Pudukkottai Meet |
என் எழுத்துக்குப் பெருமையா?
என் எழுத்தின் வலிமையா? என் எழுத்துக்கு
இத்தனை வரவேற்பா? என்று கேட்டு அதற்கு நானே 'ஆம் ஆம் ஆம்" என்று சொன்னேன் என்றால் என்னை விட முட்டாள் வேறு
யாரும் இல்லை.
பின்னர்
எதற்கு இத்தனை வரவேற்பு ?, இத்தனை அன்பு?
இத்தனை கொண்டாட்டம்? என்று எண்ணிப்பார்த்தால், அது தமிழின் மேல் உள்ள ஆர்வம், காதல், தோழமை என்றுதான் சொல்ல முடியும்.
விடுமுறைக்கு
சீனா,
இலங்கை மற்றும் இந்தியாவில் சில வாரங்கள் செலவிட நினைத்து,
கிளம்பும் முன்பதாக இரு மாதங்களாக இருண்டு கிடக்கும் என் பிளாக்கில் அறிவித்தேன்.
ஜனவரி
8ஆம் தேசி மாலை சென்னை வந்து சேர்ந்து ,எக்மோரில்
உள்ள பாண்டியனில் அறையெடுத்தேன். வெளியே போய் மண்ணின் மணத்தையும் புழுதியையும் சுவாசித்து சற்றே இருமலுடன் திரும்பி வந்து
ஓய்வெடுத்தும் எடுக்காமலும் காலையில் எழுந்து ரெடியாகும் போது ஒலித்தது அலைபேசி. அவர் செல்வா என்ற செல்வக்குமார் (நான் ஒன்று சொல்வேன்.....www.naanselva.blogspot.com
)லிப்ட்டில் இறங்கியவாறே, "எங்கேயிருந்து பேசுகிறீர்கள் ?",
என்று கேட்டேன். "இங்கேயிருந்து தான்",
என்று என் முன்னால் வந்தார்.
முன்பின்
பேசியதில்லை, பழகியதில்லை. ஆனால் ரொம்ப
நாள் பழகியது போல் ஒரு தோழமை. ஆஹா ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே என்று நினைத்தேன். அவருடன்
காலைச்சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சில
நிமிடங்களில் இன்னொரு ஃபோன், "நான்தான் கார்த்திக் பேசுகிறேன்", என்று.
அவர் வேறு யாருமில்லை நம்ம ஸ்கூல் பையன் கார்த்திக்தான் (www.schoolpaiyan.com). மாலை சந்திப்பதாக முடிவெடுத்து நான் என் அலுவலகம் சென்றேன். துணைக்கு செல்வாவும் வந்தார்.
Karthik( School Paiyan), Selvakumar and myself |
மாலையில்
சொல்லிவைத்தது போல் கார்த்திக் வந்து சேர, செல்வாவும் வந்துவிட, ரூமில் உட்கார்ந்து பலநாள் தோழர்கள் போல அளவளாவி மகிழ்ந்தோம். பார்ப்பதற்கும் ஸ்கூல் பையன் மாதிரி வெகு இளமையாக
இருந்தார்.
செல்வா
சொன்னார்,
"புதுக்கோட்டையில் நிறைய பதிவர்கள் உங்களைச் சந்திக்க
ஆவலாய் இருக்கிறார்கள். நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று. "என்னைச்
சந்திக்கவா? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?”, வெட்கத்துடன் தப்பிக்கப்பார்த்தேன். அப்போது அலைபேசி ஒலித்தது.
பேசியவர் கவிஞர் முத்து நிலவன். யார் முத்து நிலவனா, சிறந்த
தமிழ் ஆசிரியரும்,
எழுத்தாளரும்,
பட்டிமன்ற பேச்சாளரும் பல இளைஞர்களின் ஆதர்ஷ வழிகாட்டியுமான
முத்து நிலவன் ஐயாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை. அவரும் அதையே சொல்ல,
ஐயாவின் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் வருவதாகச் சொன்னேன்.
சாப்பிடப்
போகலாம் என்று சொல்லி மூவரும் கிளம்பி வெளியே வந்தோம். அஞ்சப்பர்,
புகாரி, காரைக்குடி, பொன்னுசாமி ஆகிய அருகிலிருந்த அசைவ உணவங்களில் காரைக்குடியை
தேர்வு செய்து உள்ளே சென்றால் ஒருவரையும் காணோம். அதையும் மீறி ஆர்டர் செய்து
சாப்பிட்டோம். சுமாராகவே இருந்தது. வெளியே வந்து பார்த்தால் அது பிரபலமான
காரைக்குடி உணவகம் அல்ல. அய்யனார் காரைக்குடியாம். இனிமேல் ஒரு தடவைக்கு இரண்டு
தடவை பேரைப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
.
