ராஜீவ் கொலை பகுதி -5
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட
உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும்
- நளினி முருகன்.
யாழ் பதிப்பகம்
- எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்
Add caption |
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_15.html
சிறையில் உள்ள
பிள்ளைகளுடன் நளினிக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகரித்தது. பிள்ளைகளிடம் அதீத
பாசம் காட்டியதால் பிள்ளைகளும் இவர்களுடன் ஒட்டிக் கொண்டன. பெரும்பாலான சமயத்தில்
பிள்ளைகள் தங்கள் நேரத்தை இவர்களுடன் செலவழித்தனர்.
இவர்களுடைய வழக்குகளுக்கு முதலில் இறங்கி வாதாட
ஒருவரும் முன்வரவில்லை என்பதால், முருகன் நளினியின்
உதவியுடன் இரவும் பகலும் நிறைய சட்டப் புத்தகங்களைப் படித்து, தனது வழக்கை தானே நடத்துமளவிற்கு தேர்ச்சி பெற்றார். கடுமையான உழைப்பினால்
பல குறிப்புகளை தயார் செய்து அவர் கேட்ட குறுக்குக் கேள்விகளால்,
சாட்சிகளும் ஏன் காவல்துறை அதிகாரிகளும் கூட
திணறிப் போயினர். பலவிதமான பொய்சாட்சிகள் முருகனால் உடைக்கப்பட்டது.
அதன்பின்தான் மூத்த வழக்கறிஞர் துரைசாமி,
அவர்களுக்காக வாதாட முன் வந்தார். தடா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில்
பத்திரிக்கையாளர் யாரும் எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. துரைசாமி ஒரு இதய
நோயாளி என்றும் பார்க்காமல் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி அவருடைய காரை உள்ளே
விடாமல் அவரை நீண்டதூரம் நடக்க வைத்தனர். மேல்மூச்சு கீழ்முச்சு வாங்க அவர் நடந்து வந்து வாதம் செய்த கொடுமையைப்பார்த்து
தடா நீதிபதியே கதறி அழுத சம்பவமும் நடந்தது. அதன்பின்பு CBI தலைமை நீதிபதி இராஜமாணிக்கம்
மாரடைப்பில் இறந்து போனார். புதிதாக வந்த நீதிபதி அவசரகதியாக கேஸை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியது.
Murugan |
அப்போது நளினியும் முருகனும் வெளியே நின்றபோது
காவலுக்கு வந்திருந்த 300 போலீஸ்காரரும் கண்கலங்க
அவர்களுக்கு ஆறுதல் சொன்னதை உருகிஉருகி எழுதியிருக்கிறார் நளினி.
அதன்பின் வேலூர் பெண்கள் சிறைக்கு
மாற்றப்பட்டிருக்கிறார் நளினி. அங்கே முதல் நாளில் நளினியை முற்றிலும்
நிர்வாணமாக்கி மயக்கமாகும் வரை அடித்து உதைத்திருக்கிறார்கள். உள்ளே முதன்முதலில்
வரும் அனைவருக்கும் அது நடக்குமாம். ஏனென்றால் உள்ளே வரும்போதே அவர்களுடைய கொட்டத்தை
அழித்துவிட்டால் அவர்கள் பிரச்சனை கொடுக்காமல் இருப்பார்கள் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களாம்.
இதற்குப் பெயர் “அட்மிஷன் அடி".
தூக்குத் தண்டனை கைதிகளுக்கு சிறையின் உள்ளேயே
ஒரு தனிமையான சிறைப்பகுதி இருக்கிறதாம். அங்கே அதற்கு முன் பல வருடகாலமாக யாரும்
இருக்கவில்லை என்பதால், புதிதாக சுத்தம் செய்து ஒரு அறையை
ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த முழுப்பகுதியிலும் நளினி ஒருவர் மட்டுமே இருந்தார்.
அதன் ஒரு பகுதியில் தூக்குப் போடும் இடமொன்றும் இருக்கிறது.
அங்கு காவலுக்குச் செல்ல பெண் போலீஸ்காரர்களே
பயப்படுவார்களாம். ஏனென்றால் இரவில் பேய்கள் அங்கு நடமாடுமாம். பலபேரை தூக்குப்
போட்ட இடமென்பதால் இரவு நேரத்தில் அழுகைக்குரல்களும் அமானுஷ்ய சத்தங்களும்
கேட்கும் என்பதால் அங்கு காவலுக்கு வரும்
போலீசுக்கும் அது ஒரு தண்டணையாகவே கருதப்பட்டது. அது தவிர தூக்கு அறை ரொம்ப
நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் சுத்தம் செய்யப்போன போது அங்கு ஏழடி
நாகம் ஒன்றை பார்த்த ஊழியர்கள்
அலறியடித்து ஓடி வந்திருக்கிறார்கள். ஆனால் நிறைய ஆட்களோடு திரும்ப அங்கே போனபோது நாகம்
காணப்படவில்லை. இதற்கு முன்னும் ஓரிருமுறை இப்படி நடத்திருக்கிறதாம். இது உயிர்காக்கும் நாகதேவதை என்றும் நிரபராதிகளை இது காக்கும் என்ற
நம்பிக்கையும் அங்கு இருக்கிறதாம்.
தூக்குத்தண்டனை நிறைவேற்ற ஓரிரு நாட்களே
இருக்கும்போது பலபேர் எடுத்த முயற்சியில் கவர்னர், ஜனாதிபதி
ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டது. சோனியா காந்தி அவர்களும் தூக்குத்தண்டனை
வேண்டாம் என குடியரசுத்தலைவருக்கு எழுத, அவரின் உத்தரவுப்படி
தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தப் போராட்டங்களில்
உயிர்த்தியாகம் செய்த செங்கொடியை நளினி நினைவு கூறுகிறார்.
