ராஜீவ் காந்தி கொலை - பகுதி -4
படித்ததில் பிடித்தது.
ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட
உண்மைகளும்,
பிரியா நளினி சந்திப்பும்
- நளினி முருகன்.
யாழ் பதிப்பகம்
- எழுத்தாக்கம். தொகுப்பு - பா.ஏகலைவன்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post.html
திருப்பதியில் வேண்டுதலுக்காக போட்ட மொட்டை,
ஆள் அடையாளம் தெரியாமலிருக்கும்படி போட்ட மொட்டையாக
போலீசாரால் எடுத்துக் கொள்ளப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பத்திரிக்கை செய்தி
பார்த்தபின்தான் போலீஸ் தம்மேல் சந்தேகப்படுகிறது என்று இருவருக்கும் தெரிந்தது.
உடனே எந்த முடிவெடுக்கவும் முடியாமல் திருப்பதியில் இருந்து மதுரை அங்கிருந்து
பெங்களூர், வேலூர், விழுப்புரம் என்று முட்டாள் தனமாக ஓடித்திரிந்து இறுதியில் வெறுத்துப் போய்
சென்னையில் சரணடைய வந்தவர்களை சைதாப் பேட்டையில் வைத்து போலீஸ் பிடித்தது.
அப்போதிலிருந்து தொல்லைகள், கொடுமைகள் இருவருக்கும் நடக்க ஆரம்பிக்கின்றன. கோர்ட்டில்
ஆஜர் படுத்த கூப்பிட்டுக் கொண்டு செல்லும்போது பக்கத்தில் நெருக்கி உட்கார்ந்த சப்
இன்ஸ்பெக்டர் தன் பாலியல் தொந்தரவை ஆரம்பித்தான். தொடக்கூடாத இடங்களில் அவன்
தொட்டுத்தடவ நளினி அழுது கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டே வந்திருக்கிறார். அந்த S.I.க்கு பதவி உயர்வு
கிடைத்தது தனிக்கதை. சித்தரவதைகள்
ஆரம்பித்தன.
Nalini during CBI custody |
அதன்பின் CBI அவர்களுக்கு பொறுப்பேற்று, காவலில் எடுத்து 5க்கு 5 அடி இடத்தில் சங்கிலியால் கட்டிப் போட்டது.குளியலோ மாற்றுத்துணியோ தரப்படாமல்,
அவருடைய நாற்றம் அவருக்கே வாந்தியை வரவழைத்தது என
எழுதுகிறார். கிட்டத்தட்ட 20 நாட்கள் தூங்கவிடாமல் இரவும் பகலும் மாறி மாறி விசாரணை
நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து நடந்தவற்றை புல்லட் பாயின்டில் கொடுக்கிறேன்.
Rahothaman IPS |
1.
இருவரையும் தனித்தனியாக அடைத்து வைத்து விசாரித்தார்கள். ஒரு நாள் இருவரையும்
ஒன்றாக அழைத்து ஒரு அதிகாரி நீங்கள் உண்மையிலேயே கணவன் மனைவி என்று நிரூபிக்க என்
முன்னால் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
2.
அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் நளினியை திருமணமாகாதவர் என்றும் செல்வி நளினி
என்றே ரெக்கார்டுகளில் எழுதினர்.
3.
தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் என்பவர் அதனால் நளினியின் கழுத்தில்
இருந்த தாலியை அறுத்து எறிகிறார். ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது இவர்
நல்லவர் என்றே நளினி குறிப்பிடுகிறார்.
4.
மற்ற அதிகாரியான கார்த்திகேயன், தியாகராஜன் ஆகியோர் மிகவும் மோசமானவர்கள் என்று
சொல்லுகிறார். ஆனால் தியாகராஜன் சமீபத்தில் நீதிப்பிழை செய்துவிட்டேன் என்று
அறிக்கை அளித்திருக்கிறார்.
5.
இந்தச் சூழ்நிலையில் தாய், தம்பி, மன வளர்ச்சி குன்றிய மாமா, உதவியாய் இருந்த பெண் என்று எல்லோரையும் போலீஸ் கைது செய்து
சித்ரவதை செய்தது. மனவளர்ச்சி
குன்றியவரையும் விடவில்லை. அவர் நடிப்பதாகவே நினைக்கப்பட்டது.
6.
CBI தலைமையிடமான மல்லிகையில் தான் அவர்கள் அனைவரும் பலத்த
காவலுடன் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
7.
சித்திரவதை தாங்கமுடியாது அம்மாவும், தம்பியும் நளினிக்கு எதிரான வாக்குமூலத்தில்
கையெழுத்துப்போட வேண்டிய நிப்பந்தம் எழுந்தது.
8.
கேரளாவில் இருந்து
வரவழைக்கப்பட்ட அதிகாரி தியாகராஜன், “ உன்னை அம்மணமாக்கி அடித்து
போலீஸ்காரர்களுக்கு சுவைக்கக் கொடுப்பேன்”, என்று மிரட்டி பொய் வாக்குமூலத்தில்
நளினியிடம் கையெழுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் சேலையைப்பற்றி இழுத்திருக்கிறார்.
