"ஹல்லோ எலேய்
பரதேசி என்னலே என்ன செய்ற?"
(வந்துட்டான்யா வந்துட்டான்யா
நாரத மகேந்திரன்)
"நல்லாருக்கியா
மகேந்திரா ஊரும் உறவுகளும் சுகமா?"
"அட அதவிடுறா
ஏதோ வேரைத் தேடின்னு ஒரு பதிவு எழுதிட்டு இருக்கியாமே?"
"ஆமாடா ஏன்டா
நீ படிக்கிறதில்லையா?"
"நான் வயக்காட்டு
வெள்ளாமையல பிஸியா இருந்தேன். பயக சொன்னாய்ங்க.
அது சரிடா உன் சொந்த ஊர் எது?"
"என்னடா இப்படிக்
கேட்டுட்ட, தேவதானப்பட்டிதான் என் சொந்த ஊரு, உனக்கும் அதான்"
"இல்லடா பிறந்த
ஊரைத்தான சொந்த ஊர்னு சொல்வாய்ங்க”.
“அப்படிப்பார்த்தா என்
பிறந்த ஊரு திண்டுக்கல்லு, வளர்ந்த ஊருதான் தேவதானப்பட்டி".
"அப்ப உனக்கு
சொந்த ஊர்னா திண்டுக்கல்லுன்னுதான சொல்லனும்"
"இருந்தாலும்
வளர்ந்த ஊரை விட்டுற முடியுமா? இப்படி வேணா வெச்சுக்கலாம் பிறந்த
சொந்த ஊரு திண்டுக்கல், வளர்ந்த சொந்த ஊரு தேவதானப்பட்டி".
"அப்ப திண்டுக்கல்லுல
இருந்ததை விட தேவதானப்பட்டில இருந்ததுதான அதிகம் இல்லையா? எவ்வளவு
வருஷம் இருந்த?"
"ஆமாடா பத்தாப்பு
படிக்கறவரை அங்க தான் இருந்தேன். பதினஞ்சு
வருஷம் இருந்தேன்னு வச்சுக்கலாம்".
"அது சரி திண்டுக்கல்லு
அப்ப யாரு ஊரு?"
"அடேய் அது எங்கம்மா
ஊருடா"
"அப்ப உங்கப்பா
பிறந்த ஊர்?"
"அது மதுரை”
“அப்ப நீ சொந்த ஊரு மதுரைன்னுதான சொல்லணும்?
"
"அப்படியும் வச்சுக்கலாம்டா,
அதோட மதுரையில அமெரிக்கன் கல்லூரி 3 வருஷம் சமூகப்பணிக்கல்லூரி
2 வருஷம் இப்படி கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம்
மதுரையில்தான் இருந்தேன். களிமண்ணா வந்த என்னை கடைந்தெடுத்து உருவாக்கியது அமெரிக்கன்
கல்லூரிதான்.அதனால் தான் இந்தியா வந்தா மதுரைக்கு வராம திரும்பினதில்லை . அதனாலதான்
இப்பவும் மதுரைக்காரன்னு பெருமையா சொல்றேன். அதோட அப்ப திண்டுக்கல்லும்
சரி, தேவதானப் பட்டியும் சரி எல்லாமே மதுரை மாவட்டமாத்தேன் இருந்துச்சு"
Add caption |
"அப்ப சென்னை?"
"சென்னையை மறக்க
முடியுமா? வேலைக்காக 1988ல் இங்கு வந்து
வந்ததிலிருந்து சிறந்த
அனுபவம் கொடுத்தது சென்னைதான், சொந்தக் கம்பெனி வக்கிற அளவுக்கு
வளந்தது, வளர்த்தது சென்னைதான. அதோட புகுந்த ஊரும் சரி புகுந்த வீடும் அமைஞ்சது சென்னைதான்"
"புகுந்த வீடா
என்னடா சொல்றா"
"இல்லடா கல்யாணம்
செஞ்சதும் சென்னைதான, அதைச் சொன்னேன்”.
“ஓ நீ அங்க வர்றியா/
ஆமா நீ சென்னையில எத்தனை நாள்றா இருந்த"
"டேய் 1988-லிருந்து 2000 வரைக்கும் சென்னைதான, கணக்கு பண்ணா ஒரு 11-12 வருஷம் சென்னையிலதான இருந்தேன்".
"அப்ப சென்னையைக்
கூட உன்னோட சொந்த ஊர்னு சொல்லலாம்னு சொல்லு"
"சொல்லலாமே தப்பேயில்ல,
டேய் டேய் மகேந்திரா என்னடா குழப்புற?"
"அப்ப திண்டுக்கல்லுல
ஆரம்பிச்சு அப்புறம் தேவதானப்பட்டி, பின்ன மதுரை அதன்பின் சென்னை
அப்புறம்?"
"அப்புறம் நியூயார்க்
வந்தேன்".
"ஏண்டா சென்னையை
விட்டுப்போன? சென்னை பிடிக்கலயா?
"சேச்சே அப்படிச்
சொல்ல முடியாது. எந்த ஊரையும் பிடிக்காம விட்டுட்டு வரல உயர் படிப்புக்கும் வேலை வாய்ப்பையும்
தேடித்தேன் ஒவ்வொரு இடமா போனேன்".
"ஆமா நியூயார்க்
எப்படா போன?"
"2000-த்தில இங்க
வந்தேன்"
"2000-யிரமா அப்ப
நீ போய் 18 வருஷம் ஆயிருச்சா?"
"ஆமாடா நாள்தான்
ஓடு ஓடுன்னு ஓடுதே"
"அப்ப நீ திண்டுக்கல்,
தேவதானப்பட்டி,மதுரையில இருந்ததைவிட நியூயார்க்கில இருந்ததுதான்
அதிகம்னு தெரியுது".
