Thursday, June 18, 2015

சுஜாதா எழுதிய "ஓரிரு எண்ணங்கள்"

 படித்ததில் பிடித்தது
'அம்பலம்' இணைய இதழ் மற்றும் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதிய பல கட்டுரைகளை இணைத்து விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட  புத்தகம் இது.
சுஜாதாவின் கதைகள் மட்டுமல்ல, அவருடைய கட்டுரைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை என்பதை இந்தப்புத்தகம் மீண்டும் நிரூபிக்கிறது.எவ்விதக் கருத்தையும், எளிதான முறையில் நகைச்சுவை பட தெரிவிப்பதில் அவருக்கு இணை அவரே.
அவர் சென்ற நாடுகள், கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், படித்த புத்தகங்கள், கவிதைகள், பார்த்த திரைப்படங்கள், சந்தித்த மனிதர்கள், பிரபலங்கள், திரைப்பட அனுபவங்கள், நாட்டு நடப்புகள், அரசியல் என்று கலந்து கட்டி மிகவும் வெளிப்படையாக பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பல இடங்களில் ஏராளமான செய்திகளை போகிற போக்கில் தெளித்துச் செல்கிறார். அவ்வளவும் அவருடைய சிறுகதைகள் போலவே  அவ்வளவு சுவை.
writer_sujatha.jpg
Sujatha
நான் ரசித்த பலவற்றில் சிலவற்றை புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன். இவை இப்புத்தகத்தை இதுவரை படிக்காதவர்களைப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.
1.    அம்பலம் வாசகர்களில் பல்வேறு தரப்பினருக்கு புத்தாண்டில் வாழ்த்துக்கள் சொல்கிறார் பாருங்கள். அவற்றுள் சாம்பிளுக்கு சில.
a)    எம் எல் ஏக்களுக்கு: ஒரு முறையாவது தொகுதிக்குச் செல்ல.
b)    கார்ப்பரேஷன்காரர்களுக்கு: ஒரு நாளாவது தோண்டாமல் இருக்க.
c)    நடன மணிகளுக்கு: வயது அல்லது இடுப்பு நாற்பதுக்கு மேலாகிவிட்டால் நடனமாடாமல் இருக்க.
2.    தமிழின் முதல் சமூக நாடகம், காசி விசுவநாத முதலியார் எழுதிய "டம்பாச்சாரி விலாசம்".
3.    அரசு மாறுந்தோறும் அதிகாரிகள் மாற்றப்படுவதை சாடுகிறார்.
4.    பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுகளை குறிக்க "Year of Writing" இல்லை என்று கவலை கொள்கிறார்.
5.    ஈழத்துக்கவிதைகளை சிலாகிக்கிறார்.
6.    இலவசங்கள் ஒழிக்கப்படவேண்டும் என சிடுசிடுக்கிறார்.
7.    அவருடைய "கனவுத் தொழிற்சாலை" புத்தகத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டதை அதிசயிக்கிறார்.
8.    படித்த பல புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
9.    கமலஹாசனுடன் 'விக்ரம்' படத்திற்கு வேலை செய்தது பற்றி விளக்கமாக கதைக்கிறார்.
10. சினிமாக்காரர் கையில்  அவருடைய "காகிதச் சங்கிலிகள்" பட்ட பாட்டை விவரிக்கிறார்.
11. எது சஸ்பென்ஸ் என்று உதாரணங்களுடன் விஸ்தார விளக்கங்கள் கொடுக்கிறார்.
12. குவைத், நியூயார்க் என்று சென்ற இடங்களைப்பற்றி விளக்குகிறார்.
13. இறுதியில் ஸ்ரீரங்கத்தின் மொட்டைக் கோபுரம் முடிக்கப்பட்டதைக் குறித்து (?) வருத்தப்படுகிறார்.
14. டிஜிட்டல் சினிமா வந்து கலக்கப்போவதை தீர்க்கதரிசிக்கிறார்.
15. கமலஹாசனின் ஆளவந்தான் படத்தை விமர்சித்து  பாராட்டித்திட்டுகிறார்.
            இறுதி வரை இளமை குன்றாமல் இருந்த அவர் எழுத்துக்கு காரணம் அவர் தன்னை up-to-date - வைத்தது தான் காரணம். மிளிரும் கிண்ட லும், சுய பகடியும் இன்னொரு காரணம். படித்துத்தான் பாருங்களேன்.

முற்றும்

4 comments:

  1. இன்று அப்டேட் ஆக இல்லையென்றால் நாமும் காலி...!@

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை தனபாலன் .

      Delete

  2. ஆம், சுஜாதாவின் எழுத்து மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவை. பகிர்வுக்கு நன்றி!..

    என்னிடம் -கணையாழியின் கடைசி பக்கங்கள்-ஒர்ஜிநல் இருக்கிறது. ஓ!! அவர் தீர்க்கதரிசி

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள் , உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன் .

      Delete