Monday, February 1, 2016

ஜல்லிக்கட்டும் சப்பைக்கட்டும் !!!!!!!!!!!!!

    
  ஜனவரி 9 ஆம் தேதி  சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இந்தி அறிவிப்புகளை கேட்டுவிட்டு கடுப்புடனும் அலுப்புடனும் மதுரையில் இறங்கினேன். அட ஆங்கிலம் ஓகே, இந்தி கூட ஓக்கேதான். ஆனால் தமிழ்நாட்டுக்குள் இயங்கும் விமானத்தில் தமிழ் இல்லையென்றால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வெளியே பெருந்திரளான மக்கள் தாரை தப்பட்டை முழங்க காத்திருந்தனர். ஒருவேளை சகாயத்துக்குத்தான் இவ்வளவு வரவேற்பா? ஆஹா மக்கள் விழிப்படைந்து விட்டார்களா? என்று நினைத்துக்கொண்டு வெளியே வர, என்னுடன் வந்த சகாயம் கையசைத்துவிட்டு, வேறு வழியாக வெளியேறிச் சென்றார். ஒருவேளை இதையெல்லாம் தவிர்ப்பதற்குத் தான் வேறுவழியில் செல்கிறாரோ? என்று நினைத்தேன்.
என்னுடன் வந்த டைரக்டர் திருமுருகனுக்கு வரவேற்போ? நல்லவேளை ஐந்து வருடத்தில் நாதஸ்வரத்தை முடித்துவிட்டார் என்று பாராட்டுகிறார்களோ? என்ற யோசனையுடன் அதீத இசைக்கு நடுவே சென்றேன். வெளியே ஜல்லிக்கட்டுக் காளைகளும் நின்றிருந்தன.
காத்திருந்த நண்பர் பிரபாகர், "வா ஆல்ஃபி, உனக்கு ஏதோ என்னால் முடிந்த வரவேற்பு ", என்று சிரித்தார். நான் உடனே சொன்னேன், " பிரபா உங்களுக்குத் தெரியாதா, காளை பிடிப்பவர்களின் வயது நாற்பதுக்குள் இருக்க வேண்டும். நான்தான் ரிடையர் ஆயிட்டேனே", என்று சொல்லிவிட்டு பின்னால் பார்த்தால் வந்தது "புண் ராதாகிருஷ்ணன்". ஏற்கனவே வந்த போது கையில் மாடுமுட்டி கட்டுப்போட்டபடி வந்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