"அட ஆமா மகேந்திரா,
இந்தக்கணக்கை இதுவரை நான் போட்டுப்பாக்கல"
“அதுசரி அப்ப நியூயார்க்தான்
உனக்கு சொந்த ஊர் ஆயிப் போச்சுன்னு சொல்லு"
"மகேந்திரா எத்தனை
வருஷம் இங்க இருந்தாலும் நான் இந்தியன்கிறதும் தமிழன்கிறதும் மாறாது. நான் தமிழன்தான்,
நான் மதுரைக்காரன்தான் என் சொந்த ஊர் தேவதானப்பட்டிதான். இதை எப்பவும்
மாத்தமுடியாதுடா, மறக்கவும் முடியாது, மறக்கவும் கூடாது”.
“நல்லாச் சொன்னடா,
ஆமா உனக்கு நியூயார்க் பிடிச்சிருக்கா?”
"பிடிச்சிருக்குன்னு
சொல்ல முடியாது, பிடிக்கலன்னும் சொல்லமுடியாது"
"என்னடா புதிர்
போடுற"
"என்ன இருந்தாலும்
எத்தனை வருஷம் இருந்தாலும், நியூயார்க்கும் அமெரிக்காவும் எனக்கு
வெளிநாடு தானடா. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?"
சரிதான் போ,
அப்ப திரும்ப வந்துற வேண்டியது தானே".
"அது முடியாதுன்னு
தான் நெனைக்கிறேன்"
"ஏண்டா?"
"இது ஒரு புலிவாலைப்பிடிச்ச
கதைரா. பிடிச்சுட்டு இருக்கிறதும் கஷ்டம், புடியை விடுறதும் கஷ்டம். பிள்ளைகள் இங்க வளர்ந்ததனால அவளுக
வரமாட்டேங்கறாங்க. அவங்க பக்கத்தில நாங்க இருக்கறதுதானே நல்லது",
“சரிதாண்டா ஆனா
சும்மா சொல்லக்கூடாது. உன் கதை அபாரம்டா, திண்டுக்கல்,
தேவதானப்பட்டி, மதுரை, சிவகாசி,
கிருஷ்ணகிரி, சென்னை இப்ப நியூயார்க். அதுலயும்
ஊர் ஊராச் சுத்துற. உனக்கு பரதேசிங்கிற பேரு ரொம்ப பொருத்தம்டா. ஆமா யார்றா இந்தப்
பேரை உனக்கு வெச்சது?”
“வேற யாரு நாந்தேன்?”
“அடுத்து எங்கடா போற?”
“சொல்றேன்”.
மார்ச் 24,
25 - டொரன்டோ, கனடா - கிறிஸ்தவ இசை மாலை
ஏப்ரல் 15
: சித்திரை விழா, நியூயார்க் தமிழ்ச்சங்கம்
ஏப்ரல் 21:
தமிழ் ஜெப்பர்டி - நியூயார்க் தமிழ் அக்காதெமி
ஏப்ரல் 24-27
- தாய்லாந்து
ஏப்ரல் 28-29
: சென்னை
ஏப்ரல் 30 மே 1,2 : திருவனந்தபுரம்
மே 3-4
: சென்னை
மே 4
: மதுரை
மே 5
: ராமநாதபுரம்
மே 6:
மதுரை
மே 7-8
: சென்னை
மே 9
: நியூயார்க்
மே 26-27
: நியூஜெர்சி தமிழ்நாடு பெளன்டேஷன்
ஜூன் 30 - ஜூலை 4
Fetna டல்லாஸ், டெக்சஸ்
“டேய் சேகரு நீ
பரதேசியே தாண்டா”
முற்றும்
முக்கிய அறிவிப்பு
டொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)
டொரோண்டோவில் நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)
அருமை..
ReplyDeleteபரதேசியா??
பார் தேசியா??
பாரத தேசியா??
அமெரிக்காவில் வாழும் தேசிகள் பெரும்பாலும் பரதேசிகளே..
ஓ பாட்டாவே பாடிட்டிங்களா , நீங்கள் சொல்வது உண்மைதான் வாஞ்சி .
DeletePira Desi enbathe parathesi enru Ananthu.a foreigner.karthik amma
ReplyDeleteஅப்படியும் வைத்துக்கொள்ளலாம் கார்த்திக் .
Deleteநீங்க நம்ம ஊர் ராஜா...!
ReplyDeleteகேட்க நல்லாத்தான் இருக்கு ஆனா அது உங்களுத்தான் மிகப்பொருத்தம் தனபாலன்.
Deleteமறுமொழியிட்டது நான் கார்த்திக் அம்மா .கார்த்தியின் blog ஐ தொடர்ந்து எழுதும் (கார்த்தியின் பிரிவிற்கு பின் ) கார்த்தி அம்மா இட்ட பின்னூட்டம் அது.அன்று தமிழ் font வேலை செய்யவில்லை.அதனால் ஆங்கிலத்தில் எழுதினேன்.
ReplyDeleteகார்த்தி எழுதுவதாக நினைத்தால் மகிழ்ச்சியே.
அன்புடன் அம்மா
நன்றி கார்த்திக் அம்மா , அம்மாவின் அதீத அன்பு உங்களிடத்திலும் தெரிவதில் ஆச்சரியம் இல்லை . அம்மாவின் பணியை தொடர்ந்து செய்யும் பல மகன்களை பார்த்திருக்கிறேன் . மகனின் பணியை தொடர்ந்து செய்யும் அம்மாவை இப்போதுதான் பார்க்கிறேன் .தங்கள் பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
Deleteசுற்றுப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.
ReplyDelete