9.
அதன்பின் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முருகனுக்கு நளினியைப் பார்க்க
அனுமதி கிடைக்காதலால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபின் தினமும் 15 நிமிடங்கள் பார்க்கலாம் என்று அனுமதிக்கிறார்கள்.
10.
நடந்த கொடுமைகளை விளக்கி நீதிபதிக்கு கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை.
11.
நளினி சிறையில் இருந்தபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. செங்கல்பட்டு
மருத்துவமனையில் பிரசவம் ஆனபின் ஒரு இரவு கூட அங்கு தங்க அனுமதிக்கவில்லை. அதோடு
முருகனை குழந்தையைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
karthikeyan IPS |
12.
மகளுக்கு தேவைப்படும் பாலுக்கு, பணத்துக்கு, பிறப்புச்சான்றிதழ் பெற, மகளுக்கு விசா பெற என்று ஒவ்வொரு காரியத்திற்கும் உண்ணாவிரதம்
இருந்தே முருகன் சாதித்திருக்கிறார். ஒரு சில சமயங்களில் உண்ணாவிரதம் 23 நாட்கள் வரை தொடர்ந்திருக்கிறது . முருகன் மொத்தமாக தன் சிறை வாழ்வில் 365 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் என்று நினைத்தால்
மலைப்பாக இருக்கிறது.
13.
மனவளர்ச்சி குன்றிய நளினியின் தாய் மாமா 40 நாட்கள் கழித்து வெளியே தெருவில் எறியப்பட அவர் பிச்சைக்
காரன் போல தெருவில் அலைந்து உணவில்லாமல் அனாதைப்பிணமாய் செத்துப்போயிருக்கிறார்.
14.
தங்கை கல்யாணியும் அதேபோல் விரட்டப்பட்டு உறவினர் யாரும் ஏற்றுக் கொள்ளப்படாத
நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் இவர் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு
ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய வீடு சீல் வைக்கப்பட்டு
அவர்களுக்கு திரும்பவும் தரப்படவில்லை.
15.
ஒப்புதல் வாக்குமூலத்தை யார் படித்தாலும் அது முன்னுக்குப்பின் முரணாக எழுதப்பட்டதையும்
அது வற்புறுத்தப்பட்டு பெறப்பட்டது என்பதையாரும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்
நளினி. அதோடு தீர்ப்புகளில் இருக்கும் முரண்களையும், தவறுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக சுட்டிக் காட்டுகிறார்.
16.
சிறையிலும் வெளியிலும் தன் மகள் பட்ட பாட்டை விவரிக்கும் போது மிகவும்
பரிதாபமாக இருந்தது. இறுதியில் முருகனின் வெளிநாட்டு உறவினர்கள் தொடர்ந்து எடுத்த
முயற்சியில் லண்டனில் மருத்துவர் ஆனது பெரிய சாதனைதான்.
17.
ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா 2008ல் வந்து தன்னைச் சந்தித்த தருணத்தை கதைபோல விவரிக்கிறார்.
ராஜீவ் கொல்லப்படும் போது பிரியங்காவிற்கு 17 வயது. ஏன் கொன்றீர்கள் என்று கேட்டு தேம்பித்தேம்பி
அழுததையும் அவரோடு சேர்ந்து நளினியும் அழுததையும் குறிப்பிடுகிறார்.
18.
தனக்குக் கிடைத்த நேரத்தில் தானும் தன் கணவனும் நிராதிபதிகள் என்பதை நன்கு
விளக்கினேன். பிரியங்காவும் அதனை ஏற்றுக் கொண்டார் என்பதையும் எழுதுகிறார்.
19.
ஆனாலும் பிரியங்காவின் விசிட் அரசியலாக்கப் பட்டதையும் அதன் மூலம் ஒரு வேளை
இந்திய அரசாங்கம், இலங்கையின் மேல் ஒரு அட்வான்டேஜ் எடுத்ததையும்தான்
சந்தேகப்படுவதாக எழுதுகிறார்.
மேலும் முருகன் எடுத்த வழக்கறிஞர் முகத்தையும்,
அதன்பின் என்னவெல்லாம் நடந்தது என்பதையும் அடுத்த பகுதியில்
பார்க்கலாம்.
-
தொடரும்.
This comment has been removed by the author.
ReplyDeleteதொடரட்டும
ReplyDeleteதொடரட்டூம் தொடர்
ReplyDeleteநன்றி புதியமாதவி .
Deleteதொடரட்டூம் தொடர்
ReplyDeleteNot sure how I express my feelings on this. I was 12 years old when this happened. Until now, if there is one thing I lose my sleep over, then it's this event. I remember walking miles to read news about this event in various magazines and news papers. If there is one thing that I want to know the truth then it is this event that I would like to know.
ReplyDeletePls read this book and u will get some idea from their view point or u could all my articles on this subject.A few more to come.
Deleteஇந்திய அரசு சார்பாக செயல்பட்ட கார்த்திகேயன் தரப்பும்
ReplyDeleteமனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால் நன்றாக இருக்கும்?