பொன். ராதாகிருஷ்ணன்.
ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியுடன் மதுரைக்கு வருவதால், ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆர்வலர்கள்  தங்கள் காளைகளோடு வந்து வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசின் அறிவிப்பு வந்தவுடன் காளைகள் மெருகூட்டப்பட்டன, கொம்புகள் வண்ணமூட்டப்பட்டன, பாழடைந்து கிடந்த வாடிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டன. உற்சாகம் கரைபுரண்டோட, இந்த வருடப் பொங்கல் சிறப்பாக நடக்கப்போகிறது என்ற புளகாங்கிதம் எங்கும் தெரிந்தது, குறிப்பாக மதுரையில்.
ஆனால் என்னவோ என் உள் உணர்வு " து நடக்காது", என்றே சொன்னது.
ஏனென்றால் ஜல்லிக்கட்டுக்கு வந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலையென்றே எனக்குத் தெரிந்தது. உச்ச நீதிமன்றத்தடை வந்ததும் எல்லா உற்சாகமும் அப்படியே வடிந்துபோயின.
ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு நெனைச்சு என் மனதில் எழுந்த கேள்விகளைக் கீழே தருகிறேன்.  
1)     உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பிரச்சனையை, வெறும் அரசு உத்தரவு தீர்க்க முடியுமா?
2)    நீதிமன்றம் சட்டத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் என  மத்திய அரசுக்குத் தெரியாதா?  
3)    இத்தனை நாட்கள் காத்திருந்துவிட்டு பொங்கலுக்கு மிக அருகில் இந்த உத்தரவு கொண்டுவந்ததற்கு காரணம் என்ன?
4)    நீதிமன்றத்தடை வரும் என்பதை யோசிக்கவில்லையா? வராது என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை.
5)    சட்டத்தினால் மட்டுமே ஜல்லிக்கட்டைக் கொண்டுவர முடியும் என்று அரசுக்குத் தெரியாதா
6)    மாநில அரசு அதற்கான நெறிமுறைகளை சரியாக அமைத்து நீதிமன்றத்திற்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை?
7)    விலங்கின ஆர்வலர்கள்/அமைப்புகள்  கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு சரியான பதிலைச்   சொல்லாமல் மழுப்பியது ஏன்?
8)    இது மத்திய மாநில அரசுகளின் கையாலாகாத தன்மையாஇல்லை அவர்களும் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றே நினைக்கிறார்களா?
9)    உங்களால் முடியவில்லை என்பதால் இது வெளிநாட்டுச் சதி என்று சொல்லி, பிரச்சனையை ஏன் திசை திருப்புகிறீர்கள்?
10) சட்டம் கொண்டு வர நீதிமன்றம் சொன்னபோது, ஏன் அரசு கையை விரித்தது?
            இரவு நேரங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஜல்லிக்கட்டு சம்மந்தப்பட்ட கலந்துரையாடல்களைக் கவனித்தேன்.
அதில் கலந்து கொண்ட சீமானோ, வேல்முருகனோ, தி.மு.க/அதிமுக  பிரதி நிதிகளோ, வெறுமனே கோபப்பட்டும், உணர்ச்சி வசப்பட்டும் பேசுகிறார்களே ஒழிய, விலங்கின ஆர்வலர்களின் கேள்விகளுக்குச் சரியான விதத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.
சீமான் 
நானொன்றும் ஜல்லிக்கட்டுக்கு பெரிய ஆதரவாளன்  அல்ல, எதிர்ப்பாளனும் அல்ல. ஆனால் ஒரு பாரம்பரிய விளையாட்டை, ஒழுங்கு படுத்தி, நெறிப்படுத்தி, விலங்குகளுக்குத்துன்பம் ஏற்படாமலும், வீரர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படாமலும், அரசே ஏற்று நடத்த முடியும் என்ற  நம்பிக்கை உள்ளவன் .  
அப்படி நடத்தமுடியுமென்றால், அது பொங்கல் சமயம் மட்டுமல்ல, எல்லாச் சமயங்களிலும் நடக்க முடியும். ஏராளமான  வெளிநாட்டுப் பார்வையாளரை ஈர்த்து நல்ல அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும். அதற்கு விலங்குகளின் பாதுகாப்பு, வீரர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, பார்வையாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதற்கு அரசியல்வாதிகளையும், அரசுகளையும் விட்டுவிட்டு சரியான நெறிமுறைகளோடு,விலங்கின அமைப்புகளின் ஆலோசனையோடு நீதிமன்றத்தை அணுகினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது, வெறும் வாக்காளர்களாக நினைப்பதும், கண்துடைப்பு செய்வதும், ஆசைகாட்டி மோசம் செய்வதும் நம் நாட்டில் எப்போதுதான் முடிவுக்கு வருமோ ??

- முற்றும்.

30 comments:

 1. அண்ணே..
  தவறாக நினைக்க வேண்டாம். தங்களின் கருத்திற்கு இங்கே அடியேன் மாறுபடுகிறேன். ஜல்லி கட்டு வேண்டாம் என்று சொல்பவர்கள் (பீட்டாஅமைப்பினர்) அனைவரும் பட்டிணத்தை சேர்ந்த பணக்கார்கள். இவர்களுக்கு காளைக்கும் பசுவிற்கும் கூட வித்தியாசம் தெரியாது. இவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

  ஒரு காளையை வாழ்வில் தொட்டு பார்க்காதவன், ஒரு காலையின் வாசத்தை அறியாத இவர்களின் தடை.. நொறுக்க படவேண்டும்.

  ReplyDelete
 2. தம்பி விசு, அப்படிஎன்றால் நாம் இருவரும் ஒரே கருத்தைத்தானே
  சொல்கிறோம்.

