Monday, February 8, 2016

அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா ?

எழுபதுகளில் இளையராஜா :பாடல் எண்: 28.
சின்னபுறா ஒன்று 

Anbe Sangeetha (Original Motion Picture Soundtrack) - EP, Ilaiyaraaja

1979ல் வெளிவந்த 'அன்பே சங்கீதா' என்ற படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்து வெளிவந்த அருமையான பாடல் இது. பாடலைக்கேளுங்கள்.


பாடலின் சூழல்: சோகமும் வேகமும் இணைந்து வரும் இப்பாடல் எதையோ நோக்கிப் பயணம் செய்யும் புகை வண்டி போல் ஓடி முடிகிறது. மறந்துபோன காதலியை நினைத்து உருகிப்பாடும் பாடல் இது.

இசையமைப்பு:
பாடலின் ஆரம்ப இசையாக பியானோ இசை ஒலிக்க அதனை ஒட்டி பெண்குரலின் ஹம்மிங் வருகிறது. அதன் பின்னர் ரிதம் கிட்டார், பேஸ் கிட்டார், டிரம்ஸ் இணைய வயலின் குழு இசைத்து முடிய, ஆண்குரலில், "சின்னப்புறா ஒன்று", என்று பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் முழுதும் ஆண் குரல் என்றாலும் BGM-களில் பெண்குரலில் ஹம்மிங் வருகிறது. பாடல் முழுதும் இளையராஜாவின் சிக்னேச்சர் பீட் (டிரிப்பிள் காங்கோ) ஒலிக்கிறது.
முதலாவது BGM வயலினில் ஆரம்பித்து, லீட் கிடார் இணைந்து ஒலிக்க, பின்னர் பெண் ஹம்மிங் வந்து வயலின் வந்து முடித்து வைக்க, முதல் சரணம் ஆரம்பிக்கிறது. 2-ஆவது BGM பெண் ஹம்மிங்குடன் ஆரம்பித்து பின்னர் சோலோ வயலின் சோகத்தைப் பிழிய, பின்னர் கோரஸ் வயலின் வந்து முடிய 2-ஆவது பல்லவி ஆரம்பிக்கிறது.
இளையராஜாவுக்கு கைவந்த கலையான இந்த இசையமைப்பு அவருக்கு மிகவும் பிடித்த மெட்டாக இருக்க வேண்டும் இதே மெட்டை ஒட்டி பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். அதே பீட், அதே சாயல், அதே உருக்கம் அந்தப் பாடல்களிலும் ஒலிப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல்களில் சில, "தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி", “சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்”. எங்களுடைய அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில், இப்படிப்பட்ட பாடல்களை இணைத்து ஒரே பாடலாகப் பாடியிருக்கிறோம். ஏனென்றால் ஒரு பாடலின் பல்லவியை பாடி முடித்து, அடுத்த பாடலின் சரணத்தைப் பாடினாலும் பொருந்தும்.
பாடலின் வரிகள்:
Vaali
பாடலின் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி. பல்லவி, சரணம் என்று அழகான, அருமையான பொருத்தமான வரிகளை எழுதியிருக்கிறார். இந்த வரி அந்த வரி என்றில்லாமல் எல்லா வரிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார். கேட்டுப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
சின்னப்புறா ஒன்று எண்ணக்கனாவினால் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது - என்று ஆரம்பித்திலேயே அசத்துகின்றன கவிதை வரிகள். குறிப்பாக 2-ஆவது பல்லவியில் "எந்தன் ராகங்கள் தூங்காது, அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா" என்ற வரிகள் சூழலுக்கு அப்படியே பொருந்தியனவாய் வருகின்றன. எந்தச் சூழலுக்கும் எந்தக் காலத்துக்கும் பொருத்தமாய் எழுதிய வாலி இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவர் பாடல்கள் மூலமாக நம் நெஞ்சத்தில் என்றும் வாழ்வார்.
பாடலின் குரல்:

பாடலைப் பாடியவர் S.P. பாலசுப்பிரமணியம் ஹம்மிங் கொடுத்தவர் SP. ஷைலஜா. SPB -யின் இனிமையான குரலும், சுத்தமான உச்சரிப்பும், பாவமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. குரல் நடிப்பில் SPB ஒரு உன்னதக் கலைஞர் என்பதில் எந்த சந்தேகமில்லை. பாடல் முழுவதிலும் வரும் ஹம்மிங்குரலில் SP ஷைலஜா ஒரு அமானுஷ்யத்தைக் கொண்டு வருகிறார். அவை பாடலுக்கு மெருகூட்டுகின்றன.
இளையராஜாவின் அற்புத மெலடிக்கும், இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகள் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த உதாரணம் இந்தப்பாடல்.

இன்னும் வரும் >>>>>>>>>>>>>>>>>>>

13 comments:

  1. அருமையான பாடலைப் பற்றி அழகான விமர்சனம்.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில்குமார் .

      Delete
  2. ராஜாவின் முத்துக்களில் இதுவும் ஒன்று அருமையான பாடல் நினைவுகள் இன்னும் நாட்டை நோக்கி இழுக்கின்றது)))

    ReplyDelete
  3. இளையராஜாவின் மிக அருமையான பாடல்களில் ஒன்று. இதே பாணியில் அவர் அமைத்த பல பாடல்கள் கேட்க இனிமையானவை. எனது பார்வையில் இது போன்ற பாடல்களில்தான் இளையராஜாவின் உண்மையான இனிமை இருக்கிறது. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலும் இதேபோலே சுகமானது.

    ReplyDelete
    Replies
    1. காரிகன் சரியாகப்பிடித்தீர்கள்,"எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்",

      Delete
  4. அழகிய தேடல்...அபூர்வ ராகங்களின் ஆனந்த கானம்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    WWW.mathisutha.COM

    ReplyDelete