மதுரையில்
இருந்த சில நாட்களில், இந்தத் தடவை
பிறந்த மண்ணையும், பூர்வீக வீட்டையும் பார்த்துவிட திண்டுக்கல் செல்ல முடிவு
செய்தேன். ஜனவரி 12ஆம் தேதி சென்ட்ரல் எக்சைஸில் சூப்பிரண்டென்டன்ட்
ஆக இருக்கும் நண்பன் சாம் தன் காரில் அழைத்துச் சென்றான்.
திண்டுக்கல்
என்றதும் பிரபல பதிவர் திண்டுக்கல் தனபாலன் ஞாபகம் வர,
தொடர்பு கொண்டேன். பூர்வீக வீட்டையும் மாமா அத்தை அவர்களையும்
பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது, நாகல் நகரில் தனபாலனை சந்தித்து அப்படியே வேணு பிரியாணி உணவகம்
சென்றோம். புகைப்படத்தில் பார்த்ததை
விட நேரில் இன்னும் அழகாக இருந்தார். பிரியாணியும்
தாழ்ச்சாவும் அமிர்தமாக இருந்தது. அதன்
பின்னர் அவர் வீட்டுக்குச் சென்று அவரது அருமை மனைவியையும் சந்தித்தோம்.
தனபாலனுக்கு இணையான சுவாரஸ்யமானவர் அவர் மனைவி. மிகவும் சரளமாகவும் சகஜமாகவும் பழகினார்.
With Dindugal Dhanapalan and his wife |
அவருடைய
பரம்பரைத் தொழிலான புடவைகள் மொத்தவிலை வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.
சிறப்பான சேலைகளில் ஒரு ஐந்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். தனபாலன் அவர்களின்
வியாபாரம் சிறந்து விளங்க பரதேசியின் வாழ்த்துக்கள்.
ஜனவரி
13ஆம் தேதி காலை அமெரிக்கன் கல்லூரியின் MSW -விலும் அழகர்கோவில் அருகில் இருக்கும் MBA மாணவர்களுக்கும்
என்னுடைய கெஸ்ட் லெக்சரை முடித்துக் கொண்டு, நண்பர்
பேராசிரியர் பிரபாகர் அவர்கள் துணைக்கு வர அவருடைய காரிலேயே புதுக்கோட்டை
சென்றோம்.
போகும்
வழியில், மறுமுறை வரும் போது ஓவியம் முற்றிலுமாக மறைந்துவிட்டால் என்ன செய்வது
என்ற பயத்தில், சித்தன்ன வாசலையும் அதின் சிதிலமடைந்த ஓவியத்தையும் மீண்டுமொருமுறை
பார்த்துவிட்டு மாலை 5.30 மணியளவில் புதுக்கோட்டை சென்றோம். .
அங்கே
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமையில்
ஆர்வத்துடன் அநேகர் குடியிருந்தனர். அன்பர்கள் வந்தவண்ணம் இருக்க,
எனக்கு பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எனக்கு முன்னால்
பேசிய தமிழ்ப்பேராசிரியர் நண்பர் பிரபாகரும், தமிழ் எப்படி வளர்கிறது என்றும்
அது என்றும் அழியாது என்றும் சொல்லி விளக்கினார்.
"ஒரு
பேச்சாளன் என்று என்னைச் சொல்ல முடியாது, ஒரு எழுத்தளான் என்றும் என்னைப்பற்றி சொல்லமுடியாது. நான் யார் என்று கேட்டால், பஞ்சம் பிழைக்க பிறதேசம் போன பரதேசி எனக்கெதற்கு இத்தனை பெரிய வரவேற்பு",
என்று என் பேச்சை ஆரம்பித்தேன்.
with Muthu Nilavan and Prabahar |
அங்கு
பல தமிழாசிரியர்கள், கவிஞர்கள்,
பதிவர்கள் மென்பொருள் பொறியாளர்கள் கூடியிருந்தனர். மறக்க முடியாத ஒரு மாலைப் பொழுதாக அது அமைந்தது.
இதனை
ஏற்பாடு செய்த கவிஞர் முத்துநிலவன் ஐயா, மற்றும் செல்வா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வந்திருந்த அனைவருக்கும் மீண்டும்
என் வணக்கங்கள்.
அடே .. அடே .. அடே.. இதுக்கு எல்லாம் கொடுப்பானை வேண்டும் ஐயா. நம்ம கூட தான் வருசத்துக்கு ஒரு முறை ஊருக்கு போறோம். நம்மளோடு உட்கர்ந்து பேச கூட ஆள் இல்லை. ஆனால் உம்மை பாரும்.