  ReplyDelete
 3. ***விசுAWESOMEFebruary 1, 2016 at 9:41 AM

  அண்ணே..
  தவறாக நினைக்க வேண்டாம். தங்களின் கருத்திற்கு இங்கே அடியேன் மாறுபடுகிறேன். ஜல்லி கட்டு வேண்டாம் என்று சொல்பவர்கள் (பீட்டாஅமைப்பினர்) அனைவரும் பட்டிணத்தை சேர்ந்த பணக்கார்கள். இவர்களுக்கு காளைக்கும் பசுவிற்கும் கூட வித்தியாசம் தெரியாது. இவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

  ஒரு காளையை வாழ்வில் தொட்டு பார்க்காதவன், ஒரு காலையின் வாசத்தை அறியாத இவர்களின் தடை.. நொறுக்க படவேண்டும்.
  Reply
  Paradesi AlfyFebruary 1, 2016 at 10:07 AM

  தம்பி விசு, அப்படிஎன்றால் நாம் இருவரும் ஒரே கருத்தைத்தானே
  சொல்கிறோம்.***

  விசு பதிவையே படிக்காமல் பின்னூட்டமிட்டுவிட்டார் போல!! :))

  நீங்க ரெண்டு பேரும் எத்தனை மஞ்சுவிரட்டில் கலந்துகொண்டு, எத்தனை மாடுகளை அடக்கி இருக்கீங்க? அதில் வெற்றி எம்புட்டு, தோல்வி எம்புட்டு? னு விபரம் சொல்லாமலே போனால் எப்படி?! :)

  ReplyDelete
  Replies
  1. தம்பி வருண் , நாங்கள் இருவரும் உயிரோடு இருப்பதில் இருந்தே தெரியவில்லையா , எங்களை முட்டிய காளைகள்தான் உயிரை இழந்தன என்று

   Delete
  2. மனிதர்கள் பாவம் செய்தவர்கள், செய்து கொண்டே இருப்பவர்கள். அப்பாவி மாடுகள் ஒரு பாவமும் அறியாதவை. நீங்க்ள் கூறியதுபோல் அவைகளை நீங்கள் உங்க வீரத்தை காட்டுறேன்னு கொன்னு இருந்தால்.. எனக்கு உங்க ரெண்டு பேரு மேலயும் கெட்ட கோபம் வரும்!

   Delete
  3. அட இந்த அருண் என்ன சொன்னாலும் நம்பிடுறாரே ,அப்ப நானும் வீரன்தான் நானும் வீரன்தான்.

   Delete
 4. //தில் கலந்து கொண்ட சீமானோ, வேல்முருகனோ, தி.மு.க/அதிமுக பிரதி நிதிகளோ, வெறுமனே கோபப்பட்டும், உணர்ச்சி வசப்பட்டும் பேசுகிறார்களே ஒழிய, விலங்கின ஆர்வலர்களின் கேள்விகளுக்குச் சரியான விதத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.//

  அட புண்ணியவான்களே .. கொஞ்சம் அசைந்தா.. விசு தான் ஜல்லிகட்ட தடை பண்ணாருன்னு சொல்லுவிங்க போல் இருக்கே.

  நன்னா படிச்சுண்டுதான் கமெண்ட் போட்டேன் .என் கமெண்ட்.. இதுக்கு (மேலே குறியிட்ட உங்கள் வார்தைக்கு) தான்.

  ReplyDelete
 5. //தில் கலந்து கொண்ட சீமானோ, வேல்முருகனோ, தி.மு.க/அதிமுக பிரதி நிதிகளோ, வெறுமனே கோபப்பட்டும், உணர்ச்சி வசப்பட்டும் பேசுகிறார்களே ஒழிய, விலங்கின ஆர்வலர்களின் கேள்விகளுக்குச் சரியான விதத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.//

  அட புண்ணியவான்களே .. கொஞ்சம் அசைந்தா.. விசு தான் ஜல்லிகட்ட தடை பண்ணாருன்னு சொல்லுவிங்க போல் இருக்கே.

