க நன்றி முத்துச்சாமி .
Delete