Add caption |
முருகன் சிறையில் நாட்களை வீணாக்காத வண்ணம்
பல புதிய விடயங்களைக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டரை திறம்பட பயன்படுத்தவும்,
ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும், இனிப்புகள்
பலகாரங்கள் செய்யவும் கற்றுக் கொண்டார். அதோடு சிறைக்குள்ளேயே பூந்தோட்டம்
அமைந்ததோடு சுமார் ஐம்பது மரங்களை நட்டு வளர்ந்து வருகிறார். +2-வில் ஆரம்பித்து BCA படித்து அதன் பின் MCA யும் படித்து
முடித்திருக்கிறார். அதோடு ஃபேஷன் டிசைன், DTP, ஆங்கில
தட்டச்சு, ரேடியோ மெக்கானிசம் என்று கிடைத்த ஒரு
வாய்ப்பையும் நழுவ விடாமல் படித்திருக்கிறார். ஓவியக்கலையைக் கற்று சுமார் 20 ஓவியங்களை வரைந்திருக்கிறார். 2011 லிருந்து
முற்றிலுமாக எல்லாவற்றையும் துறந்து காவியுடுத்தி ஒரு சாமியார் போலவே வாழ்கிறார் முருகன்.
நளினியும் சும்மா இருக்கவில்லை. பியூட்டிசியன்
கோர்ஸ், எம்பிராய்ட்டரி, தையல்,
தோட்டக்கலை மற்றும் யோகா ஆகியவற்றில் பயின்று தேறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது தான் ஏற்கனவே படித்த பட்டயப்படிப்போடு, முதுகலை ஆங்கில இலக்கியம்
முடித்து அதன்பின் MCA யும் படித்து முடித்து இருக்கிறார். இருவரும்
என்ன படித்து என்ன பயன் அதனை வெளியில் வந்து பயன்படுத்த முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. தங்கள் இளமைக்காலங்கள் முழுவதையும் ஜெயிலில்
கழித்திருக்கும் இவர்கள் கிட்டத்தட்ட 26 வருடங்கள் உள்ளே
இருக்கிறார்கள்.
உலகத்திலேயே அதிக நாட்கள் சிறையில் இருக்கும்
பெண் என்ற பெருமை அல்லது சிறுமையையும் நளினி பெற்றிருக்கிறார்.
Book Release Function |
புத்தகத்தின் முன்னுரை அணிந்துரையாக
சென்னை உயர்நிதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமல், வைகோ, திருமாவளவன், சீமான்,
திருச்சி வேலுச்சாமி,கொளத்தூர் மணி, இயக்குநர்
புகழேந்தி, தங்கராஜ், வழக்கறிஞர்
புகழேந்தி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். எழுதி என்ன பயன்?
அவர் கோர்வையாக
எழுதியிருக்கும் முழுப்புத்தகத்தையம் படிக்கும் எவரும் இவ்விருவரையும் நிரபராதிகள்
என்றே நினைப்பார்கள். நானும் விதிவிலக்கல்ல. அப்படியே தெரிந்தோ தெரியாமலோ குற்றம்
இழைத்திருந்தாலும் அதற்குரிய தண்டனைக்கும் மேலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள்
என்றே நினைக்கிறேன்.
இதன் அடுத்த கடைசிப்பகுதியில் ராஜீவ்
கொலையின் சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் ஒரு சமீபத்திய பேட்டியில் எழுப்பிய கேள்விகளைப் பார்க்கலாம்
-தொடரும்
பின்குறிப்பு :
அடியேன் குடும்பத்துடன் சிக்காகோவுக்கு சிற்றுலா செல்லவிருப்பதால் அடுத்த வாரம் பதிவுகள் வாராது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிகள்.
பின்குறிப்பு :
Flying to Chicago |
அடியேன் குடும்பத்துடன் சிக்காகோவுக்கு சிற்றுலா செல்லவிருப்பதால் அடுத்த வாரம் பதிவுகள் வாராது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றென்றும் நன்றிகள்.
சிற்றுலா சிறக்க வாழ்த்துகள்!!! :)
ReplyDeleteநன்றி புலவரே.
Deleteமனம் கனத்து விட்டது ஜெயில் கைதிகளின் வாழ்வை நினைத்து...
ReplyDeleteவருகைக்கு நன்றி கில்லர்ஜீ
Deleteஇந்தியா என்றால் சட்டத்தை தன் இஷ்டம்போல வளைப்பதுதான். செல்வாக்கு உள்ளவன் நியாயத்திற்கு பயப்பட அவசியமில்லை. பிறரை தாழ்த்த ஜாதி அதிகாரம் அந்தஸ்த்து பணபலம் இவைகளால் சட்டம் வளைக்கப்படுகிறது. இங்கு சமத்துவத்திற்கு இடம் கிடையாது. எவ்வளவு சட்டத்தை வளைக்கிறாயோ அவ்வளவு மதிப்புக்குரியவன் நீ. நான் பிறரை ஒடுக்குவதால் என் பிழைப்பை உறுதி செய்கிறேன். என்னை காட்டிலும் பலமானவன் என்னை ஒடுக்கி பிழைக்கிறான். ஒடுக்குகிற நான் ஒடுக்கப்படுகிறேன். ஆதலால் யாரும் இங்கு முன்னுக்கு வர முடியாது. நாடு காட்டுமிராண்டிகளால் நிறைந்திருக்கிறது. அருவருப்பாய்தான் இருக்கிறது. என்ன செய்ய!
ReplyDeleteபழனிவேல் , உண்மைதான் ,நம் நாட்டின் நிலை அச்சப்படுத்துவதாகவே இருக்கிறது.
Deleteஇத்தனை படிப்புகள்...!!!!!
ReplyDelete