  நன்னா படிச்சுண்டுதான் கமெண்ட் போட்டேன் .என் கமெண்ட்.. இதுக்கு (மேலே குறியிட்ட உங்கள் வார்தைக்கு) தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆல்ஃபி "டெவில்ஸ் அட்வொகேட்" ஆக இங்கே இயங்குகிறார். மொத்தத்துல அவர் என்ன சொல்ல வர்ரார்னு கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்..மஞ்சு விரட்டு நடத்தப்பட வேண்டும்- தகுந்த பாதுகாப்புடன், என்பதே அவர் கருத்து.

   பணக்காரர்களும் படித்தவர்களும் வாயிலே வாழும் க்ரிட்டிக்களும்தான் மஞுவிரட்டுக்கு எதிர்ப்பென்கிறீர்கள். அமெரிக்கவாழ் தமிழர்களான நீங்களும், ஆல்ஃபியும் அதே வகையத்தான் சார்வீர்கள் என்பது "நகை முரண்"?? :)

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நண்பரே .. நான் காளையை இதுவரை அடக்கியவன் இல்லை. உண்மையே. வாய் வலி க்ரிடிக் அதுவும் உணமையே.

   ஆனால்.. காளை மற்றும் பசுவோடு வருட கணக்கில் வாழ்ந்தவன். காளையின் வாசத்தை அறிந்தவன். வீட்டில் இருந்த பர்கூர் மலை மாட்டை வண்டியில் பூட்டி நான் அடித்த கூத்து அந்த மாட்டுக்கும் எனக்கும் தான் சொந்தம்.

   தயவு செய்து இந்த பீட்டா ஆட்களோடு அடியேனை சேர்ர்த்து விடாதேயும். அது எனக்கு நீங்கள் செய்யும் மிகபெரிய இழுக்கு.

   சாணத்தை அள்ளவும் அல்லவா எனக்கு சொல்லி கொடுத்தார்கள்.

   Delete
  4. சரி சரி, விடுங்க. அவர் பதிவில் ஏகப்பட்ட பின்னூட்டம் போட்டதுக்காக, ஆல்ஃபியை ரெண்டு சூப்பர் பவல் 50 டிக்கட் (நமக்கு) வாங்கி அனுப்பச் சொல்லுங்க, இந்த வீக்என்ட் போய் பார்த்துட்டு வரலாம்!

   Delete
  5. எங்கள் அலுவலத்தில் இருந்து சில பேர் போகின்றார்கள். கிடைத்த சீட்டுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க பட்டு. நமக்கு தான் நல்ல ராசி ஆச்சே. நீங்க பாலோ பண்றீங்களா?

   நியூ இங்கிலாந்த் தோற்றவுடன் எங்க வீடு இழவு வீடு மாதிரி ஆயிடிச்சி. ராசாதிக்கள் இருவரும் டாம் ப்ராடியின் பரம விசிறிகள்.
   இப்ப ...எப்படியாவாது ப்ராங்கோஸ் தோக்கனும்னு தலை கீழே ... பிரார்த்தனை.

   Delete
  6. அதுக்கு எதுக்கு டிக்கெட் , வீட்டுப்பக்கம் வாங்க. எங்க வீட்டு ஹோம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கலாம் .கொறிக்க முறுக்கு ,வேர்க்கடலை, சிப்ஸ் எல்லாம் இருக்கு. எங்க வீட்டு அம்மாவுக்கு நல்ல மூட் இருந்தால் பருப்பு வடையும் சட்னியும் கிடைக்கும் .

   Delete
  7. ***நியூ இங்கிலாந்த் தோற்றவுடன் எங்க வீடு இழவு வீடு மாதிரி ஆயிடிச்சி. ராசாதிக்கள் இருவரும் டாம் ப்ராடியின் பரம விசிறிகள். ***

   ஒருத்தருக்கு சந்தோஷமானது மற்றவருக்கு துக்கமானது. Sorry to say this but I enjoyed watching Brady was sacked and beaten up 20 times or so by Von miller and Broncos defense. It was wonderful seeing them beaten up and going back to New England!! I knew Brady never gives ups and so I was not sure until the last onside kick recovery by Denver. If new england recovered that on-side kick and allowed play one play.. then Brady could throw a hail mary to end zone and socre 6 points..He can do anything I know! Well the happiest moment was Cheatriots and Bellichick were LOSING !!!