ReplyDeleteபடிக்கையிலே பொறாமையா இருக்கு.
இருந்தாலும் அதை எல்லாம் மறைச்சிட்டு ...
"வாழ்த்துக்கள், சிறந்த பதிவு" ன்னு சொல்லிடு கிளம்புறேன்.
தம்பி , விசுவோட நண்பர்னு சொன்னதால் அல்லவா இத்தனை வரவேற்பு. நன்றி உனக்கும்தான் சொல்லவேண்டும்.
Delete"விசுவோட நண்பர்" நானும் அதை தான் சொல்ல நெனைச்சேன்.
Deleteஐயா, வருவதைப்பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்தால், உங்களை சந்தித்து இருப்பேனே?
ReplyDeleteகிங் எல்லாம் சாதாரண ஆட்களை பார்க்க வருவாங்களா ?.
Deleteஇந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு சென்றேன் விஸ்வா.
****பின்னர் எதற்கு இத்தனை வரவேற்பு ?, இத்தனை அன்பு? இத்தனை கொண்டாட்டம்? என்று எண்ணிப்பார்த்தால், அது தமிழின் மேல் உள்ள ஆர்வம், காதல், தோழமை என்றுதான் சொல்ல முடியும்.***
ReplyDeleteஅடேங்கப்பா! என்ன ஒரு தன்னடக்கம்!
எல்லாத்தமிழர்களையும் கொஞ்ச மாட்டாங்கனு நான் உறுதியாகச் சொல்லுகிறேன். அந்த்தகுதி ஒரு சிலருக்குத்தான் இருக்கு. அதில் ஆல்ஃபி அங்கிளும் அடங்குவார்கள்! :)
ஹாய் வருண், ரொம்ப நாளாச்சு வந்து.
Deleteஅன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
ஆல்பி அங்கிள்'ஆ.
Delete"அந்த குழந்தையே நீங்கதாங்க" சொல்லுற அளவுக்கு இளமையான அல்பி அவர்களை அங்கிள் என்று சொன்னதை நாங்க கண்டிக்கிறோம்..
நன்றி நண்பா , யாராவது சொல்லமாட்டாங்களான்னு நினைச்சேன் .
Deleteஆஹா நல்ல வரவேற்பு ஆமா இலங்கை பக்கம் எங்க போனீங்க அதுபற்றியும் எழுதுங்க! ஆவலுடன்.
ReplyDeleteஇலங்கையில் கொழும்பு, பின்னவளை ,கண்டி, கால் சென்றேன் ,விரைவில் விரிவாக எழுதுவேன் , நன்றி தனிமரம்.
Deleteநன்றி...
ReplyDeleteமறக்க முடியாத இனிய சந்திப்பு...
புதுக்கோட்டை சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதது குறித்து வருத்தம்...
நன்றி திண்டுக்கல் தனபாலன்.அடுத்தமுறை இன்னும் அசத்துவோம் .
Deleteநானும் தேனி பக்கத்தில் ரெண்டு வாரம் இருந்தேன் போன ஆகஸ்ட்டில் நண்பர் DD மிஸ் பண்ணிடேன்..
ReplyDeleteNext மீட் பண்ணுறேன்..
தேனீ அருகில் இருந்த பாரின் ரிடர்ன் நீங்க தானா? அடேங்கப்பா...
Deleteஅடுத்தமுறை நண்பா.
Deleteஇனியதோர் சந்திப்பு பற்றி அறிந்து நெகிழ்ச்சி.
ReplyDeleteஉங்கள் சந்திப்பு குறித்தும் அறிந்து மகிழ்ந்தேன், நன்றி வெங்கட்
Deleteஆஹா...என்ன தன்னடக்கம்...உண்மையில் அந்த மாலைப்பொழுது எங்களுக்க்த்தான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது...நெரிசல் மிகுந்த அந்த பேருந்து நிலைய வளாகத்தில் அவ்வளவு பொறுமையாக எங்கள் எல்லாருடனும் கழிந்த பொழுதுக்கு எங்கள் நன்றிகள்....
ReplyDeleteஉங்கள் அன்புக்கு நன்றி செல்வா .
Deleteஉங்களை புதுகையில் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.நன்றி கீதா
ReplyDeleteதங்களை சந்தித்ததும் மகிழ்ச்சி கீதா, உங்கள் கவிதைகளை வாசித்து ரசித்தேன்
Delete. விரைவில் அவைகள் பற்றி எழுதுவேன் .தொடர்ந்து எழுதுங்கள் .