எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 23
ஓடம் ஒன்று காற்றில் போன வழி
1978-ல்
வெளிவந்த திரிபுரசுந்தரி என்ற படத்தில் இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்டு வெளிவந்த பாடல் இது. பாடலைக் கேட்டுவிடலாமா?
பாடலின் சூழல்:-
திரைப்படப்
பாடல்களில் வெ ளிவந்த மீனவர் துயரம் சொல்லும் பாடல்களில் இதுவும் உண்டு. ஓடத்தை
ஓட்டிச்செல்லும் மீனவன் ஒருவர் தம் சோகத்தைச் சொல்லிப் பாடும் விதத்தில் பாடல்
அமைந்துள்ளது.
பாடலின் இசை:
புல்லாங்குழல்,
சாரங்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உன்னத இசையை
கொடுத்திருக்கிறார் இளையராஜா. பாடலின் ராகத்திலும் கருவிகளின் பயன்படுத்தலிலும்
மனதைப் பிழியும் சோகத்தை தந்திருக்கிறார். பாடலின் எளிய மெலடி, எளிய இசையமைப்பில் நீண்ட நாள்
நிலைத்திருக்கிறது இந்தப்பாடல்.
பாடலின் குரல்:
இளையராஜா. அவர் இந்தக் காலகட்டத்தில் பாடிய பிற பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இதில் அவர் குரல் வளம் நன்றாக மெருகேறியிருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக உச்சஸ்தாயில் MSV யின் ஆரம்ப காலக்குரலை ஞாபகப்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது. பாடலின் சூழலுக்கு ஏற்ற மீனவனின் குரலுக்கு இளையராஜாவின் குரல் சிறப்பாகவே பொருந்துகிறது.
பாடலின் வரிகள் :
ஓடம் ஒன்று காற்றில் போனவழி
நாமும் போகின்றோம்
ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்
பாதை என்று ஏதும் இல்லை
காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்.
தாகம் வந்தால் நீரும் இல்லை
நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம் - இந்த
நீரில் சென்றே கானல் நீரானோம் - ஓடம்
தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை
நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை
நாங்கள் இங்கே ஓடம் போலானோம், எந்த
நேரம் எங்கே போவோம் என்றானோம் - ஓடம்
மேகம் என்றால் மின்னல் உண்டு
தோன்றும் மின்னல் தானே மாறாதா?
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு
காணும் இன்னல் தானே தீராதா நல்ல
காலம் ஒன்று நாளை வாராதா? - ஓடம்
பாடல் வரிகள் :
பாடல் வரிகள் :
புலவர் புலமைப்பித்தன் |
பாடலின் வரிகளை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள். ஆரம்ப காலங்களில் இளையராஜாவுக்கு சில பாடல்களைஎழுதியுள்ளார். மீனவர் பற்றிய பாடல்களில், வாலி எழுதிய படகோட்டி படத்தில் வரும் "தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலை மிஞ்சும் பாடல் எதுவுமில்லையென்றாலும், சிலவரிகளில் பொறி இருக்கிறது. "நீரில் சென்றே கானல் நீரானோம்" என்ற வரியும், இரண்டாவது சரணத்தில் வரும் " தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை, நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்". ஆகிய வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. மற்றபடி மற்றவரிகள் இன்னும் கூட சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.
இளையராஜாவின் சிறப்பான மெலடிகளுக்கு இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம்.
இன்னும் வரும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தேடிப்பிடித்து இந்தப் பாடலை அழகாக விளக்கி, கேட்கவும் வைத்தது பாராட்டுக்குரியது!!! நன்றி!!!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரங்கா .
Deleteஅருமையான பாடலை கேட்க வைத்துக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனிமரம்.
Deleteஅருமை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கிங் விஸ்வா .
Deleteபாடல் வரிகள் அருமை...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் ஓட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Deleteஅருமையான/இதமான பாடல். மிக நன்றி..
ReplyDeleteநானும் போகின்றேன் --> நாமும் போகின்றோம்.. ?
உங்களை வரவழைக்கவே ஓரிரு தவறுகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
Deleteநன்றி நண்பா
நல்லா சொன்னீங்க போங்க..
Deleteசாலமன் பாப்பையா'விடம் சால்வை வாங்கிய பாட்டைய்யா இல்லையா.
"பாட்டு ஐயா" என்றாலும் "பாட்டையா" என்றாலும் ரெண்டுமே எனக்குப்பொருந்தாது நண்பா .
DeleteURL lil w missing.
ReplyDeletewww.youtube.com/watch?v=RxeABmHM7NE&feature=youtu.be
சரி பண்ணியாகிவிட்டது , நன்றி
Deleteஆல்பி சார்
ReplyDeleteநல்ல பாடல் கொடுத்திருக்கிறீர்கள் . கேட்க இனிமையாக இருந்தது. சிறு வயதில் இந்தப் பாடல் என்னைக் கவரவில்லை. அதனால் இந்தப் பாடலைப் பற்றி என் பதிவுகளில் நான் குறிப்பிடவில்லை. ஆனால் நல்ல பாடல் ஒன்றை கேட்காமல் தவற விட்டிருக்கிறோமே என்ற ஆதங்கம் இப்போது உண்டு .
பாடலாசிரியர் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்ற உங்களின் கருத்தில் எனக்கு வேற்றுமை உண்டு. ஏனென்றால் புலமைப் பித்தன் அருமையான கவிஞர் . எம்.ஜி.ஆர். க்கு நல்ல பல பாடல்கள் கொடுத்திருக்கிறார். இந்தப் பாடல் படிப்பறியா பாமர மீனவன் ஒருவன் பாடுவதாக அமைந்துள்ளது. அவன் அறிவுக்கு எட்டிய சிந்தனைகளில் எளிய நடையில் பாடல் கொடுங்கள் என்று இயக்குனரோ இளையராஜாவோ கேட்டிருக்கலாம் . அதைதான் புலமைப் பித்தன் கொடுத்திருக்கிறார். மெலடியும் எளிமையாக இனிமையாகவே உள்ளது. பின்னணி இசையில் இளையராஜா சோடை போகவில்லை.
படத்தில் பாடல் பாடும் பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் இளையராஜாவே குரல் கொடுத்திருக்கிறார். சூழல் சரியாக பொருந்துகிறது.
மீனவன் ஒருவன் வேலை பார்க்கும் அலுப்பு தெரியாமல் இருக்க பாடும் பாட்டில், மீனவ வாழ்க்கையின் சோகமும் சொல்லுவதாக பாடல் எளிமையாக பொருத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. வைரமுத்துவின் வார்த்தைகளால்தான் இளையராஜாவின் மெலோடிக்கே பெருமை , மற்றவர்களால் ஒன்றும் பிரமாதமாக எழுதப்படவில்லை என்று ஒரு பிரபல பதிவர் சமீபத்தில் எழுதி இருந்தார் . அதை சரி என்று நீங்களும் ஏற்பது போல் உள்ளது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்லஸ்.நீங்கள் குறிப்பிடும் அந்தப்பதிவை நான் படிக்கவில்லை .நான் ரசித்த பாடல் வரிகளை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் .மூன்றாம் சரணம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பதைத்தான் சொன்னேன் .மற்றபடி வைரமுத்து மட்டும்தான் நன்றாக எழுதமுடியும் என்பது என் கருத்தல்ல .
Deletehttp://www.thankyouilaiyaraaja.org.in/
ReplyDelete