   Dont tell anything to your daughters. :)

   Delete
  8. ***Paradesi AlfyFebruary 2, 2016 at 2:51 PM

   அதுக்கு எதுக்கு டிக்கெட் , வீட்டுப்பக்கம் வாங்க. எங்க வீட்டு ஹோம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கலாம் .கொறிக்க முறுக்கு ,வேர்க்கடலை, சிப்ஸ் எல்லாம் இருக்கு. எங்க வீட்டு அம்மாவுக்கு நல்ல மூட் இருந்தால் பருப்பு வடையும் சட்னியும் கிடைக்கும் .***

   அது சரி :)

   என் எஃப் எல் ஃபாலோ பண்ணுவீங்களா, ஆல்ஃபி? இல்லை சும்மா சூப்பர் பவ்ல் கமர்ஷியலுக்காக மட்டும் பார்ப்பதுண்டா!! :))

   Delete
  9. Varun, I am not a big fan of Brady, but one gotta a like him for his talents. You are right, he could have won the game, or at least take it to the OT. My older daughter blames the whole thing on the missed Free Kick (she plays competitive sport herself). Her claim is that if that was scored Pats would have been down by only one point and they could have tied it with a free kick instead two point play. Having said all these, though Bradley had such a horrible game, Broncos still won only by 2 points.

   I have strange feeling that Newton is going to run circles around Denver on Sunday. Manning looks spent force, but, who knows he might want a Cindrella finish.

   Bottom line is.. " I love this game".. and with Superbowl being held so close, I am guttered that I cant go. Grrrr....

   As far as Alfy, he is in there neither for the game nor commercials .. but for Beyonce.......at half time..

   PS :Leave Bellichick alone, hes not that bad. Deflategate was Bradys brainchild.

   Delete
  10. This comment has been removed by the author.

   Delete
  11. This comment has been removed by the author.

   Delete
  12. Come on, Visu! New England could not move the ball against Denver defense! The six point the got itself a gift from Peyton! Payton Manning's mistake of making an "unnecessary" backward pass in the Denver 30-yard line helped them score 6-points.

   Moreover, it was Belichick who suggested NFL to make the one-point conversion harder that it was, and moved to the 33-yarder or so from this season. He has to blame himself then. Moreover it was the very beginning of the game and so, it does not matter that much to NE and Brady as they had all the time to come back. In any case, that was unlike the poor losers Vikings vs Seattle wild-card game when the kicker missed "chip shot" field goal when time running out!

   In NFL anything is possible when two comparably strong teams meet. Luck plays a role too, imho. Otherwise in the last super bowl 49, who would have thought Russel Wilson will throw an interception and gave away the super bowl trophy to Cheatriots and Brady? It happens in NFL playoffs. Somehow Brady loses to the Manning Brothers in playoff if they happen to meet!! :)

   It was not a bad loss for Brady. He looked like a winner only. No question about his talents but he ENDORSED Trump! LOL That makes me wonder whether he is an idiot outside the football court.

   Bill Belichick always finds a way to win- by hook or crook. This time he could not because of the "von miller-demarcus ware" defense and it was engineered well by Wade Phillips! Bravo to Denver defense!

   As for super bowl 50,

   Carolina looks very strong, not just Newton, the whole offensive line forms a great wall, and gives a lot of time to Newton to throw the ball without much pressure. And of course Newton is like a bull, young and strong esp with strong legs, he can play like a running back if necessary to score in the end zone. Not only that, their defense is best too, they come up with a "pick 6" even against Russell Wilson. So, Carolina would be my pick as the winner if you ask me to pick the winner.

   However, in super bowl anything can happen. Peyton is not going to lose a third super bowl in a row. He lost last two appearances against Saints and Sea hawks. And Brady did not lose the third super bowl in a row either. So, it is quite possible,might not lose the third one. Peyton's experience can edge trash-talking, cocky Newton. :) Let us see.

   If Carolina wins it is going to be a big margin win, but if Peyton somehow pulls through with the help of defense, then it would be a close win by 1-4 points.

   It is going to be a good super bowl! Enjoy!!

   Delete
  13. Dude... Thats quite a preview. Enjoyed reading it. Thanks for taking time to post it.
   Head says Panthers, and heart say Broncos.
   Have a great game.

   Delete
  14. BTW, one final thought. Russell Shouldnt have passed. With
   the Beast destroying everyone with his run, he shouldn't have passed.

   Delete
  15. Visu!

   I am a big fan of Russell Wilson! :) The "play-call" was made by Pete Carroll and so he threw the ball to Butler. So, most of the blame goes to Pete Carroll, the head coach. The play call should have been a "run play/rushing to end zone" with the big RB they got!

   ///And when Russell Wilson's goal-line slant to Ricardo Lockette was jumped and intercepted by Pats rookie Malcolm Butler, Carroll earned himself a lifetime's worth of second-guessing from aghast witnesses, some of them inside his own locker room.

   When I asked receiver Doug Baldwin, in a quiet conversation near his locker, if he was shocked by Carroll's decision to throw, he shook his head and said, "Come on, man -- you've got common sense, too. ... We have nobody to blame but us. My first thought was that we were gonna run it in -- but coaches, they're the ones that they know it better than us."///

   In that case, the rookie Malcolm Butler should have been given the credit for winning the super bowl as he was the one who intercepted the ball, and Pete Carroll and Russell Wilson's stupidity it was. But the praise always goes to Tom Brady as "the greatest QB ever" won the super bowl 49! That's how things work in America!

   Delete
  16. ஆகமொத்தம் நீங்க ரெண்டு பேரும் நம்ம ஜல்லிக்கட்டை மறந்துட்டீங்க.

   Delete
 6. Pl refer to Neeya Naana by Vijay TV on this subject. I fully endorse the view of Visu in this regard.

  We need to restore Jallikattu at the earliest to save the farmers and future of TAMILNADU milk resource and industry.
  I have shared many articles in Facebook.
  There were fitting replies given to so called animal lovers.

  Initially I too blindly opposed Jallikattu. It is a question of time Supreme Court and governments will prevail over this serious issue for farming commimity

  ReplyDelete
  Replies
  1. I too agree with you but who will bell the bull?

   Delete
 7. மிக நல்ல கேள்விகள்...படிச்சவுங்க என்னமா சிந்திக்கிறீங்க? ஜல்லிக்கட்டு மட்டுமல்ல....மேகியிலிருந்து எல்லா விஷயங்களிலும் இப்படித்தான் ..

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்வது என்னவென்றால் ,உணர்ச்சி பூர்வமாக இல்லாமல், அறிவு பூர்வமாக அணுகியிருந்தால் , இந்த வருடமே ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்
   .அங்கே மதுரையில் இருந்த நானும் பார்த்திருப்பேன். அடுத்த வருடம் நடக்கவாவது ஆக்கபூர்வமாக செயல்படுவார்களா? ம் சந்தேகம்தான் .

   Delete
 8. சரி, எந்த முடிவா இருந்தாலும், அதை நோக்கி உபயோகமாக என்ன செய்யப் போகிறீர்கள்.... கொஞ்சம் கொஞ்சமாக 2-3 ஊர் என்று கொண்டு வந்து, இன்று சுத்தமாக இல்லை என்பதாக கொண்டு வந்து நிறுத்தி விட வசதியாக ஆகிவிட்டது. நமக்குதான் E-Com ல் தினம் ஒரு அலைபேசி வகை வரவு பாக்கவே நேரம் போதவில்லை. இதெல்லாம் பாக்க முடியுமா. Online ல ஜல்லி கட்டு Aap ஏதாவது வரும். அப்போ பாத்துகிட்டா போச்சு.

  இது ஜல்லிக் கட்டு தடை பற்றி எனக்கு/ என் சிற்றறிவுக்குத் தோன்றியது.

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_3.html

  Currently I am watching K4 note and Le1s!!

  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

  ReplyDelete
 9. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .உலகில் எது நடந்தாலும் கண்டுக்காமல் இருப்பவர்தான் அதிகம்

  ReplyDelete